Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

print

“என்ன வாழ்க்கை இது? நித்தம் நித்தம் போராட்டமாக இருக்கிறது…! கண்ணீரை துடைக்க கூட எவரும் இல்லையே” என்று மனம் வெதும்பும் பெண்கள் அநேகம் உண்டு. பிறந்த வீட்டில் தான் எந்த சுகமும் இல்லை… புகுந்த வீட்டிலாவது சற்று நிம்மதியாக இருப்போம் என்றால் சிங்கத்திடம் இருந்து தப்பித்து புலியிடம் சிக்கிக்கொண்ட கதையாக சிலரின் (பலரின்) கதை அமைந்து விடுகிறது. அலுவலகம், வீடு, உறவு, நட்பு என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சூழ்ச்சி, சூது என்று வலையில் மாட்டிக்கொண்டு கதறித் துடிக்கும் பெண்கள் பலர் இந்த சமூகத்தில் உள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் நாம் சொல்வது ஒன்றே ஒன்று தான். ஒரு சிலருக்கு பிறந்த இடம் முதல், புகுந்த இடம் வரை இயல்பிலேயே நன்கு அமைந்துவிடும். அதைத் தான் ‘பாக்கியம்’ என்கிறோம். ஒருவர் எப்போதுமே தனது செயல்களினால் பெயர் பெறவேண்டுமே தவிர அவர்களது பங்கின்றி இயல்பாகவே அமையப் பெற்ற பாக்கியங்களினால் அல்ல. தங்களது பாக்கியங்களை காட்டி எவரேனும் உங்களிடம் தம்பட்டம் அடித்துக்கொண்டால், “சரி… இதில் உங்களது பங்கு என்ன?” என்று மட்டும் கேளுங்கள். அவர்களால் பதில் சொல்ல  முடியாது.

மேற்படி பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் பெண்கள் (ஆண்கள் உட்பட) அனைவரும் அறிய வேண்டிய ஒரு வரலாறு தான் ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வரலாறு.

போராட்டமே வாழ்க்கை என வாழ்ந்த ஒரு புதுமை பெண்!

ஜான்சி ராணி என்றால் ஏதோ சுதந்திர போராட்ட வீராங்கனை, வெள்ளையரை எதிர்த்து போராடியவர் என்பது மட்டுமே பலருக்கு தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அவரது சிலிர்க்க வைக்கும் வரலாற்றை அறிந்துகொண்டேன்.

பிறந்தது முதலே எந்த ஒரு பெண்ணும் இப்படி ஒரு போராட்டமயமான வாழ்க்கையை சந்தித்திருப்பாரா என்பது சந்தேகமே.

Rani_of_jhansiஜான்சி ராணி லக்ஷ்மி பாய், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். லக்ஷ்மி பாயின் இயற்பெயர் மணிகர்ணிகா. துணிச்சலும் வீரமும் இயல்பிலேயே மணிகர்ணிகாவுக்கு இருந்தது. மணிகர்ணிகாவுக்கு 14 வயது இருக்கும்போது (1842 ல்) அவளது அழகிலும் துறுதுறுப்பிலும் மயங்கிய ஜான்சியை ஆண்ட கங்காதர ராவ் நெவல்கர் ராஜா அவரை திருமணம் செய்துகொண்டார். மணிகர்ணிகாவை மகாராஜா மணந்துவிடக்கூடாது என்று மகாராஜாவின் உறவினர்கள் எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தனர். ஆனால் இறைவன் வகுத்த விதியின் முன்னர் அவர்களது சூழ்ச்சி எடுபடவில்லை.

மணிகர்ணிகா ஜான்சியின் ராணியாக மாறினார். லக்ஷ்மி பாய் என்று அழைக்கப்பட்டார். லக்ஷ்மி பாய் தனது மக்களை உயிரினும் மேலாக நேசித்தார். கணவருடன் இணைந்து நல்லாட்சி வழங்கினார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாமோதர் ராவ் என்று பெயரிட்டனர். ஆனால் 4 மாதங்கள் இருக்கும்போது குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் இறப்பு மகாராஜாவை மிகவும் பாதித்தது. எனவே 1853 இல் அவர் இறந்தார்.

கணவரின் விருப்பத்தின் பேரில் தனது உறவினர் ஒருவரின் மகனை தத்தெடுத்து அவனுக்கு தாமோதர் ராவ் என்று பெயர் வைத்து அவனை அரியணையில் அமர்த்தினார் ஜான்சி ராணி.

தல்ஹௌசி பிரபு பிறப்பித்த ‘Doctrine of Lapse’ என்னும் சட்டம் (நேரடி வாரிசு இல்லாதவர்களின் அரசுகள் ஆங்கிலேயரின் கீழ் வந்துவிடும்) என்ற சட்டம் அப்போது இருந்தது. பிரிட்டிஷார் 60 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து விட்டு, லஷ்மி பாயை அரண்மனையைவிட்டு வெளியேறச் சொன்னார்கள். அதோடு, ஜான்சியைக் கைப்பற்ற ஆங்கிலேயப் படை வந்தது.

“நீங்கள் யார் என்னை போகச் சொல்ல? இது என் நாடு. இவர்கள் என் மக்கள்!” என்று வெள்ளையர்களுக்கு அடிபணிய மறுத்தார். கடுமையான போர். 3 நாள்களுக்குப் பிறகு ஆங்கிலேயப் படை நகரத்துக்குள் நுழைந்து சூறையாடியது. வேறு வழியின்றி குதிரையில் தனது குழந்தையை ஏற்றிக்கொண்டு மதில் சுவர் தாண்டி, பெரும் பெண்கள் படையுடன் நகரத்தை விட்டு வெளியேறினார் லஷ்மி பாய்.

அப்போது லக்ஷ்மி பாய் கோட்டை மதில் மேல் இருந்து குதிரை மேல் குதித்த இடம் தான் கீழே நீங்கள் காணும் புகைப்படம்.

the place where jansi rani lakshmi bai jumped

வெள்ளையர்களை விரட்டி மீண்டும் ஜான்சியை கைப்பற்ற வியூகம் வகுத்தார் ஜான்சி ராணி. தாந்தியா தோபே மற்றும் சில புரட்சிப் படை வீரர்களுடன் சேர்ந்துகொண்டார் லஷ்மி பாய். இந்தப் படை குவாலியரை முற்றுகையிட்டு, கோட்டையைக் கைப்பற்றியது. குவாலியரை நோக்கி வந்த ஆங்கிலேயப் படைகளுக்கும் லஷ்மி பாய் படைகளுக்கும் இடையே போர் தீவிரமாக நடைபெற்றது.

1858 ஜூன் 17 அன்று, போரில் ஏற்பட்ட படுகாயத்தால் களத்திலேயே வீரமரணம் அடைந்தார் லஷ்மி பாய். அப்போது அவர் வயது 22!

வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படையை உருவாக்கியபோது ஜான்சி ராணியை கௌரவிக்கும் பொருட்டு அதற்கு ‘ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார். இவரது வீரமும், விவேகமும் பெண்மைக்கு உதாரணங்கள் என்றால் மிகையாகாது. இன்றும் இவரது வரலாறு நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

Laxmibai's_statue_in_Solapur
மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் சிலை

காசியில் மணிகர்ணிகா என்ற பெண்ணாக பிறந்து ஜான்சி மகாராஜாவை மணந்து கொண்டு பட்டத்து ராணியாக உயர்ந்து, பிள்ளையை பறிகொடுத்து, தனது நாட்டுக்காக பிரிட்டிஷாருடன் போர் புரிந்து, இறுதியில் வீரமரணம் அடைந்தது வரை ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் சந்தித்த எதிர்ப்புகளும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தனைக்கும் அவர் இந்த உலகில் வாழ்ந்த ஆண்டுகள் 22 தான். ஆனால் 200 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்ததன் தாக்கத்தை அவர் வரலாற்றில் ஏற்படுத்திவிட்டார்!

இப்போது சொல்லுங்கள்… பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமைப் பெண் இவரல்லவோ!

ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் பிறந்தநாளான இன்று (19/11/2013) அவரை நினைவு கூர்வோம். அவரது தியாகத்தை போற்றுவோம். வாழ்க ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் புகழ்!

========================================================

We are waiting for your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque / DD / MO to the following address:

Rightmantra Soul Solutions, Shop. No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு!

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

========================================================

[END]

 

8 thoughts on “ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

 1. இத்தொடரை படித்ததும் மனம் கனக்கிறது.

  மோகன் முருகப்ரியன்

 2. உண்மையில் இது ஒரு சாதாரண பெண்களால் செய்யமுடியாத மகா சாதனை ….லக்ஷ்மி பாய் தனது மகனை சுமந்துகொண்டு குதிரையிலிருந்து குதித்த இடம் ( புகைப்படம்)
  காணக்கிடைக்காத பொக்கிஷம் …எங்களுக்கு இதனை அளித்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றிகல்…

 3. டியர் சுந்தர்ஜி

  நேற்றைய monday ஸ்பெஷலை ஈடு செய்யும் விதமாக இன்று ஜான்சி ராணியின் வரலாற்றை இன்று பதிவு செய்து விட்டீர்கள்.

  பதிவு மிக அருமை!

  நன்றி
  உமா

  1. அப்படியெல்லாம் இல்லை. நேற்றைக்குக் அளித்த பதிவு சும்மா ஒரு ஜாலிக்கு.
   நத்திங் சீரியஸ்.

   – சுந்தர்

 4. இந்த புகைப்படத்தில் உள்ள இடம், ஜான்சி ராணி கோட்டை மதில் மேல் இருந்து குதிரை மேல் குதித்த இடம்.

  குதிரையிலிருந்து குதித்த இடம் அல்ல.

  நன்றி

 5. 1858 ஜூன் 17 அன்று, போரில் ஏற்பட்ட படுகாயத்தால் களத்திலேயே வீரமரணம் அடைந்தார் லஷ்மி பாய். அப்போது அவர் வயது 22! –

  அவர் வயது 29.

 6. Hi i will like this story how i will watch this serial in youtube really it will amaising myself and my friends all of as like this serial but please to recape this serial in Zeetamil to see my other friends and school students also to be watch how much effort will be taken by the warrior to got independence of India and how much they sacrifice their life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *