அதே போன்று நாம் போடப்போகும் ஒரு தடுப்பூசி பற்றியது இந்த பதிவு. ஆனால் இது உடலில் போடும் தடுப்பூசி அல்ல. மனதில் போடும் தடுப்பூசி. ஆம் குழந்தைகளிடம் எந்த தீய எண்ணங்களும் அண்டாமல் இருக்க, அறச்சிந்தனையையும் தெய்வ நம்பிக்கையையும் பெற்று நன்கு படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடி தர போடப்படும் தடுப்பூசி!!
இளமையில் பதியும் எந்த விஷயமும் மனதில் ஆழமாக பசுமரத்தாணி போல பதிந்துவிடும். எனவே தான் இளமையில் கல் என்றனர் சான்றோர்கள்.
சுமார் இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர், ஒரு குழந்தை பிறந்து மாணவனாக வளரும் காலகட்டத்தில் அக்குழந்தை கெட்டுப்போவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. (புறக்காரணிகள்) ஆனால், இன்று சமுதாயம் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். டாஸ்மாக்கில் ஹீரோ அமர்ந்து மது குடிக்கும் காட்சிகள் இல்லாத படமே கிடையாது. குழந்தைகள் மனம் மாசடைவதற்கு வாய்ப்புக்கள் மிக மிக அதிகம்.
மக்களிடம் அறச்சிந்தனைகள் குறைந்து நாம் மேலே வரவேண்டுமேன்றால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. குழந்தைகளுக்கு அறநெறிகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் போதிப்பதற்கு பதில், அவர்களை ஒரு ஏ.டி.எம். எந்திரமாக எதிர்காலத்தில் மாற்றவே இன்றைய கல்வி முறைகள் முயற்சிக்கின்றன. பெற்றோர்களும் அப்படி பார்ப்பதில் தான் பெருமை கொள்கிறார்கள். (அதன் விளைவு தான் இன்று பெருகி வரும் முதியோர் இல்லங்கள்!)
இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில், படிக்கும் குழந்தைகள் மத்தியில் நல்ல கருத்துக்களை, பக்தியை பதியச் செய்வது மிகவும் அவசியம். அதைத் தான் நம் தளம் செய்யவிருக்கிறது.
அகத்தியர், திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை, கந்தன் கருணை போன்ற பக்தி திரைப்படங்களை நாம் எப்போதாவது தொலைக்காட்சிகளில் பார்க்க நேரும்போதெல்லாம், இந்த கால சந்ததியினருக்கு இந்த படங்கள் பற்றி தெரியாமலே போகும் அபாயம் இருக்கிறதே என்று அச்சப்படுவது உண்டு.
முன்பெல்லாம் கோவில் திருவிழாக்களில் இரவு நேரம் இது போன்ற படங்களை ப்ரொஜெக்டரில் காட்டுவார்கள். (அப்போதெல்லாம் ஃபிலிம் சுருள் தான்). அதற்காகவே காத்திருந்து, எந்த படமாக இருந்தாலும், வெட்டவெளியில் அமர்ந்து கொட்ட கொட்ட கண்விழித்து பார்த்த அனுபவமெல்லாம் நமக்குண்டு. அப்படி சிறு வயதில் படம் பார்த்து, விளையும் பருவத்தில் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டவர்கள் பலர் உண்டு. நற்சிந்தனை சிறுவயதிலேயே விதைக்கப்பட அது ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் இப்போது இதற்கெல்லாம் வாய்ப்புக்கள் இல்லையே.
இருட்டை சபித்து கொண்டிருப்பதற்கு பதில், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதே சிறந்தது என்பதில் என்றுமே நமக்கு நம்பிக்கையுண்டு.
* இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் யாவும் திருவள்ளுவர் குருகுல மாணவர்களுடன் நாம் விநாயக சதுர்த்தி கொண்டாடி பின்னர் அவர்களுக்கு அன்னதானம் செய்தபோது எடுத்தது. இதைப் பற்றிய பதிவை தளத்தில் அளிக்க அப்போது அவகாசம் கிடைக்கவில்லை. மேற்படி கொண்டாட்டத்தில் வாசகர்கள் சிலரின் பங்களிப்பு இருப்பதால் இந்த புகைப்படங்களை பகிர ஒரு வாய்ப்பாக கருதி இங்கு இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம்.
வியாழன் (ஜூன் 4, 2015) வைகாசி மூலம் திருஞானசம்பந்தர் குரு பூஜை. அதையொட்டி, இன்று புதன் (ஜூன் 3) மாலை சென்னை சைதையில் உள்ள திருவள்ளுவர் குருகுலம் என்னும் ஆதரவற்றோர் இல்லத்தில், (இங்கு தாழ்த்தப்பட்ட மற்றும் நரிக்குறவ இனத்தை சேர்ந்த பல குழந்தைகள் படிக்கிறார்கள். இங்கு நம் தளம் சார்பாக பலமுறை அன்னதானம் நடைபெற்றிருக்கிறது) மாணவர்களுக்கு திருஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும், திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைப்பில், திரு.காமேஸ்வரராவ் என்பவர் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘ஞானக்குழந்தை’ என்னும் படம் ப்ரொஜக்டரில் திரையிடப்படவிருக்கிறது. திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே மையமாக கொண்டு வெளியான ஒரே படம் இது மட்டுமே. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சம்பந்தர் வரலாற்றில் கூறப்பட்ட இடங்களிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது!)
ஆளுடையப் பிள்ளையின் அற்புதமான வரலாற்றை விளக்கும் இந்த படத்தில், பல இடங்களில் தேவாரப் பாடல்கள் இனிமையான இசையில் இடம்பெற்றிருக்கின்றன. திருநாவுக்கரசரை பற்றி கூறாமல் திருஞானசம்பந்தரின் வரலாற்றை கூற முடியுமா? இந்த படத்தில் திருநாவுக்கரசரை இறைவன் ஆட்கொண்ட சம்பவ்மும் இடம்பெற்றுள்ளது. எனவே மழைலையர்களுக்கு ஒரே நேரத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரை பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
பக்தி படம் என்பதால் மாணவர்கள் எந்தளவு ஆர்வமுடன் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் கவனமாக பார்க்கவேண்டும் என்பதற்காக படம் நிறைவடைந்தவுடன் படத்தில் இடம்பெறும் ஞானசம்பந்தர் வரலாற்றிலிருந்து கேள்வி-பதில் போட்டி ஒன்றை வைத்து அதில் ஜெயிக்கும் முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசளிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
(ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் மேற்கு மாம்பலத்தில் உள்ள வேத பாட சாலை ஒன்றில் ஜகத் குரு ஸ்ரீ ஆதிசங்கரர் என்கிற திரைப்படத்தை நாம் திரையிட்டது நினைவிருக்கலாம்.)
சென்னையை சுற்றிலும் உள்ள பல வேத பாடசாலைகள் மற்றும் மாணவர் இல்லங்களில் இது இனி மாதந்தோறும் தொடரும். அடுத்து அம்பத்தூரில் உள்ள வேத பாடசாலையில் இதே போன்று பக்தி திரைப்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.
நாம் பதிவின் துவக்கத்தில் கூறியபடி, இது வளரும் மாணவச் செல்வங்களுக்கு ஒரு சிறந்த தடுப்பூசியாக திகழ்ந்து அவர்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடனும் நற்சிந்தனையுடனும் அசைக்க முடியாத இறை நம்பிக்கையுடனும் வளர உறுதுணையாய் இருக்கும்.
நாளை திருவள்ளுவர் குருகுலத்தில் நடைபெறும் இந்த SPECIAL SCREENING கிற்கு PROJECTOR, SCREEN, SOUND SYSTEM, SPEAKER எல்லாம் சேர்த்து (வாடகை) ரூ.3600/- செலவாகிறது. (வாசகர் திரு.நாகராஜன் ஏற்கனவே டி.வி.டி. பிளேயர் வாங்கி கொடுத்துவிட்டார்.)
நாமே மேற்படி ஸ்க்ரீனிங் செலவை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றாலும் தொடர்ந்து இது நடைபெற (LONG RUNNING) வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை. எனவே மேற்கூறிய செலவினத்தை வாசகர்கள் யாரேனும் ஏற்றுக்கொண்டு ஸ்பான்ஸர் செய்ய விரும்பினால் நம்மை தொடர்புகொள்ளவும்.
இன்னொரு வேண்டுகோள் : இது போன்ற சேவைகளில் தோள் கொடுக்கும் வாசகர்கள் அப்படி உதவிடும்போது மறக்காமல் நமது தளத்திற்கும் ஏதேனும் உதவ வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். பலர் தங்களுக்கு புண்ணியம் சேர்க்க நம்மை பயன்படுத்திக்கொண்டு கறிவேப்பிலை போல நம்மை புறக்கணித்துவிடுகின்றனர். முன்பெல்லாம் இதைப் பற்றி நாம் கவலைப்பட்டது கிடையாது. ஆனால், தளத்திற்கென தனி அலுவலகம் துவக்கிவிட்ட நிலையில் அனைத்தையும் நிர்வகிப்பது என்பது எத்தனை சிரமம் என்பது நீங்கள் அறியாததல்ல. ஒவ்வொரு நொடியையும் பயனுள்ள வகையில் செலவழிக்கவே விரும்புகிறோம். இதை புரிந்துகொண்டு பயணத்தில் துணை நிற்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.
தாங்கள் அளிக்கும் தொகையை எப்படி பிரித்துக்கொள்ளவேண்டும் என்கிற BREAK-UP விபரத்தையும் சம்பந்தப்பட்டவர்களே தெரிவித்துவிட்டால், நமக்கு சௌகரியமாக இருக்கும். அந்தந்த பணிக்கு சரியாக அந்த தொகையை செலவிடமுடியும். புரிதலுக்கு நன்றி!
* இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் யாவும் திருவள்ளுவர் குருகுல மாணவர்களுடன் நாம் விநாயக சதுர்த்தி கொண்டாடி பின்னர் அவர்களுக்கு அன்னதானம் செய்தபோது எடுத்தது. இதைப் பற்றிய பதிவை தளத்தில் அளிக்க அப்போது அவகாசம் கிடைக்கவில்லை. மேற்படி கொண்டாட்டத்தில் வாசகர்கள் சிலரின் பங்களிப்பு இருப்பதால் இந்த புகைப்படங்களை பகிர ஒரு வாய்ப்பாக கருதி இங்கு இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம்.
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Also check :
இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?
ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள்
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
=====================================================================
[END]
நம் தளம் சார்பாக நாட்டுக்கும். வீட்டுக்கும் பெருமை தேடித் தரப் போகும் தடுப்பூசிக்கு வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி பக்தி பூர்வமான படங்களைப் பார்ப்பதால் குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களும் , ஆன்மிக ஞானமும் வளரும்
தங்களின் சேவை மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
வாழ்க வளமுடன்
சுந்தர் சார் தளத்தில் காப்பி பேஸ்ட் தடை இருப்பதால் முன்புபோல் கருத்துகளை பதிவிட சிரமமாக இருகின்றது , சிலரின் தவறுகளால் பலர் பாதிக்கபடுகின்ற்றனர்
நல்ல முயற்சி
குழந்தைகளின் அறிவு விசாலமடை யவும், மனம் பக்குவமடயவும் பசுமரத்தாணி போல திரைப்படம் பதிந்து விடும் , பண்பட்ட நிலத்தில் அன்று சுந்தர் சாரிடம் போடப்பட்ட விதை இன்று பலருக்கு விதை ஆகின்றது, நாளை இதில் எத்தனை வீரியம் உள்ள விதை வருமோ
வரும் தலைமுறை ,இனி திருமுறை பாடும் , இது உருதி
நன்றி
பிறந்த குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி போல, நம் தளம் வாயிலாக போடப்படும்
தடுப்பூசி…வளரும் தலைமுறைக்கு தேவையான ஒன்று..கண்டிப்பாக இந்த தடுப்பூசியால் நாம் வளமிகு பாரதத்தை காண இருக்கிறோம்..ஊர் கூடி தேர் இழுக்க வேண்டிய கட்டயாமும் கூட.நம்மால் முடிந்த உதவிகளை “rightmantra” விற்கு செய்வோம்.
இன்றைய தலைமுறைக்கு நம் தள பதிவுகளும், குரு தரிசனம்,உழவார பணி என எண்ணற்ற அருமருந்துகள் உள்ளன. இதனை நாம் பயன்படுத்தி, வளரும் தலைமுறைக்கு தோள் கொடுப்போமாக..
“ஞானக்குழந்தை” திரை காவியம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு உள்ளது..தாங்கள் பட்டியல் இட்ட திரைப்படங்களையும் பார்க்க வேண்டும் – ஏனெனில் இவை(அகத்தியர், திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை, கந்தன் கருணை போன்ற பக்தி திரைப்படங்களை ) அனைத்தும் நாங்கள் பார்க்க வேண்டிய படங்கள் கூட..
நல்ல ஒரு விதை விதைத்து, செயல் படுத்திய ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள் பல..
சார், தாங்கள் அம்பத்தூரில் எப்போது வருவீர்கள் என்று தயை கூர்ந்து சொன்னால் வருவதற்கு ஏதுவாக இருக்கும்