Tuesday, March 19, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

print
காசி ஷேத்ரத்தில் ருத்ரைகாதசீ ஜப-ஹோமம் செய்து, ஒரு குடம் கங்கா ஜலம் கொணர்ந்து பெரியவாளுக்கு பெரியவாளுக்கு சமர்பித்தார், ஒரு  பக்தர்.

“ருத்ரைகாதசிக்கு எங்கேயிருந்து ஜலம் எடுத்தே?” என்று கேட்டார்கள் பெரியவா.

“காசி கேதார்காட் கங்கையில இருந்துதான் ஜலம் எடுத்து வந்தார்கள் வைதீகர்கள்.”

Maha periyava 1967

“காசி பரமேஸ்வரனின் இடம். அங்கிருந்து கங்கை நீர் கங்கை மண் முதலானவைகளை எடுத்து வரக்கூடாது.  நீ கொண்டு வந்திருக்கும் தீர்த்தத்தை ஏதாவது ஒரு வில்வமரத்துக்கு அடியே சேர்த்துவிடு….”

“கங்கை, சுத்த கங்கையாக இருக்குமிடத்திலிருந்து தான் கங்காஜலம் கொண்டு வரவேண்டும். கங்கையில் யமுனை கலப்பதற்கு முன் அது சுத்த கங்கை” – என்று  பெரியவா விளக்கினார்கள்.

நன்றி : ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’

===============================================================

முதிய தம்பதிகளுக்கு கிடைத்த மோட்சம்

காரில் பெரியவாளை தரிசனம் பண்ண வந்த தம்பதிகளிடம் பெரியவா கேட்டார் ” நீ எந்த வழியா வந்தே? எப்படி திரும்பி போக போறே? இல்லே……நீ திரும்பி போறப்போ, நா சொல்ற வழில போ, அங்க இன்ன கிராமத்ல சிவன் கோயில்ல ஒரு வயசான தம்பதிகள் இருக்கா……..அவாள பாத்து பேசி, அவா என்ன கேக்கறாளோ அத பண்ணி குடுப்பியா?”

“அப்பிடியே பண்றோம் பெரியவா”

வயசான தம்பதிகளை சந்தித்தனர். “பெரியவா உங்களுக்கு என்ன வேணுமோ, அதை பண்ணித்தரச்சொன்னா”

அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. “எங்களுக்கு இனிமே என்ன வேணும்? காசிக்கு ஒரு தடவை போகணும், கங்கைல ஸ்நானம் பண்ணனும், விஸ்வநாதரை தரிசனம் பண்ணனும்…………அவ்வளவுதான்”

பணக்கார பக்தருக்கு அது பெரிய காரியமாக இல்லை. காசியில் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டு, தம்பதிகளையும் அனுப்பி வைத்தார்.

முதிய தம்பதிகள், சங்கல்ப ஸ்நானம், பஞ்ச கங்கா ஸ்ராத்தம், தீர்த்த ஸ்ராத்தம், விஸ்வநாத தரிசனம் எல்லாம் முடித்து மனநிறைவோடு, மறுநாள், கங்கையில் மூழ்கி ஸ்நானம் பண்ணும்போது, கங்காதேவியின் அன்பான அரவணைப்பில் அமிழ்ந்து போய்விட்டார்கள்!

காசியில் மரித்தால் மோக்ஷம்! அதுவும் தம்பதிகளாக!

பெரியவா ஒவ்வொரு ஜீவனுக்கும் எங்கே, என்ன முடிவு பண்ணியிருக்கிறார் என்பது அல்ப ஜீவன்களான நமக்கு என்ன தெரியும்?

===============================================================

மஹா பெரியவா அருள்வாக்கு : –

காசிக்கும் காஞ்சிக்கும் ஓர் எழுத்துத்தான் வித்தியாசம். இரண்டும் முக்தி க்ஷேத்திரங்கள். தென்னிந்தியர்கள் வடக்கே க்ஷேத்ராடனம் செல்கிறார்கள். வடக்கே உள்ளவர்கள் தெற்கே வருகிறார்கள். அந்த வட இந்தியர்கள் அப்போது காமாட்சியை தரிசனம் செய்வதோடு, அம்பிகையின் சகோதரரான வரதராஜரையும் தரிசனம் செய்யாவிட்டால் யாத்திரைக்குப் பயனில்லை. தென்னிந்தியர்கள் காசிக்குச் செல்லும்போது ஸ்ரீ ஜகன்னாத க்ஷேத்திரமான பூரிக்கும் சென்று அப்பெருமானை தரிசனம் செய்யாமல் வந்தால் காசி யாத்திரைக்குப் பயனில்லை. இதைப் பக்தர்கள் உணர வேண்டும். மூர்த்தி பேதங்களை ஒழித்துச் சம பாவனையுடன் க்ஷேத்ராடனம் செய்தால்தான் எவரும் முக்தி பெறலாம். இச்சிவ – விஷ்ணு  அபேதத்தை அக்கோயில்கள் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள்…

===============================================================

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

================================================================

புதுவை – குரும்பபேட் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவன உழவாரப்பணி!

நமது ‘ரைட்மந்த்ரா உழவாரப்பணி குழு’ சார்பாக புதுவை-குரும்பபேட் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் உழவாரப்பணி திட்டமிட்டபடி வரும் ஞாயிறு 21 செப்டம்பர் அன்று நடைபெறும். வேன் பயணம். விருகம்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர், கிண்டி, மத்ய கைலாஷ், திருவான்மியூர், கல்பாக்கம் வழியாக புதுவை பயணம். காலை 6.30 க்கு புறப்படுகிறோம். திரும்ப வருவதற்கு இரவு 8.00 மணியாகலாம். (போக்குவரத்துக்கு தான் நேரம் பிடிக்கும். பணி அதிகபட்சம் இரண்டு மணிநேரம் இருக்கலாம்.) நேரமிருந்தால் வரும் வழியில் மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரரை தரிசிக்கலாம். காலை உணவு ஏற்பாடு செய்யப்படும். மதிய உணவு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் மஹா பிரசாதமாக வழங்குவார்கள். வர விரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். பயண திட்டம் வகுப்பதற்கு சுலபமாக இருக்கும்.

– சுந்தர்,
ஆசிரியர்,
www.rightmantra.com
E: simplesundar@gmail.com | M : 9840169215

================================================================
[END]

5 thoughts on “காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

 1. இனிய காலை வணக்கம்

  காலையில் மகா பெரியவரின் பதிவை படிக்கும் பொழுது மெய் சிலிர்கிறது.

  “கங்கை, சுத்த கங்கையாக இருக்குமிடத்திலிருந்து தான் கங்காஜலம் கொண்டு வரவேண்டும். கங்கையில் யமுனை கலப்பதற்கு முன் அது சுத்த கங்கை” – என்று பெரியவா விளக்கினார்கள்.- தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டோம். முதிய வயதான தம்பதிக்கு மோட்சம் கிடைக்க செய்த மகா பெரியவரின் கருணையை என்ன வென்பது.

  //அவனருளாலே அவன் தாள் பணிந்து //

  குருவே சரணம்

  நன்றி
  உமா

 2. முக்காலமும் உணர்ந்த மாமுனி நம் குருதேவர். தன் பக்தர்களுக்கு என்ன வேண்டும் என பார்த்து செய்யும் தாய். அவரின் கருணையை அளவிட அலகு ஏதுமில்லை……..

  புதுவை – குரும்பபேட் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவன உழவாரப்பணி இனிதே நடைபெற எம் வாழ்த்துக்கள்.

  குருவே சரணம்……….

 3. மிக நல்ல பதிவு. எனக்கும் ராகவேந்திரர் பிருந்தாவனம் உழவர பணிக்கு வர ஆசை. அனால் தகபனாரின் மகாலைய பட்ச ஸ்ரார்தம் வருகிறபடியால், நன் வர இயலாமைக்கு .வருந்துகிறேன். தங்கள் முயற்சி வாழ்த்துக்கள்.

 4. பரவால.. நல்லவங்கள நெனச்சு பாக்கவும் நாலு பேரு இருக்கீகளே..ஒரு மனுஷன் சோட போகாம இருக்கணும்ன ரெண்டு விஷயம் வேணும் கேட்டுகங்க. நல்ல குரு நல்ல நண்பன். அவுங்க ரெண்டு பெரும் உம்ம காக்குற நெருப்பு மாதிரி. எதுக்காகவும் அவுகள விட்டுடாதீக.
  ஆனா மக்கா, இப்பம் இருக்குற சாமியார நம்பிடாதீங்க.முத்தும் தொரந்தவன்பான் , அப்புடி இருக்குதவக்கு எதுக்கு ஆடி காரும் மாடி வீடும்.

  பேய் போல் திரிந்து,
  பிணம்போல் கிடந்து,
  இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி,
  நரிபோல் உழன்று,
  நன்மங்கையரைத் தாய்போல் கருதித்,
  தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
  சேய் போல் இருப்பர் கண்டீர்!
  உண்மை ஞானம் தெளிந்தவரே!

  மேல பட்டினத்தார் சொன்னது மாதிரி இப்பம் யாரு இருக்காவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *