மனமொன்றி நம்பிக்கையுடன் தினசரி பாராயணம் செய்து வந்தால் எல்லா ஸ்லோகங்களுக்குமே பலன் உண்டு என்றாலும், எல்லோராலும் எல்லா சுலோகங்களையும், ஸ்தோத்திரங்களையும் எளிதில் படித்து பாராயணம் செய்ய முடிவதில்லை.
சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி. அதில் சந்தேகமே இல்லை. நான்மறைகள் இருப்பது சமஸ்கிருதத்தில் தான். ஆனால அதே அளவு தமிழும் உயர்ந்த மொழி. ஆகவே தான் உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறள் தமிழில் தோன்றியது. பன்னிரு திருமுறைகளும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் தோன்றியது தமிழில் தானே. தமிழ் மீதும் தமிழ் நாடு மீதும் இறைவனுக்கு மிகப் பெரிய பிரியம் உண்டு என்பதற்கு இதை விட பெரிய சான்று ஏதேனும் வேண்டுமா என்ன?
பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகி இல்லத்தில் சர்வ மங்களம் பெருகிடவும், பொன், பொருள் உள்ளிட்ட ஆபரணங்கள் சேரவும் தினமும் சொல்லும் வகையில் ஒரு எளிய தமிழ் ஸ்லோகத்தை தரவேண்டும் என்று நம் வாசகர் ஒருவர் சமீபத்தில் நம்மை கேட்டிருந்தார்.
அகத்திய மாமுனிவர் அருளிய லலிதா நவரத்ன மாலையை இறுதியில் தந்திருக்கிறோம். பக்தியுடன் இந்த பாடலை ஒரு வெள்ளிக்கிழமை துவங்கி தினசரி படித்து வந்தால் இல்லத்தில் சகல சௌபாக்கியங்களும் கைகூடும். முடிந்தால் வாரம் இருமுறை வீட்டில் சாம்பிராணி போடவும். ஒவ்வொரு வெள்ளியும் அருகில் உள்ள தொன்மையான ஆலயம் ஒன்றுக்கு சென்று விளக்கிட்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்யவும். 48 நாட்களை நெருங்குவதற்குள் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை தோன்றிய வரலாறு
அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக்கூறினார் ஹயக்கிரீவர். இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து,”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க அதற்கு ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார். அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர் பாடியது தான் இந்த லலிதா நவரத்தின மாலை.
பாடல் வரிகள் அத்தனையும் எளிமையிலும் எளிமை. ஒருமுறை கவனத்துடன் ஊன்றி படித்தாலே பொருள் விளங்கும் பாமரர்க்கும் விளங்கும் வகையில் அகத்தியர் பாடலை இயற்றியிருக்கிறார்.
ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்
பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
வைரம்
கற்றும் தெளியார் காடேக்கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒலிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
முத்து
முத்தே வரும் முத்தொழிலார் றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்
தேம்பொழிலாமிது செய்தவலாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்
மந்திர வேதமயப்பொருள் ஆனால்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே
கருதக்கிடையா கலையானவளே
பூணக்கிடையா பொளிவானவளே
புனையக்கிடையா புதுமைதவளே
நாணித்திருநாமம் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்கவொளி கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவேன் அடியவற்குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வறனவா நிதியே சரணம் சரணம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
கோமேதகம்
பூமேவியனான் புரியும் செயல்கள்
போன்றாப்பயனும் குன்றாவரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வா நிலமே
குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
பத்மராகம்
ரஞ்சனி நந்தனை அங்கனி பதும
ராக விகாசினி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாரிணி
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
வைடூர்யம்
வலையோத்தவினை கலையோத்த மனம்
மருளப் பறையா ரொளியோத்தவிதால்
நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலைத்துவஜன் மகளே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
இப்பாடலின் பலன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே!!
[END]
டியர் சுந்தர்ஜி
இந்த பதிவின் மூலம் லலிதா நவரத்தின மாலை உருவான கதையை முதன் முதலாக தெரிந்து கொண்டோம். நாமும் வெள்ளிகிழமை ஆரம்பித்து தினமும் படித்து அம்பிகையின் அருள் பெறுவோம். 14 ம் தேதி வெள்ளி கிழமை. காரடையான் நோன்பு., அன்றே ஸ்டார்ட் செய்கிறோம்
நன்றி
உமா
பகிர்தலுக்கு மிகவும் நன்றி சுந்தர்ஜி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
pizhaigal ullana thiruthi veliyidavum. contact sri satguru gnananda thapovanam
போர் correct lyrics and எச்செல்லேன்ட் சீ DEE விசிட் அகஸ்தியர் ஆஷ்ரம் nochoor kayrela.
வணக்கம் சுந்தர் சார் உங்கல் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் நான் உங்கள் website இன் தீவிர fan .