வாரியார் சுவாமிகளை அவருக்கு நன்கு தெரியுமாதலால், திருப்பணிக்கு அவரை அணுகினார். வாரியார் தமது ஆயுட்காலத்தில் எண்ணற்ற ஆலயங்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார். தனது சொற்பொழிவு மூலம் கிடைத்த வருவாய் அனைத்தையும் திருப்பணிகளுக்கே கொடுத்தான் வந்தார்.
எனவே சுப்பையாப் பிள்ளை வாரியார் சுவாமிகளை அணுகி, கேட்டபோது வாரியார் தாம் சொற்பொழிவாற்றி அதன் மூலம் நிதி திரட்டி தருவதாக சொன்னார். திருப்பணிகளும் தொடங்கின.
இந்நிலையில், சுப்பையாப் பிள்ளையின் வீட்டில் கள்வர்கள் புகுந்து, சுப்பையாப் பிள்ளையின் மனைவியின் நகைகளை திருடிச் சென்றனர். ஊர் வாய் சும்மா இருக்குமா? “திருப்பணி தொடங்கும்போதே இப்படி அவசகுனமாக நகைகள் போய்விட்டனவே… முடிவதற்குள் சுப்பையாப் பிள்ளை அனைத்தையும் இழந்து சுப்பாண்டி ஆகிவிடுவார்” என்றனர்.
குடும்பத்தினரின் ஆலோசனையை அடுத்து எதற்கும் இருக்கட்டும் என்று காவல் நிலையத்தில் நகைகள் திருடு போனது குறித்து புகார் சுப்பையாப் பிள்ளை புகார் அளித்தார். கைதேர்ந்த கும்பல் திருட்டில் ஈடுபட்டிருந்ததால் போலீஸார் துப்பு கிடைக்காமல் திணறினார்கள்.
திருப்பணி தொடங்கிய நிலையில் நகைகள் பறிபோனதால் சுப்பையாப் பிள்ளையின் வீடு களையிழந்து காணப்பட்டது.
சுப்பையாப் பிள்ளையின் நிலையை அறிந்த வாரியார் அவரை தேற்றி, “இறைவன் உன்னை சோதிக்கிறான். கவலை வேண்டாம்.நம்பிக்கை இழக்காதே. தொடங்கிய திருப்பணியை நிறுத்தவேண்டாம். பணி நிறைவுறும்போது நீ இழந்த நகைகள் உனக்கு திரும்ப கிடைக்கும்” என்றார்.
சுப்பையாப் பிள்ளையும் அவர் துணைவியாரும் இதன் பின்னர் முன்னைக் காட்டிலும் இறைவனிடம் அதிகம் பக்தி செலுத்தினார்கள். விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டார்கள். திருப்பணியில் முழு கவனம் செலுத்தி தொய்வில்லாமல் உழைத்தார்கள்.
வாரியார் ஸ்வாமிகள் சொற்பொழிவு நடைபெற்ற முதல் நாளிலேயே ரூ.12,000/- வரை வசூலானது. அந்தக் காலத்தில் இது மிகப் பெரும் தொகை. இது திருப்பணி கமிட்டிக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

மளமளவென ஏற்பாடுகள் நடைபெற்றன. அனைத்தும் முடிந்து குடமுழக்கிற்கு நாள் குறித்தனர். கும்பத்தை அமைத்து கும்பாபிஷேகத்திற்கு யாகத்தை தொடங்கிய நாளன்று வாரியாரின் வாக்கிற்கேற்ப களவு போன நகைகள் திரும்பக் கிடைத்தன.
வாரியார் சிரித்துக்கொண்டே “அடியேன் சொன்ன வார்த்தை இறையருளால் பலித்தது. மெய்யன்பர்களுக்கு இன்னல் வரும். இறைவன் சோதிப்பான். நாம் அதில் வெற்றி காணவேண்டும்!” என்றார்.
சுப்பையாப் பிள்ளைக்கு அன்று வாரியார் இருந்தார். அருளாசி வழங்கிடவும் வழிகாட்டிடவும். தற்போது நமக்கு யார் இருக்கிறார்கள்? ஆனால் வாரியார் வாக்கினின்றும் பிரவாகமாக வெளியாகிய அருணகிரியார் இயற்றிய ‘திருப்புகழ்’ இருக்கிறதே.
பன்னிரு திருமுறைகளுக்கு நிகரானது திருப்புகழ். அருணகிரிநாதர் தந்த அருட்கொடை.
உடமைகளையோ பொருட்களையோ கள்வர்களிடம் பறிகொடுத்தாலோ அல்லது காணாமல் போனாலோ கீழ்கண்ட பாடலை தினமும் பக்தியோடு படித்து வந்தால் இழந்த பொருள் நிச்சயம் திரும்ப கிடைக்கும்.

திருப்புக்கொளியூர்
(அவிநாசிக்கு அருகில் உள்ளது)
தத்தன தானான தத்தன தானான
தத்தன தானான தனதான
பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி மணநாற
ஒத்திநி லாவீசு நித்தல நீராவி
யுற்பல ராசீவ வயலுரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு பெருமாளே.
தகுந்த ஆசார நிலையில் நின்று, சைவ உணவு உண்டு, மவுன நிலையில் நிற்கும் சிவ யோகிகள் தங்களுடைய பத்தி நிலையில் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த, வீட்டுப் பேற்றைப் பற்றுவதானதும், எல்லா பற்றுக்களும் அற்றதான நிலையை நான் அடைந்தவுடன், என்னைப் பற்றியுள்ள துர்க்குணம் எல்லாம் என்னை விட்டொழிய, அந்த ஞான உபதேசமே எனக்குப் படையாகவும், பாசம் ஒழியவும், உபதேசத்தை வாய் விட்டு உரைத்த சற்குரு நாதரே, உன் அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன்.
ஊக்கம் மிக்கனவும், உண்மை நெறியைக் காட்டுவனவும் ஆகிய பன்னிரு புயங்களை உடையவனே, நீலோற்பலம், தாமரை ஆகிய மலர்களின் நறு மணம் வீசுவதும், நிலவொளி வீசுவதும், முத்துப் போல் தெளிவு உள்ளதுமான வயலூர்ப் பெருமானே, வீரக் கழல்கள் அணிந்தவனே, பொன்னொளி வீசும் உடல் அழகனே, திருப்புக்கொளியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, என் பொய்யான நிலை நீங்கி, மெய்யான உன் அற்புதத் திருவடிகளை எனக்குத் தருவாயாக.
* திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இதைத்தான் ‘கலியுகத்தின் அருள்’ என்று குறிக்கிறார்.
திருடர்கள் கையில் அகப்பட்டு களவு போன பொருட்களை முதலை வாயுள் போன பொருட்களோடு தொடர்பு படுத்தி பேசுவது வழக்கம். ஏனெனில் இரண்டுமே திரும்ப கிடைப்பது கடினம். ஆனால் நம் பதிகங்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கின்றன எனும்போது அவற்றுக்கு இணையேது?
மேற்கூறிய சுந்தரர் பதிகத்தோடு அருணகிரிநாதர் திருப்புக்கொளியூரில் பாடிய பொருட்களை மீட்டுத் தரும் இந்த திருப்புகழ் பாடலும் அமைந்திருப்பது அதிசய ஒற்றுமை.
======================================================
Also check :
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
ஆங்கிலேய ஜெனரலை காக்க நேரில் வந்த சிவபெருமான் – உண்மை சம்பவம்!
மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!
======================================================
[END]
வாரியார் ஸ்வாமிகள் சொன்னது போல் தொலைந்து போன நகை மீண்டும் கிடைத்தது என்பது இறைவனின் திருவிளையாடல்.
/////////வாரியார் சிரித்துக்கொண்டே “அடியேன் சொன்ன வார்த்தை இறையருளால் பலித்தது. மெய்யன்பர்களுக்கு இன்னல் வரும். இறைவன் சோதிப்பான். நாம் அதில் வெற்றி காணவேண்டும்!” என்றார்.////////
இந்த வைர வரிகள் எனக்காகவே சொன்னது போல் உள்ளது.
கோவில் கோபுரம் மற்றும் மயில் கொள்ளை அழகு. திருப் புகழ் பதிகம் மிகவும் அருமை.. தொலைந்த பொருளை மீட்க உதவும் அற்புத பதிகம்.
இதே போல் சுந்தரர் திருமுருகன் பூண்டியில் ஒரு பாடல் இயற்றி இருக்கிறார்.
நன்றி
உமா வெங்கட்
இறைவன் சோதிப்பதும் நன்மைக்கே.
திருப்புக்கொளியூர் என்பது அவினாசி யின் பழங்கால பெயர்.
பெருங்கருனை நாயகி உடனமர் அவினாசியப்பர் போற்றி! போற்றி!
எல்லா புகழும் இறைவனுக்கே