Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

print
கோவையில் இருக்கும் நம் நண்பர் விஜய் ஆனந்த், இரண்டு நாட்களுக்கு முன்னர் தினமலரில் வெளியான ஒரு செய்தி குறித்து நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கோவையில் இயங்கி வரும் அனைத்துலக சகோதரத்துவ சங்கம் (Universal Brotherhood Association) என்னும் அமைப்பு தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்கள், அவர்களுடைய தியாகம் ஆகியவற்றைத் திரட்டி, கோவையில் தேசப்பற்றுக்கான ஒரு கலைக்கூடத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த தலைவர்களின் புகைப்பட வரலாற்றுக் கண்காட்சி, சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், நடைபெற்று வருகிறது. (ஆகஸ்ட் 14 மற்றும் 15). நண்பர் விஜய் ஆனந்தை உடனடியாக அந்த கண்காட்சிக்கு சென்று அதை புகைப்படமெடுத்து நமக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டோம். அவரும், அதற்காகத் தான் தானும் தயாராக இருப்பதாக சொன்னார்.

IMG_1456
இந்த தன்னலம் கருதா தலைவர்கள், தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து இந்த தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். நாம் நம் தாய் நாட்டிற்காக என்ன செய்யப்போகிறோம்?

சொன்னபடி விஜய் ஆனந்த அவர்கள் அந்த கண்காட்சிக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து நமக்கு அனுப்பிவிட்டார். இந்திய தேசிய விடுதலைப் போரில் இதுவரை கேள்விப்படாத பல பெயர்களை கேள்விப்பட்டோம். அவர்களின் புகைப்படத்தை பார்த்து பரவசமடைந்தோம். அவர்களின் வீர வரலாற்றை கண்டு திகைத்து நின்றோம். இந்த நாட்டுக்காக இதுவரை நாம் என்ன செய்துள்ளோம் என்பதை எண்ணி வெட்கி தலைகுனிந்தோம்.

IMG_1377

சாம்பிளுக்கு சில புகைப்படங்களும் நாம் அளித்திருக்கும் அவர்தம் சுருக்கமான வரலாறும் இங்கே தரப்பட்டுள்ளன. முழு புகைப்படங்களும் (சுமார் 150 க்கும் மேல்) தனி காலரியாக தரப்பட்டுள்ளது.

18 வயதில் வீர மரணத்தை தழுவிய ஹேமு கலினி!

ஹேமு கலினி, தூக்கில் உயிரிழந்த போது, அவனுக்கு வயது 18. உடன் இருந்தவர்களின் பெயர்களைச் சொல்லியிருந்தால், ஹேமுவின் ஆயுட்காலம் பல பதினெட்டுகளைத் தாண்டியிருக்கலாம்; ஆனால், யாரையும் காட்டிக் கொடுக்க மறுத்ததால், பூமியிலிருந்து அவரை இழுத்துக் கொண்டது தூக்குக் கயிறு.

IMG_1348

யாரிந்த ஹேமு கலினி? பாகிஸ்தான் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றால், உங்களின் சந்தேகம் இன்னும் ‘தீவிரமாகி’விடும். நம் தேசத்துக்கு எதிராக, ஏதோ சதி செய்தவர் என்று கற்பனைக் குதிரை பறக்க ஆரம்பித்து விடும். அவர் நம் தேச விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரன் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?சுதந்திரப் போராட்டத்தின்போது, உடைபடாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து மாகாணத்தில் பிறந்த ஹேமு கலினி, ஆங்கிலேயர் வந்த ரயிலைக் கவிழ்க்க சதி செய்த போது, பிடிபட்டவர்; உடன் இருந்த விடுதலைப் போராளிகளைக் காட்டிக் கொடுக்க மறுத்ததற்கு, அவருக்குக் கிடைத்த மகத்தான பரிசு, வீர மரணம்.

IMG_1444

உலகின் முதல் மனித வெடிகுண்டு – வீர மங்கை குயிலி!

நம் தேசம் கொண்டாட மறந்த, வரலாற்றால் மறைக்கப்பட்ட எத்தனையோ தலைவர்களில் இவரும் ஒருவர். ஆங்கிலேயரை அடித்துத் துரத்திய வேலு நாச்சியார் படையின் தளபதியாக செயல்பட்ட குயிலியின் கதையும், இளைய தலைமுறை அறியாதது. ஆங்கிலேயருக்காக உளவு பார்க்க வந்த வெற்றிவேல் என்பவரை குத்தி கொன்றார். உடலெல்லாம் சீமை எண்ணெயை ஊற்றிக் கொண்டு, தீ வைத்தபடி, ஆங்கிலேயரின் வெடி பொருள் கிடங்கிற்குள் குதித்து உயிரிழந்த குயிலிதான், உலக வரலாற்றின் முதல் தற்கொலைப்படை வீராங்கனை என்பது, ‘கூகுள்’ கூட கண்டறியாத சேதி. (பிறப்பு 03.01.1730 , மறைவு : 1790)

IMG_1595

மகன்களின் தலையை வெட்டி தட்டில் கொடுத்த போதும் மண்டியிட மறுத்த மாவீரர்!

பகதூர் ஷா ஜாபர் முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர். சிப்பாய் கலகத்தை ஆதரித்த இவரை ஆங்கிலேயே அரசு மிக அதிகமாக தண்டித்தது. அவரது இரண்டு மகன்கள் மிர்சா முகல், மிர்சா கிசுர் சுல்தான் ஆகியோரின் தலைகளை துண்டித்து மேஜர் ஹட்சன் எனப்படும் ஆங்கிலேயே படைத் தளபதி பகதூர் ஷாவிடம் அவரது தர்பாரில் கொண்டு போய் கொடுத்தான். அழவில்லையே எனக் கேட்டபோது, “மன்னர்கள் அழப்பிறந்தவர்கள் அல்ல. ஆளப் பிறந்தவர்கள்!” என்று பதிலளித்தார் பகதூர் ஷா ஜாபர். வீரமும் அறிவில் முதிர்ச்சியும் கொண்ட இப்பேரரசர் பெரும் உருதுப் புலவரும் கூட. ஆங்கிலேயர் இவரை நாடு கடத்தி பர்மாவில் வைத்தனர்.

IMG_1596

இறந்த பின்பு தனது இறுதி ஆசையாக தம்மை அடிமை மண்ணில் புதைக்கவேண்டாம் என்று பர்மாவிலேயே புதைத்துவிடவும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் மறைந்தவுடன் அவரது பர்மாவின் தலைநகர் ரங்கூனில் புதைத்தனர். இதுவன்றோ தேசப்பற்று!

IMG_1424

அஸ்ஃபகுலா கான்  – இந்திய தேசிய விடுதலைப் போரில் தூக்கிலிடப்பட்ட முதல் இஸ்லாமியர்!

உத்தர பிரதேச ஷாஜகான் பூரில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அமைதியாக போராடினால் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது என்ற முடிவுடன் ஆரிய சமாஜத்தில் நண்பர்களுடன் இனைந்து 09.08.1925 அன்று கக்கோரியில் ரயிலில் பிரிடிஷ்ஷார் கொண்டு வந்த தொகையை சுதந்திர போராட்டத்திற்கு தேவையான ஆயுதங்கள் வாங்க கொள்ளையடித்தார். அதனால் 19.12.1927ல் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்ட முதல் இஸ்லாமிய சுதந்திர போராட்ட வீரர் இவர்.

தேசப்பற்றை ஊட்டும் விதத்தில் உருது மொழில் கவிதைகள் பல படைத்துள்ளார். இறப்பதற்கு முன்பு, “தாய் நாட்டிற்காக  தூக்கிலடப்படும் முதல் இஸ்லாமியர் என்பதில் பெருமையடைகிறேன்” என்று சந்தோஷமாக வீர மரணத்தை தழுவிக்கொண்டார்.

IMG_1372
இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் கைதான பெண் கமலாதேவி
IMG_1331
இந்திய தேசிய கொடியை வடிவமைத்த தியாகி. பிங்காளி வெங்கையா

IMG_1460இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் கைதான பெண் கமலாதேவி, புலித்தேவனின் தளபதி ஒண்டிவீரன், தேசியக்கொடியை வடிவமைத்த ஆந்திரத்துச் சகோதரர் பிங்களி வெங்கய்யா, ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக தனது இரு மகன்களின் தலைகளை தட்டிலே பார்த்தும் தலை வணங்க மறுத்த பகதூர்ஷா ஜபார், செண்பகராமன் பிள்ளை என, நமக்குத் தெரியாத சுதந்திரப் போராளிகளின் பட்டியல் வெகுநீளம்.பத்தாம் வகுப்பு வரலாறு பாடத்துக்குப் பின், நம் தேசத்துக்காக இன்னுயிர் தந்த தலைவர்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்கு நம் கல்வி முறை அனுமதிக்கவில்லை; அவர்களைப் பற்றி, நாம் அறிவு கொள்வதில், நம் அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை. விளைவு… காந்தி, நேருவைத் தாண்டி, நம் தேசப்பற்று நீட்சி பெறுவதில்லை.

IMG_1302
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் – இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராள.1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சாபேகர் சகோதரர்கள்
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சாபேகர் சகோதரர்கள்

கல்வி முறையாலும், காலத்தாலும் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல தேசப்போராளிகளைப் பற்றி, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அற்புதமான பணியைச் செய்துள்ளது கோவையில் இயங்கி வரும் அனைத்துலக சகோதரத்துவ சங்கம் (Universal Brotherhood Association).

தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்கள், அவர்களுடைய தியாகம் ஆகியவற்றைத் திரட்டி, கோவையில் தேசப்பற்றுக்கான ஒரு கலைக்கூடத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது அமைப்பு. இதற்கான தேடலை, இவ்வமைப்பின் தலைவரான வழக்கறிஞர் நந்தகுமார், ஆறு மாதங்களுக்கு முன்பே துவக்கி விட்டார். டில்லி தீன்மூர்த்தி பவனில் இயங்கும், ஜவஹர்லால் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில், பெரும்பாலான தலைவர்களின் புகைப்படங்கள் கிடைத்தன; இணையம், பத்திரிகை அலுவலகங்கள், நூலகங்கள், புகைப்படக் கலைஞர்கள் என பல தரப்பிலுமாகச் சேகரித்ததில், மொத்தம் 125 தலைவர்களின் புகைப்படங்களைச் சேகரித்துள்ளது இந்த அமைப்பு.

IMG_1366
உதாம் சிங் – ஜாலியன் வாலா பாக் படுகொலை துயரத்திற்கு காரணமான மைக்கேல் ஓ டயர் என்பவரை இந்த நிகழ்வு நடந்து 21 ஆண்டுகள் கழித்து சுட்டுக்கொன்றார்.

சேகரித்த ஒவ்வொரு புகைப்படமும், கோவை ஆர்.கே.,போட்டோ சென்டரில், பிரமாண்டமான அளவில் புது வடிவம் பெற்றன. ஆறடிக்கு மூன்றடி என்ற அளவில், தனித்தனி ‘ஸ்டாண்ட்’ அமைக்கப்பட்டு, அந்த புகைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த படத்தின் கீழ், அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாறும், சிறப்பும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சில தலைவர்களின் புகைப்படங்கள், பெரிதாக்க முடியாத அளவில் சிதைந்திருந்ததால், அவற்றை அச்சு அசலாக ஓவியமாக மாற்றித் தந்துள்ளார் கோவையைச் சேர்ந்த ஓவியர் சுருளி. இந்த தலைவர்களின் புகைப்பட வரலாற்றுக் கண்காட்சி, தேசத்தின் 68வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் அரங்கேறவுள்ளது; ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், ஆக.,14 மற்றும் ஆக.,15 ஆகிய இரு நாட்களும், மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ள இந்த புகைப்படங்கள், அதன் பின் தேசம் முழுவதும் பயணிக்க இருக்கின்றன.

IMG_1490
என் கண்ணை திறந்த பகத்சிங் – தன்னை நாத்திகவாதி என்று கூறிக்கொண்ட மிகப் பெரிய ஆன்மீகவாதி!

வரும் குடியரசு தினத்தில் (2015 ஜனவரி 26 ) சென்னையிலும், அடுத்த சுதந்திர தினத்தில் (2015 ஆக.15) தலைநகர் டில்லியிலும் இந்த புகைப்பட கண்காட்சி நடைபெறும். இதற்கிடையில், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதனை நடத்த, அனைத்துலக சகோதரத்துவ அமைப்பினரும், கைகோர்க்கும் பிற தன்னார்வ நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.அதற்குப் பின், இந்த புகைப்படங்களைக் கொண்டு, கோவையில் தேசப்பற்றுக்கான ஒரு நிரந்தர கலைக்கூடம் (National Patriotic Gallery) அமைக்கப்படவுள்ளது. முதல் முதலாக, வரும் சுதந்திர தினத்தன்று அரங்கேறவுள்ள இந்த புகைப்படக் கண்காட்சிக்கு, மேலும் சிறப்பு சேர்க்கவுள்ளது, இதே ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள மூன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடி.

IMG_1492
தான் மிகவும் போற்றி வந்த வ.உ.சி.யையும் சுப்பிரமணியம் சிவாவையும் கைது செய்து சிறையிலடைத்து கொடுமைபடுத்திய ஆஷ் துரையை சுட்டுக்கொன்று வெள்ளையர்களிடம் சிக்கக் கூடாது என்று தானும் தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதன்!

இந்த நிகழ்வுகளையொட்டி, கோவையிலுள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்க்கு, தேசப்பற்றை வளர்க்கும் விதமாக கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சிறப்பான கவிதை, அழகான ஓவியம் வரையும் மாணவ, மாணவியர்க்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

 ஆயிரம் உண்டிங்கு சாதி...வந்து அன்னியர் புகழ் என்ன நீதி?

ஆயிரம் உண்டிங்கு சாதி…வந்து அன்னியர் புகழ் என்ன நீதி?

அனைத்துலக சகோதரத்துவ அமைப்பின் தலைவர் நந்தகுமார் கூறுகையில், ”இளைய தலைமுறையிடம் தேசப்பற்று, இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்; நாம் அறிந்திடாத பல தலைவர்கள், நம் தேச விடுதலைக்காக எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது, தேசத்தின் மீதான நேசம் அதிகரிக்கும்; ஒற்றுமை ஓங்கிடும்; அதற்கான ஒரு முயற்சிதான், இந்த புகைப்பட கண்காட்சி. காலம் மறந்த நமது தலைவர்களின் தியாகங்களைத் தெரிந்து கொள்ள, கோவையிலுள்ள ஒவ்வொரு மக்களும் தவறாமல் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுமென்பதே எங்களின் எதிர்பார்ப்பு,” என்றார்.

உண்மையிலேயே, அதில் இடம் பெற்றுள்ள புகைப்படம் ஒவ்வொன்றும், ஒரு தேசிய பொக்கிஷமாகவே தெரிகிறது; எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி, நம் தேசத்துக்காக இன்னுயிர் நீக்கி, நம் தேசம் காத்த அந்த தலைவர்களின் ஒளி ஓவியங்களைப் பார்க்கும்போது, உடலுக்குள் ஏற்படுகிற சிலிர்ப்பை ஓரிரு வார்த்தைகளுக்குள் விளக்கி விட முடியாது.உடமை இழந்து, உயிரை இழந்தாலும் ‘இது என் தேசம்; இதை நான் மீட்பேன்’ என்று, உணர்வை இழக்காத அந்த மாமனிதர்களுக்கு சிரம் தாழ்த்தி, கரம் கூப்ப வேண்டிய மகத்தான நாள் ஆகஸ்ட் 15; இந்திய தேசத்துக்காக இன்னுயிர் தந்த அந்த தலைவர்களின் விலை மதிப்பற்ற தியாகத்துக்கு, இந்த ஒரு நாளையாவது ஒதுக்கி, தலை வணங்கப் போகிறோமா…? இல்லையேல்…இன்றைக்கும் ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ படத்தைப் பார்த்து விட்டு, படுத்து உறங்கப் போகிறோமா?

கல்வித் தந்தை காமராஜர் படம் திறக்கப்படும்போது
கல்வித் தந்தை காமராஜர் படம் திறக்கப்படும்போது
ங்கங்களே நாளைத் தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்
நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடியச் செல்வங்கள்

கல்விச்சாலை தந்த ஏழைத்தலைவனை தினமும் எண்ணுங்கள்

IMG_1575

==========================================================

குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு நாம் அனைவரும் அவசியம் சென்று பார்ப்போம்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்!

ஜெய் ஹிந்த்!

==========================================================

[nggallery id=8]

[END]

17 thoughts on “இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

 1. Sir, very nice and timely article. No words to appreciate the great works by Shri.Nanda kumar .Hatts off to his service.

 2. வணக்கம் சுந்தர் சார்! நீங்கள் இன்று சுதந்திர தினத்தன்று செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் என்ன என்று சொல்வீர்கள் என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் யாரும் நினைத்துப்பார்த்திராத வகையில் ஒரு பதிவு, எங்கள் யாருக்குமே தெரியாதவைகள் உங்களுக்கு மட்டும் (தங்களைப்போல் மேலும் சிலர் அறிந்திருக்கலாம்) எப்படி தெரிகிறது என்பதே ஆச்சரியம்தான் மேலும் திரு. நந்தகுமார் அவர்களும் அவரது சகாக்களும் இந்த சேவையை செய்வது என்பதே மிக மிக அரிதான ஒன்று நான் உள்பட இன்று ஒவ்வொரு மனிதனும் நம் நாட்டில் பண வேட்டைதான் நடத்தி கொண்டு இருக்கிறோம் (மிகச்சிலர் தவிர) இந்த நிலையில் இதற்காக செலவிடும் அந்த நேரத்தில் அவர்கள் வேறு எதாவது செய்திருக்கலாம் ஆனால் அவை எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்கள் செய்த இந்த சேவை நிச்சயம் மிக மிக பாராட்டத்தக்க ஒரு விஷயம் அதை இந்த நாடு அறியச் செய்த தங்கள் பணியும் பாராட்டத்தக்கது இது இந்த தேசத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கரையை மிகத் தெளிவாக காட்டுகிறது நான் வெட்கப்படும் ஒரு விஷயம் தினமும் தங்கள் பதிவை படித்து விட்டு நன்றாய் இருகிறது என்று மட்டுமே சொல்ல முடிகிறதே நம்மால் அவருக்கோ அவர் செய்யும் இந்த சேவையில் சிறு உதவி கூட செய்ய முடிய வில்லையே என்றுதான் தங்கள் சேவை தொடரட்டும் நந்தகுமார் மற்றும் அவரின் நண்பர்கள் அனைவருக்கும் இந்த தேசத்தின் சார்பாக வீர வணக்கம்! நம் தேசம் வெகு விரைவில் எல்லா வளங்களிலும் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே இந்த நாளின் பிரார்த்தனை. இன்னும் முகம் தெரியாத தேச பக்தர்கள் நிறைய பேர் இந்நாட்டில் வாழ்கிறார்கள் அவர்கள் அனைவர்க்கும் எனது வணக்கங்கள் ஜெய் ஹிந்த்! பாரத மாதாவுக்கு வந்தனம்!

 3. இருக்காமாக இருக்கிறது
  இதயம் வலிக்கிறது
  இன்னும் தெரியாத எவளோ உயிர்களோ
  அனால் நாமோ ஒன்றுமே இல்லாத
  அற்ப சந்தோசத்திற்காக எவளோ விசயங்களை வீண் அடிக்கிறோம்
  எல்லாவற்றிலும் மேலாக நேரத்தை வீண் அடிக்கிறோம்
  எதிலும் உண்மை இல்லை …சுயநலம் எங்கோ ஒளிந்திருக்கிறது
  இங்கு எதற்கா இதனை உயிர்கள்
  இப்போ இருக்கும் நிலைமை பார்த்தால்
  இவளவு உயிர் தியாகம்
  வீணாகி போகிறதோ தோன்றுகிறது

 4. Hats off to the service done by Universal Brotherhood Association.
  Inspired to know the acts and dedication of so many leaders who got us freedom.
  Jai Hind!!

 5. வணக்கம்…..

  எத்துனை சிறப்பும் வரலாறும் தியாகமும் கொண்ட நாட்டில் நாம் பிறந்திருக்கிறோம். தங்கள் இன்னுயிர்களை ஈந்து நம் முன்னோர்கள் நம் கையில் தந்த சுதந்திரத்தை நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
  நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. நம் நாட்டிற்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது. பதில் தெரியவில்லை.

  நம் வீர வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் தன்னிகரற்ற வேலையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் நம் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

  சகோதரர் விஜய் ஆனந்த் அவர்களுக்கு நம் நன்றிகள்…….

 6. We have to thank all:
  my sincere gratitude to Mr. Nandakumar and Universal Brotherhood Association; then the persons who took time and effort to go and gather these info and who took loads of time and effort for wonderful post – Vijay and Sundarji. Loads of thanks to both you.
  **
  Indeed, people (today’s) have been destroyed by media – who all turned out to be institutions with the very sole aim of money making.
  And unfortunately, we (not our rightmantra readers but others which might include me too) are deeply engaged in seeing cinema, having entertainment and instead of taking this wonderful day to remember all these patriotic souls but taking as just another holiday to enjoy.
  **
  Once again, my wishes and gratitude to all great souls who strive to make better ‘future’ india.
  Continue your good deeds.
  **
  **Chitti**.

 7. மிக பெரிய நீண்ட பதிவு
  வழக்கறிஞர் திரு முத்துக்குமார் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
  புது முயற்சி, புது வடிவம் கொடுத்து காலத்தால் அழியாத ஒரு பொக்கிசத்தை கண்காட்சியாக வடியமைத்து நமக்கு கொடுத்துள்ளார்.
  நாங்கள் அறிந்திராத பல வீரர்கள் பெயர்கள் அவர்கள் செய்த சாகசங்கள் என பதிவு உணர்ச்சி மிக்க பதிவாக இருக்கிறது.
  தமிழ் பற்று மிக்க நம் சகோதர நெஞ்சகளுக்கு வணக்கம்.
  சுந்தர் அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
  பல வீரர்களின் பெயர்கள் கூட எங்களுக்கு தெரியாது.
  மிகவும் nandri

 8. Dear sundarji,

  Very nice article. Thanks for the valuable information provided to us.

  Thanks and Regards
  V.HARISH

 9. சுயநலம் என்பதே இல்லாத தியாகிகள் நடமாடிய இந்த புனித மண் …….எம்மையும் சுமக்கிறதே …….உள்ளே எதுவோ வலிக்கிறது ,,,,,,இவர்கள் உள்ளம் , எவ்வளவு தூய்மை மிகுந்தது …..இனியேனும் இத்தகைய தன்னலமற்ற வாழ்வு வாழ இறைவன் அருள் செய்யட்டும்…..இனி ஏதேனும் சேவை செய்தல் ( ஸ்ரீ ராமனுக்கு ) வேண்டும். ஆம், மனித குல, சுற்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் ………சேவகனாக………..மண் பயனுற வாழவேண்டும்.

 10. தெரியாத பல அறிய தகவல்களைத் தெரிந்து கொண்டோம், திரு விஜய் ஆனந்திற்கு எமது பாராட்டுக்கள், இவ்வளவு பல அறிய தகவல்களைத் தொகுத்து அளித்த ரைட் மந்த்ராவிற்கு எமது பாராட்டுக்கள்

  நன்றி
  உமா

 11. Sundar,

  Today only i happened to read this article, really wonderful. Most of them are unsung heroes, that is the speciality about this article.

  Really a touching one Sundar. I am really fortunate to get to know about these great people.

 12. அருமையான பதிவு. இன்னும் கண்ணுக்கு தெரியாத இது போன்ற சுதந்திர தியாக போராளிகள் பல உள்ளனர். ஏன் வருத்தமெல்லாம் இவர்களின் கொள்கை மற்றும் இலக்கு புனிதமானபோதிலும் இவர்களின் கனவுகள் கலைந்து போய் மரணத்தை தழுவியது மிகபெரிய சோகம்.

  இவர்கள் அனைவரும் உண்மையான தெய்வங்கள்.

  1. அவர்கள் கனவுகள் கலைந்தன என்பது உண்மையல்ல. இப்படிப்பட்ட அனைவரின் தியாகத்தினாலும் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.

   ஆனால் இன்றைய இளைஞர்களும் மக்களும் கொண்டாடவேண்டிய இவர்களை எல்லாம் விடுத்து, கொண்டாடக்கூடாதவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது தான் வருத்தத்திற்குரியது.

   – சுந்தர்

 13. கண்களில் நீரை வரவழைத்த பதிவு. மிக்க நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *