Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

print
புராண காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை “பிறவா நிலையே எனக்கு வேண்டும் இறைவா!” என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட  வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா? “கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்!” என்பது தான்.

எத்தனை பெரிய வார்த்தைகள்… எப்படிப்பட்ட ஒரு சிந்தனை… எத்தனை பெரிய லட்சியம்.

Swami Vivekananda2“சுவாமி விவேகானந்தர் என் தலைவர்” என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். நம் வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அவர் சுவாமி விவேகானந்தர் தான். ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாது அலங்கோலமாக கிடந்த நம் வாழ்க்கையை செதுக்கி இன்று அதற்கு ஒரு அர்த்தம் கொடுத்த சிந்தனை சிற்பிகளில் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர். சுருங்கச் சொன்னால் இந்தக் களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

ஜனவரி 12 – இன்று அவரது அவதாரத் திருநாள்.

இன்றைக்கு ரைட்மந்த்ரா தளத்தின் பல்வேறு பணிகளில் சமூக அக்கறையும் ஆன்மீகத்துடன்  கலந்த பொது சேவையும் ஊடிழையாய் ஓடிக்கொண்டிருக்கின்றது என்றால் அதற்கு காரணம் சுவாமி விவேகானந்தர் தான்.

வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருப்பவர்கள் யாரேனும் நம்மிடம் சில நிமிடங்கள் பேசினால் போதும் அவர்களின் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடக்கூடிய அளவு நமக்கு இன்று ஒரு ஆற்றல் இருக்கிறதென்றால் அதை தந்தது யார் தெரியுமா? சுவாமி விவேகானந்தர்.

சுவாமிஜி பற்றி எழுதவேண்டும் என்றால் அதற்கு ஒரு பதிவு போதாது. இருப்பினும் சுவாமிஜி தனது மேற்கத்திய நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியபோது அவர் தமிழகம் வந்திருந்த தருணங்களை இந்த பதிவில் அசைபோடுகிறோம்.

தமிழகம் எந்தளவு அவரை கொண்டாடியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தமிழனாக நாம் தலைநிமிரும் தருணம் இது.

சுவாமிஜி முதன்முறையாகத் தமிழகத்திற்கு 1893 ஆரம்பத்தில் வந்திருந்தார். அன்று அவர் யாரும் அறியாத ஒரு சாதாரணத் துறவி. ஆனால் மேற்கத்திய நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு 1897ல் சுவாமி திரும்பியபோது அவரது திறமையையும் தகுதியையும் ஆற்றலையும் தமிழகம் உணர்ந்திருந்தது. இருக்காதா பின்னே உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் இந்து மதத்தின் பெருமையையும் நிலைநாட்டியவராயிற்றே!

சுவாமிஜி தன் தமிழக சுற்றுப் பயணம் நெடுக பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். சுவாமிஜியின் இந்தியச் சொற்பொழிவுகள் என்றல்ல, அனைத்துச் சொற்பொழிவுகளிலும், ஏன், அவரது வாழ்க்கை முழுவதுமே படர்ந்து நிற்கின்ற ஒரு கருத்து ‘மனிதம்’.

மதம் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும்.
ஆன்மீகம் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும். விஞ்ஞானம் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு  உதவவேண்டும். அரசியல் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும். மனிதனை, அவன் இருக்கின்ற இடத்தில் இருந்து முன்னேற உதவாத எதையும் அவர் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே, ‘சேவை’ என்பதைத் தாரக மந்திரமாக வைத்தார் அவர்.

1897 ஆம் ஆண்டு ஜனவரி துவக்கத்தில் சுவாமி கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்தார். பின்னர் ஜனவரி 26 செவ்வாய் தமது மேலைநாட்டு சீடர்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து நீராவிப் படகில் புறப்பட்டார் சுவாமிஜி. பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக சுமார் 50 மைல் பயணம் செய்து  மாலை 3 மணியளவில் பாம்பனை அடைந்தார். ராமநாதபுர மன்னர் மற்றொரு படகில் வந்து சுவாமிஜியை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. ஆனால் மன்னர் வந்து சேராத காரணத்தால் சுவாமிஜி  காத்திருக்க நேர்ந்தது. சுமார் 5 மணிக்கு அழகாக அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் மன்னர் வந்தார். சுவாமிஜி அந்தப் படகிற்குச் சென்றார்.

பாஸ்கர சேதுபதி மன்னரும் சுவாமிஜியும் சந்தித்த காட்சி உணர்ச்சிமயமானதாக இருந்தது. மன்னரும் அவருடன் வந்தவர்களும் நெடுஞ்சாண் கிடையாக சுவாமிஜியின் முன் வீழ்ந்து பணிந்தனர். பின்னர்  மன்னர் சுவாமிஜியை சிம்மாசனம், ஒன்றில் அமர வைத்து, சுவாமிஜியின் செருப்புகளை அவரது பாதங்களில் அணிவித்தபடியே. ‘விலைமதிக்க முடியாத வைரம் ஒன்றைத் தலையில் சூடுவதைவிட  இதனைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்று கூறினார்.
படகு பாம்பனை அமைந்தது. மக்கள் கூட்டத்தின் வாழ்த்தொலிகளுக்கும் வரவேற்பு வைபவங்களுக்கும் இடையே, அலங்கரிக்கப்பட்ட பந்தல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவாமிஜி. அங்கே  அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, வரவேற்புடிர படிக்கப்பட்டது. சுவாமிஜி அதனை ஏற்றுக் கொண்டு சொற்பொழிவாற்றினார். பின்னர் அவர் அருகிலிருந்த மாளிகை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.  அந்த மாளிகைக்கு சுவாமிஜியை அழைத்துச் செல்லும் வழியில் மன்னர் சுவாமிஜியை அரச வாகனத்தில் அமரச் செய்து, தாம் பரிவாரங்களுடனும் பக்தர்களுடனும் அருகில் நடந்து சென்றார். சிறிது  தூரம் சென்றதும் வண்டியிலுள்ள குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு, மற்றவர்களுடன் வண்டியைத் தாமே இழுத்துச் சென்றார்.

அடுத்த நாள் சுவாமிஜியும் மன்னரும் மற்றவர்களும் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றனர். அங்கே சுவாமிஜிக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டது. யானை, குதிரை, ஒட்டகம், கோயில் சின்னங்கள்  அடங்கிய ஊர்வலம் அவரை வரவேற்றது. கோயில் ஒதுவார்கள் அவரை எதிர்கொண்டு அழைத்தனர். பின்னர் சுவாமிஜி ராமேஸ்வர சிவபெருமானைப் பணிந்தார். கோயில் ஆபரணங்கள் அவருக்குக்  காட்டப்பட்டன. அதன்பிறகு அவர் கோயிலைச் சுற்றிப் பார்த்தார். கோயிலின் பிரபலமான ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிஜி வந்து கொண்டிருந்தபோது, அங்கே திரண்டிருந்த பக்தர்களுக்கு அருளுரை  வழங்குமாறு மன்னர் கேட்டுக் கொண்டார்.

மக்களில் மகேசுவரனைக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்வதே உண்மை வழிபாடு என்ற தத்துவத்தை மிக எளிமையாக அங்கு எடுத்துரைத்தார்.

சுவாமிஜி: ‘மக்களில் ஒரு வகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை. சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர். இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே. தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும்…. சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

சுவாமிஜியின் செய்தியை உடனடியாக ஏற்றுச் செயல்படுத்தினார் மன்னர். மறுநாளே ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்தார் அவர். சுவாமிஜி தமது திருப்பாதங்களைத் தன் நாட்டில் பதித்ததன் நினைவாக நாற்பது அடி உயரத்தில் நினைவுத் தூண் ஒன்றையும் எழுப்பினார்.

அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு மாட்டு வண்டியில் பயணம் தொடங்கியது. அதிகாலையில் புறப்பட்ட அவர்கள் வழியில் ஒரு சத்திரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டனர். நாமநாதபுரத்தை நெருங்கும்போது ஏரி ஒன்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனை அவர்கள் அரசுப் படகில் கடந்தனர். ஏரியைக் கடந்து நிலப் பகுதியைத் தொட்டதும் சுவாமிஜியை வரவேற்க பீரங்கிகள் முழங்கின, வாணங்கள் வானில் பறந்தன. ஏரியின் கரையும் மாலை நேரமும் ஆகாயத்தில் அழகிய காட்சிகளுமாக அந்த இடம் ஓர் அற்புதக் கோலத்தைத் தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடியிருந்தனர். பின்னர் ஊர்வலம், வரவேற்பு எல்லாம் விமரிசையாக நடைபெற்றன.

சிறிது தூரம் சுவாமிஜி அரசு வண்டியில் சென்றார். அருகில் மன்னர் நடந்து சென்றார். பின்னர் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க பல்லக்கில் சென்றார். சுவாமிஜி தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சங்கர வில்லா’ என்ற மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த பிறகு சுவாமிஜி அரச சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிரக்கணக்கானோர் அங்கே கூடியிருந்தனர். மன்னரின் சகோதரரான ராஜா தினகர சேதுபதி வரவேற்புரை ஒன்றை வாசித்து அதனை ஒரு தங்கப் பேழையில் வைத்து சுவாமிஜிக்கு அளித்தார். அங்கே சுவாமிஜி உரை ஒன்றை நிகழ்த்தினார்.

அடுத்து கும்பகோணத்திலிருந்து சென்னைக்கான 194 மைல் பயணம் தொடங்கியது. பிப்ரவரி 5 இரவு 10.45க்கு ரயில் புறப்பட்டது. நிரஞ்ஜனானந்தர், சிவானந்தர், குட்வின், திருவனந்தபுரத்தில் சுவாமிஜியைச் சந்தித்திருந்த பேராசிரியர் ரங்காச்சார்யா ஆகியோர் சுவாமிஜியும் சென்றனர். சேவியர் தம்பதிகள் ஒருநாள் முன்னதாகவே புறப்பட்டுவிட்டனர். இந்தப் பயணத்தின் போதும் வழியெங்கிலும் வரவேற்புகளும் விழாக்களும் அவருக்காகக் காத்திருந்தன.

‘ஜெய் சுவாமி விவேகானந்த மஹராஜ் ஜி கீ ஜெய் என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. மாயவரத்தில் ரயில் சென்ற போது இரவு 11.30 மணி. அங்கே 10 நிமிடங்கள் ரயில் நின்றது. அங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். வரவேற்புரை வாசித்து அளித்தனர்.

மறுநாள் காலை 6 மணியளவில் ரயில் செங்கல்பட்டை அடைந்தது. The Madras Mail மற்றும் The Hindu பத்திரிகை நிருபர்கள் அங்கே ஏறிக் கொண்டனர். அவர்கள் சென்னை வரை சுவாமிஜியைப் பேட்டி கண்டு, அதனைத் தங்கள் பத்திரிகையில் வெளியிட்டனர்.

சென்னைக்கு முன்பாக உள்ள ஒரு சிறிய ஸ்டேஷன். அங்கே ரயில் நிற்காது. ஆனால் சுவாமிஜியைக் காண்பதற்காகத் திரண்டிருந்த மக்கள் ரயிலைச் சற்று நேரமாவது நிறுத்துமாறு ஸ்டேஷன்  மாஸ்டரிடம் கேட்டனர். அவர் அதற்கு உடன்படவில்லை. சுவாமிஜியை ஒருமுறையாவது தரிசிப்பதற்காகக் கூடியிருந்த அந்த மக்கள் ஒவ்வொருவராகத் தண்டவாளத்தில் படுத்துவிட்டனர். வேறு வழியின்றி ரயிலை நிறுத்த வேண்டியதாயிற்று. சுவாமிஜி உணர்ச்சியால் நெகிழ்ந்தார். வெளியே வந்து கனியுடன் மக்கள் வெள்ளத்தைப் பார்த்தார். தமது இரு கரங்களையும் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். ரயில் நகர்ந்தது.

Swami Vivekananda painting

சுவாமி விவேகானந்தரைக் கண்டுபிடித்தது தமிழ்நாடு என்று தாராளமாக உரிமை கொண்டாட முடியும். இதனால் தானோ என்னவோ சுவாமிஜியும் தமிழ் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைந்திருந்தார். அவரது தமிழ்நாட்டுச் சொற்பொழிவுகளில் இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் மிகத் தெளிவாகக் காண முடியும். ‘சென்னை இளைஞர்களே, உங்கள் மீதே என் நம்பிக்கை உள்ளது என்று சுவாமிஜியும் அதனால்தான் தமது கடிதங்களில் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி, அவரது அறைகூவலுக்கு முதன்முதலில் செவி சாய்த்து, ஒரு நிலையான ஆன்மீக மையம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று சென்னை மக்களே அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

தான் கண்டுபிடித்த ஒரு துறவி மேலைநாட்டில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு, தாயகம் திரும்பும்போது தமிழ்நாடு, குறிப்பாக சென்னை எவ்வளவு குதூகலித்திருக்கும்! அவருக்குக் கொடுத்த வரவேற்பு போல் அதுவரை எந்த அரசியல் தலைவருக்கோ, வேறு எந்தத் தலைவருக்கோ கொடுக்கப்படவில்லை என்று The Hindu முதலான தினசரிகள் எழுதின.

சுவாமிஜியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் 1896 டிசம்பர் இறுதியில் துவக்கப்பட்டன. டிசம்பர் 21ம் நாள் அளசிங்கரும் பிறரும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கேஸில் கெர்னன் என்ற கட்டிடத்தில் கூடி வரவேற்புக் குழு ஒன்றை அமைத்தனர். சுவாமிஜியின் சீடர்களான அளசிங்கர், பாலாஜி ராவ், பி.சிங்கார வேலு முதலியார் ஆகியோருடன் சென்னையின் முக்கியப் பிரமுகர்களான வி.பாஷ்யம் ஜயங்கார், வி.கிருஷ்ண சுவாமி ஐயர், வி.சி சேஷாச்சாரியார், பேராசிரியர் எம்.ரங்காச்சாரியார், பேராசிரியர் கே.சுந்தரராம ஜயர், டாக்டர் நஞ்சுண்டராவ், பி.ஆர்.சுந்தர ஐயர் ஆகியோரும் இதில் பங்கு வகித்தனர். நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைவராக நியமிக்கப்பட்டார். தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட்டும், இந்தியாவின் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த டாக்டர் பரோசும் இந்த வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சுவாமிஜி சென்னையில் ஒன்பது நாட்கள் தங்கினார். அது சென்னை மக்களுக்கு ஒரு நவராத்திரிதான். ஒவ்வொரு நாளும் சுவாமிஜியின் சொற்பொழிவு, பேட்டி என்று கேஸில் கெர்னன் ஓர் ஆனந்தச் சந்தையாக மாறிவிட்டிருந்தது. அந்தத் தெய்வ மனிதருடன் வாழும் பேற்றைப் பெற்ற ஒவ்வொருவரும் ஆனந்தத்தில் மிதந்தார்கள். குறிப்பிட்ட சிலநேரம்தான் சுவாமிஜியைச் சந்திக்க இயலும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடந்தது வேறு. காலையிலிருந்து மதாலை வரை, அதுபோல் இரவிலும் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் வந்து சுவாமிஜியைத் தரிசித்த வண்ணம் இருந்தனர். சுவாமிஜி திருஞான சம்பந்தரின் அவதாரம் என்ற கருத்து வேறு பரவத் தொடங்கியதால் கூட்டம் இன்றும் அதிகமாயிற்று.

தினமும் பல பெண்கள் வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் மலரிட்டு வழிபட்டனர். திருப்பதியிலிருந்து வந்த முதியவர் ஒருவர் சுவாமிஜியின் பாதங்களில் பணிந்து, மலர் மாலைகள் அணிவித்து, ‘நீங்கள் வைகானஸரின் அவதாரமே’ என்று கூறி, கண்களில் கண்ணீருடன் விடை பெற்றார்.

வந்தவர்கள்அனைவரும் சுவாமிஜியை வரவேற்பதற்கும் வழிபடுவதற்கும் மட்டுமே வந்தார்கள் என்பதில்லை. அவருடன் வாதிட்டு, அவரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று சிலர்; அவரது அறிவுத் திறமையைச் சோதிப்பதற்காகச் சிலர்; அவரையே சோதிப்பதற்காகச் சிலர் என்று பலதரப்பட்டவர்கள் அங்கே கூடினர். இவை ஒன்றும் சுவாமிஜிக்குப் புதியவை அல்ல. எல்லா சூழ்நிலைகளையும் அதற்கேற்ப எதிர்கொண்டு, வெற்றி வீரராகத் திகழ்ந்தார் சுவாமிஜி.

பிப்.,13ம் தேதியன்று 3ம் பொதுச் சொற்பொழிவு பச்சையப்பா ஹாலில் வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும் என்ற தலைப்பில் நடைபெற்றது. அன்று மேடையில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் இருந்தார். சொற்பொழிவின் இடையில் சுவாமிஜி இளைஞர்களுக்கு அறைகூவுகின்ற பகுதி வந்தது. முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும் நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும்… உங்கள் கை, கால் தசைகளில் இன்றும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று பேசினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணிய ஐயர் அருகிலிருந்தவரிடம் தமிழில், ‘இதைத்தான் நானும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கெசாள்ளவில்லை. இப்போது சுவாமிகள் கூறுகிறார், எல்லோரும் ஆர்ப்பரிக்கிறார்கள்’ என்றாராம்.

சொற்பொழிவை நிறைவு செய்துவிட்டு சுவாமிஜி ராயப்பேட்டை பேட்டர்சன் தோட்டத்திலுள்ள எல்.கோவிந்தாஸ் என்பவரின் வீட்டிற்குச் சென்றார். ஐரோப்பியர்கள் பலர் அங்கே திரண்டிருந்தனர். சுவாமிஜிக்கு வரவேற்புரை அளிக்கப்பட்டது. வீணை மற்றும் கிடார் கச்சேரிகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிஜிக்கு ஆரஞ்சு வண்ண சில்க் துணிகள் வழக்கப்பட்டன, மாலை மரியாதைகள் செய்யப்பட்டன.

விவேகானந்தர் சாதாரண மானிடர் அல்ல!

விவேகானந்தர் ஒரு சாதாரண மானிடர் அல்ல என்பது அவரது வாழ்க்கையின் சில சம்பவங்களை ஊடுருவிப் பார்த்தால் புரியும்.
சுவாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது:

கல்கத்தாவின் முக்கிய வீதிகளில் ஒன்று அது. இரவு 8 மணி இருக்கும். கல்கத்தா காளி உற்சவ மூர்த்தியாய் எழுந்தருள, சுவாமி விவேகானந்தரும் கூட்டத்தினருடன் ஊர்வலத்தைப் பார்த்து கொண்டிடுந்தார் .

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் சுவாமிஜியைப் பார்த்து, ”இந்த மக்களுக்கு வேறு வேலையே கிடையாது. ஏதாவது ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். பக்தி எனும் பேரில் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பார்கள்” என்றான் .

சுவாமிஜி அவனைப் பார்த்து , ”என்ன சொன்னாய் ? ஊர்வலம் வரும் பவதாரணியை வெறும் பொம்மை என்றா சொன்னாய் ? இப்போது அந்த பொம்மையை உற்றுப்பார்” என்று சொல்லி அவனது கையைப் பிடித்தார் .

உடல் முழுவதும் மின்னல் பாயும் உணர்வு பெற்ற அவன் சிலையை உற்றுப்பார்க்க, பவதாரணி இவனைப் பார்த்து சிரிப்பதை பார்த்து அதிர்ந்தான்.

“சுவாமிஜி என்னை விட்டுவிடுங்கள் ! எனக்கு பயமாக இருக்கிறது ! உயிரோட்டமுள்ள பவதாரிணியே ஊர்வலம் வருவதை உணர்ந்து கொண்டேன்” என அலறினான் .

சுவாமிஜி “திருவுருவங்கள் அவரவர் பார்க்கும் பார்வையில் இல்லை; உணர்வில் தான் உள்ளது” என்றார்.

இப்படி சிறு சிறு சம்பவங்கள் மூலம் சுவாமிஜி தன் வாழ்க்கையில் உணர்த்திய பேருண்மைகள் ஏராளம். ஏராளம்.

(ஆக்கத்தில் உதவி : தினமணி)

==========================================================

Also check :

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

===========================================================

[END]

 

5 thoughts on “களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

  1. சுவாமிஜியின் பிறந்த நாளில் அவரைப் பற்றி அழகிய பதிவை போட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள் . சுவாமியின் பெயரை சொன்னாலே நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுகிறது., இன்று நான் இந்த பதிவை காலையில் இருந்து எதிர்பார்த்தேன்.

    பாஸ்கர சேதுபதி மன்னரும் சுவாமிஜியும் சந்தித்த காட்சி உணர்ச்சிமயமானதாக இருந்தது. – .// .படிக்கும் பொழுது நான் அதை உணர்ந்தேன்

    சுவாமிஜியை பற்றி உணர்ச்சி பிழம்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.

    //ஜெய் சுவாமி விவேகானந்த மஹராஜ் ஜி கீ ஜெய்//

    மிக்க நன்றி
    உமா வெங்கட்

  2. “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றவர்.
    ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று உலகிற்கு உணர்தியவர்,
    .இந்திய இளைஞர்கள்
    மத்தியில் எழுச்சியைத் ஏற்படுத்தியவர் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையைய விதைத்தவர். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது என்றால் மீகைஆகது.
    அவர்ரீன் சிகாகோ சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு முன் இருந்த இந்தியா என்பது வேறு;
    அவர்ரீன் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தோன்றிய இந்தியா என்பது வேறு.விவேகானந்தரின் சொற்பொழிவுக்குப் பிறகு தான் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், கல்வியில் மறுமலர்ச்சி தோன்றியது என்றால் மீகைஆகது. சுவாமிஇன் பிறந்த நாளை பதிவை அளித்ததற்கு நன்றி

  3. ////தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும்…. சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.////

    உண்மை…………விவேகானந்தர் போன்றோர் இப்போது இருந்தால் நம் தேசத்திற்கு நல்ல வழிகாட்டி கிடைத்திருப்பார்கள் …………

  4. A wonderful article about our inspiration. That too, many unknown history of his life related with our state.
    **
    He has lived only 39 years but look at the impact he has created. I too, aspire to be like him – 100% couldn’t/mayn’t be possible so, but at least to the smallest percent of him.

    In fact, even our Bharathi too has lived only 39 years. Both of them has lived during the same time almost (Vivekanandar – 1863-1902; Bharathi – 1882-1921).
    **
    both has created a great impact in this pre-independent country. Both has followed both – Spirituality + Affinity towards the country.
    **
    I often am greatly inspired by both of them – in their wordings, teachings, way of life.
    **
    And the most important thing is – I got to know both of them so much through you only.

    If we like someone, we tend to like that person’s interests too. That way, I too, unconsciously developed great interest and getting inspired of the both through your eyes and hands only.
    **
    Thanks so much for that. Thanks again for this lovely article.
    **
    Wish you a wonderful year and life – from this 2015.

    Wish all of our readers a wonderful pongal/makara sankrati.

    God bless all of you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *