பொதுவாக நமது பக்தி திரைப்படங்களில் ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், பெரும்பாலும் அந்தந்த இடங்களில், அந்தந்த காலகட்டங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களாகத் தான் அவை இருக்கும். சிறிது கற்பனை சேர்த்து நமது இயக்குனர்கள் திரைப்படங்களில் அற்புதமாக அவற்றை பயன்படுத்தியிருப்பார்கள்.
அண்மையில் பங்குனி உத்திரத்தன்று, டி.வி.டி.யில் ‘ஆதிபராசக்தி’ படம் பார்க்க நேர்ந்தது. நமக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று ‘ஆதிபராசக்தி’. இதில் வரும் ‘சொல்லடி அபிராமி’, ‘நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே’ போன்ற பாடல்களுக்காகவே இந்த படத்தை பலமுறை பார்த்துள்ளோம். திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், திரு.கே.வி.மஹாதேவன் அவர்கள் இசையில் 70 களின் துவக்கத்தில் வெளிவந்த காவியம் இது.
படத்தில் ஒரு காட்சி. சமயபுரத்து அம்மன் சன்னிதியில், வெள்ளைக்காரத் துரை (மேஜர் சுந்தரராஜன்) பூட்ஸ் காலுடன் நுழைந்து அட்டகாசம் செய்யும் போது, அம்மை நோய் தாக்கி அலறுவார்! அப்போது, மனம் திருந்தி, வேண்டுதல் மேற்கொள்ள, அன்னையின் கருணையினால் துன்பம் தீருவார்! (அந்த நேரத்தில் உதிக்கும் பாடல் தான் ‘நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே’. பாடலின் வீடியோவை கடைசியில் தந்திருக்கிறோம். வரிகளை படித்தாலே போதும்… திரும்ப திரும்ப படிக்கக் தூண்டும்.)
மேற்படி மேஜர் சுந்தர்ராஜன் தொடர்புடைய காட்சிகளின் உண்மை பின்னணியை நாம் ஆராய்ந்த போது சிலிர்க்க வைக்கும் தகவல் ஒன்று கிடைத்தது. அது தான் இந்த பதிவு.
இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். அன்னையோ ஒரு படி மேலே – இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்ப்பட்டவள் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. யாராக இருந்தாலும் அவர்கள் ‘அன்பு’ என்னும் மதத்தை தழுவினால் அவள் இன்னருளை பெறலாம் என்பதையே இது உணர்த்துகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.
========================================================================
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
மதுரை மீனாக்ஷியின் கருணையையும் பக்தர்களைக் காக்க அவள் ஆடிய திருவிளையாடல்களையும் இங்கு காண்போம். அன்னைக்கு இப்பெயர் வரக் காரணம் … மீன்களுக்கு இமைகள் இல்லை. இமைக்காமலே தானிட்ட முட்டைகளை, தன் பார்வை கொண்டே பொரித்து விடுமாம் அதைப்போல நம் அன்னையான இமவானின் புத்ரியும், இமையிருந்தும் இமைக்காமலே பக்தர்களைக் காக்கிறாளாம். இதனால் மீனாக்ஷி என்ற பெயரைக் கொண்டுள்ளாள்.
இவள் வீற்றிருக்கும் மாமதுரையில் ஈசன் 64 திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான். அன்னையும் சில திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளாள்.
அதில் 1) காஞ்சன மாலைக்கு மகளாக அவதரித்தது 2) குமரகுருபரருக்கு முத்துமாலை அளித்தது. 3) பீட்டர் என்னும் ஆங்கிலேயருக்கு உயிர்ப் பிச்சை அளித்தது. இத்திருவிளையாடலின் சான்றுகளை இன்னும் நாம் கண் கொண்டு காணலாம். இச்சம்பவத்தைத் தெரிந்து கொள்ள நாம் 18ஆம் நூற்றாண்டை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.
நம் நாடு, மன்னர் ஆட்சி மாறி ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. 1812ஆம் ஆண்டு இரோஸ் பீட்டர் என்பவர் ஆட்சிப் பொறுப்பேற்று மதுரைக் கலெக்டராகப் பணிபுரிய வந்தார்.
அதிகாரியான பீட்டர் இளகிய மனம் கொண்டவர். மக்களை மிகவும் அன்புடன் நேசித்தார். இவரது ஆட்சியில் தர்மம், நியாயம், இருந்ததால் செல்வ வளம் மிகுந்தது. பழைய பாண்டிய மன்னர்களைப் போல் ஆட்சி செய்ததால் இவரை மக்கள் அன்புடன் பீட்டர் பாண்டியன் என அழைக்கலாயினர்.
மதுரையின் மண், அதன் மக்கள், குறிப்பாக வானத்தை எட்டும் கோபுரங்கள், வீதி உலா வரும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பீட்டரின் மனத்தைக் கொள்ளை கொண்டனர். வீதி உலா வரும் அன்னை மீனாக்ஷியின் அருள் பார்வையில் பீட்டரும் தப்பவில்லை. அவளது அருள் பார்வையும், அழகும் அன்னியனான ஆங்கிலேயர் பீட்டர் மனத்தில் பதிந்தன. இப் பதிவு நாளடைவில் பக்தியாக மலர்ந்தது. பீட்டர், அலுவலகத்துக்குச் செல்லுமுன் ஒரு முறை ஆலயத்தை வலம் வந்து விட்டுத் தன் அலுவல்களைத் தொடருவது வழக்கம்.
மக்களின் மனத்தில் பீட்டர் குடி கொள்ள, அவர் மனத்தில் அன்னை மீனாக்ஷி குடி கொண்டாள். அன்பைப் பிறரிடம் காட்டும் அன்பருக்கு, அடி பணிவான் இறைவன் என்னும் கூற்று உண்மையே. அன்னை, எவ்விதம் பீட்டருக்கு அருள் புரிந்தாள் என்று பார்ப்போம்.
இது ஒரு உண்மைச் சம்பவம்.
ஒருநாள், பீட்டர் வழக்கம்போல் அன்றைய அலுவல்களை முடித்த பின்னர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அன்று இரவு வானம் கறுத்து மழை பெய்து கொண்டிருந்தது. வானத்தைப் பிளப்பது போல் மின்னல் மின்னியது. பீட்டர், அவரது படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், ஒரு பிஞ்சுக் கரம் அவரைத் தொட்டு எழுப்பியது. பீட்டர் கண் திறக்க, அவர் முன் அழகே உருவெடுத்த ஒரு சிறுமி, அவரது கையைப் பிடித்து இழுத்தாள். அறை முழுவதும் இருட்டு, தூக்கக் கலக்கம். இவள் யார்? எப்படி வந்தாள்? ஏன் வந்தாள்? ஒன்றும் புரியவில்லை. ஆனால் சிறுமி பலவந்தமாக அவர் கையைப் பிடித்து இழுக்க, அவளது கட்டளையை ஏற்று, மாடியிலிருந்து இறங்கி, வீட்டை விட்டு வெளியே வந்தார். மறுகணம், ஒரு பேரிடி, அவர் வீட்டுக் கூரையில் விழுந்து, வீடு பற்றி எரிந்தது. பீட்டரின் உடலும் உள்ளமும் பதற, அருகில் நிற்கும் சிறுமியை நோக்கினார். அவள் முகத்தில் சிறு புன்னகை. “என உயிரைக் காக்க வந்த நீ யார்?” என்று கேட்க, சிறுமி அந்த மழையில் ஓடலானாள். பீட்டரும் அவளைத் தொடர்ந்தார். எவ்வளவு வேகமாக ஓடினாலும் இருவருக்குமிடையில் அதே இடைவெளி இருந்தது. சிறுமியை எட்டிப் பிடிக்க இயலாமல் பீட்டர் ஓடினார். ஓடிய சிறுமி கோவிலை அடைந்து உள்ளே சென்றாள். மீனாக்ஷீ கர்ப்பகிருகத்துள் சென்று மறைந்தாள். பீட்டர் மெய் சிலிர்த்து, கண்ணீர் மல்க சிலையாக நின்றார். இது கனவா நினைவா, அல்லது கற்பனையா? இல்லை. இது நிஜம். ஊர் உறங்கும் இவ்வேளையில் இடியிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றியது வேறு யாருமில்லை. இங்கு கோவில் கொண்டிருக்கும் அன்னை மீனாக்ஷீ எனப் புரிந்து கொண்டார். அவளது கருணை, அவருள் இருந்த மாயக் கற்றைகளையும், ஐயங்களையும் போக்கியது, பீட்டரின் ஊனக் கண்களைத் திறந்து ஞானக் கண்களை வழங்கினாள் இதனால் பீட்டர் அடியாருள் ஒருவரானார்.
அவளை நினைத்து நெஞ்சம் கனிந்து குழைந்து, தாயைப் பிரிந்த சேயாக வாழ்ந்தார். தன்னை ஆட்கொண்ட அன்னைக்கு பொன்னும் பொருளும் வழங்கினார். மீனாக்ஷி குதிரை வாகனத்தில் பவனி வருவதைக் கண்டு பல முறை பக்திப் பரவசத்தில் கரைந்தார். உலக நாயகி, உலகை வலம் வரும் தாயை, நான் வலம் வருவது மட்டும் போதாது. என்னிடம் இருப்பது யாவும் அவள் கொடுத்த செல்வமே. குதிரையில் வரும் தன் தாய்க்கு அவளது திருவடிகளைத் தாங்க இரு மிதியடிகள் செய்வது என முடிவு எடுத்தார். பத்தரை மாற்றுத் தங்கத்தில் 4-முத்து, 4நீலம், 4-வைடூர்யம், மரகதக் கற்கள் 576 வைத்து இரு மிதியடிகளில் பதிக்கச் செய்தார். அவற்றை அன்னை மீனாக்ஷிக்கு அர்ப்பணித்தார்.
குதிரை வாஹனத்தில் உலா வரும் தாயின் பாதங்களைத் தாங்கி இருக்கும் மிதியடிகளைக் காணும் போதெல்லாம் தானே அவளது காலடியில் கிடப்பதாக எண்ணி மகிழ்ந்தார், அந்த ஆங்கிலேயரான பீட்டர்.
அவரது பதவிக் காலம் முடிவுற்றது. எல்லாரையும் போல் அவரும் வேலை முடிந்ததும் தன் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லவா! ஆனால் இவருக்கோ தன் தாயை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அன்புச் சேயாக மாறினார். தினமும் அன்னை மீனாக்ஷியைக் காண வேண்டி மதுரையிலே இருப்பது என தீர்மானித்தார். தன் ஆயுள் முடிவு வந்ததும், எப்பொழுதும் மீனாக்ஷியைப் பார்க்கும் வண்ணம், அடக்கம் செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் கூறி விட்டார். அவ்வாறே, அவரின் சடலம், நகைக் கடைகளுக்கு அருகில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலய வெளியில் ஆலயத்தைத் தரிசித்த படியே துயில் கொண்டு இருப்பது போல அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை சென்றால், இன்னும் அவரின் கல்லறையைக் காணலாம். அவர் அன்னைக்கு அளித்த மரகத மாலை மியூசியத்தில் உள்ளது. மீனாக்ஷி அம்மனுக்கும் அழகர் கோவிலுக்கும் பல பொன் ஆபரணங்களை வழங்கியுள்ளார் பீட்டர் பாண்டியன்.
(நன்றி : ராதா விஸ்வநாதன் | ‘அம்மன் தரிசனம்’ மாத இதழ்)
========================================================================
முதலில் நாம் விளக்கிய சம்பவத்தையடுத்து பீட்டர் பாண்டியன் தொடர்புடைய மேற்படி சம்பவமும் ‘ஆதிபராசக்தி’ படத்தில் இடம்பெறும்.
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு – கங்கை
நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு – கொடும்
கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
கொடும் கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும்
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் – நிற்கும்
ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே Song வீடியோ
==========================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Mobile : 9840169215
==========================================================
அம்பிகையைப் பற்றி வெளியான பதிவுகள் சில…
அன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்!
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
================================================================
சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!
பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை
================================================================
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
================================================================
[END]
அன்னை மீனாட்சியை பற்றிய பதிவு மிக அருமை. மீனாக்ஷி போட்டோ நன்றாக உள்ளது
நாங்கள் பிறந்து வளர்ந்தது மதுரை என்றாலும் பீட்டர் பாண்டியன் கதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டோம். நாங்கள் நகை கடைக்கு அருகில் உள்ள சர்ச் பார்த்திருக்கிறோம். ஆனால் கல்லறை பற்றி தெரியாது.
மதுரையில் சித்திரை திருவிழா மே 1ம் தேதி ,ஆரம்பமாகிறது. மதுரையே விழா கோலம் பூண்டிருக்கும். especially திருகல்யாணம், தேர் முதலிய விழாக்கள் மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முடிந்தால் நேரில் சென்று பார்த்து சித்திரை விழா பற்றிய பதிவு போடுங்கள்;
நன்றி
உமா
மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு உண்மை சம்பவம். இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அடுத்த முறை மதுரை செல்லும்போது நிச்சயம் இந்த இடத்தை பார்ப்பேன். பீட்டர் பாண்டியனின் உண்மையான பக்திக்கு அன்னை மீனாட்சியின் அருள் எனக்கு ஒரு பாடம்.
வணக்கம் சார்.
மதுரை மீனாக்ஷி அம்மனின் பல நிகழ்வுகளை செவி வழி சிறுவயதில் கேட்டுள்ளேன். அவள் பக்தர்களுக்கு பெரும்பாலும் சிறுவயது குழந்தையாகத்தான் காட்சி கொடுப்பாள்.
அவள் பெருமை சொல்ல வார்த்தைகள் போதாது.எங்கள் இஷ்டபடி நாங்கள் சுற்றி வந்த கோயில்.வாசலில் கால் வைக்கும்போதே குளுகுளுவென்று அதிர்வலைகள் நம்மை தாக்கும். தற்போது வரிசை கட்டி போய் பார்க்கும் போது பழைய திருப்தி இல்லை.
அன்னையின் மனதில் அந்த ஆங்கிலேய கலைக்டர் மேல் உள்ள அன்பும் பீட்டருக்கு மீனாட்சியின் மேல் உள்ள பக்தியும் தெரிகிறது.
குழந்தை வடிவாக அன்னையை பார்த்ததும் பீட்டருக்கு மட்டுமல்ல படித்து கொண்டு இருந்த எங்களுக்கும் மெய்சிலிர்த்தது.
அவர் அன்னையின் மேல் வைத்த பக்திக்கு தான் மறைந்த பிறகும் அன்னையை பார்த்து கொண்டு இருக்கும் பேறு பெற்றுள்ளார்.
அன்பு என்பது தெளிந்த நீரோடை அமைதியாக செல்லும் நதி போன்றது. அதை அதன் போக்கிலே விட்டால் நாம் அடையும் சந்தோசங்களுக்கு வார்த்தைகள் இல்லை.
மதுரையின் மண், அதன் மக்கள், குறிப்பாக வானத்தை எட்டும் கோபுரங்கள், வீதி உலா வரும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பார்க்க பார்க்க தெவிட்டாத விஷயங்கள்.
தூங்கா நகரம் என பெயர் பெற்றது அன்னை அவள் விழி இமைக்காமல் காப்பதால் என்றும் கூட இருக்கலாம்.
சுந்தர்ஜி
மதுரைக்கு பெருமையே அன்னை மீனாக்ஷி தான். அன்னையின் திருவிளையாடல் பலபல. அவளின் தாழம்பூ குங்குமம் மிக வித்தியாசமான மணமுள்ளது. சக்தி வாய்ந்தது. மதுரை மல்லியை போலவே மீனாக்ஷி குங்குமமும் தனித்துவம் வாய்ந்தது. மரகத பச்சையில் ஜொலிக்கும் அன்னையின் அழகே அழகு. நீங்கள் வெளியிட்டு இருக்கும் படத்தினை பார்த்ததும் அன்னையை தரிசித்த ஞாபகம் வந்தது. நன்றி
பீட்டர் பாண்டியனின் கதை கேள்விப்பட்டு இருந்தாலும் அவரின் கிறிஸ்தவ ஆலயம் பற்றிய கதை புதிது. மதங்கடந்த அவரின் உண்மையான பக்தி போற்றுதலுக்கு உரியது. நன்றி
நன்றி தங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது !
தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.
அன்னை மீனாட்சியை பற்றிய பதிவு மிக அருமை
எம் அன்னையின் பெருமைகளை எல்லோரும் அறியும் வண்ணம் வெளியிட்டதற்கு மிகவும் நன்றி சுந்தர் சார் .
மதுரை மைந்தன் கலையரசன் .
Annai Meenakshi is great in all goodness. She is Karunai. She can save us from all evil forces. I bow my head. Om Meenakshiyai namah.
Dear Sundar ji,
I happened to read this article today. very impressive. The way you have presented it is excellent.It shows how indepth you are writing. t
The Church I have seen many times. I was wondering what is the special about this Church so close to Meenakshi Temple. Now I came to know about Sr.Peter, Collector, Madurai during British period laid to rest there. What a wonderful Bhakti towards Meenakshi Peter had. It inculcates Bhakti in our hearts.
Regards,
Sankar
Video is working now. Please listen the song once. You will admire it.