Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > புறக்கணித்தவர்களை பெருமூச்சு விடவைப்போம்!

புறக்கணித்தவர்களை பெருமூச்சு விடவைப்போம்!

print
ண்கள் பெண்களை நிராகரித்த காலம் போய், பெண்கள் ஆண்களை நிராகரிக்கும் காலம் இது. கல்யாண சந்தையே இப்போது தலைகீழாக போய்விட்டது. 20-30 வருடங்களுக்கு முன்னர் மணமகன் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. தகுதியே இல்லையென்றாலும் ஆணாக இருக்கும் ஒரே காரணத்தால் அப்போதெல்லாம் திருமணம் கைகூடிய ஆண்கள் அநேகம் பேர். ஆனால் இன்று? நிலைமை அப்படியே தலை கீழ். பெண்கள் அதிகம் படித்திருக்கிறார்கள். சம்பாதிக்கவும் செய்கிறார்கள். வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு, கண்ணோட்டம் எல்லாம் மாறிவிட்டது.

Man-Single q

நான் பார்த்தவரையில் ‘சற்று வித்தியாசமான’ பெண்கள் என்று நான் நினைத்தவர்களுக்கே இது விஷயத்தில் எதிர்பார்ப்புக்கள் மிக மிக அதிகமாக உள்ளன. தங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருந்தாலும் வரக்கூடிய கணவன், அல்ட்ரா மாடர்ன் டைப் ஆசாமியாக, ஒரு ஏ.டி.எம். மிஷினாக இருக்க வேண்டும்…. ‘அவன் பணத்தை சம்பாதிக்கட்டும். நாம் புண்ணியத்தை சம்பாதிப்போம். அது தான் நமக்கு வசதி’ என்றே பலர் கருதுகிறார்கள்.

சமீபத்தில் நம்மை தொடர்புகொண்ட நம் வாசகர் ஒருவர், நம்மிடம் புலம்பித் தள்ளிவிட்டார். ஒரு கட்டத்தில் உடைந்து அழுதேவிட்டார். கல்யாண சந்தையில் அடுத்தடுத்து பெண்களால் நிராகரிக்கப்பட்டதில் அவர் மிகவும் காயமுற்று இருப்பதை தெரிந்துகொண்டோம்.

சற்று ஆசுவாசப்படுத்தி, அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தோம்.

தொடர்ந்து அவரிடம் பேசியபோது அவர் கூறியது…. “சார்…. கடந்த சில வாரங்களாகத் தான் நான் ரைட்மந்த்ராவை அறிவேன். திருநின்றவூர் கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்கே பிரகாரத்தில் உங்கள் ‘தினசரி பிரார்த்தனை’ படத்தை பார்த்தேன். அது முதல் தொடர்ந்து தளத்தை பார்த்துவருகிறேன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டண்ட்டாக பணிபுரிகிறேன். எங்கள் நிறுவனம் மிகப் பெரிய நிறுவனம் இல்லையென்றாலும் ஓரளவு நல்ல நிறுவனம். ஓரளவு நல்ல சம்பளம் தான். எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. இருவருக்கும் ஒருவர் பின் ஒருவராக திருமணம் முடித்துவைத்துவிட்டு நான் திருமணத்திற்கு தயாராவதற்குள் எனக்கு வயது கூடிவிட்டது. தற்போது 37 வயதாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் எனக்கு பெண் பார்த்து வருகிறார்கள். ஒரு பைசா கூட வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். வருபளுக்கு அவள் விரும்பியபடி வாழ்க்கை அமைத்து தர தயாராக இருக்கிறேன். மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டால் அதற்கும் தயார். ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. எனக்கு புகை, மது உள்ளிட்ட எந்த தீய பழக்கங்களும் இல்லை. ஆனாலும் இதுவரை என்னை 4 பெண்கள் நிராகரித்துவிட்டார்கள். இதனால் எனக்குள் இருந்த தன்னம்பிக்கை போயே போய்விட்டது. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. உங்களிடம் பேசினால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று கருதியே பேசுகிறேன்….” என்றார்.

திருமண சந்தையில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதில் அவர் மிகவும் புண்பட்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளமுடிந்தது.

மணமகனின் குணம் என்ன? குலம் என்ன? என்று பார்த்தது அந்தக் காலம். நீ யாராயிருந்தால் என்ன… உன் பேங்க் பாலன்ஸ் முதலில் என்ன ? என்று பார்ப்பது இந்தக் காலம். விளைவு… பொருந்தாத் திருமணங்கள். அவசர விவாகரத்துக்கள்.

“திருமண வாழ்க்கை என்பது நினைப்பது போல எல்லாருக்கும் அமைந்துவிடாது. தேடி வரும் வாய்ப்பை பலர் கோட்டை விடுகின்றனர் என்பதே உண்மை. நல்ல வாழ்க்கை தேடி வந்தும் அதை பயன்படுத்திக்கொள்ள தவறியதை எண்ணி அவர்கள் தான் வருந்த வேண்டும். நீங்கள் எதற்கு வருந்துகிறீர்கள்? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் சில முறை ஏற்பட்டுள்ளது. ஏன் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கூட ஏற்பட்டிருக்கும். நாம் இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளக்கூடாது. முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். அந்த பெண்கள் உங்களை நிராகரிக்கவில்லை. அவர்கள் மனதில் தாங்கள் உருவாக்கியுள்ள உள்ள ஒரு எண்ணத்தை தான் நிராகரிக்கிறார்கள். They are not rejecting you, but they are rejecting an idea they have in their mind. ஜஸ்ட் ஒரு முறை உங்களை சந்திப்பதிலோ அல்லது உங்கள் புகைப்படத்தை பார்ப்பதிலோ நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்று அவர்கள் தெரிந்துகொள்ள முடியுமா?

உங்களுக்கென்று ஒரு தனித் தன்மை இருக்கும். அதை முதலில் நீங்கள் மதிக்கவேண்டும். ஒருவர் உங்களை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதற்கு நீங்கள் வருத்தப்படவேண்டியதில்லை. ஏனெனில் அவரவர்க்கு தனிப்பட்ட தேவைகளும் விருப்பங்களும் இருக்கும். நாம் அதன்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. நாம் யாரையும் இமிடேட் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் நாமாக இருப்போம்.

அடுத்து சில பெண்களின் அகராதியில் எவனொருவன் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றக் காத்திருந்து அவர்கள் கூறிய எல்லாவற்றிற்கும் “சரி” என்று சொல்லி கடைசியில் “உன்னைப்பிடிக்கவில்லை” என்று அவர்கள் கூறும்போது, சிரித்த முகத்துடன் ஏற்றுகொள்பவனுக்கு… அவர்கள் வைக்கும் பெயர் ‘ஜென்டில்மேன்’! என்ன செய்வது…?

வாளிக்கு பயந்த பல்லி, கிணற்றுக்குள் துள்ளி விழுவதை போல லட்சியங்களை நிறைவேற்ற காத்திருப்பவனை புறக்கணிக்கும் பெண்கள் கடைசியில் ஏதோ ஒரு வீட்டில் வாஷிங் மெஷினாகவும், டிஷ் வாஷராகவும் வாழ்க்கைப்படுகின்றனர். அவர்கள் கற்பனைக்கு மாறாக நான்கு சுவர்களுக்குள்ளேயே அவர்கள் வாழ்க்கை முடங்கிவிடுகிறது. என்ன செய்வது, எத்தனையோ இயற்க்கை கோளாறுகளில் இதுவும் ஒன்று!!

மதியை விதி மூடி மறைப்பதால் நிகழ்வது இது.

மேலும் தோற்றத்தை மட்டுமே வைத்து துணையை தேர்ந்தெடுக்கும் பக்குவமற்ற பெண்களிடமிருந்து நாம் தப்பித்தோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். வெளித்தோற்றம், அழகு, செல்வம் இவையெல்லாம் நிரந்தரமானவை அல்ல. மாறக்கூடியவை. குணமே நிரந்தரம்.

குணத்தை புறக்கணித்துவிட்டு பணத்தையும் தோற்றத்தையும் மட்டுமே வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் காலம் முழுதும் கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். WE FALL IN LOVE WITH THE APPEARANCE. BUT START LIVING WITH THE CHARACTER என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நில்லுங்கள். ஆண்களுக்கு அதுவே அழகு. புறக்கணித்தவர்களை பெருமூச்சு விடவைப்போம். நன்றாக வாழ்ந்து காட்டுவதன் மூலம். அதுவே நமது புத்தாண்டு சபதமாக இருக்கட்டும். சீக்கிரம் உங்களுக்கு ஏற்ற ஒரு துணையுடன் திருமணம் கைகூடிவர வாழ்த்துக்கள்! தகுதியும் குணமும் கொண்டவர்களை விரும்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஒரேயடியாக வற்றிப் போய்விடவில்லை. கவலைவேண்டாம்..!!!!

இவ்வாறாக அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினோம். சுந்தரகாண்டம் நூலை அனுப்புவதாகவும் அதை படிக்க ஆரம்பிக்கும்படியும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினோம்.

தகுதியிருந்தும் சில பல காரணங்களினால் நிரகாரிக்கப்படும் இவரை போன்றவர்களுக்காக பரிந்துபேசும் அதே நேரம், கல்யாண சந்தையில் ஆண்கள் கொடி பறந்த அந்த காலங்களில் உளுத்துப்போன சம்பிரதாயங்களை சாக்காக வைத்து சொஜ்ஜி, பஜ்ஜி ருசி பார்த்துவிட்டு எத்தனை எத்தனை ஏழைப் பெண்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்கள்…. அவர்கள் மனம் எப்படியெல்லாம் வேதனை பட்டிருக்கும் என்பதையும் ஒரு கணம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அந்த வர்க்கத்தில் நாம் ஒரு போதும் சேரவேண்டாம்.

ஒரு வேளை அத்தகைய பெண்களின் சாபமோ என்னவோ ஆண்கள் இப்போது இந்த பாடு படுகிறார்கள் போல…

வரன் பார்க்கும்/தேடும் சடங்கானது எவர் மனதையும் புண்படுத்தாத வண்ணம் இலகுவாக அமையவேண்டும் என்பதே நம் விருப்பம். இதில் நாம் என்ன செய்யமுடியும்?

நாம் பேசி முடித்ததும், நமக்கு நன்றி கூறியவர், தாம் தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும் மனம் இலேசாகிவிட்டதை உணர்வதாகவும் கூறினார். மேலும் அவசியம் இந்த உரையாடலை தளத்தில் வெளியிடுங்கள். என் பெயரை வெளியிட்டால் கூட பரவாயில்லை என்னை போல உள்ள எத்தனையோ பேருக்கு உங்கள் வார்த்தைகள் டானிக்காக இருக்கும் என்றார்.

அவர் கேட்டுக்கொண்டபடி இங்கே வெளியிட்டிருக்கிறோம். ஒரு வகையில் இந்த பதிவு நமது தளத்தின் அடுத்த பரிமாணம். மறக்காமல் உங்கள் கருத்துக்களை கூறவும்.

நன்றி!!

13 thoughts on “புறக்கணித்தவர்களை பெருமூச்சு விடவைப்போம்!

  1. சுந்தர்ஜி
    இதுவரை பொதுவான மற்றும் ஆன்மீக விஷயங்களை சொல்லி வந்த நம் தளம், முதல் முறையாக குடும்ப வாழ்க்கையின் மிக முக்கிய பிரச்னைகளை அலசும் முதல் பதிவு இது. நீங்கள் சொல்லியமாதிரி நம் தளத்தின் அடுத்த பரிமாணம் ஆரம்பிக்க உள்ளது.
    குடும்ப விஷயத்தில் நிம்மதி இல்லாததால் தான் பல பேர் கடவுளை நோக்கி அடியெடுக்கிறொம். ஆனால் இதில் திருமண விஷயம் இன்னும் பலம் வாய்ந்த பிரச்னை தான். ஒரு சிலருக்கே அந்த கொடுபினை நல்ல முறையில் அமைந்துவிடுகிறது . இன்றைய கால கட்டத்தில், பதிவில் வந்துள்ள ஆணை போலவே பல பெண்களும் அடிபட்டு இருக்கிறார்கள். இருந்தாலும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ! பாதித்தவர்களுக்கு ஆறுதலாகவும் , அந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளவர்க்கு பாடமாகவும் இந்த பதிவு இருக்கும்.

  2. அன்பு சகோதரா,
    நானும் தற்போது கல்யாண சந்தையில் நடக்கும் அவலங்களைப் பற்றி படித்து வருகிறேன்….இங்கு என்னுடன் பணி புரியும் ஒரு தம்பி திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்…மலேசியாவில் நான் பணி புரியும் இந்த கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிகிறார்…முனைவர்….32 வயது…வெளி நாட்டிற்கு வேலைக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றன….ஆனால்…இந்த தம்பி உங்கள் நண்பரைப் போலவே….மிகவும் வருத்தமுற்று என்னுடன் பேசும் போது மேடம் முனைவர் பட்டம் பெற்றும் வெளி நாட்டில் வேலை பார்த்தும் ஊரில் நிலம் சொத்து எல்லாம் இருந்தும் …ஊரில் பெண் பிள்ளைகள் போடும் நிபந்தனைகள் தாங்க முடியவில்லை …எப்பொழுது எனக்கு ஏற்ற பெண் கிடைப்பாள் என தெரியவில்லை…இதை நினைத்தே என் தாயாரின் உடல் நிலை பாதித்து உள்ளது…என்ன செய்வதென்றே தெரியவில்லை என வருந்துகிறார்…ஒரு பெண்ணாய் பிறந்த என்னால் உங்கள் பதிவிற்கு இதற்க்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரா….

    1. இந்த பதிவின் தலைப்பைத் தான் அவருக்கு கூற விரும்புகிறேன். வேறு என்ன சொல்ல?

      – சுந்தர்

  3. சுந்தர்ஜி

    உண்மையை சொல்ல வேண்டுமானால் தற்போது உள்ள தலைமுறை பெண்கள் பணம், வசதியான வாழ்கை , அழகு என்று மாறி விட்டார்கள் .

    ஆனால் ஓரிருவர் தவறு செய்வதால் அனைவரும் அப்படி இல்ல. கணவர் ஒரு படித்த, கைநெறைய சம்பளம் வாங்கும் ஒருவராக இருக்கவேண்டும் என ஆசைபடுகிறார்கள்.

    ஆனால் எலி வலைக்கு பயந்து புலி வலையில் மாட்டிகொள்கிறார்கள்.

    (ஆனால் இன்னமும் 40% பெண்கள் ஆண்களினால் வாழ்கையில் சீரழிந்து உள்ளார்கள், 40% பெண்கள் ஆண்களை ஆட்டிபடைகிறார்கள்}

  4. டியர் சார்,

    எனக்கும் இதுபோல் அனுபவம் ஏற்பட்டிருக்கு. என்னை காதலித்த பெண் 6 மாதம் கழித்து என்னை நிரகாரித்து விட்டாள். நான் இன்னுமும் அந்த மன வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.

    இப்படிக்கு,

    P Raja

  5. “WE FALL IN LOVE WITH THE APPEARANCE. BUT START LIVING WITH THE CHARACTER” – Nice quote.
    The message behind Ardhanareeswarar is that there is no existence of one without the other .. The relationship between husband and wife is that of body and soul ….
    உடம்பொடு உயிரிடை என்ன மற்றுஅன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு (1122)

    என்பார் அய்யன் திருவள்ளுவர் ….
    காலத்தின் கோலம்…வேறு என்ன சொல்ல

  6. அன்பு சார்,

    உங்கள் பதிவு படித்தேன். இன்று பெண்கள் நிறைய பேர் எப்படித்தான் உள்ளார்கள். “WE FALL IN LOVE WITH THE APPEARANCE. BUT START LIVING WITH THE CHARACTER” –
    உண்மையைத்தான் சொல்லி உள்ளீர்கள். நன்றி.நல்ல பதிவு.

    அன்புடன்,
    ஜீவன்.

  7. \\\உங்களுக்கென்று ஒரு தனித் தன்மை இருக்கும். அதை முதலில் நீங்கள் மதிக்கவேண்டும். ஒருவர் உங்களை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதற்கு நீங்கள் வருத்தப்படவேண்டியதில்லை. ஏனெனில் அவரவர்க்கு தனிப்பட்ட தேவைகளும் விருப்பங்களும் இருக்கும். நாம் அதன்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. நாம் யாரையும் இமிடேட் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் நாமாக இருப்போம். \\\

    -நம் தளத்தின் மீது வாசகர்கள் வைத்துள்ள நம்பிக்கையை

    காட்டுகிறது .

    -good work .
    மனோகர் .

  8. Dear sundarji

    Your article is super.
    The above mentioned article is very true up to my knowledge.

    I will pray for him for his early marriage

    Thanks and Regards

    Uma

  9. சில நிகழ்வுகள் ஏன் இப்படி நடக்குது என்று நம்மக்கு தெரியாது
    சிலர் இதை பூர்வ ஜென்ம வினை என்று சொல்வதுண்டு
    எது எப்படியோ நடக்கும் ஒரு ஒரு நிகழ்வுக்கும் ஒரு இணைப்பு உண்டு சில விஷயங்கள் பின்னர் நம்மக்கு உணரும் சில விஷயங்கள் உணராமலே போக கூடும் …எனக்கு திருமணம் தாமதம் ஆனா பொழுது ஏன் தந்தை அடிகடி கூறிய ஆறுதல் வார்த்தை இதுவே
    “உனக்கு என்று இனியா பொறக்க போரா, பொறந்து இருந்தா உன்ன தேடி நீதான் உலகம்னு எந்த தடைகள் வந்தாலும் உன்னை வந்து சேருவா”

    கீதசரத்தின் …சாராம்சமும் இதுதானே

    நன்றி
    ஹரிசிவாஜி

  10. தற்போது திருமணமான பின் விவாகரத்து செய்யும் பெண்கள் அதிகமாகி வருகிறார்கள் இது குடும்ப அமைப்பை சிதைத்து வருகிறது
    தனிக்குடித்தனம், ஐந்து இலக்க சம்பளம் உள்ள மாப்பிள்ளை மட்டுமே தனக்கு வேண்டும் என இக்கால பெண்கள் மாறி வருகிறார்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் இதன் தாக்கம் இந்திய மக்கள் தொகையில் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *