அவரை மானசீகமாக பிரார்த்தித்துவிட்டு, உங்களை அவரிடம் ஒப்படைத்துவிட்டு (உங்கள் குறைகளை களைவதற்கு) தியானத்தை துவக்குங்கள்.
ஆமையானது கரையைத் தேடிவந்து முட்டை இட்டுச் செல்லும். பின் அது அந்த முட்டையைப் பற்றிய நினைவிலேயே இருக்குமாம், இதன் காரணமாக முட்டை பொரிந்து குஞ்சாகுமாம். குருவுக்கும் சீடனுக்கும் ஆழ்ந்த அன்பு- நம்பிக்கை இருந்தால் சீடனின் நினைப்பிலேயே, குருவின் நினைப்பிலேயே சீடனுக்கு குருவருள் கிடைத்துவிடும். இது சுலபலமல்ல.ஆழ்ந்த குருபக்தி வேண்டும். இதற்கு ஸ்மரண தீட்சை என்று பெயர்.
குருவருள் இருந்தால் திருவருள் தானே வரும்.
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே
– திருமந்திரம்
இந்த பாடலுக்கு உள்ள பொருள், கடலினும் பெரிது. விளக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம். (சிறந்த விளக்கம் பதிவில் சேர்க்கப்படும்). எதையும் தேடவேண்டாம். எங்கும் போகவேண்டாம். பாடலை ஓரிரண்டு முறை படித்து பார்த்தாலே பொருள் புரியும். திருமூலர் எவ்வளவு அழகாக சிந்தித்து சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
மந்த்ர ராஜம் இதம் தேவி குரு இதி அக்ஷரத்வயம்
ஸ்ம்ருதி வேதாந்த வாக்யேன குரு: ஸாக்ஷõத் பரமம்பதம்
குரு என்ற சொல் மந்திரங்களில் உன்னதமானது. வேதாந்த வாக்கியங்கள் குருவை பரப்பிரம்மம் என்கின்றன. பரமபதத்தை அளிக்கவல்லது.
காமிதஸ்ய காமதேனு கல்யாண கல்பயாதப
சிந்தாமணி: சிந்திதஸ்ய ஸர்வ மங்கள காரகம்
காமதேனு, கல்பதரு, சிந்தாமணி போன்று வேண்டும் யாவற்றையும் தந்தருளி மங்களம் செய்பவர் குரு.
ஸ்ரீ ஜகத்குரு பாதுகா ஸ்தோத்ரம்
இதை பிரதி தினமும் பாராயணம் செய்வதால் குரு பக்தி கைகூடும். ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருளைப் பெற்று, இகபர லாபங்களை அடைந்து ஸ்ரேயஸை பெற வேண்டுகிறேன்.
அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
பொருள்:
எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!
கவித்வவாராசினி ஸாகராப்யாம்
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம ||
பொருள்:
கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்ற சந்திரனாகவும், துன்பமென்னும் காட்டுத்தீயை அணைக்கும் மேகக்கூட்டமாகவும், தன்னை வணங்கியவர்களின் துன்பங்களை போக்குகின்றதாகவும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
நதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு:
கதாசிதப்யாசு தரித்ரவர்யா:
மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
பொருள்:
மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப்பொழுதாவது எந்த குருவின் பாதுகைகளை வணங்கிய உடனே செல்வந்தர்களாக ஆகிறார்களோ, எந்த பாதுகைகளை வணங்கிய ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரான சொல்லாற்றல் பெற்றவர்களாய் ஆகிறார்களோ, அவ்விதம் பெருமை வாய்ந்த, நன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
நாலீக நீகாஸ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
பொருள்:
தாமரைக்கு நிகரானதாயும், பலவித மயக்கங்களை (மோஹங்களை) போக்கக்கூடியதாயும் தன்னை வணங்கியவர்களுக்கு விரும்பியவற்றை தரக்கூடியதாயும் உள்ள, ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
ந்ருபாசி பௌலீவ்ரஜரத்னகாந்தி
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
பொருள்:
அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீசுகின்ற சிறந்த ரத்தினங்களின் ப்ரகாசமாகிய ஆற்றல் (நதியில்) அழகுடன் விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும், தன்னை வணங்குகிறவர்களுக்கு அரசனாயிருக்கும் நன்மையைக் கொடுக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
பாபந்தகார்க்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம் ||
பொருள்:
பாவமாகிய இருளைப் போக்கும் சூரியன் போன்றதாயும், மூன்றுவித தாபங்களாகிய ஆதிபௌதிக, ஆதிதெய்வீக, ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கின்ற கருடன் போன்றும், அக்ஞானமாகிய (மூடத்தன்மை) சமுத்ரத்தை வற்றச் செய்கின்ற வாடவாக்னியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ குரு பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
குறிப்பு:
ஆதிபுதிகம் : மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷிரிணம், பித்ருரிணம் ஆகிய ரிணத்ரயம்
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணத்ரயம்
மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ சேர்ந்தோ பிறவிக்குக் காரணமாகிறது
சமாதி ஷட்சுப்ரத வைபவாப்யாம்
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
பொருள்:
ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய ஆறு குணங்களைக் கொடுக்கும் பெருமை வாய்ந்ததாயும், அவ்வாறு குணங்களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தை அருளக்கூடியாதாயும், ஸ்ரீமன் நாராயணனின் சரணாரவிந்தங்களில் நிலையான பக்தியைக் கொடுக்க கூடியதாயுமுள்ள ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம்
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
பொருள்:
தனனி (பாதுகைகளை) பூஜிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும் கொடுக்கக் கூடியதாகவும், தேவதைகளின் அனுக்ரகத்தை விரைவில் அளிக்கக்கூடியதாகவும், மனதிற்கு ததூய்மையான எண்ணத்தைத் தரக்கூடியதாயும் பூஜிக்கத் தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
பொருள்:
ஆசை முதலிய தீய குணங்களாகிய பாம்புகளை அழிக்கும் கருடனாகவும், விவேகம் (நன்மைகளை தீமைகளை அறிதல்) வைராக்யம் (பற்றின்மை), ஆகிய செல்வங்களை கொடுக்கக் கூடியதாயும், ப்ரம்ம ஞானத்தை அளிக்கக்கூடியதாயும், தன்னை (பாதுகைகளை) மனதில் சதா த்யானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் பாதுகைகளுக்கு நமஸ்கரித்து வாழ்வோம்! வாழ்விப்போம்!!
ஸ்ரீ பெரியவா சரணம்!
(ஸ்லோக உதவி : mahaperiyavaa.wordpress.com)
[END]
டியர் சுந்தர்ஜி
நாளை கண்டிப்பாக குருவருளால் தியானத்தை நல்ல படியாக ஆரம்பிப்போம்.
காலையில் மனது சரியில்லாமல் குருவை நினது இந்த ஸ்லோகம் படித்தேன், இப்பொழுது சுவாமிகளையும், ஸ்லோகத்தையும் RM மூலம் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன், நாம் அவரை நம்பினால் அவர் நம்மை கை விட மாட்டார் என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டேன்
//அவரை மானசீகமாக பிரார்த்தித்துவிட்டு, உங்களை அவரிடம் ஒப்படைத்துவிட்டு (உங்கள் குறைகளை களைவதற்கு) தியானத்தை துவக்குங்கள்.//
//குருவருள் இருந்தால் திருவருள் தானே வரும்.//
மிக்க நன்றி
உமா
குருவருளே திருவருள் !!!
திருவருளே குருவருள் !!!
இது அன்பே சிவம் என்பதைப் போன்றதாகும் …
”அன்பும் சிவமும் இரெண்டென்பர் அறிவிலார்” என்பார் திருமூலர் ..
As the time goes and one matures , one will be able understand/realise this….
குருவின் பாதுகைகள் சரணம்…….
டியர் சுந்தர்ஜி
இன்று மகா பெரியவரின் அருளால் தியானம் ஸ்டார்ட் பண்ணியாகிவிட்டது.
தியானம் செய்வதற்கு ஊன்றுகோலாக இருந்த RIGHTMANTRA.COM க்கு எனது வாழ்த்துக்கள்
குருவே சரணம்
நன்றி
uma
வாழ்த்துக்கள் சுந்தர். துவங்கட்டும்
சூப்பர் ! மிக நன்றாக உள்ளது!
தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.