Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

print
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!’ என்கிற தலைப்பில் கடந்த மாதம் ஒரு பதிவளித்திருந்தது நினைவிருக்கலாம். குன்றத்தூரில் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 10 வருடங்களாக முழுக்க முழுக்க சேவையின் அடிப்படையில் திருமுறைகள் கற்றுத் தரும் திரு.சங்கர் அவர்களை நாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக கூறியிருந்தோம். அது பற்றிய பதிவு இது.

Kundrathur Thevara Pada Salai 4

மார்கழி மாதத்தில் ஒரு நாள் நாம் நாகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அதிகாலை வேளையிலும் மாணவ-மாணவியர் சுமார் 60 பேர் திருமுறைகளை ஓதிக்கொண்டிருந்ததை கண்டு வியந்து, இதன் பின்புலத்தில் இருப்பது யார் என்று விசாரித்தபோது தான் சங்கர் அவர்களை பற்றி நாம் அறிந்துகொண்டோம்.

Check earlier episode : மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!

அதற்கு பிறகு ஓரிரு விழாவில் அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. “விரைவில் உங்களை எங்கள் தளத்திற்காக சந்திக்கிறேன்” என்று சொல்லியிருந்தோம்.

திருமுறை ஒளியை பரவச் செய்யும் திரு.சங்கர்
திருமுறை ஒளியை பரவச் செய்யும் திரு.சங்கர்

இம்மாணவர்கள் மாங்காட்டில் நடைபெற்ற நம்பியாண்டார் நம்பி குரு பூஜை மற்றும் திருமுறை ஊர்வலத்தில் கலந்துகொண்டது பற்றி வேறொரு பதிவில் புகைப்படங்களுடன் அளித்திருக்கிறோம். தவறாமல் அதையும் பார்க்கவும்.

Also check : திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

மே மாத இறுதியில் ஒரு ஞாயிறன்று மாலை தேவார வகுப்பு நடைபெறும் வேளையில் குன்றத்தூரில் உள்ள நாகேஸ்வரர் ஆலயத்தில் திரு.சங்கர் அவர்களை சந்தித்தோம். சந்திப்பில் நமக்கு உதவியாக நண்பர் ராகேஷ் வந்திருந்தார்.

இந்தப் பதிவில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் அந்த சந்திப்பின்போது எடுத்தது தான். அன்று நாகேஸ்வரர் ஆலயத்தில் சேக்கிழார் குரு பூஜை வேறு. எனவே நமது காமிராவுக்கு டபுள் ட்ரீட்.

Kundrathur Thevara Pada Salai 1

Kundrathur Thevara Pada Salai 2Kundrathur Thevara Pada Salai 3நாம் செல்லும்போது மாணவர்கள் தேவாரம் படித்துக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நாம் மாணவர்கள் தேவாரம் படித்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கும்போதே சங்கர் அவர்கள் வந்துவிட்டார். நம்மை அன்புடன் வரவேற்றார்.

‘பன்னிரு திருமுறை தேவார பாடசாலை’ என்று பெயர் கொண்ட இந்த பாடசாலை கடந்த 542 வாரங்களாக அதாவது கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது 60 மாணவர்கள் இதில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் தேவாரம் படித்து வருகிறார்கள். இதுவரை 300-400 பேர் இங்கு தேவாரம் படித்து முடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

Kundrathur Thevara Pada Salai 6

இதை எந்த வித பொருளாதார நோக்கமும் இன்றி இலவசமாக கடந்த பல ஆண்டுகளாக திரு.சங்கர் என்பவர் இந்த பாடசாலையை நடத்திவருகிறார். போரூரில் உள்ள W S INSULATORS என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திரு.சங்கர் அடிப்படையில் ஒரு டெக்னீசியன். தற்போது ஒய்வு பெற்றுவிட்டார்.

சங்கர் அவர்கள் அவர் தந்தையிடம் திருமுறையை கற்றுக்கொண்டார். இவரது சொந்த ஊர் புதுவை. அவரது தந்தை நடேச முதலியார் தான் அவரது தேவார ஆசிரியர். அவரது வீட்டில் அந்தக் காலத்தில் தினமும் திருமுறை ஒதப்படுவது உண்டு. இங்கு சென்னைக்கு 15 வது வயதில் வந்தவர் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

திருமுறை பாடியபடி கோவிலை சுற்றி வரும் மாணவ மாணவியர்
திருமுறை பாடியபடி கோவிலை சுற்றி வரும் மாணவ மாணவியர்
Kundrathur Thevara Pada Salai 8
புகைப்படத்தில் உள்ளது மாணவர்களின் முழு எண்ணிக்கை அல்ல. பல மாணவ மாணவியர் கோடை விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

இருப்பினும் தந்தையிடம் கற்ற திருமுறை அறிவு தன்னுடனே கரைந்து போய்விட விரும்பவில்லை. தனது நிறுவனத்தில் நடைபெறும் சரஸ்வதி பூஜை, பொங்கல் உள்ளிட்ட பூஜைகளின் போது பக்தி பாடல்களையும் திருமுறைகளை பாடுவார். இவரது தேவார அறிவையும் இசையையும் பார்த்த நிறுவனம், அங்கே அக்கம் பக்கம் உள்ள மாணவ மாணவியருக்கு இவர் திருமுறை வகுப்புக்களை எடுக்க ஏற்பாடு செய்து தந்து. (அந்த நிறுவனம் சார்பாக கட்டப்பட்ட கோவில் தான் மவுண்ட் பூவிருந்தவல்லி சாலையில் உள்ள சேது ஷேத்ரம்).

ஒரு கட்டத்தில் தினசரி நாகேஸ்வரர் கோவிலுக்கு வந்துகொண்டிருந்த அவருக்கு திருமுறை கற்கும் ஆர்வம் உடைய மாணவர் மாணவிகளுக்கு இதை சொல்லித் தந்தால் என்ன என்று கருதி, தருமபுரம் பி.சுவாமிநாதன் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களுடன் இங்கு தேவார வகுப்பு துவங்கி நடைபெற்றுவருகிறது.

Kundrathur Thevara Pada Salai 9

ஒவ்வொரு ஞாயிறும் மாலை 5.00 முதல் 7.00 மணிவரை இங்கு தேவார வகுப்பு நடைபெறும். அதுமட்டுமல்ல, மார்கழி மாதத்தின் போது தினமும் கலை 5.00 – 7.00 வரை வகுப்பு நடைபெறும். தொடர்ந்து திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டே கோவிலை வலம் வருவார்கள். (அப்போது தான் நாம் முதல் முறை அவர்களை பார்த்தோம்.)

“நம்மிடம் இருக்கும் கலையை வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். இங்கே உள்ள குழந்தைகள் பன்னிரு திருமுறைகளையும் பாடுவார்கள். சிவபுராணம் பாடுவார்கள். அவர்களுக்கு முறைப்படி அதை பாட தெரியும். இத்தனை ஆண்டுகள் பலர் இந்த திருமுறை பாடசாலையில் திருமுறைகளை கற்றுக்கொண்டு போயிருக்கிறார்கள்!” என்கிறார் திரு.சங்கர்.

Kundrathur Thevara Pada Salai 10
மாணவர்கள் கைதட்டல்களுக்கு மத்தியில் ஆசிரியருக்கு கௌரவம்!

“இது முழுக்க முழுக்க சேவை அடிப்படையில் தான் இலவச பாடசாலையாக செயல்பட்டு வருகிறது. யாரிடமும் எந்த உதவியும் இந்த பாடசாலைக்காக நாங்கள் கேட்பதில்லை. எங்களுடைய பென்ஷன் காசை போட்டே இதற்குரிய செலவுகளை செய்து வருகிறோம்.”

“மார்கழி மாதம் 30 நாட்களும் காலை மாணவர்களுக்கு சுண்டல் பிரசாதம் தருகிறோம். சுமார் இரண்டு கிலோ சுண்டல் விநியோகிப்போம். அதற்கு தான் கொஞ்சம் செலவு பிடிக்கும். மற்றபடி ஏதோ சமாளித்து வருகிறோம்”

Kundrathur Thevara Pada Salai 15

Kundrathur Thevara Pada Salai 11
அடியார்க்கு அடியேன்!

Kundrathur Thevara Pada Salai 17“புதுவையிலிருந்து குன்றத்தூருக்கு எப்போது வந்தீர்கள்?”

“எங்கள் அக்காவை இங்கு தான் கட்டிக்கொடுத்திருந்தோம். அம்மா, இங்கே வந்தபோது அவருடன் சேர்ந்து 15 வது வயதில் இங்கே வந்துவிட்டேன். அன்று முதல் இந்த கோவிலுக்கு தினசரி வந்துகொண்டிருக்கிறேன்.”

சங்கர் அவர்கள் மெத்தப் படித்தவர் அல்ல. அவர் எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார் என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது. “எல்லாம் கேள்வி ஞானம் தான்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

இவர்களது தொழில் தறி நெய்வது. தேவாரம் பாடிக்கொண்டே தறி நெய்வது வழக்கம். எங்களையும் தினசரி காலை எழுப்பி குளிப்பாட்டி திருநீறு வைத்துவிட்டு தேவாரம் படுவார். நாங்கள கூடவே பாடிக்கொண்டு வருவோம். இப்படி தொற்றியது தான் தேவார ஆர்வம்.

Sekkizhar Guru Pooja 1
பிரமாதமான அலங்காரத்தில் தெய்வத்திரு சேக்கிழார்

தேவாரம் சொல்லிக்கொடுப்பது தவிர இந்த பாடசாலையின் பணி வேறு ஏதேனும் உண்டா?

ஒவ்வொரு மார்கழியின்போது ஏதாவது ஒரு திருத்தலத்துக்கு இந்த குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்வோம். இந்த முறை நாங்கள் சென்று வந்தது ஸ்ரீ காளஹஸ்தி. தொடர்ந்து ஆறு ஏழு வருடங்களாக திருத்தல சுற்றுலா இவர்களை அழைத்து சென்று வருகிறோம். அடுத்து திருக்கடையூர் செல்லவேண்டும் என்று விருப்பம்.

Sekkizhar Guru Pooja 12

Sekkizhar Guru Pooja 2வாவ்… எத்தனை நல்ல விஷயம்… இந்த ஆண்டு மார்கழிக்கு இவர்களை திருத்தல சுற்றுலா அழைத்து செல்வது நமது தளத்தின் கடமை என்று கூறியிருக்கிறோம். அதற்குரிய முழு செலவையும் ஏற்றுக்கொண்டு ஏதேனும் ஒரு தொன்மையான திருத்தலத்திற்கு அழைத்து சென்று வருகிறோம் என்று கூறியிருக்கிறோம்.

நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே மேள தாள சத்தம் கேட்டது.

என்ன என்று விசாரித்தோம்.

சேக்கிழார் குரு பூஜையை முன்னிட்டு இறைவனடி சேரும் உற்சவம் நடைபெற்றுவதாக கூறினார். சந்திப்பு நிறைவு பெற்றவுடன் அதில் கலந்துகொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

Sekkizhar Guru Pooja 3

Sekkizhar Guru Pooja 4இது தவிர இந்த தேவார பாடசாலையின் பணிகள் என்னென்ன?

வறுமையில் வாடும் மாணவர்களுக்கு சீருடை, பாட புஸ்தகங்கள் வாங்கித் தருவது, பீஸ் கட்டுவது என்றும் செய்து வருகிறோம்.

தகுதியுடையவர்கள் யாருக்கேனும் செய்யவேண்டும் என்றால் நமக்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்.

சங்கர் அவர்களை அவரது மாணவர்கள் முன்னிலையிலேயே கௌரவிக்க விரும்பினோம்.

Sekkizhar Guru Pooja 5

Sekkizhar Guru Pooja 6அனைத்து மாணவர்களையும் அங்கிருந்த மண்டபத்தில் அசெம்பிள் செய்யவைத்து, அவர்களிடையே உரையாற்றினோம்.

“இத்தனை ஆண்டுகள் உங்களுக்கு எந்த வித பிரதி பலனும் எதிர்பாராமல் தேவாரம் சொல்லித் தரும் உங்கள் ஆசிரியர் திரு.சங்கர் அவர்களை நான் நடத்திவரும் ரைட்மந்த்ரா.காம் தளம் சார்பாக கௌரவிக்க விரும்புகிறேன். இவரது தொண்டு மேன்மேலும் தொடரவேண்டும்” என்று கூறி பலத்தை கைதட்டல்களுக்கிடையே திரு.சங்கர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தோம்.

Sekkizhar Guru Pooja 7

பின்னர் வெற்றிலை பாக்கு, பழம், இனிப்புக்கள் அடங்கிய தாம்பூலத்துடன் அவருக்கு வேட்டி சட்டை ஒரு செட் பரிசளித்தோம்.

“ஐயா.. செய்து வரும் தொண்டிற்கு முன் இதெல்லாம் ஒன்றுமேயில்லை. இருப்பினும் எங்கள் ஆத்ம திருப்திக்காக இதை செய்கிறேன். இனி வரும் காலங்களில் உங்கள் பாடசாலைக்கு தேவையான பல உதவிகளை செய்ய உறுதி பூண்டிருக்கிறேன். திருவருள் துணைக்கொண்டு அனைத்தும் நல்லபடியாக நடைபெறவேண்டும்.”

தொடர்ந்து மாணவர்களிடம் நமது விருப்பமாக “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” பாடலை பாடுமாறு கேட்டுக்கொண்டோம். அனைவரும் அடுத்த நொடி மடை திறந்த வெள்ளமாய் அந்த பாடலை பாடி பரவசப்படவைத்துவிட்டார்கள்.

Sekkizhar Guru Pooja 11

Sekkizhar Guru Pooja 9

Sekkizhar Guru Pooja 10திரு.சங்கர் அவர்களுக்கு இந்த அருந்தொண்டில் உதவியாக பாடசாலையின் பொருளாளர் திரு.புருஷோத்தமன் மற்றும் துணை ஆசிரியர்கள் திரு.முருகவேல், மற்றும் நாகலிங்கம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

திரு.புருஷோத்தமன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

அடுத்து நாம், மாணவ மாணவியர் உட்பட அனைவரும் திருமுறை பாடிக்கொண்டே கோவிலை வலம் வந்தோம்.

பின்னர் சேக்கிழார் குருபூஜை வைபவத்தில் கலந்துகொண்டோம்.

Sekkizhar Guru Pooja 8Sekkizhar Guru Pooja 14சேக்கிழார் உருவச் சிலைக்கு சிறப்பு பூஜை, நடைபெற்று வீதியுலா நடைபெற்றது. நாகேஸ்வரர் ஆலய பிரகாரத்தை சேக்கிழாரின் திருவுருவச் சிலை மூன்று முறை வலம் வந்தபிறகு சுவாமி சன்னதிக்கு சேக்கிழார் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவர் ஜோதியில் ஐக்கியமாகும் வைபவம் நடைபெற்றது.

Sekkizhar Guru Pooja 15

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான முறையில் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மாணவர்களுக்கு ஏதேனும் நம் தளம் சார்பாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினோம்.

அவர் எதுவும் நம்மிடம் எதிர்ப்பார்க்கவில்லை… இதை செய்யுங்கள்… அதை செய்யுங்கள் என்று சொல்லவில்லை. இத்தனை நல்ல விஷயம் நடப்பதை பார்த்து நமது பங்கிற்கு இம்மாணவர்களுக்கு ஏதேனும் செய்யவில்லை என்றால் எப்படி? நாமாகத் தான் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்.

என்ன செய்யப்போகிறோம்?

அது ஒரு தனிப் பதிவில். இரண்டொரு நாளில். நீங்களும் அதில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும்.

================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================

Also check :

பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?

‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

இறைவனை குறைத்து மதிப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா?

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

================================================================

[END]

5 thoughts on “பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

  1. திரு சங்கர் அவர்களின் தேவார சேவையை பற்றிப் படிக்க படிக்க பிரமிப்பூட்டுகிறது. இந்த பதிவு மிரட்டல் பதிவு.

    எனக்கும் இந்த பதிவை படித்த பிறகு தேவார பாடல் வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் பாட சாலைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு ஈசன் அருள் புரியட்டும்.

    தேவாரம் ஓதும் குழந்தைகளை பார்க்க பரவசமாக உள்ளது.

    மிகவும் நேர்த்தியாக தொகுத்து அளித்துள்ளீர்கள் இந்த பதிவை

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. பேசாமல் குன்றத்தூரில் ஒரு வீடு வாங்கிக்கொண்டு போய் செட்டிலாகிவிடலாமா என்று தோன்றுகிறது. கோவிலும் படமும் அத்தனை அழகு.

    ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்கிறது.

    ஆன்மீகத்துக்கும் பக்திக்கும் சேவை செய்பவர்களை தேடித் தேடி சென்று அவர்கள் புகழை பரவச் செய்யும் உங்கள் தொண்டு ஈடு இணையற்றது.

    குத்துவிளக்கின் ஒளி ஒருபுறம் மறுபுறம் சேக்கிழாரின் திருவுருவச் சிலை நடுவே திரு.சங்கர் அவர்கள் காணப்படும் அந்த படம், சான்சேயில்லை.

    திருமுறை வகுப்பில் குழந்தைகளை பார்க்கும்போது மனதுக்கு அத்தனை இதம். அவர்கள் கோவிலை பாடிக்கொண்டே வலம் வருவது இன்னும் இதம்.

    சேக்கிழாரின் குருபூஜைக்கே எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றிகள் பல. நம் தளம் இல்லாவிட்டால் இத்தகைய அனுபவங்கள் காட்சிகள் எல்லாம் கடைசிவரை பார்க்க முடியுமா என்று தெரியாது. ஏதோ உங்கள் புண்ணியத்தில் நாங்கள் பலன் பெறுகிறோம். உங்களுக்கு நாங்கள் பட்டுள்ள கடனை எப்படி அடைக்கப்போகிறோமோ என்று தெரியவில்லை.

    நான் விருப்ப சந்தா செலுத்துவது மட்டுமின்றி எனக்கு தெரிந்தவர்கள் இரண்டு மூன்று பேருக்கு சொல்லி அவர்களையும் சேரச் சொல்லியிருக்கிறேன்.

    தொடரட்டும் தங்கள் தொண்டு. பரவட்டும் ஆன்மீக ஒளி. செழிக்கட்டும் இந்த வையகம்.

    திருச்சிற்றம்பலம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. வணக்கம்……….திருமுறை ஆசிரியர் திரு.சங்கர் அவர்களைப் பற்றிய பதிவு அருமை………குழந்தைகள் திருமுறை ஓதுவதைக் கண்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது……….கூடவே சேக்கிழார் குருபூஜை வைபவத்தில் கலந்து கொண்ட திருப்தியும்……….

    எங்கள் குழந்தைகளையும் திருமுறை வகுப்பில் சேர்க்க வேண்டும் என்பது எங்கள் அவா……… திருமுறை நாதன் திருவருள் கிட்ட வேண்டும்……….

  4. இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினரை நெறிப்படுத்தி அவர் தம் ஆரம்ப காலத்திலேயே திருமுறை என்னும் விருட்சத்திற்கான விதையை விதைக்கும் உன்னத பணியை மேற்கொண்டுவரும் திரு சங்கர் அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுதல்களும்

    தொடரட்டும் அவர் தம் திருத்தொண்டு

    ஸ்ரீ ராமருக்கு அணில் போல
    சுந்தர் அவர்களுடன் சேர்ந்து நாமும் அவர்தம் தொண்டு சிறக்க துணை நிற்போம்

    திருசிற்றம்பலம்!!!

  5. பிரேமலதா அம்மா அவர்கள் பின்னூட்டம் இட்டது போல்…குன்றத்தூருக்கே சென்று விடலாம் போல் தான் தோன்றுகிறது. குன்றத்தூர் – பக்தியின் பரவசம், இறையின் இன்பம், மொத்தத்தில் பேரின்ப தளம் என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு குன்றத்தூர் என்றால் முருகன் கோவில் மட்டும் தான் தெரியும். ஆனால் தற்போது நம் தளம் வாயிலாக குன்றத்தூர் பற்றி புதிய, அரிய செய்திகள்.

    சென்னையில் இது போல் மூன்று தலங்கள்உள்ளன.திருவொற்றியூர் மற்றும் மயிலாப்பூர்.இந்த மூன்று தலங்களும் என்னை பொறுத்த வரை முக்தி தலங்கள் என்றே சொல்ல வேண்டும்.

    இந்த சந்திப்புக்கு அடியேனும் ஒரு சிறு துரும்பாய் இருந்திட ஆணை இட்ட, எல்லாம் வல்ல ஈசனாரிடம் சரணடைகிறேன்.

    முதலில் சென்று, அக்குழந்தைகளை பார்த்தவுடன் ..நாம் இருப்பது சென்னையிலா ? என்ற கேள்வி எழுந்தது.சிந்திப்பு மிக மிக இனிமையாய் இருந்தது.மனம் அங்கே தான் சுற்றி கொண்டிருந்தது.ஏனெனில் சந்திப்பின் முத்தைப்பாய் அமைந்த “சேக்கிழார் குரு பூஜை”.
    குரு பூஜையை அப்படியே பதிவு செய்த சுந்தர் அண்ணாவின் “காமிரா” கண்களுக்கும் நன்றிகள்.
    என்னை வைத்து சமாளித்ததை மறந்து விட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *