(* முந்தைய கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பதிவும் – கண்ணனாக அவதரித்ததற்கு கடவுள் கொடுத்த விலை – கிருஷ்ண ஜெயந்தி SPL! – இந்த பதிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அதை படித்துவிட்டு இதைப் படித்தால் தான் பதிவில் ஒன்ற முடியும்.)
‘தேடிச் சோறு நிதம் தின்று வெட்டிக் கதைகள் பேசிக்கொண்டிருந்த உன்னால் இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா?’ என்று நமது நண்பர்கள் சிலர் நம்மை பார்த்து தங்கள் வியப்பை தெரிவிக்கின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே. எல்லாம் அவன் இட்ட பிச்சை. ஒரு விதையை நீங்கள் நட்டால் உடனே செடியாக முளைத்து மரமாகிவிடுகிறதா என்ன? அதற்கென்று சில காலம் பிடிக்கும் அல்லவா? மேலும் சில விதைகளை நீங்கள் நட்டால் போதும்… அதை பராமரிக்க கூட வேண்டியதில்லை. ஒரு சிறு மழை பெய்தால் போதும் தானாகவே முளைத்து மரமாகிவிடும். அது போல இந்த அற்பனின் மனதுக்குள் முன்பு நாம் தறிகெட்டுத் திரிந்த காலத்தில் விதைத்த நல்விதைகள் தான் இப்போது வளர்ந்து ஒரு மரமாகி நிற்கிறது. (ஒரு உவமைக்கு இதை சொல்கிறோம். மற்றபடி நாம் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.)
இந்த பதிவில் நாம் அளித்திருக்கும் நரசிம்ம மேத்தாவின் புனித சரிதம் ‘ஸ்ரீ மஹா பக்த விஜயம்’ என்னும் திருமால் அடியவர்களின் வரலாற்றை சொல்லும் நூலில் படித்திருக்கிறோம். நம்மை பன்படுத்திய பெருமையும், பக்குவப்படுத்திய பெருமையும் இந்த நூலுக்கு பெருமளவு உண்டு. அனைவரின் இல்லத்திலும் இருக்கவேண்டிய ஒரு நூல். அந்நூலில் நாம் படித்த வரலாற்றை, மேலும் சில ஆதாரங்களுடன் சேர்த்து கண்ணனின் அவதாரத் திருநாளான இன்று உங்களுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
படியுங்கள்… சிவபெருமான் கண்ணனின் எவ்வளவு பெரிய ரசிகர் என்று உங்களுக்கு புரியும்.
மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும் விருப்பமான பாடல்கள் பல. அவைகளுள் மிகவும் முக்கியமானது, “வைஷ்ணவ ஜனதோ” என்கிற பாடல். உண்மையான வைஷ்ணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு விளக்கம் இந்த பாடல். இந்த அருமையான பாடலை தமிழில் பல பெரியோர்கள் மொழி பெயர்த்திருக்கிறார்கள். “சொல்லுவோம் வைஷ்ணவன் யாரெனக் கேளீர்” என்பது ஒருவரது மொழி பெயர்ப்பு. மற்றொருவரோ பிறர்படும் துயர்தனை தனதெனக் கருதுவான். அவனே உண்மையான வைஷ்ணவன்” எனப் பாடியிருக்கிறார்.
வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே
ஜே பீடபராயீ ஜானேரே
பரதுக்கே உபகார தோயே
மன அபிமான ந ஆணேரே
தமிழில் :
சொல்லுவோம் வைஷ்ணவன் யாரெனக் கேளீர்?
சோர்ந்தவன் பீடையை அறிவானே
எல்லோரும் தம் துக்கத்தை எரிப்பவனாயினும்
எள்ளளவும் கர்வம் அடையானே!
(பாடல் இறுதியில் முழுமையாக தரப்பட்டுள்ளது).
இப்படி பிரசித்தமான இந்த கவிதையை செய்த மகான் தான் இந்த நரசிம்ம மேத்தா. இவருடைய கவிதைகளை பாடாத மக்களே இல்லை. சௌராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில், அமுதினும் இனிய இந்த கவிதைகள், பக்தர்களது இதயத்தை கவரும் பரிச வேதிகள் எனலாம்.
15 ஆம் நூற்றாண்டு. குஜராத்தில் புராதனகடம் என்பது ஒரு அழகிய சிற்றூர். (இப்போதைய பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள தாலஜா என்ற ஊரே இந்த புராதனகடம்). அவ்வூரில் அந்தணர் குலத்தில் பலராம் மேத்தா என்ற பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். நல்லொழுக்கமும் தெய்வ நம்பிக்கையும் மிக்கவர். அவரது வழிபடு கடவுள் நரசிம்ம மூர்த்தி. அவருக்கு மகனாக கி.பி.1414 ஆம் ஆண்டு நரசிம்ம மேத்தா பிறந்தார்.
நரசி இளமையிலே பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாய் திரிந்தார். வயது முதிர்ந்த காலத்திலே பிறந்த பிள்ளை. நரசிம்மன் அருளால் கிடைத்த பிள்ளை என பெற்றோர் பாராட்டியது இவரது துடுக்கத்தனத்தை வளர்த்தது. அந்த சமயத்திலே பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேரவே, இவர் தனது சித்தப்பா யமுனா தாஸ் என்கிற பன்ஸி தர் என்பவரின் பராமரிப்பில் தங்க நேர்ந்தது. (எட்டு வயது வரை இவருக்கு பேச்சு வரவில்லை என்று கூறப்படுகிறது).
தாய் தந்தையர்க்கு அடங்காமல் வளர்ந்த இவரது செயல்கள் இப்போதும் மாறவில்லை. படிக்காமல் ஊர் சுற்றுவதும், கோழி ஆடுவது, மரம் ஏறுவதும், குளத்தில் நீந்துவதும் என்று இருந்தார். சித்தப்பா மட்டும் எப்படி திருத்துவார்? “கடவுள் தான் இவனுக்கு நல்வழி காட்டவேண்டும்” என்று நினைத்தார் அவர். இவனது சித்தப்பாவுக்கு ஒரு மகன் இருந்தான். நரசிம்ம மேத்தாவைவிட வயதில் பெரியவன் அவன். அவனும் இவரிடம் அன்பு செலுத்தி வந்தான். அவன் மனைவி தான் குடும்பத்தை நிர்வகித்து வந்தாள்.
பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் சண்டையிட்டுவிட்டு வந்த இவரை, அவள் கண்டபடி திட்டினாள். ஏற்கனவே, இவர் வரவை விரும்பாத அவள், இது தான் சரியான சமயம் என்று, “படிப்பிலே கருத்தில்லை எனில், இந்த வீட்டில் இனி சோறு கிடைக்காது” என்று விரட்டினாள். கோபம் கொண்ட நரசிம்ம மேத்தா காட்டை நோக்கி ஓடினார்.
காட்டில் நுழைந்தபின், என்ன செய்வது என்று தெரியாமல் நடந்துகொண்டே இருந்தார். தான் இதுவரையில் செய்த அசட்டுத் தனங்கள் எல்லாம் அவர் நினைவில் எழுந்தன. பெற்றோர் வருந்தியதும் அவர்கள் மறைவும் நினைவுக்கு வர, கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. “மதனி திட்டியதில்என்ன தவறு? மற்றவர்களை போல படிக்கவும் இல்லை. உழைக்கவும் இல்லை. திட்டாமல் என்ன செய்வார்?” என்று இவர் நினைத்தார்.
அப்போது இவருக்கு பசி எடுத்தது.
திருவருள் பெறுதல்
எதிரிலே ஒரு அழகிய நீர்நிலை. முத்துப் போலிருந்த அந்த நீர்நிலையில், அழகிய தாமரைகள் பூத்திருந்தன. நீர் நிலையின் மறுபுறம் ஒரு கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. குளத்திலே இறங்கி, வயிறு நிரம்ப தண்ணீர் குடித்த பின்னர், இவர் கோவிலுக்குள் நுழைந்தார். இவருக்கு திடீரென துருவனை பற்றிய நினைவு வந்தது. ‘நம்மைக் காட்டிலும் சிறுவன். இளைய தாயின் வார்த்தை பொறுக்காமல் தவம் செய்தான். இறைவனது மடியிலே உட்காரும் பாக்கியம் பெற்றான். இதை பற்றி நம் தகப்பனார் எத்தனை முறை சொல்லியிருக்கிறார்’ என்று நினைத்தவனாய் அடைந்தார். துருவனை போல நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று நினைத்தார்.
அது மிக புராதனமான சிவாலயம். இறைவன் சிவலிங்க வடிவில் அமர்ந்திருந்தார். ஒரே ஒரு அகல் விளக்கு மினுக்கு மினுகென்று எரிந்துகொண்டிருந்தது. சிதறிக்கிடந்த வில்வங்களிளிருந்து, ஒரு வேளை பூஜை நடைபெற்றிருக்கிறது போல என்று நினைத்து அங்கயே அந்த சிவலிங்கத்தின் முன் அமர்ந்து தனக்கு தெரிந்த தான் கேள்விப்பட்ட சில நாமாவளிகளை உச்சரிக்கலானார்.
இப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாரோ தெரியாது. யாரோ ஒரு முதியவர் தன் தோளை தொடுவது போல உணர்ந்து கண்விழித்தார்.
ஜடாமகுடதாரியாய் தலையிலே இளம்பிறை துலங்க எதிரே நின்றார் சிவபெருமான். (*தலைவர் என்ட்ரி எப்பவுமே கலக்கல் மாஸ் தான்! ஆனா, நம்மளை மட்டும் தான் படுத்தி எடுக்குறான் இந்த உடுக்கைப்பய. ஹூம்..) இவர் தலையிலே தம் கையை வைத்து, “அப்பா நரசிம்மா நீ திருமாலுக்கு பணி செய்ய பிறந்தவன். உன் உறுதி கண்டு மகிழ்ந்தேன். பத்து நாட்களாக நீ செய்த அருந்தவம் கண்டு உன் தாய் பார்வது மனம்குளிர்ந்தாள். (*”நான் ஒன்னும் உடனே நரசிக்கு அருள் பண்ணலே… தன்னை மறந்து 10 நாள் என் முன்னாடி தவம் பண்ணியிருக்கிறான்” என்று நம்மிடம் சொல்கிறான் போல!) எழுந்திரு. என்னுடன் வா…” என்றார். இவர் எழுந்தார். கை கால்கள் மரத்து நின்றன. எழுந்திருக்க இயலாமல் துவண்டன. கால்கள் தள்ளாட மெல்ல எழுந்து இறைவனை பின்தொடர்ந்தார்.
வான வீதியிலே சந்திரன் பவனி வந்துகொண்டிருந்தான். அந்த வானம் முழுதும் ஒரே அமுத வெள்ளமாய் ஒளி வீசிற்று.
(‘இந்த பதிவுல வர்ற மாதரியே இந்த கோவிலும், குளமும் இருக்கே… எங்கேயிருந்து இந்த ஃபோட்டோவை இவர் பிடிச்சார்…’ என்று தானே தோன்றுகிறது. பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் (நரசிங்கபுரம்) செல்லும் வழியில், ஊருக்கு வெளியே இப்படி ஒரு அழகிய சிவன்கோவிலும் அதையொட்டி இப்படி ஒரு குளமும் இருக்கிறது. நரிம்மர் கோவிலுக்கு உழவாரப்பணி சென்றபோது, இந்த குளக்கரையில் அமர்ந்து தான் காலை உணவை சாப்பிட்டோம். இந்த பதிவுக்கு பொருத்தமான படம் என்பதால் இங்கே அளிக்கிறோம்.
நரசிங்கபுரத்திற்கு இந்த வழியே இதற்கு முன்பு பல முறை சென்றிருந்தாலும் இந்த இடம் பற்றி எங்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது. நாங்கள் நின்றதும் கிடையாது. ஆனால், கோகுலாஷ்டமிக்கு இப்படி ஒரு பதிவு வரப்போகிறது. அப்போது அளிக்க புகைப்படம் தேவைப்படும் என்று நரசிம்மருக்கு தெரிந்திருக்கிறது போல. எனவே தான் வேறு எங்கோ சிற்றுண்டி சாப்பிட தீர்மானித்த நாங்கள் இந்த இடத்தில வேனை நிறுத்தினோம் போல. இந்த அழகிய குளத்தின் ஒரு படத்தை தான் முதலில் இந்த பதிவில் அளிக்க தீர்மானித்தோம். இருப்பினும் இந்த இடத்தின் அழகை நீங்களும் பருகவேண்டும் என்று மேலும் சில படங்களை சேர்த்துள்ளோம்.)
![DSC02537](http://rightmantra.com/wp-content/uploads/2014/08/DSC02537.jpg)
தாள்களிலே வீழ்ந்த நரசிம்ம மேத்தாவை எடுத்து நிறுத்தி, “அப்பா..! குழந்தாய் இன்று நீ கண்ட பிருந்தாவனக் காட்சிகளை பாடல்களாக பாடு; உன் வாக்கிலே அருட்கவி பிறக்கும்” என்று சொல்லி, தனது வனமாலையில் இருந்து ஒரு சில துளசி தளங்களை அந்த சிறுவர் வாயில் இட்டான் பகவான். சிவபெருமான் புன்முறுவல் பூக்க மறுவினாடி மாயமாக மறைந்தான் மாயன்.
நரசிம்ம மேத்தா சிவபெருமானின் திருக்கரத்தை கெட்டியாக பற்றிக்கொண்டு சிவபெருமான் மீது அருமையான பாடல் ஒன்றை பாடினான். அதனால் மகிழ்ந்த இறைவன், “அப்பா…! உன் கவிதைகளும் பக்தியும் சூர்யா சந்திரர்கள் உள்ளவரை நிலை பெறக் கடவன!” என்று ஆசி கூறி மறைந்து போனார்.
அந்த கோவிலில், முன் அமர்ந்த அதே இடத்தில் உட்கார்ந்துகொண்டு சிவபெருமானை தியானிப்பதில் ஈடுபட்டார் நரசிம்ம மேத்தா. குருமுகம் இன்றியே கிடைத்த அந்த மகா மந்திரம் அந்த வனப் பிரதேசம் முழுதும் “ஓம் நம சிவாய” “ஓம் நம சிவாய” என்று ஒலித்தது.
இங்கே நரசியை காணமல் வீட்டினர் தவித்து போயினர். தாயில்லாப் பிள்ளையை அடித்துவிரட்டி விட்டார்கள் என்று ஊரார் தூற்றுவார்களே என்று அவர் அண்ணியார் பயந்தார். நடந்ததை கணவரிடம் கூறி வருத்தம் தெரிவித்தாள்… நரசியை தேட நான்கு திசைகளிலும் ஆட்கள் பறந்தார்கள்.
குறிப்பு : மேற்கூறியது ஒன்றும் கட்டுக்கதை அல்ல. வரலாற்று சம்பவம். http://en.wikipedia.org/wiki/Narsinh_Mehta)
* நரசியை வீட்டார் கண்டுபிடித்தார்களா?
* நரசி வீடு திரும்ப சம்மதித்தாரா?
* அதற்கு பின்னர் நடந்தது என்ன?
(அடுத்த பாகத்தில் தொடரும்….)
வைஷ்ணவ ஜனதோ…
வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே
ஜே பீடபராயீ ஜானேரே
பரதுக்கே உபகார தோயே
மன அபிமான ந ஆணேரே (வைஷ்ணவ)
சகல லோகமாம் ஸஹுனே வந்தே
நிந்தா ந கரே கேனீரே
வாச காச மன நிஸ்சள ராகே
தன தன ஜனனீ தேளிரே (வைஷ்ணவ)
ஸம த்ருஷ்டினே த்ருஷ்ணா த்யாகி
பரஸ்திரீ ஜேனே மாதரே
ஜிஹ்வா தநீ அஸத்ய ந போலே
பா தன நவ ஜாலே ஹாதரே (வைஷ்ணவ)
மோஹ மாயா வ்யாபே நஹி ஜேனே
த்ருட வைராக்ய ஜேனா மனமாம்ரே
ராம நாம ஸும் காளீ லாகீ
சகல தீர்த்த தேனா தனமாம்ரே (வைஷ்ணவ)
வணலோபீ நே கபட ரஹிதேச
காம க்ரோத நிவார் யாரே
பணே நரஸையோ தேனும் தரஸன கரதாம்
குல ஏகோதோ தார்யாம்ரே. (வைஷ்ணவ)
வைஷ்ணவ ஜனத்தோ
தமிழாக்கம் : சங்கு சுப்ரமணியம்
சொல்லுவோம் வைஷ்ணவன் யாரெனக் கேளீர்?
சோர்ந்தவன் பீடையை அறிவானே
எல்லோரும் தம் துக்கத்தை எரிப்பவனாயினும்
எள்ளளவும் கர்வம் அடையானே! (சொல்லு)
மண்ணுயிர் மக்களை வந் துதிப்பான்
மாசுறு நிந்தை மொழியானே
சொல் மனம் உடல்நிலை சுத்தமானவனே
சோதியுற்றார்பெற்ற தாய்மாரே! (சொல்லு)
பாவ பேராசையற்றுப் பார்வை சமத்துவமுற்று
பரஸ்திரியைத் தாயெனப் பணிவானே
நாவினால் பொய்மொழி நவிலவு மாட்டான்
நானும் பிறர் செல்வம் தீண்டானே! (சொல்லு)
மாயையும் மோகமும் மாயும் அவன்பால்
மனதில் வைராக்கியம் உறுபானே
ஓயாமல் ராமனை உள்ளம் நினைந்திட
உண்டு புண்ணியப் புனல் உடலதிலே! (சொல்லு)
காமமும் லோபமும் கபடமும்கோபமும்
கனவிலும் இல்லாத கனவனே
பாமரர் பார்த்திட பற்பல தலைமுறை
பாவனம் அடைந்திடர் செய்வானே! (சொல்லு)
(அடுத்த பாகத்தில் தொடரும்….)
[END]
Superb article. Through this article, we came to know about narasinga metha story. Heart touching article. Today morning only, I had a darsan of siva and Vishnu I.e thirumugur and thiruvathavoor.
We are very much eager to know the balance story. The way of writting is excellent. All the photos are good,
Regards
Uma
Very nice article and the meaning of the song is excellent .Thanks ji for the post and really excited on the remaining part.
Thanks
Venkatesh
Dear sundarji,
Amazing article. Eagerly waitin for the next.
Thanks
V.HARISH
மிக நன்று நண்பரே.!
எப்படி எவ்ளவு தகவல் சேகரிக்க முடியும் என்ற வியப்படைந்து விட்டேன். கடவுளின் கிருபை. வேறு என்ன சொல்வது. போடோக்களும் சூப்பர். நல்ல படைப்பு நண்பரே. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் நம் தள வாசர்களுக்கும் துணை நிற்க வேண்டுகிறேன்.
விரைவில் சிந்திப்போம். ராஜ்குமார், சென்னை 9444953662
வைஷ்ணவ ஜனதோ பாடலின் தமிழாக்கம் படிக்க அளித்தமைக்கு நன்றிகள், இயற்கை அழகும், இறைவனின் அருளும் நிறைந்த நிழற்படங்கள் அருமை. மேலும் வரவிருக்கும் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
Nice article touching the heart… Padikka padikka mei silirthathu….
Om Nama Sivaya
அருமையான கட்டுரை.
பதிவை போலவே நம் தலைவரை நீங்கள் திட்டுவதும் ஒரு சுவைபட உள்ளது.
என் அப்பன் ஈசன் மதுரையில் நடத்திய திருவிளையாடல் போல வைணவத்தில் நரசிக்கு நடத்தி காட்டிஉள்ளார்.
இந்த இரு நாட்களும் வந்த பதிவில் உங்கள் எழுத்து நடை பிரமிக்க வைக்கிறது. அப்படி ஒரு சக்தியையும் திறமையையும் கொடுத்துள்ள ஆண்டவனுக்கு என் கோடானு கோடி நன்றிகள்.
விரைவில் தங்கள் பதிவுகள் புத்தகமாக வெளிவர வேண்டும் என்ற ஆவல் நம் வாசகர்கள் அனைவருக்கும் உள்ளது.
நன்றி.
சுந்தர்ஜி
இரண்டு பதிவுகளும் மிக அருமை. ஏனோ கண்ணில் நீரை வரவழைத்தது. கண்ணனின் மறுபக்கம் மிகவும் சோகம். பணி நிமித்தமாக கடந்த 4 நாட்களாக உங்கள் தளம் பக்கம் வர முடியவில்லை. ஆனாலும் நேற்று மாலை மனதில் ஒரு நெருடல். இன்று யாருக்காக பிரார்த்தனை செய்வது என்று. உங்கள் தளம் பார்க்க முடியாத நிலைமை வேறு. மகாபெரியவா அவர்களை மனதில் நினைத்து எல்லோரும் நலமாக இருக்க ஒரு சிறிய பிரார்த்தனை யோட முடிதுகொண்டேன். இருபினும் சந்தோசம் இல்லை. என்று காலை ஆபீஸ் வந்தவுடன் யாருக்கெல்லாம் பிரார்த்தனை என்று முதலில் பார்த்தேன். யாருடைய பெயரும் இல்லை ஒரு பொது பிரார்தனை. என் மனதில் குடிகொண்டு வழிநடத்திய மகாபெரியவா அவர்களுக்கு நன்றி. உங்கள் இந்த சேவை மேலும் வளர வேண்டுகிறேன்……
ர. சந்திரன்
கட்சிரோல்லி (மகாராஷ்டிரா)
மிக்க மகிழ்ச்சி சந்திரன் அவர்களே. கடந்த வார இறுதி தொடர் விடுமுறை என்பதால் பிரார்த்தனை பதிவு இடம் பெறாது, நம் அனைவருக்காகவும் நாட்டு நலனுக்காகவும் பிரார்த்திக்கும்படி தளத்தின் முகப்பில் SCROLLING TEXT ஓடவிட்டு, அதை இன்று காலை தான் மாற்றினேன்.
மேலும் நமது வாராந்திர கூட்டு பிரார்த்தனையில் எத்தனை பேர் மனமுவந்து பங்கேற்கிறார்கள் என்கிற சந்தேகம் எனக்கு இருந்து வந்ததுண்டு. ஆனால், இனி அது இருக்காது. சுய விருப்பத்துடன் தாமாக ஒருவர் பிரார்த்தனையில் பங்கேற்றால் கூட அது 1000 பேருக்கு சமம்.
நமது கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றபிறகு நடந்த அதிசயம் குறித்து நமக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. விரைவில் பகிர்கிறேன்.
சுதந்திர தின சிறப்பு பதிவை படிக்க மறக்கவேண்டாம்.
நன்றி.
– சுந்தர்
வணக்கம்…………
மகான் நரசிம்ம மேத்தாவின் திவ்ய சரிதையை முழுதும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்…….
பதிவு அருமை. பின்வரும் வரிகளை தவிர்த்திருக்கலாம்.
“(*தலைவர் என்ட்ரி எப்பவுமே கலக்கல் மாஸ் தான்! ஆனா, நம்மளை மட்டும் தான் படுத்தி எடுக்குறான் இந்த உடுக்கைப்பய. ஹூம்..), (*”நான் ஒன்னும் உடனே நரசிக்கு அருள் பண்ணலே… தன்னை மறந்து 10 நாள் என் முன்னாடி தவம் பண்ணியிருக்கிறான்” என்று நம்மிடம் சொல்கிறான் போல!)”
தேவையில்லாத வார்த்தைகளோ அல்லது வீண் வார்த்தைகளோ ஒரு அட்சரம் கூட நம் பதிவில் இருக்காது. அது நமக்கும் சிவனுக்கும் உள்ள ஒரு வித அன்னியோன்யத்தை குறிப்பது. அதை பெரிதுபடுத்தவேண்டாம்.
– சுந்தர்
தன் சொந்த கடவுளை தரிசிக்கத மற்றும் அறியாத இந்த பிறவி வீணே. எ ன் பகவானே எப்போது என்னை ஆட்கொள்ள போகிறாய்