Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

print
சென்ற வாரம் ஒரு நாள் திருப்பட்டூரை பற்றிய குறிப்பிட்ட ஒரு விபரத்தை இணையத்தில் தேடியபோது, கிடைத்த தங்கப் புதையல் இது. பதிவை படித்தவுடன் பிரமித்துப் போனோம். “ஹரி வேறு ஹரன் வேறு அல்ல. இருவரும் ஒன்றே. தெய்வங்களுக்கிடையே எந்த பேதமும் இல்லை. பேதம் மனிதர்களுக்கிடையே தான்!” என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிற நிகழ்வு இது. மேலும் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம், ஏதோ விக்ரகத்தை வணங்குவதாக நினைக்காமல், சாட்சாத் அந்த பகவானே நம் எதிரில் நிற்பதாக கருதி அவனிடம் மனம் விட்டுப் பேசவேண்டும் என்பதை அடிக்கடி நமது பதிவுகளில் வலியுறுத்தி வந்துள்ளோம். நாமும் அப்படித் தான் செய்துவருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி மனம் விட்டுப் பேசிய ஒருவரிடம் இறைவன் நடத்திய திருவிளையாடலே இந்த பதிவு.

படியுங்கள்…. பிற தகவல்களை பின்னால் சொல்கிறோம்.

=====================================================================

திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் பெருமாள்

by – தமராக்கியான், 2012

டவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என்ற எண்ணத்தில் இருந்த என்னை, கடவுளிடம்  ஒரு முழுநம்பிக்கை உடையவனாக மாற்றியது இந்த நிகழ்ச்சிதான்.  இதை ​மெய்யன்பர்கள் அனைவரிடமும்  அன்புடன் பகிர்ந்து ​கொள்கிறேன்.

மூடநம்பிக்​கை

“அறிவியல் மட்டுமே உண்மை.  ஆன்மிகம் என்பது ஒரு வாழ்க்கை முறை.   பக்தி என்பதெல்லாம் அவரவர் மனப்பக்குவமே.   கடவுள் என்பவன் இல்லை, இது ஒரு மூட நம்பிக்கையே”  என்று நான் நினைத்துக் ​கொண்டிருந்தேன்.

அப்போது ஒருநாள் (15-08-2000) வீட்டில் சும்மா உட்காந்திருந்த ​போது,  ​மேற்கண்ட எனது ​சித்தாந்தத்திற்கு அறிவியல் நிரூபணம்  ​வேண்டும் என்று நினைத்தேன்.  அப்போது நாம் வணங்கும் இறைவடிவங்கள் அறிவியல் அடிப்படையில் ஆனவையா? என அறிய ​வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ​தோன்றியது.

Copy of IMG_0004

அறிவியல் ஆன்மிகம்

எனது ஆய்வில் நடராசரின் வடிவமானது முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது என அறிந்தேன்.  எனது ஆய்வுகளை

1) சிவனும் ​பெருமாளும் ACயும் DCயும்

2) ஆடல் வல்லானே அறிவியல் இறைவன்

3) விஞ்ஞானத் தொலைக்காட்சியும் ​மெஞ்ஞானத் திருக்கோயிலும்

என்ற தலைப்புகளில் எழுதி ​வெளியிட்டேன்.

இந்த நிலையில்,  ஆருத்திரா தரிசனம் ​செய்ய ​வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது.

பிறரிடம் ​கேட்டதில், அது இப்போதுதான் முடிந்தது என்று கூறிவிட்டனர். அடுத்த ஆண்டு வரை காத்திருந்தேன்.

ஆலயம் ​சென்ற​போது “இன்று காலை முடிந்து விட்டது, நீங்கள் மாலையில் வந்துள்ளீர்களே!” என்றார் குருக்கள்.

அடுத்த ஆண்டு ​சென்று போது, “நேற்றே முடிந்து விட்டது, நாங்கள் சிதம்பரத்தில் என்று நடைபெறுமோ அன்று நடத்திவிடுவோம்,  காலண்டரில் உள்ளது ​போல் ​செய்வது இல்லை” என்றார் குருக்கள்.

ஆருத்ரா தரிசனம் காண ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தேன்.

Perumal 2

நமச்சிவாயமா? நாராணயனனா?

இந்த ஆண்டு எல்லாம் சரியாகக் குறித்து ​வைத்துக் ​கொண்டேன்.  இன்று காலை எழுந்து ஆருத்திரா தரிசனம் ​செய்யச் ​செல்ல ​வேண்டும்.  சிவ​பெருமான் என்னை நான்கைந்து ஆண்டுகளாக அலைக்கழித்தனாலோ என்னவோ அல்லது ஏதுகாரணத்தினாலோ அன்று ​நான் சிவாலயம் ​​செல்லவில்லை.  வேலங்குடியில் நின்றருளும் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத தேசிகநாராணயப் ​பெருமாள் ​கோயிலுக்குச் ​சென்றேன்.

நாராயணனை வழிபட்டு வலம் வந்து ​கொடிமரத்தின் கீழே வீழ்ந்து வணங்கினேன்.​”பெருமாளே!  இன்று ஊரே சிவாலயம் ​சென்று வழிபடுகிறது.  நானோ உன்னை வழிபடுகிறேன்.  அங்கு ​சென்றிருந்தால் திருவாதிரைக்களி கொடுப்பார்களாம்,  எனக்கு அது கிடைக்குமா? ​பெருமாளே அருளுங்கள்” ​ என ​வேண்டிக் ​கொண்டேன்.   ​​தேசிக நாராயணன் நின்ற ​கோலத்தில் அருளுவதால் நான் ​கோயிலில் உட்கார வில்லை.  கொடிமரத்தருகில் கும்பிட்டு விழுந்து எழுந்து ​கோயிலுக்கு ​வெளியே ​செல்லச் சில அடிகள் எடுத்து ​வைத்தேன்.   படிக்கட்டைத் தாண்ட முயன்றேன்.

யார் இந்தக் கிழவி

எதிரே ஒரு பழுத்த பழமாக (K.B.S.​போல) ஒரு மூதாட்டி உள்ளே வந்தார்.   வருபவர் மூதாட்டி என்பதால் அவரைத் தாண்டிச் ​செல்ல விருப்பமில்லாமல் சற்றே தயங்கி நின்றேன்.

கோயில் உள்ளே வந்த அந்த மூதாட்டி ​நேராக என்னைப் பார்த்து நின்றார்.  தனது ​சேலை முடிச்சை அவிழ்த்தார்.    அதிலிருந்து  ஒரு ​​பெரிய ​தேங்காய் அளவிற்கு களியை எடுத்து என்னிடம் ​கொடுத்தார்.

“என்ன பாட்டி!” என்று ​கேட்டேன்.

“திருவாதிரைக் களியப்பா!  ​​பெரிய ​கோயிலில் ​கொடுத்தார்கள்.  கிழவிக்கு எதுக்கு இவ்வளவு!  நீ சாப்பிடப்பா” என்றார்.

Perumal

என்னை என்னால் நம்ப முடியவில்லை.  நான் ​கோரிக்கை ​வைத்து 10வினாடிகள் கூட ஆகியிருக்காது.    ​நாராயணன் ​கோயில் வாசல்படியைக் கூட தாண்ட வில்லை.  சிவாலயம் ​சென்றாலும்  கூட்டத்தில் இது எனக்குத் திருவாதிரைக் களி கிடைத்திருக்குமா?  அதுவும் இவ்வளவு?

என் அறிவியல் மூலை ​கேள்வி ​​கேட்டது!

“ஏன் பாட்டி, கூட்டமா இருந்திருக்குமே?”

“ஆமாம்பா,  கூட்டம் சரியான கூட்டம், கூட்டத்திற்குப் பயந்து நான் கடைசியில் நின்று ​கொண்டிருந்தேன்.  அதனால் களி ​கொடுத்தவர்கள் எனக்கு முதலில் ​கொடுத்தார்கள்” என்று கூறினார்.

“பாட்டி அவ்வளவையும் என்னிடம் ​கொடுத்து விட்டாயே, உனக்கு?” என்று ​கேட்டேன்.

“நான்தான் வருடாவருடம் வாங்கிச் சாப்பிடுகிறேனே!”

இந்த வருடம் முழுவதையும் நீயே சாப்பிடு, அப்போது தான் முழுப்பலனும் உண்டு என்றார்.

திருவாதிரைக் களி வழங்கிய ​தேசிகநாராயணன்

திருவாதிரைக்களியைத் ​தேசிகநாராயணன் ​அவனது கோயிலில் கொடிமரத்து அருகே எனக்கு வழங்கி விட்டான்.

இது என்ன அமிர்தமா?

இல்லை.

அதனினும் ​மேலானது.

நாராயணனின் அருள் கலந்தது.

முழுவதும் உண்டு முடித்து கிணற்றில் ​கைகளைக் கழுவிக் ​கொண்டு திரும்பிப் பார்ததேன்.  முதாட்டி​யைக் காண வில்லை.  ​கோயில் பிரகாரம் சுற்றிப் பார்த்தேன்.  ​வெளியில் ஓடிச் ​சென்று எங்கு ​தேடியும் கிடைக்க வில்லை.  இன்று வரை ​​தேடிக் ​கொண்டே இருக்கிறேன்.

இன்று இந்நிகழ்வுக்குப் ​பொருள் விளங்க வில்லை.

ஆனால் நாத்திகனாக இருந்த நான் ஆத்திகன் ஆகிவிட்டேன்.  எனது ஆன்மிக ஆய்வுகள் ​தொடர்ந்தன.  இன்றும் ​தொடர்கின்றன.

அயன்முதற் தேவர் பன்னெடுங்காலம் நிற்காண்பன் ஏம்பலித்திருக்க என்னுள்ளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்,

கூத்தரும் பாணரும் ​பொருநரும் விறலியும்
ஆற்றி​டைக் காட்சி உறழத் ​தோன்றிப்
​பெற்ற ​பெருவளம் ​பெறாஅர்க் கறிவுறீஇச்
​சென்று பய​னெதிரச் ​சொன்ன பக்கமும்

என்று தொல்காப்பியர் (நூ.பா. 1034) இலக்கணம் கூறுகிறார்.

​​பெற்ற ​பெருவளத்​தைப் ​பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களும் பயனுறச் ​செய்ய ​வேண்டும் என்பது இதன் பொருள்.
இத் தொல்காப்பிய இலக்கலணத்திற்கு ஏற்ப நான் ​பெற்ற ​பேற்​றை மற்​றோரும் ​பெற​வேண்டும் என்ற ​நோக்கத்​தோடு இத​னைக் கூறுகி​றேன்.   மெய்யன்பர்கள் வேலங்குடி அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி உடனாய தேசிகநாராயணனைப் பணிந்து அவளது திருவருளைப் பெற்று உய்யுமாறு ​வேண்டுகிறேன்.

நற்றாள் பணிந்து

அன்பன்
தமராக்கியான்
கோட்டையூர்
http://temples-kalairajan.blogspot.in

=====================================================================

என்ன பதிவை படித்துவிட்டீர்களா?

நீங்கள் இதை படித்தால், உங்களது இறை நம்பிக்கையை பன்மடங்கு இந்த பதிவு நிச்சயம் உயர்த்தும் என்பதால் நாம் படித்ததும், உடனே உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவு எழுதிய தமராக்கியான் என்கிற காளைராஜன் என்பவரை தொடர்புக்கொண்டு மேற்படி பதிவை நமது தளத்தில் பகிர்ந்துகொள்ள விரும்பி அவரது ஒப்புதல் கேட்டோம். தயங்காமல், “அடியேன் பாக்கியம்” என்று ஒப்புக்கொண்டார்.

பேசும்போது தான் தெரிந்துகொண்டோம் தற்போது அவர் காசி யாத்திரையில் இருப்பதை.

“சார்… ட்ரெயின்ல டிராவல் பண்ணிகிட்டு இருக்கீங்களா இப்போ? உங்களை தொந்தரவு செய்யலியே நான்?”

“இல்லே… சார்… நாங்க பாதயாத்திரையாத் தான் வந்திருக்கோம்!” என்றார் சர்வ சாதாரணமாக.

நாம் அதிர்ந்தேவிட்டோம்….. “என்ன பாத யாத்திரையாவா?”

“ஆமாம்… ராமேஸ்வரத்துல இருந்து மே 25 ஆம் தேதி கிளம்பினோம். பல தலங்களை தர்சித்துவிட்டு இரண்டொரு நாளில் காசி அடைந்துவிடுவோம்!” என்றார்.

Kasi Yatra

நமது சந்தோஷத்திற்கு அளவே இல்லை. “சார்.. விஸ்வநாதரிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். எனக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்” என்றோம்.

“நிச்சயமாக!” என்றார்.

திரு.காளைராஜன் தற்போது நமது முகநூல் நண்பராகிவிட்டார்.

அவருடன் மொத்தம் 21 பேர் யாத்திரையில் இருப்பதாக தெரிகிறது.

இடமிருந்து வலமாக நான்காவதாக நிற்பவர் தான் திரு.காளைராஜன்
இடமிருந்து வலமாக நான்காவதாக நிற்பவர் தான் திரு.காளைராஜன்

யாத்திரை என்றாலே சென்ற நூற்றாண்டு வரை பாத யாத்திரை தான். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் நம் முன்னோர்களும், மகான்களும், ஞானிகளும் புண்ணிய ஷேத்ரங்களுக்கு நடந்தே சென்றுள்ளனர். ஆனால், போக்குவரத்து வசதிகள் நிரம்பிய இந்த காலகட்டத்தில் எத்தனை பேர் அதை பயன்படுத்திக்கொண்டு புண்ணிய தலங்களுக்கு செல்கின்றனர்? உடலில் தெம்பும், மனதில் வலிமையையும் உள்ளபோது ஷேத்ராடனம் செய்வோர் மிகவும் குறைவு.

(நமக்கு மூன்று வயதிருக்கும்போதே பெற்றோருடன் நாம் காசி சென்று வந்துவிட்டோம். எனது பாட்டி, (அப்பாவின் அம்மா) ஆசைப்பட்டார் என்பதற்காக அப்பா, தான் ரூ.400/- மாதச் சம்பளம் வாங்கிய காலத்திலேயே (1978) சிறுகச் சிறுகச் சேமித்து, மீதி தொகையை கடன் வாங்கி அவரை காசிக்கு அழைத்து சென்றார். அடியேனுக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. போக்குவரத்து செலவு, தங்குமிடம், மற்றும் பிராமணர்களுக்கு அளிக்க வேண்டிய தட்சனை என அந்த காலத்திலேயே ரூ.10,000/- செலவானதாக கூறுகிறார் அப்பா. காசி சென்றுவிட்டு திரும்பிய பிறகு பிறந்தவள் என்பதால் எம் தங்கைக்கு அன்னபூரணி என்று பெயர் வைத்தனர் பெற்றோர்.)

Kasi Yatra3

“சார்… நீங்க திரும்பி வந்த பிறகு தகவல் சொல்லுங்கள்… உங்களை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க விரும்புகிறேன்” என்றோம். அக்டோபர் முதல் வாரம் திரு.காளைராஜன் திரும்புவார் என்று தெரிகிறது. காளைராஜன் அவர்களின் வலைத் தளம் முழுக்க ஆலய தரிசனங்கள் பற்றிய பதிவுகள் தான். ஒவ்வொன்றும் படித்’தேன்’. ரசித்’தேன்’.  சிலிர்த்’தேன்’. வியந்’தேன்’.

Also check:

=====================================================================

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!
=====================================================================

[END]

7 thoughts on “பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

  1. காளை ராஜன் பற்றி படிக்கும் பொழுது மெய் சிலிர்கிறது. தனது பக்தத்னை ஆன்மிகவாதியாக மாற்றி பலவித சோதனைகளை ஏற்படுத்தி அவரை தடுத்தாட்கொண்டிருக்கிறார் நம் ஹரியும் ஹரரனும் . இதற்கு உதாரணம் தங்களிடம் சுந்தர காண்ட பதிவு கேட்டால் பலவித சோதனைகளை மேற்கொண்டு கொடுப்பது போல்.

    தங்களது ஆன்மிக தேடலில் பல புதியவர்களை இறைவன் தங்களுக்கு அறிமுக படுத்துகிறார. இதன் மூலம் நாங்களும் பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.

    இறைவன் நம் முன் நிற்கிறார் அவர் நம் கோரிக்கைகளை கேட்பார் என்று நாம் நினைத்தால் கண்டிப்பாக இறைவன் நம் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்

    திரு காளை ராஜன் காசி பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்

    என்னது தாங்கள் சிறு வயதிலேயே காசிக்கு சென்று வந்து விட்டீர்களா. பெரிய புண்ணியம்.

    அருமையான நிகழ்ச்சியை ஷேர் பண்ணியதற்கு நன்றி

    எனக்கு இந்த பதிவை படிக்கும் பொழுது ‘கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா , என் கேள்வியின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது

    எழுமலையான் படங்கள் அருமை

    நன்றி
    உமா

  2. மிகவும் அருமையான பதிவு…….!

    ஹரியும் சிவனும் ஒன்றே …….! என்பதற்கு சரியான பதிவு.

    நான் உடனே, என் நண்பனுக்கு இதை படி “ஹரியும் சிவனும் ஒன்றே ”

    உனக்கு புரியும் .நண்பா ..! Because he is always cross talk with me.

    Thanks for this post ….

    -Uday

  3. வணக்கம்………

    கடவுள் இல்லை என்று சொல்லும்போதும், நம்மையறியாமல் கடவுளை நினைப்போம் அல்லவா? அவ்வாறு கடவுள் இல்லையென்று நிரூபிக்க ஆராய்ச்சி செய்யப்போய் அவர் கடவுளையே நினைத்திருக்கிறார்……….கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகியிருக்கிறார்………தற்பொழுது காசி தலத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறார்…………. இப்படியும் ஒரு திருவிளையாடல்!!!!!!!!!

  4. Dear Sundarji,

    Padhivai padikum pozhudhey kangalil kanner malgiyadhu. Thanks for sharing wonderful article. Pls inform me while you go for interview. I will join with you.

    Thanks and regards
    Harish.V

  5. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான நெகிழவைக்கும் பதிவு..

    நன்றி

  6. மொத்தத்தில் ஹரிஹரனைப் பற்றி கூறுவதும் மற்றும் விளங்கிக் கொள்வதும் எளிதானது அன்று. மேலும் ஹரி வேறு ஹரன் வேறு அல்ல என்பதற்கு ஓர் உதாரணம்.

    நம்மாழ்வார் பின்வரும் பாசுரத்தில்

    உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
    உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
    உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
    உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
    உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
    உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
    உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
    உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே?

    அவன் யார் என்பதற்கு பின்வருமாறு கூறுகிறார்

    ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லாது அலியும் அல்லன்
    காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
    பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
    கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே

    நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
    சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
    மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
    கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே

    நம்மாழ்வாரின் இறுதிக் கட்டத்தில், மோட்சம் புகும் வேளையிலும் (32வது வயதில்) “முனியே, நான் முகனே, முக்கண் அப்பா” – என்று மறக்காமல் சிவனையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *