நமது வழிகாட்டும் தெய்வங்களாக நாம் பாவிப்பது வள்ளுவரையும், பாரதியையும், விவேகானந்தரையும் தான். அது உங்களுக்கும் தெரியும்.
மூவரையும் குறிப்பிட்டு அர்பணிப்பது நமக்கு உடன்பாடில்லை. யாராவது ஒருவரை குறிப்பிட்டு அவரது படத்தை போடவேண்டும் என்று முடிவு செய்தோம்.
கடைசியில் நாம் யாருக்கு நூலை அர்ப்பணித்தோம் தெரியுமா?
கனவு காண கற்றுத் தந்த நம் ஆசானுக்கு!
ஆம், அவர் வள்ளுவரையும், பாரதியையும், விவேகானந்தரையும் சேர்ந்து செய்த கலவை.
நூலை ஏற்கனவே வாங்கியவர்களுக்கு தெரியும் அந்த குறிப்பிட்ட ‘சமர்ப்பணம்’ பக்கம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று!
அக்டோபர் 15. இன்று கலாம் அவர்களின் பிறந்த நாள்.
அதையொட்டி பல சுவாரஸ்யமான செய்திகளை கொண்டு இந்த சிறப்பு பதிவு அளிக்கப்படுகிறது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கலாம் சொன்ன மெனு
கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது தஞ்சை மாவட்டம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு ஒரு முறை உரையாற்ற சென்றார். குடியரசுத் தலைவர் என்பதால் அவரை சிறந்த முறையில் கவனிக்கவேண்டி, அவருக்கு என்ன உணவு சமைக்க வேண்டும் என்று கேட்டார்கள்.
அதற்கு கலாம் சொன்ன மெனு என்ன தெரியுமா?
“புளியோதரை, தயிர்சாதம், வத்தக் குழம்பு, ஆவக்காய் ஊறுகாய்!”
இதைக் கூட அவர் குறைவாகவே சாப்பிடுவார் என்பது தான் கூடுதல் தகவல்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நீங்கள் இதை தூக்கி போட்டுவிட்டு அதற்கு பதில்…
கலாமுக்கு பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசை, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பாடல்கள் ஆகியவற்றை கேட்பது பிடிக்கும். அவற்றையெல்லாம் கேசட்டுக்களாக வாங்கி வைத்துக்கொண்டு தன்னிடம் உள்ள சிறிய டேப் ரெக்கார்டரில் அவற்றை போட்டுக் கேட்பது அவரது வழக்கம். அவர் ஜனாதிபதியாக ஆனபோது கூட அதையே பயன்படுத்தி வந்தார்.
ஒரு சமயம் அந்த டேப் ரெக்கார்டர் பழுதாகிவிட்டது. உடனே அவர் தனது உதவியாளர்களை அழைத்து, இந்த டேப் ரெக்கார்டரை சரி செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு அதிகாரிகள், “சார் இப்போதெல்லாம் யாரும் டேப் ரெக்கார்டரை பயன்படுத்துவதில்லை. நீங்கள் இதை தூக்கி போட்டுவிட்டு அதற்கு பதில், ஐ-பாட் எனப்படும் நவீன கருவி மூலம் இசையை கேட்டு ரசிக்கலாமே என்று கூறினார்கள்.
ஆனால் கலாம் பிடிவாதமாக அந்த டேப் ரெக்கார்டர் தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.
விளைவு? அதிகாரிகள் அந்த டேப் ரெக்கார்டரை எடுத்துக்கொண்டு அதை ரிப்பேர் செய்ய அலைந்தார்கள். இறுதியில் ஒரு காயலான் கடை போல இருந்த ஒரு கடையில் அதை கொடுத்து அதை சரி செய்து கலாமிடம் கொடுத்தார்கள்.
அதை பெற்றுக்கொண்ட பிறகு தான் கலாம் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டதாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
எந்த நேரமும் நல்ல நேரம் தான்
கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற சமயம் அவரிடம் “பதவியேற்புக்கு ஒரு நல்ல நேரத்தை கூறினால், அந்த நேரத்தில் பதிவிப் பிரமான நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம்” என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அவரிடம் கூறினார்கள்.
அதற்கு கலாம், “எந்த நேரமும் நல்ல நேரம் தான். எப்போது வேண்டுமானாலும் பதவியை ஏற்கத் தயார்!” என்றார்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட கலாம்!
ஜனாதிபதி மாளிகையில், ரம்ஜான் சமயத்தில் முக்கியப் பிரமுகர்களுக்கு விருந்து கொடுக்கப்படுவது வழக்கம்.
கலாம் ஜனாதிபதி ஆனதும் முதல் ஆண்டு அத்தகைய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது கலாமின் தனிச் செயலாளர் பி.எம்.நாயரை அழைத்து, “ரம்ஜான் விருந்துக்கு எவ்வளவு செலவாகும்?” என்று கேட்டார்.
அதற்கு அவர், சுமாராக இரண்டரை லட்ச ரூபாய் செலவாகும் என்றார்.
சற்று யோசனையில் ஆழ்ந்த கலாம், “நாம் ஏன் இந்த பணத்தை அனாதை ஆஸ்ரமங்களுக்கு கொடுக்கக்கூடாது?” என்ற கேள்வியை எழுப்பினார்.
பின்னர் அவரே, “இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து வேண்டாம். அந்த பணத்தை அனாதை இல்லங்களுக்கு கொடுத்து விடுங்கள்” என்றார்.
பின்னர் தனிச் செயலாளர் பி.எம்.நாயரை அழைத்து, “அரசாங்க பணத்தை அனாதை ஆஸ்ரமங்களுக்கு கொடுத்தாகிவிட்டது. இப்போது எனது பங்காக எனது சொந்தப் பணத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சம் தருகிறேன். அதை சேர்த்து அனாதை ஆஸ்ரமத்துக்கு கொடுத்துவிடுங்கள். ஆனால் நான் பணம் கொடுத்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம்” என்றார்.
ஆனால், ஜனாதிபதியின் இத்தகைய அற்புத குணத்தை யாரால் மூடி மறைத்து வைக்க முடியும். கலாமின் விருப்பத்திற்கு மாறாக அந்த செய்தி எப்படியோ கசிந்துவிட்டது.
(ஆக்கத்தில் உதவி : கலாம் ஒரு சரித்திரம் & கலாம் காலங்கள்)
Join our Voluntary Subscription Scheme
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கலாம் அவர்களின் கல்வெட்டு வார்த்தைகள்!
* வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
* கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
* அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
* உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.
* தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
* உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?
"* மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
* கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்?
* கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
* முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே அவற்றை வெற்றி கொள்ள முடியும்.
* வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.
==================================================================
Also check from our archives:
அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!
ராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா? – விகடன் மேடையில் கலாம்!
கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!
“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”
மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!
==================================================================
[END]
மிகவும் மகிழ்ச்சி. கலாம் பிறந்த நாளில் நம் தலத்தில் பதிவை காணோம் என்று சற்று தளர்வாய் இருந்தேன்.நவராத்திரி ஸ்பெஷல் பதிவிற்கான மெனகடலே அதிகமாய் இருக்கும்.அதனால் நாளை கலாம் பதிவு வரும் என்று எண்ணிய வேளையில்..இன்றே பதிவு போட்டு, அவருக்கு உரிய மரியாதை செலுத்தியதற்கு நன்றிகள்.
தங்களுக்கும் ஒரு சலாம்.
வள்ளுவர் -= பாரதி = விவேகந்தர் = அக்னி நாயகன்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கிய, இனி விளங்கப் போகும் மாமனிதர். விவேகானந்தருக்குப் பிறகு இந்த நாடு கண்ட மிகப்பெரிய வீரத் துறவி.
திருக்குறளைக் கற்கும் பலர் அதைக் கடைப்பிடிக்க முயற்சிப்பதில்லை. ஆனால் குறள் வழி வாழ்ந்தவர் நமது கலாம் அவர்கள். தனது பேச்சில், உதாரணம் அனைத்தையும் திருக்குறளிலேயே எடுப்பவர். திருமந்திரம் ஓதும் உயர் மணம் கொண்ட இஸ்லாமியர். மெய்ஞானப் பாதையில் வாழ்ந்த விஞ்ஞானி. கடைசி நிமிடம் கூட தனது கடமையை செய்து கொண்டு இருந்தவர் என்று அடுக்கி கொண்டே போகலாம்.
கலாம் வழி வெற்றி கண்டிட திருக்குறளை கடைபிடித்து..சைவ தொண்டாற்றி..வாழ்வில் வெற்றி பெறுவோம்.
நன்றி அண்ணா..