“எனக்கு ஆன்மீகத்தில் நாட்டமில்லை… என்ன செய்வது சுந்தர்… !” என்றார்.
அவர் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே ஒரு கணம் தெரியவில்லை.
திருத்தலங்களுக்கு செல்வது போன்ற புண்ணிய காரியங்களில் ஈடுபடுவது நோய் வந்தால் மேற்கொள்ளும் சிகிச்சை போல அல்ல. வருமுன் காக்கும் தடுப்பூசி போல. நமது எதிர்கால தேவைக்கு நாம் செய்யும் சேமிப்பு போல. ஏ.டி.எம். சென்று ஆத்திர அவசரத்துக்கு பணம் எடுக்கவேண்டும் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் பணமிருந்தால் தானே எடுக்க முடியும்? புண்ணியமும் அப்படித்தான்.
உங்கள் மகனை / மகளை நாளை மேற்படிப்புக்காக வெளிமாநிலமோ, வெளிநாடோ அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இங்கே இருப்பது போல உங்களால் அங்கேயும் கூடவே இருக்க முடியுமா? கண்காணிக்க முடியுமா?
அப்போது துணை வருவது எது?
உங்கள் மகன் ஆசை ஆசையாய் கேட்ட பைக்கை வாங்கித் தருகிறீர்கள். நெரிசல் மிகுந்த சாலைகளில் அவன் அதை ஓட்டிச் செல்லவேண்டும்.
அப்போது அவனை உடனிருந்து காப்பது எது?
உங்கள் மகளுக்கு திருமண வயது வந்துவிட்டது. வரன் பார்க்கிறீர்கள். மாப்பிள்ளையின் கல்வித் தகுதிக்கும், சம்பாத்தியத்துக்கும், சொத்துக்கும் உங்களால் சான்று பெற முடியும். குணத்துக்கு?
அப்போது வழிகாட்டுவது எது?
உங்கள் மகனுக்கு பெண் பார்க்கிறீர்கள். “இந்த பெண் தான் எனக்கு மருமகளாக வரவேண்டும்” என்று உங்களால் யாரேனும் ஒரு பெண்ணை தீர்மானிக்க முடியும். ஆனால், “அவள் இப்படித் தான் நடந்துகொள்வாள்” என்று உங்களால் உறுதி கூற முடியுமா?
அப்போது உங்கள் நம்பிக்கையை காப்பாற்றப்போவது எது?
இன்னாருக்கு தான் இன்ன நோய் வரும் என்றில்லாமல் இப்போது யாருக்கு வேண்டுமானாலும் என்ன நோய் வேண்டுமானாலும் வரலாம் என்றாகிவிட்டது. (நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சலாம்!)
அப்போது எது தான் நம்மை நமது குடும்பத்தினரை கொடுநோயிலிருந்து காப்பாற்றும்?
இதற்கெல்லாம் ஒரே பதில் : நாம் ஆலய தரிசனம் மூலம் சம்பாதிக்கும் புண்ணியமே!!
(* புண்ணியம் சேர்ப்பது என்றால் கோவிலுக்கு செல்வதும் இறைவனை தரிசிப்பதும் மட்டுமே என்று எண்ணி ஒரு சிறிய வட்டத்தோடு நின்றுவிடாமல் அவரவர் தங்களால் இயன்ற எளிய சேவைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் செய்து வரவேண்டும்!)
ஒன்றை இழந்து தவிப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். நம்மிடம் சில வெளிநாட்டு வாசகர்கள் பேசுவதுண்டு. ஏதோ மொழி தெரியாத, நாகரீகம் புரியாத நாட்டில் இருந்துகொண்டு சதா சர்வ காலமும் வானை முட்டும் கட்டிடங்ககளுக்கிடையே, இயந்திரத் தனமான ஒரு வாழ்க்கையில் சிக்கி, கண்ணாடிக்கூண்டுக்குள் சிக்கிய பறவை போல, ஏர்கண்டிஷன் அறைகளில் அடைந்து கிடக்கும் நிலையை எண்ணி அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். எப்பொழுது இந்த நரகிலிருந்து விடுபடப்போகிறோமோ என்று தெரியவில்லையே என கதறுகிறார்கள். அவர்களுக்கு தான் தெரியும் நமது ஊர் ஆலயங்களின் அருமை.
நம்ம ஊர் சிவாலயத்தின் கர்ப்பகிரகத்தின் அருகே சுவாமி முன் நிற்கும்போது ஒரு புழுக்கம் ஏற்படுமே… அந்த புழுக்கத்தை விட ஒரு உன்னதமான அனுபவத்தை இந்த உடலோ ஆன்மாவோ பெற முடியுமா? அந்த இன்பம் தான் வேறு எங்கேனும் கிடைக்குமா? நினைத்தால் நினைத்த கோவிலை சென்று தரிசிக்க வாய்ப்பு கிடைத்த நாமெல்லாம் பாக்கியசாலிகள்.
குனித்த புருவமும். கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும், பவளம் போல், மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!
“அட போங்க சார்… இத்தனை வருஷத்துல இதுவரைக்கு நிறைய கோவிலுக்கு போய்ட்டு வந்துட்டேன். எனக்கு எந்த மாற்றமும் தெரியலே. லைஃப் அப்படியே தான் போய்கிட்டுருக்கு” என்று அலுத்துக்கொள்பவர்களும் உண்டு.
“கோவிலுக்கு போறதெல்லாம் சுத்த வேஸ்ட் ஆப் டயம் சார்”
ஒரு பத்திரிக்கையின் வாசகர் கடிதம் பகுதிக்கு ‘பக்தர்’ ஒருவர் கடிதம் எழுதினார். எப்படி தெரியுமா?
“கோவிலுக்கு போறதெல்லாம் சுத்த வேஸ்ட் ஆப் டயம் சார். 20 வருஷமா நான் கோவிலுக்கு போயிட்டுருக்கேன். பல நூத்துக்கணக்கான மந்திரங்களை பல்லாயிரம் தடவை கேட்டிருக்கேன். ஆனா இதுவரை ஒன்னு கூட எனக்கு ஞாபகத்துல இல்லை. அதுனால நான் என்னோட டயத்தை வேஸ்ட் பண்ணிட்டுருக்கேன்னு நினைக்கிறேன். எத்தனை ஆச்சார்யாள்கள் குருமார்கள் இதுல டயத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்காங்க…..” என்ற ரீதியில் எழுதியிருந்தார்.
இது அந்த பகுதியில் பலத்த சர்ச்சையை கிளப்பியது. வாதம், எதிர்வாதம், பதில், பதிலுக்கு பதில் என்று விவாதம் நீண்டுகொண்டே இருந்தது. பத்திரிக்கையின் ஆசிரியருக்கோ ஒரே குஷி.
பல வாரங்கள் இந்த சச்சரவு நீடித்தது.
கடைசியில் ஒருவர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
“எனக்கு வயசு 50 ஆகுது. எனக்கு கல்யாணமாகி 20 வருஷம் ஆகுது. இந்த இருபது வருஷத்துல என் மனைவி இதுவரை குறைஞ்சது 10,000 முறை சமைச்சிருப்பாங்க. ஆனா, ஒரு விஷயத்தை பார்த்தீங்கன்னா… இதுவரை அவங்க சமைச்சதுல ஒரு நாளோட மெனு கூட இப்போ என்னை கேட்டீங்கன்னா எனக்கு முழுசா தெரியாது. ஆனால் ஒன்னு மட்டும் தெரியும். இத்தனை நாள் அது தான் என்னை வளர்த்திருக்கு. நான் வேலை செய்றதுக்கான சக்தியை அது தான் கொடுத்திருக்கு. என் மனைவி சமைச்சி போடலேன்னா… நான் இன்னைக்கு உங்களுக்கு இதை எழுத உயிரோட இருந்திருக்க மாட்டேன்!”
அதுபோலத் தான் நாம் கோவிலுக்கு போகவில்லை என்றால் ஆன்மீக ரீதியில் சவமாக இருப்போம். நாம் ஏதோ ஒரு பிரச்னையில் பாதிக்கப்படும்போது, முடங்கும்போது, கடவுள் நமக்காக எழுந்து நிற்கிறார். (** ஒரு உண்மை சம்பவம் சற்று முன்னர் கிடைத்தது. அதை இன்றோ நாளையோ பகிர்கிறோம்).
நம்பிக்கை, பார்க்கமுடியாததை பார்க்க வைக்கிறது. நம்ப முடியாததை நடத்தி காட்டுகிறது. பெறமுடியாததை பெற்றுக் காட்டுகிறது.
உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நம்மை வளர்த்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்.
இந்த உடலில் தெம்பும் இளமையும் இருக்கும்போதே பல திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து, புண்ணியத்தை ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சேர்க்கும் ‘சொத்து’ என்பது பணம் மட்டுமே அல்ல. நீங்கள் ஆற்றும் கடமை படிக்க வைப்பது மட்டுமல்ல. அதைவிட மிகப் பெரிய சொத்து நீங்கள் சேர்க்கும் புண்ணியமே!
அதற்காக ஒரேயடியாக கோவில், குளம் என்று சுற்றவேண்டியதில்லை. வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள். அப்படியே கொஞ்சம் இந்தப் பக்கமும் பாருங்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு சனி, ஞாயிறு பயணம் ஏற்பாடு செய்து குடும்பத்தோடு திருத்தலங்களை தரிசித்துவிட்டு வரலாம். நன்றாக திட்டமிட்டால ஒரு நாளில் குறைந்த பட்சம் 4 திருத்தலங்கள் தரிசிக்கலாம்.
கல்லால் அடித்தால் தான் கவனிப்பேன் என்று சொன்னால் எப்படி?
==========================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்….
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Also check :
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!
கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….
கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா?
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
========================================================
[END]
வணக்கம் சுந்தர் சார்
நம் தளம் வாசகர் மட்டும் அல்லாமல் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.. புண்ணியும் சேர்த்து வைப்புதன் பலன் நிச்சியும் கிடைக்கும் சார்
நன்றி
மிகவும் அருமையான பதிவு. கோவிலுக்குச் செல்லும் அவசியத்தை இதை விட யாராலும் பதிய வைக்க முடியாது. பொட்டில் அடித்தாற்போல் உள்ளது. நாம் நல்ல உடல் நிலையில் இருக்கும் பொழுதே நம்மால் முடிந்த பாடல் பெற்ற ஸ்தலங்களுக்குச் சென்று நம் சந்ததியினருக்கு புண்ணியம் சேர்த்து வைக்க வேண்டும்
நம் நேரம் சரியில்லை என்றாலும் அதை நல்ல நேரமாக மாற்றுவது நாம் வணங்கும் தெய்வம் தான் ..
நம்பிக்கை பார்க்க முடியாததை பார்க்க வைக்கிறது நம்ப முடியாததை நடத்திக் காட்டுகிறது //// சூப்பர்
(சோனம் கபூருக்கு பன்றி காய்ச்சல் . மிகவும் முக்கியமான தகவல்)
அழகிய பதிவிற்கு நன்றிகள் பல. இந்த பதிவை படித்து அனைவரும் கோவிலுக்கு சென்று புண்ணியம் தேடிக் கொள்வர் என்பது உறுதி. அதனால் தாங்கள் பெரும் பலனை அடையப்போகிரீர்கள் என்பது திண்ணம்.
கோவில் கோபுரம் மற்றும் அனைத்து படங்களும் அருமை .
superb write up .
நன்றி
உமா வெங்கட்
சோனம் கபூருக்கு பன்றி காய்ச்சல், மிகவும் முக்கியமான தகவல் என்று () நக்கல் அடிக்கிறிங்க.
பெரியவங்க பழமொழி சொன்ன ஏத்துக்கணும் ஆராய்ச்சி பண்ண கூடாது, அதுபோல நம் சார் இந்த மாதிரி கமண்ட் பண்ணும் போது சிரிக்கணும் அவ்வளவுதான்.
சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் என நான் குறிப்பிட்டது நகைச்சுவைக்காக அல்ல. யாருக்கு வேண்டுமானாலும் எந்த நோய் வேண்டுமானாலும் இப்போதெல்லாம் வருகிறது என்பதை உணர்த்தவே.
ஆலய தரிசனத்தின் முக்கியத்துவத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்துரைக்க தங்களால் மட்டுமே இயலும்.
ஆலய தரிசனம் மற்றும் இறைபணியின் பலன்ங்கள் பல தலைமுறைகள் நீடிக்கும் பேறு பெற்றது
புகைப்படங்கள், குறிப்பாக நடராஜர் மற்றும் பதிவும், பதிவின் நடையும் அருமையோ அருமை.
அருமையான பதிவு.
“நம்ப முடியாததை நடத்திக் காட்டும் , பெற முடியாததை பெற்றுக் காட்டும்”. பொட்டிலடித்தால் போன்ற வார்த்தைகள்.
இறைநம்பிக்கை அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டும்.
வாழ்க வளமுடன்
நன்றி
ஆலய தரிசனம் நமக்கு மட்டுமல்ல நம் சந்ததிக்கே நன்மையைத் தரும் என்று தெரிந்து கொண்டோம்……
திருநெடுங்களம் திருக்கோயில் கோபுரம் நம்மை வா வா என்றழைக்கிறது……. நாம் தரிசிக்க விழையும் திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று……. இப்போதைக்கு நம் தளம் மூலமாகவே தரிசித்துக் கொண்டோம்…….நன்றி……..
அருமையான பதிவு.
நாம் ஏன் இறைவனை வணங்கவேண்டும் என்று பாயிண்ட் பாயிண்ட் வரிசைபடுத்தி வெகு அழகாக சொல்லி இருக்கீங்க.
இந்த பதிவு நீங்கள் எழுதி நாங்கள் எப்பொழுதும் படிப்பது போல அல்லாமல் ஒரு சிறந்த பேச்சாளர் ஒரு கருத்தை மேடையில் ஆணித்தரமாக மக்களின் மனதில் பதிய வைக்க எப்படி பேசுவார்களோ அப்படி இருக்கிறது.
ஒவ்வொரு வரியிலும் உங்கள் முகத்தையும் அதில் தோன்றும் உணர்சிகளையும் நான் பார்த்தேன்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
பத்திரிக்கையின் ஆசிரியர் கடிதம் பகுதியில் ஏற்பட்ட வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கொடுத்த பதில் நெத்தியடி.
விளக்கு வெளிச்சத்தில் கோவில் கோபுரம் அருமை.
உங்கள் பதிவுகள் எல்லாமே அந்த அந்த கோவில்களை உடனே தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது.
நன்றி
வாழ்க வளமுடன்
அவன் அருளலே அவன் தாள் வணங்கி ……………….
நன்றி
வணக்கம் சுந்தர்.நல்ல பதிவு. நல்ல எழுத்து திறமை .உண்மைதான் செய்தவை எதோ ஒரு வடிவில் நமக்கு திரும்ப கிடைக்கும் . நன்றி