
பெரியோர்கள் சமயோசித அறிவை வெளிப்படுத்திய சில தருணங்களை இங்கே தருகிறோம். இவை அனைத்தும் “What is the meaning of pin drop silence?” என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் ஆங்கிலத்தில் நமக்கு வந்தவை.தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.
‘பின் டிராப் சைலன்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது குரலைவிட அமைதி ஆழ்ந்த அர்த்தத்தை வெளிப்படுத்தும் தருணம். உதாரணமாக சில சம்பவங்களை பார்ப்போம்…

டேக் 1 :
வீரத்தின் எடுத்துக்காட்டாக, வெற்றியின் சிகரமாக போற்றப்பட்டவர் இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல், சாம் மானெக்ஷா. அவர் ஒரு முறை குஜராத் மாநிலம் அஹமதாபாத் சென்றிருந்தபோது பொதுக்கூட்டம் ஒன்றில் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது கூட்டத்தினர் “குஜராத்தியில் பேசு…குஜராத்தியில் பேசு… நீ குஜராத்தியில் பேசினால் மட்டுமே நாங்கள் கேட்போம்” என்று கோஷமிட்டனர்.
மொழி வெறியின் உச்சகட்ட அறியாமை இது. மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் தர்மசங்கடமாக போனது. மானெக்ஷா என்ன செய்தார் தெரியுமா?
ஒரு சில வினாடிகள் தனது உரையை நிறுத்தினார். மொத்த கூட்டத்தினரையும் தனது மிடுக்கான பார்வையினால் பார்த்தார்.
“நண்பர்களே… எனது பணிக்காலத்தில் நான் பல போர்முனைகளில் பல்வேறு மாநிலத்தவர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். சீக்கிய ரெஜிமெண்ட்டில் இருந்து பஞ்சாபி மொழியை கற்றுக்கொண்டேன். மகாராஷ்டிர ரெஜிமெண்டில் இருந்து மராத்தியை கற்றுக்கொண்டேன். மதராஸி குழுவிடமிருந்து தமிழை கற்றுக்கொண்டேன். அதே போல வங்காள குழுவிடம் வங்க மொழியை கற்றுக்கொண்டேன். பீகார் ரெஜிமெண்டிடமிருந்து ஹிந்தியை கற்றுகொண்டேன், ஏன்… கூர்க்கா பிரிவிடமிருந்து நேபாள மொழியை கற்றுகொண்டேன். துரதிர்ஷ்டவசமாக குஜராத்திலிருந்து ஒரு வீரர் கூட படையில் இல்லாதாதால் என்னால் குஜராத்திய மொழியை கடைசி வரை கற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதனால் என்னை மன்னிக்கவேண்டும்” என்றார்.
அதற்கு பிறகு கூட்டத்தில் நிலவிய அமைதிக்கு பெயர் தான் PIN DROP SILENCE.
டேக் 2 :
ஜான் எப்.கென்னடி அமெரிக்கக் அதிபராக இருந்தபோது, அவரது அமைச்சரவையின் உள்துறை அமைச்சர் டீன் ரஸ்க் பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது சார்லஸ் டீகால் என்பவர் பிரெஞ்ச் அதிபராக இருந்தார்.

சார்லஸ் டீகால், “பிரான்ஸில் உள்ள அமெரிக்க படையினர் அனைவரும் இன்னும் இரண்டு நாட்களில் வெளியேறிவிடவேண்டும்” என்று உத்தரவிட்டார்.
டீன் ரஸ்க் அதற்கு, “இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸ் விடுதலைக்காக போரிட்டு வீர மரணமடைந்து இங்கே புதைக்கப்பட்டிருக்கும் 180,000 வீரர்களையும் சேர்த்து தான் இந்த ஆணையா?” என்றார்.
அதற்கு பிறகு நிலவிய சார்லஸ் டீகாலிடம் நிலவிய அமைதிக்கு பெயர் தான் PIN DROP SILENCE.
டேக் 3 :
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் வைய்டிங் (83) என்கிற முதியவர் பாரீஸ்க்கு விமானத்தில் வந்து இறங்கினார். கஸ்டம்ஸ் கிளியரன்ஸ்ஸின் போது, அவருடைய பாஸ்போர்ட்டை அவர் கண்டுபிடிக்க சிறிது நேரமாகியது.
கஸ்டமஸ் அதிகாரி அவரிடம், “மிஸ்டர்… இதுக்கு முன்னாடி நீங்க பிரான்ஸ் வந்திருக்கீங்களா?” என்றார் கிண்டலாக.
தான் வந்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.
“அப்போ… பாஸ்போர்ட்டை நீங்க தயாரா வெச்சிருக்க வேண்டாமா?”
வைய்டிங் சொன்னார் : “கடைசி முறை நான் இங்கு வந்தபோது அதை காட்ட வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை”
“வாய்ப்பேயில்லை. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும் அவர்கள் பாஸ்போர்ட்டை அவசியம் காட்டியே தீரவேண்டும்”
அவரை சற்று தீர்க்கமாக பார்த்த பிறகு அந்த அமெரிக்க முதியவர் சொன்னார் : “இரண்டாம் உலகப் போரின் போது உங்கள் நாட்டை விடுவிக்க, நான் ஒமாஹா பீச் பகுதியில் (நாஜிக்களின் பிடியில் இருந்த ஒரு பகுதி) விடியற்காலை 4.40 க்கு கரை சேர்ந்தபோது என்னுடைய பாஸ்போர்ட்டை நான் காட்டலாம் என்றால் ஒரு பிரெஞ்சுக்காரரை கூட என்னால் அப்போது பார்க்கமுடியவில்லை” என்றார்.
அதற்கு பிறகு நிலவிய அமைதிக்கு பெயர் தான் PIN DROP SILENCE.
டேக் 4 :
1947 இல் பிரிடிஷ்ஷிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரப்பூர்வமாக அவர் பதவி இன்னும் ஏற்காத நேரம் அது. அப்போது இந்திய ராணுவத்தின் முதல் மேஜர் ஜெனரலை தேர்ந்தெடுக்க ராணுவ அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை கூட்டினார்.

அப்போது நேரு சொன்னார் : “இந்திய ராணுவத்தை நிர்வகிக்கும் அளவிற்கு நம்மிடம் அனுபவம் இல்லை. எனவே ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை நான் ராணுவ தளபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன்” என்றார்.
கலந்துகொண்ட அதிகாரிகளில் பெரும்பாலானோர் அதுவரை பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு சேவை தான் செய்யத் தெரியுமே தவிர வழி நடத்தத் தெரியாது. எனவே நேரு சொன்னதற்கு அனைவரும் தஞ்சாவூர் பொம்மையைப் போல “சரி… சரி…” என்று தலையை ஆட்டினர்.
ஆனால் ஒரே ஒரு மூத்த அதிகாரி நாத்து சிங் ரத்தோர் என்பவர் மட்டும் எழுந்து நின்று “நான் கொஞ்சம் பேசலாமா?” என்றார்.
யாரோ ஒரு அதிகாரி எழுந்து இவ்வாறு நான் பேசலாமா என்று கேட்டது நேருவுக்கு உள்ளுக்குள் அதிர்ச்சி. இருந்தும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்” என்றார்.
ரத்தோர் சொன்னார் : “சார்… நமக்கு நமது தேசத்தை ஆளக் கூட போதுமான அனுபவம் இல்லை. ஏன் சுதந்திர நாட்டின் முதல் பிரதமராக ஒரு பிரிட்டிஷ் நபரையே தேர்ந்தெடுக்கக்கூடாது?”
அப்போது நிலவிய அமைதிக்கு பெயர் தான் : PIN DROP SILENCE.
ஒரு சில வினாடிகள் அமைதிக்கு பிறகு நேரு : “இந்திய ராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்க நீங்கள் தயாரா?” என்றார் ரத்தோரை பார்த்து.
ஆனால் ரத்தோர் மறுத்துவிட்டார். “சார்… நம்மிடையே ஜெனரல் ஏ.சி.கரியப்பா என்னும் மிக திறமையான சீனியர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் அந்தப் பதவிக்கு தகுதியானவர்!” என்றார்.
இப்படித் தான் ஜெனரல் ஏ.சி.கரியப்பா நாட்டின் முதல் ராணுவ தளபதியாக ஆனார். ரத்தோர் முதல் லெப்டினென்ட் ஜெனரலாக ஆனார்.
லெப்டினென்ட் ஜெனரல் நிரஞ்சன் மாலிக் சொன்னது இது.
================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
================================================================
Also check :
ஊதியத்தை குறைத்து அவமதித்த ஆங்கிலேயே அரசு – ஜகதீஷ் சந்திரபோஸ் செய்தது என்ன?
சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!
சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?
கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!
நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று!
“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?
சும்மா கிடைத்ததா சுதந்திரம்? – தியாகிகள் தினம் (MARTYRS’ DAY) சிறப்பு பதிவு!
இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தன்னுயிரை தந்து தட்டி எழுப்பிய மாவீரன் வாஞ்சிநாதன்!
கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?
================================================================
[END]
Dear Sunarji,
Excellent Article. Must to be read. Life is Precious. We have to Pray to God for Facing the Life Cycle in a Correct Way.
Narayanan.
Pin drop silence என்பதின் அர்த்தத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். பதிவு செய்ததற்கு நன்றிகள் பல
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Fantastic.
மிகவும் அரிய மற்றும் முத்தான தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி.
வணக்கம் சுந்தர்.நீங்கள் படிக்கும் நல்ல விஷயங்களை எங்களுடன் பகிரிந்து கொள்வதற்கு நன்றி. அனைத்தும் அருமையான முத்துகள்.நன்றி.
pin drop silence என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு இவ்ளோ பொருள் இருக்குனு இப்ப தான் புரியுது. rightmantra தளம் – நமக்கு ஆலய தரிசனம், உழவார பணி என்ற நிலைகளின் மூலம் இயங்குகிறது என்று பார்த்தால் அது தவறு..மனித(அப்படி தான் சொல்லணும் ?) வாழ்வின் ஒவ்வொரு படிநிலையும் செதுக்குவதில் rightmantra வின் பங்கு அளப்பரியது.
whatsapp செய்தியை நாம் படித்து பயன் பெரும் வண்ணம், சுவைபட கருத்தில் நிறுத்தி, பதிவாக நமக்கு அளித்திட ஆசிரியருக்கு நன்றிகள் பற்பல.
அருமை…