Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

print
ராபர்ட் வின்சென்சோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு மிகப் பெரிய கோல்ப் வீரர். மிகப் பெரிய சாதனையாளர். பல பாராட்டுக்களையும் பதக்கங்களையும் குவித்தவர்.

Roberto DeVicenzoஒரு முறை ஒரு போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகையையும் கோப்பையும் பெற்ற பிறகு வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் காரில் ஏறப்போன நேரம் ஒரு பெண்மணி ஓடிவந்து அவர் ரசிகை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் ஒரே குழந்தை மருத்துவமனையில் சாகக் கிடப்பதாகவும் ஆப்பரேஷன் மற்றும் டாக்டர் பீசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் அழுது புலம்பினாள்.

அவளுடைய கதையை கேட்ட ராபர்ட் வின்சென்சோ அவளுக்காகவும் அவள் குழந்தைக்காகவும் மிகவும் இரக்கப்பட்டு அந்த போட்டியில் அவர் வெற்றி பெற்ற தொகையான ரூ.10 லட்சத்தை ஒரு செக்காக அவள் பெயருக்கு எழுதி, “இந்த பணத்தை கொண்டு உன் குழந்தையை முதலில் காப்பாற்று! All the best!!” என்று கூறி அப்படியே அங்கேயே அவளுக்கு கொடுத்துவிட்டார்.

Kindness

சில நாட்கள் கழித்து ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராபார்ட் வின்சென்சோ சென்றபோது அங்கே கோல்ப் சங்கத்தின் செயலாளரை சந்திக்க நேர்ந்தது.

செயலாளர் சிரித்துக்கொண்டே இவரிடம், “சென்ற வாரம் பார்க்கிங்கில் உங்களைப் பார்த்த யாரோ ஒரு பெண்ணின் குழந்தையின் மருத்துவ செலவுக்காக நீங்கள் அப்போது வாங்கிய பரிசுத் தொகையை அப்படியே கொடுத்துவிட்டீர்களாமே… என் நண்பர்கள் சிலர் சொன்னார்கள்….”

“ஆமா… அதற்கு என்ன?”

“உங்களுக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறேன்… அவள் ஒரு ஃபிராடு. நடத்தைகெட்டவள். அவளுக்கு உடல்நலமில்லாத குழந்தையெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவளுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. உங்களை சரியாக ஏமாற்றியிருக்கிறாள்!”

ராபர்ட் வின்சென்சோ கேட்டார்…. “அப்படியென்றால் உயிருக்கு போராடும் குழந்தை என்று யாருமில்லையா?”

ஒரு வித நக்கல் கலந்த தொனியில் “இல்லை!” என்று பதிலளித்தார் செயலாளர்.

“இந்த வாரத்திலேயே நான் கேட்ட மிக நல்ல செய்தி இது தான் சார்! ரொம்ப நன்றி!!” என்றார் ராபர்ட் வின்சென்சோ சிரித்துக்கொண்டே.

உங்களுக்கு வருவது நல்ல செய்தியா கெட்ட செய்தியா என்பது நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொருத்தது.

இரக்கப்படுபவன் ஏமாந்துபோகலாம். ஆனால் தாழ்ந்துபோவதில்லை.

இரக்க குணமே உங்கள் பலவீனம் என்றால்… காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள், ‘உலகிலேயே நீங்கள் தான் மிகப் பெரிய பலசாலி!’

=============================================================

உயிரினும் மேலான உழைப்பில் விளைபவை இந்த தளத்தின் பதிவுகள். எடுத்தாளும் நண்பர்கள் இந்த தளத்தின் லிங்க்கை அவசியம் அளிக்கவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

=============================================================

Also check :

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

=============================================================

[END]

9 thoughts on “நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

  1. Happy Morning to all

    மிகவும் அருமையான ஸ்பெஷல்

    //இரக்க குணமே உங்கள் பலவீனம் என்றால்… காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள், ‘உலகிலேயே நீங்கள் தான் மிகப் பெரிய பலசாலி! –//

    I AM PROUD TO SAY THAT I AM A SOFT CORNER PERSON

    Regards
    Uma Venkat

  2. ராபர்டின் இந்த பதிலை சத்தியமாக நான் எதிர்பார்கவில்லை. அற்புதமான மனிதர் ராபர்ட் வின்சென்சோ.

  3. Good Article sometimes people feel shy to say that they have helped others because they feel he might have been cheated . This article has taken us in a different perspective.

    We should not hesitate to help people because we dont know who is really suffering there is lot of chance that we might missed to help the right suffering people.

    Thanks
    Venkatesh

  4. அருமையான ஸ்பெஷல்
    //இரக்க குணமே உங்கள் பலவீனம் என்றால்… காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள், ‘உலகிலேயே நீங்கள் தான் மிகப் பெரிய பலசாலி! –// வியக்க வைத்த மனிதர் ராபர்ட் வின்சென்சோ.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *