Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

print
தீபாவளியன்று குன்றத்தூர் அடிவாரத்தில் உள்ள திருமுறை விநாயகருக்கு நமது தளம் சார்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது நினைவிருக்கலாம். அது பற்றிய பதிவை அளிக்க நினைத்து, எழுத ஆரம்பித்தோம். பிள்ளையாரின் பெருமையை விளக்கும் புராணக் கதை ஒன்றை அளித்துவிட்டு அதன் பிறகு விநாயகருக்கு நடந்த அபிஷேகத்தை விளக்கலாமே என்று இந்த கதையை எழுத ஆரம்பித்தோம். கதை சற்று பெரிதாக வந்துவிட்டதால் இதை தனிப்பதிவாக அளிக்கிறோம். திருமுறை விநாயகருக்கு நடைபெற்ற அபிஷேகம் தனிப்பதிவாக அடுத்து வரும்.!

மிதிலையை ஜனக மகாராஜன் ஆண்டு வந்த நேரம். தான் பெற்றிருந்த கீர்த்தியினாலும் செல்வத்தினாலும் ஜனகன் தானே பிரப்பிரும்மம் என்று அகந்தையில் இருந்தான்.

கண்ணதாசனின் மணிமொழி ஒன்று உண்டு. “தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!!” அது போல இனி அடையக்கூடியது எதுவுமே இல்லை என்ற நிலை வந்தபோது எல்லோரையும் அலட்சியப்படுத்த தொடங்கி விட்டான் ஜனகன்.

இந்நிலையில் ஜனகனை காண ஒரு முறை நாரத மகரிஷி மிதிலைக்கு வந்தார். அவருக்கு உரிய மரியாதையை தராமல் அவரை அலட்சியப்படுத்தியவன் மேலும் தான் ஒரு மிகப் பெரிய கொடையாளி என்பதை நாரதர் எதிரே காட்டிக்கொள்ள விரும்பி பல்வேறு தரப்பினரை வரவழைத்து தான தருமங்கள் செய்தான். அவன் செய்தவை அனைத்தும் தன்னுடைய செல்வத்தை பறைசாற்றும் விதமாகவே இருந்தன. தான் என்கிற அகம்பாவத்தால் ஜனகன் நடந்துகொள்வதை நாரதர் உணர்ந்துகொண்டார்.

“இறைவனின் திருவருளால் நீ அனைத்து விதமான செல்வங்களையும் அடைந்து உன்னை வருவோருக்கு வாரி வாரி கொடுக்கிறாய். பகவானின் அனுகிரகத்தால் உன்னுடைய செல்வம் மேன்மேலும் பெருகட்டும்” என்று ஆசீர்வதித்தார்.

Vinayagar 1

அதைக் கேட்டு சிரித்த ஜனகன், “பகவான் என்கிற ஒருவன் தனியே இருக்கிறானா என்ன? என்னை நாடி வருவோருக்கு அனைத்தையும் அவர்கள் விரும்பியபடி கொடுப்பதால் நானே பகவான். அதை நீங்கள் உணர வேண்டும்” என்றான்.

“ஜனகனே செல்வம் தந்த மமதையில் நீ இவ்வாறு பேசுகிறாய்… உனக்கு தக்க பாடம் விரைவில் கிடைக்கும்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் நேரே மகாகணபதியை சென்று தரிசித்து நடந்த அனைத்தையும் முறையிட்டு, ஜனகனின் ஆணவத்தை ஒடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து விக்னேஸ்வரப் பெருமான் ஒரு தொழு நோய் பற்றிய ஏழை அந்தணர் உருவம் எடுத்து ஜனகனின் மாளிகை சென்றடைந்து, தாம் ஜனகனை சந்தித்து யாசகம் பெற வந்திருப்பதாய் கூறினார். காவலர்கள் உடனே ஜனகரின் முன்பு வேதியர் வடிவில் வந்த பிள்ளையாரை கொண்டு போய் நிறுத்தினர்.

“மறையவரே உமக்கு என்ன வேண்டும்?” என்று ஜனகன் கேட்க, “மன்னா… நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. முதலில் எனக்கு வயிறு நிறைய சாப்பிடவேண்டும்” என்றார்.

“அட… அதற்கென்ன இதோ உடனே நீங்கள் பசியாற ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி மந்திரி பிரதானிகளை அழைத்து வேதியருக்கு வயிறு நிறையும்படி அறுசுவை உணவை அளிக்க உத்தரவிட்டான்.

அரண்மனை விருந்து மண்டபத்தில் வேதியரை உட்காரவைத்து தலைவாழை இலை விரித்து அதில் அறுசுவை உணவை பரிமாறினார்கள் அரண்மனை பணியாளர்கள்.

தன் முன் வைக்கப்பட்ட அனைத்தையும் ஒரே நொடியில் விழுங்கி ஏப்பம் விட்டார் வேதியர். அடுத்தடுத்து வைக்கப்பட்ட அனைத்தையும் இவ்வாறு ஒரே நொடியில்  கபளீகரம் செய்துவிட, புதிதாக சமைக்க துவங்கினார்கள்.

“நீங்கள் சமைக்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது” என்று கூறி, நேரே சமையற்கட்டுக்குள் சென்று உலையில் கொதித்துக்கொண்டிருந்தது முதல், சமைக்காமல் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், மளிகை பொருட்கள என அனைத்தையும் எடுத்து விழுங்கினார்.

அப்போதும் பசியடங்காது “பசி… பசி….” என்று வேதியர் அலற… ஜனகனுக்கு தகவல் சென்றது. மிதிலையில் உள்ள அனைத்து பொருட்களும் கொண்டு வந்து கொடுத்தான். அப்போது கூட வேதியர் பசி அடங்கவேயில்லை.

துணுக்குற்ற ஜனகன், வேதியரிடம் “இனி உங்களுக்கு உண்ண கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. உங்கள் பசியை தணிக்கும் இடத்திற்கு சென்று நீங்கள் சென்று பசியாறலாம்” என்றான்.

“என்ன மன்னா சொல்லுகிறாய்… நீ தர்மப் பிரபு வாரி வழங்கும் வள்ளல் என்றெல்லாம் சொன்னார்கள். நீ என்னடாவென்றால் யானைப் பசிக்கு சோளப் பொரியை போல, ஏதோ தந்துவிட்டு என்னை வேறு இடத்திற்கு போகச் சொல்லுகிறாய்? இது தான் ராஜதர்மமா? வெறும் பசியைக் கூட உன்னால் போக்க முடியவில்லை… இதில் நான் தான் பரப்பிரும்மம் என்று வேறு மாரதட்டிக்கொள்கிறாய்…” என்று சினத்தோடு கூறி அரண்மனையிலிருந்து வெளியேறினார் வேதியர்.

வேதியரின் வார்த்தைகளை கேட்ட ஜனகன் இவர் யாராக இருக்கும் என்று குழம்பினான். மேலும் தனது பிரம்ம தத்துவத்துக்கு வந்த சோதனையை எண்ணியும் வருந்தினான்.

=========================================================

Also check…

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

=========================================================

அரண்மனையிலிருந்து வெளியேறிய அந்தணர் நேராக அதே நகரத்தில் இருந்த திரிசுரன் – விரோசனை தம்பதியினரின் வீட்டிற்கு சென்றார். அத்தம்பதிகள் வேத ஒழுக்கம் தவறாமல் இல்லறம் நடத்தி விநாயகப் பெருமானிடம் பெரும் பக்தி பூண்டு வாழ்ந்து வந்தார்கள். மேலும் நாள் தவறாமல் அதிதி பூஜையும் செய்துவந்தார்கள். விநாயகருக்கு பூஜை செய்த பின்பு ஒரு அதிதிக்கேனும் உணவிடாமல் தாங்கள் உண்ணமாட்டார்கள். இதை ஒரு தவம் போலவே அத்தம்பதிகள் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் வேதியர் திரிசுரன் வீட்டை நாடிச் சென்ற நேரம், அங்கே தனது மனைவி பணிவிடைகள் செய்துகொண்டிருக்க திரிசுரன் விக்னேஸ்வர பூஜை செய்துகொண்டிருந்தான். வேதியரை கண்டதும் அவரிடம் இன்சொல் கூறி வரவேற்று உபசரித்தான்.

“அன்பனே… உணவுண்டு பலநாட்கள் ஆகியதால் எனக்கு ஏற்பட்ட பெரும்பசியை தீர்த்து வைக்கக் கோரி ஜனகனை அணுகினேன். அவனோ எனக்கு சிறிதே உணவிட்டான். அவன் அளித்த சிறு உணவானது, வேள்வித் தீயில் நெய்யை ஊற்றியது போல மேலும் என் பசியை அதிகரித்துவிட்டது. நீ கணபதி உபாசனை மட்டுமின்றி அதிதி பூஜையும் செய்து வருபவன் என்று கேள்விப்பட்டேன்! எனவே என் பசியை முற்றிலும் போக்கிக் கொள்ளவே உன்னை நாடி வந்தேன்…” என்றார் வேதியர்.

திரிசுரனின் மனைவி விரோசனை இதைக் கேட்டு “சுவாமி ஆற்று நீரால் தீராத தாகமா இந்த ஏழை வீட்டு பானை நீர் தீர்க்கப்போகிறது? நேற்று வரை நாங்களே யாசித்து கிடைப்பதை ஏற்று உணவுண்டு வாழ்ந்துவந்தோம். இன்றோ அதற்கும் வழியில்லை. விநாயகப் பெருமானுக்கு அர்ச்சித்த ஒரே ஒரு அருகம்புல் மட்டுமே எங்களிடம் இருக்கிறது” என்று கண்ணீர் சொரிந்தாள்.

“அம்மா… ஒப்புடன் முகமலர்ந்து உப்பில்லா கூழ் இட்டாலும் அதுவே எமக்கு அமுதமாகும். பெரும் தனவான்கள் கோடிப் பொன் கொட்டிக்கொடுத்தாலும் அது எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால், உன் போன்ற ஏழை எளியோர்கள் கொடுக்கும் புல் கூட பெருமை மிக்கதே… விக்னேஸ்வர பூஜை செய்து மீதமிருக்கும் அந்த அருகம்புல்லைக் கொடு. நான் பசியாறிக் கொள்கிறேன்!” என்று கூறினார்.

Pillaiyar Viradham perumai

இதையடுத்து விரோசனை அந்த அருகம்புல்லை கொண்டு வந்து பக்தியுடன் அதை வேதியரிடம் கொடுக்க, வேதியர் அதை விழுங்கி, வயிற்றையும் தடவினார் பின்னர் பசி நீங்கியது போன்ற ஒரு ஏப்பம் விட்டார்.

குசேலன் உள்ளன்போடு கொண்டு வந்த பிடி அவலை கிருஷ்ண பகவான் உண்ணும்போது அங்கே குசேலனின் குடிசை எப்படி மாளிகையானதோ அதே போன்று திரிசுரனின் குடிசையும் திடீரெனெ மாளிகையாக மாறியது. எங்கும் பொன்னும் பொருளும் நிரம்பி வழிந்தன. நெற்குதிர் நிரம்பி நெல் கீழே சிந்தியது. அடுத்தடுத்து அவர்கள் வீடு மட்டுமல்ல… ஒட்டுமொத்த மிதிலையும் பொன்னாலும் பொருளாலும் நெல் மற்றும் இதர தானியங்களால் நிரம்பி வழிந்தது. பக்கத்து நாடுகளுக்கும் அதன் வீச்சு இருந்தது.

திரிசுரனும் விரோசனையும் நடப்பது என்னவென்று அறியாமல் விழித்தார்கள். ஒட்டுமொத்த மிதிலையும் வியப்பில் ஆழ்ந்தது. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

இங்கே திரிசுரன் முன்பு நின்றுகொண்டிருந்த வேதியரான விநாயகப் பெருமான் தன் திவ்ய மங்கள சுயரூபத்தை காட்டினார்.

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியுடன் முழுமுதற்க் கடவுள் தங்கள் முன்னே நிற்பதை கண்ட திரிசுரன் தம்பதியினர் அவரை விழுந்து வணங்கி பலவாறு போற்றி துதித்தனர்.

விஷயம் ஜனகனின் காதுகளை சென்றடைய, “என்ன, உணவை யாசகம் கேட்டு வந்த வேதியரா இதற்கு காரணம்?” என்று வியந்து, உடனே திரிசுரனின் வீட்டிற்கு தனது இரதத்தில் விரைந்தான்.

அங்கே விநாயகப் பெருமானை கண்டவுடன் அவரது பாதங்களில் பணிந்து வீழ்ந்து தனது பிழையை பொறுக்கும்படியும் வேண்டினான். “இன்றோடு என் ஆணவம் அழிந்தது ஐயனே. நீரே பரப்பிரும்மம் என்பதை உணர்ந்தேன். அடியேனை தேவரீர் மன்னித்து ஞானோபதேசம் செய்தருள வேண்டும்” என்று வேண்டினான்.

விநாயகரும் அவன் பால் இரக்கங்கொண்டு அவனை மன்னித்து அவனுக்கு ஆகம முறைப்படி தீக்ஷை அளித்து ஞானோபதேசம் செய்தார்.

அடியவர்களை தேடி வந்து அருள் செய்பவர் ஆனைமுகன் என்பதும் அவருக்கு அன்புடன் படைக்கும் ஒரு சிறு அருகம்புல்லே போதும் ஏற்று மகிழ்ந்து வேண்டியன அருள்வார் என்பதும் புலனாகும். மேலும் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பது போல, ஒழுக்க நெறி தவறாமல் வாழ்ந்து அதிதி பூஜை செய்து வருபவர் ஊரில் ஒருவர் இருந்தால் கூட போதும் அவர்களின் நற்பயனானது அந்த ஊரேயே வாழவைக்கும் என்பதும் புலனாகிறது அல்லவா?

==========================================================

Similar articles….

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions |  A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check :

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

==========================================================

அன்னதானம் என்கிற அருந்தவம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

==========================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 23

தீ விபத்து மற்றும் வீட்டிற்குள் கழிவு நீர் புகுந்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க!

சமீபத்திய மழை வெள்ளத்தால் பலர் வீடுகளில் கழிவு நீர் புகுந்துவிட்டது. அதை பிற்பாடு வெளியேற்றிவிட்டாலும் ஒரு வித அசூயை அனைவரிடத்தும் காணப்படுகிறது.

sambiraniஅத்தகையவர்கள் முடிந்தால் கணபதி ஹோமம் செய்து, வீடு முழுக்க பசு கோமியம் தெளிக்கவும். கழிவு நீர் புகுந்ததால் வீட்டிற்கு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.

இது தவிர இன்னொரு எளிய பரிகாரம் உண்டு. பிள்ளையாருக்கு சாத்திய அருகம்புல் மாலையை வீட்டிற்கு கொண்டு வந்து, அந்த அருகம்புல்லை கால்படாத இடத்தில் வைத்து உலர்த்தி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதை சாம்பிராணியுடன் சேர்த்து வீட்டில் புகை போட்டால் அனைத்து தோஷங்களும் விலகி சர்வ மங்களம் ஏற்படும். செலவில்லாத எளிய பரிகாரம் இது.

சிலர் வீட்டில் சிறு சிறு தீவிபத்துக்கள் ஏற்படும். பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும் ஒருவித மனக்கலக்கக்கத்துடன் இருப்பார்கள். அவர்களும் இந்த பரிகாரங்களை செய்யலாம். கோமியம் தெளித்து அருகம்புல் தூளை சாம்பிராணியுடன் கலந்து புகை போடவும். சுபம்!

டிப்ஸ் தொடரும்…

==========================================================

Also check…

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

==========================================================

 

[END]

3 thoughts on “தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

  1. நம் தளத்தில் இன்னுமொரு அருகம் புல்லின் மகிமை. ஆனால் இந்த பதிவில் நம் ஆஸ்தான ஓவியர் திரு ரமீஸ் அவர்களின் ஓவியம் மிஸ்ஸிங்.
    அருமையான பதிவு.

  2. வணக்கம் அதிதி தேவோ பவ கட்டுரை அருமை விநாயகரை தினம் வழிபட விரும்பி நேற்று ஒரு சிறு விநாயகர் சிலை வீட்டுக்கு வாங்கி வந்தோம் இன்று அவர் வழிபாட்டின் மகிமையை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

  3. அருகம்புல்லின் பெருமையும் விநாயகர் அருளும் ஒரு சேர புரியவைத்த அற்புத படைப்பு.. தலை கணம் இன்றி கணநாதனை தொழுதால் ஓடோடி வந்து அருள் புரிவான் எனும் உண்மையை எங்களுக்கு புரிய வைத்த ஆசிரியருக்கு நன்றி. மிகுந்த ஆவலடுன் அடுத்த தொடைர்சியை எதிர்பார்க்கிறோம் . நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *