Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பிரச்னைகளை தூக்கிக்கொண்டு திரிபவரா நீங்கள்? MONDAY MORNING SPL 27

பிரச்னைகளை தூக்கிக்கொண்டு திரிபவரா நீங்கள்? MONDAY MORNING SPL 27

print
சிரியர் அன்று பாடத்தை துவக்கும் முன்னர், கையில் ஒரு கிளாஸில் நீரை நிரப்பி, “இதன் எடை என்ன தெரியுமா?” என்று கேட்க்கிறார்.

“50 கிராம்… 100 கிராம்…. 150 கிராம்….” என்று ஆளாளுக்கு கூறுகின்றனனர்.

“இதை எடை பார்க்காதவரை இதன் சரியான எடை என்ன என்று தெரியப்போவதில்லை. நான் கூறவருவது இதன் எடையை பற்றியல்ல…. என் கையை இப்படியே நான் சிறிது நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும்?”

Glass in hand“ஒன்றுமாகாது!”

“சரி…. ஒரு மணிநேரம் வைத்திருந்தால்…?”

“உங்கள் கைகள் வலிக்க ஆரம்பிக்கும்!”

“நீ சொல்வது சரி தான். இப்படியே ஒரு நாள் முழுதும் வைத்திருந்தால்….?”

“உங்கள் கையே சுத்தமாக வேலை செய்யாமல் போக வாய்ப்பிருக்கிறது. கைமூட்டுக்கள் எல்லாம் வலியெடுத்து மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு நிச்சயம் நீங்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டியிருக்கும்!”

“சரியான பதில்…. அது சரி…. இந்த சந்தர்ப்பங்களில் கிளாஸின் எடை மாறியதா? அல்லது அதன் எடை கூடியதா?”

“இல்லை!”

“அப்போது எனக்கு வலியை தந்தது எது ??”

மாணவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஒரு மாணவன், “அதை நீண்ட நேரம் நீங்கள் தூக்கி வைத்திருந்தது!”

“வலியிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும்?”

“முதலில் அந்த கிளாஸை கீழே வைக்கவேண்டும்!”

“மிகச் சரி!”

கிளாஸை கீழே வைத்த ஆசிரியர் பேச ஆரம்பிக்கிறார்.

“வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகளும் இத்தகையது தான். அவற்றை பற்றி சிறிது நேரம் சிந்தியுங்கள்… ஓ.கே.! ஆனால் நீண்ட நேரம் அவை பற்றி சிந்தித்தால் அவைகள் உன்னை செயலாற்ற விடாமல் முடக்கிவிடும்.”

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் சவால்கள் பற்றியும் சிந்திப்பது மிக மிக முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம், அவை நம்மை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது. அவற்றை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியக்கூடாது. ஒவ்வொரு நாளும் படுக்கச் செல்லும்போது அவற்றை கீழே வைத்துவிட்டு தான் படுக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம், சோர்வு நம்மை அண்டாது. ஒவ்வொரு நாளும் நாம் புதிய மனிதர்களாக எழுந்திருப்போம். பிரச்னைகளை சந்திக்க கூடிய ஆற்றல் நமக்கு இருக்கும்.

சுருங்கச் சொன்னால்…. வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் சிறு கற்கள் போன்றவை. அதை நமது கண்களுக்கு அருகே வைத்து பார்த்தால் அது இந்த உலகையே மறைத்துவிடும். சற்று தூர வைத்து பார்த்தால் தான் அதன் விஸ்தீரணம் என்ன என்று புரியும். தெரிந்ததா? தூக்கி போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும்!

=============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

[END]

9 thoughts on “பிரச்னைகளை தூக்கிக்கொண்டு திரிபவரா நீங்கள்? MONDAY MORNING SPL 27

  1. அன்பு சகோதரா
    இதைதான் நமது இந்து மதம் பரி பூரண சரணாகதி என்று கூறுகிறது …குரங்கு கதை பூனை கதை தெரியும் தானே …குரங்கு குட்டி சுய முயற்சி எடுக்க வேண்டும் தாயின் உடலைப் பற்றும் போது…ஆனால் பூனை குட்டி ஒன்றுமே செய்ய வேண்டாம் தாய் பூனை கவ்விக் கொண்டு போய் விடும்….நாமும் பூனைக் குட்டி போல…வாழ்வில் அனைத்தையும் பகவானிடம் சமர்பித்து விட்டால் பாரமே இல்லாமல்….நிம்மதியாக இருக்கலாம்…வாழ்க வளமுடன் சகோதரா…உங்கள் உடல் நலம் இப்போது சீரடைந்திருக்கும் என நம்புகிறேன்…நம்முடைய பிரார்த்தனை நேரத்தில்..உங்கள் நலனுக்காகவும் இந்த சகோதரி பிரார்த்தனை செய்தால்… _/\_

  2. வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் சிறு கற்கள் போன்றவை. அதை நமது கண்களுக்கு அருகே வைத்து பார்த்தால் அது இந்த உலகையே மறைத்துவிடும். சற்று தூர வைத்து பார்த்தால் தான் அதன் விஸ்தீரணம் என்ன என்று புரியும்.
    இந்த பதிவை படித்த பிறகு தான் தெரிந்தது நான் எத்தனை வருடங்களாக எல்லா பிரச்சனைகளையும் சுமந்துகொண்டு இருக்கிறேன் என்று புரிந்தது. அறிவும் பிறந்தது. தேங்க்ஸ் சார்

  3. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி.

  4. சுந்தர்ஜி,

    எந்த ஒரு மனிதனுக்குத்தான் பிரச்சினை இல்லை.
    பிரச்சினைகளை நாம் சுமந்து கொண்டு இருகின்றோமா அல்லது சரியானபடி கையளுகின்றோமா என்பது அவரவர் மன நிலையை பொருத்தது.

    ஒரு எறும்பு தன்னை விட மூணு மடங்கு நீளமான ஒரு புல்லை தூக்கிகிட்டு போய்கிட்டிருந்தது. அது போகற பாதையில தண்ணி இருந்தது .. எறும்பால அந்த தண்ணியில எறங்க முடியாத நிலைமை…

    அந்த எறும்பு தான் தூக்கிகிட்டு வந்த புல்லை பின்புறமா இருந்து அந்த தண்ணி மேல வெச்சது. இப்ப அந்த புல்லு தண்ணீர் மேல ஒரு பாலம் போல அமைஞ்சது..

    எறும்பு அந்த புல்லு மேல நடந்து தண்ணிய கடந்து பத்திரமா அந்த பக்கம் போன பிறகு புல்லை இழுத்துக்கிட்டு போச்சு…

    ஒரு ஐந்தறிவு பிராணியான எறும்பு அத விட பளுவான புல்லை தூக்கிகிட்டு , அது போகற வழில அதுக்கு தடையா தண்ணி இருந்தாலும், அதை சமாளிக்க முடியறபோது போது பிரச்சனைகளை சமாளிக்க மனுஷங்களால முடியாதா…

    பிரச்சனை எனபது மனித வாழ்வில் எல்லா சமயங்களிலும் சந்திக்க கூடியது. பிரச்சனை நேர்ந்துவிட்டதே என்று துவண்டு போகாமல் அதை சமாளிக்கும் மன தைரியத்தை நாம வளர்த்துக்க வேணும்..

    எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கென ஒரு தீர்வு இல்லாமல் இல்லை. நாம் நம் வாழ்வில் ஏதாகிலும் பிரச்சனைகளை சந்திக்கும் போது நிதானமா யோசிச்சா கண்டிப்பா அந்த பிரச்சனைக்கு தீர்வு புலப்படும் …

    வாழ்க்கை எனபது ஒரு தடை தாண்டும் ஓட்டத்தை போன்றது.. ஐயோ நமக்கு முன் இவ்வளவு தடைகளா என்று நாம் கலங்கி நின்றால் நம் வாழ்க்கை நமக்கு எப்பவும் கசப்பானதாகவே இருக்கும். அதே சமயம் எத்தனை தடைகள் வந்தாலும் அது என்னை ஒன்றும் செய்யாது, என் முன் நிற்கும் தடை கற்களை உடைத்து என் வாழ்வின் வெற்றிக்கு படி கற்களாக மாற்றிக் கொள்வேன் என்ற உள்ள உறுதியை நாம் வளர்த்துக் கொண்டால் , நாம் நம் வாழ்வில் எந்த பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை சமாளிக்கும் பக்குவம் பெற்றவர்களாய் ஆவோம்…

    என்னால் இது முடியாது, நான் இதிலிருந்து எப்படி மீள்வேனோ என்று அவ அவநம்பிக்கையோடு நாம் இருந்தால் பிரச்சனை என்னும் சூழலில் சிக்கி தவிப்பவர்களாய் நாம் ஆவோம்…

    ஆகவே எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாது, தன்னம்பிக்கையோடு யோசித்து நாம் செயல் பட்டால் நம்மால் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும்.

    மண்ணை ஓர் பிரச்சனையாக
    நினைக்காமல் முட்டி மோதி
    வெளியாகும் விதை…
    அங்கே கற்கலாம் நாம் பிரச்சனைகளை
    சமாளிக்கும் திறனை…
    நீ கலங்கி நின்றால் உன்
    வாழ்க்கை ஓர் போர்க்களம்
    நீ சமாளித்து நின்றால் உன்
    வாழ்க்கை ஓர் பூக்களம்….

  5. டியர் சுந்தர்ஜி

    monday spl சூப்பர் .

    நானும் இவ்வளவு நாட்களாக பிரச்சினைகளை வருட கணக்கில் என் மனதில் வைத்துகொண்டு கஷ்டப ட்டு என்னை நானே துன்புறுத்தி கொண்டிருக்கிறேன்..

    இந்த பதிவை படித்தவுடன் நான் என்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

    தங்கள் பதிவிற்கு நன்றி

    உமா

  6. Hi sundarji,
    . I am also having the family problem now.This article gives the relaxation for me.

    regards,
    senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *