Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 13, 2024
Please specify the group
Home > Featured > இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

print
நேற்றைய (பிப்ரவரி 27, 2014) சிவராத்திரி பொழுது மிக மிக இனிமையாக மின்னொளி அம்பாள் சமேத ஊன்றீஸ்வரரின் அருகில் நமக்கு கழிந்தது. மிகப் பெரிய சேவைக்கு நம்மை ஆளாக்கினான் இறைவன். அதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். விரிவான பதிவு நாளை இடம்பெறும்.

வாசகர்கள் பலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். குற்றம் குறைகளை பெரிது படுத்த வேண்டாம். அனுபவங்களை மனதில் கொண்டு அடுத்த ஆண்டு  இன்னும் சிறப்பாக முழுமையாக இருக்கவும். ‘அன்பே சிவம்!’

Gopuram

அடுத்தடுத்து வெவ்வேறு பணிகள், மற்றும் சிவராத்திரி விரதம், தொடர்ந்து அலுவலகம் செல்வது என்று நமக்கு இடைவிடாத பணிகள் உள்ளபடியால் புதிய பதிவு எதையும் எழுத முடியவில்லை. எனவே இந்த வாரம் வழக்கமான கூட்டுப் பிரார்த்தனை பதிவு இடம்பெறாது.

நேற்றைக்கு இரவு முழுவதும் ஊன்றீஸ்வரர் ஆலயத்தில் வேதம் ஓதும் செல்வன். சனத்குமரன் முன்னிலையில், ஒவ்வொரு முறையும் இறைவனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்போது நம் தள வாசகர்களுக்காகவும், நாம் பட்டியலிட்ட பொது நலன்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்த வாரம் ஞாயிறு பிரார்த்தனை நேரத்தில் (SUNDAY 5.30 PM – 5.45 PM) நம் தளம் சார்பாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பொது பிரார்த்தனைகளான நாட்டின் வளம், விவசாயிகள் மற்றும் நெசவாளர் நலன், வேளாண் உற்பத்தி, பருவ மழை தவறாமை, மது ஒழிப்பு, சட்ட ஒழுங்கு, சமூக ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றம், ஆதரவற்றோர் மற்றும் விதவைகள் நல்வாழ்வு மற்றும் இதர பொது கோரிக்கைகளை இறைவன் முன் வைத்து பிரார்த்திக்கவும். தனிப்பட்ட பிறரின் கோரிக்கைகள் நினைவில் இருந்தால் அது குறித்தும் பிரார்த்தனை செய்யவும்.

அடுத்த வாரம் வழக்கம் போல, சிறப்பு விருந்தினர் தலைமையில் பிரார்த்தனை நடைபெறும். பிரார்த்தனை பதிவும் இடம்பெறும்.

மறக்கவேண்டாம்… நமது கூட்டுப் பிரார்த்தனை நேரம் ஒவ்வொரு ஞாயிறு மாலை 5.30 – 5.45 PM.

இந்த பதிவை இப்போதைக்கு படித்து இன்புறவும். நிச்சயம் அல்லல்படும் உள்ளத்துக்கு ஆறுதலாக அமையும்.

நன்றி!

மீண்டும் சந்திப்போம்!!

==========================================================

றைவனின் படைப்பில் மிக மிக உன்னதமானது எது தெரியுமா? மரங்கள் தான். கடுமையான கோடை. சூரியன் சுட்டெரிக்கிறான். ஒரு மாபெரும் மரம் கண்ணுக்கு படுகிறது. அனைவரும் அதன் நிழலில் இளைப்பாறுகிறார்கள்.  நமக்கு நிழல் தரும் அந்த விருட்சம், சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களை தான் தாங்கிக்கொள்கிறது. ஆகையால் தான் நமக்கு நிழல் கிடைக்கிறது. வெயில் தாங்க முடியவில்லை என்றால், நாம் வேறு எங்காவது நகர்ந்து புகலிடம் தேடிக்கொள்ள முடிகிறது.  பாவம் மரங்கள். அவை அவ்வாறு செய்ய முடியாது. அவை சூரியனின் வெப்பத்தை தாங்கிக்கொண்டே ஆகவேண்டும்.

footpath-grass-tree-green-field-nature-1600x2560

எத்தனையோ பேர் இந்த தளத்தை ஒரு விருட்சமாக கருதி, தாங்கள் இளைப்பாறும் வேளையில், நமக்கு சோதனைகளோ அல்லது மனதுக்கு கஷ்டங்களோ ஏற்படும் வேளையில் நாம் இளைப்பாறுவதற்கு என்று சில பெரிய விருட்சங்கள் இருக்கின்றன. திருக்குறள், விவேகானந்தரின் உரைகள், பாரதியார் கவிதைகள், கண்ணதாசனின் எழுத்துக்கள் ஆகியவை தான் அவை. அவற்றுள் மிகவும் முக்கியமானது கண்ணதாசனின் காலத்தை வென்ற படைப்புக்களில் ஒன்றான ‘அர்த்தமுள்ள இந்துமதம்.’

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதே தவிர இது மதம் சார்ந்த நூல் அல்ல. இது ’20 ஆம் நூற்றாண்டின் வாழ்வியல் வேதம்’ என்பது தான் உண்மை. அந்தளவு சராசரி வாழ்க்கையில் நாம் சந்தித்துவரும்  பிரச்சனைகள், சோதனைகள் ஆகியவற்றுக்கு இந்த நூலில் கண்ணதாசனின் பார்வையில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

எதிரிகளின் தொல்லையா?

நண்பர்களின் துரோகமா?

மனைவி வஞ்சித்துவிட்டாளா?

கணவன் சரியில்லையா?

உறவுகள் உயிரை எடுக்கிறார்களா?

பொருளாதார பிரச்னையா?

தெய்வம் பார்க்கவில்லையா?

ஊர் ஏளனம் செய்கிறதா?

– அத்தனைக்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது. அந்த பதில் நம்மை சமாதானப்படுத்தும், துவண்டுகிடக்கும் நமது உள்ளத்தை தூக்கி நிறுத்தும், நமது இறை சிந்தனையை மேன்மேலும் பெருகச் செய்யும் என்பதே உண்மை.

கண்ணதாசன் என்கிற அந்த விருட்சத்தில் நாம் ஒரு முறை இளைப்பாறியபோது படித்தது இது. உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி இங்கு பதிவு செய்கிறோம்.

==========================================================

Over to கண்ணதாசன் – ‘அர்த்தமுள்ள இந்துமதம்’

Kannadasn Artசோதனையும் வேதனையும்

`நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!’

“நான் கடவுளை மனதார நம்புகிறேன். எனினும் எனக்கு துயரத்தின் மேல் துயரம் வருகிறதே என்ன செய்ய?” என்று தஞ்சாவூரிலுள்ள ஒருவர் கேட்கிறார்.

எப்போது நமக்குத் துயரம் தொடர்ந்து வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

வாரியார் சுவாமிகளும் அதைத்தான் கூறினார்.

சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று அர்த்தம்.

உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.

திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான்.

பக்தர்களைப் பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.

முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம் பெற்று விடுகிறது.

பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.

வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப் போய் நிதானம் வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது.

சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன.

சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.

ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.

நண்பா, வருகின்ற சோதனைகளையெல்லாம் தாங்கிப் பார்க்க வேண்டும்.

ராசி மாறும்போது, ஜாதகத்தின் நல்ல நேரம் தோன்றும்போது, அதன் பலன் தெரியும்.

“நிழலருமை வெய்யிலிலே
நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையில்
காண்மின்”

என்றார்கள்.

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்

வீழ்ந்தவன் வீழ்ந்துகொண்டே இருந்து, வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவர இயங்கவில்லை என்று பொருள்.

ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியையும், எழுந்தவனுக்கு வீழ்ச்சியையும் மாறி மாறி நான் காண்கிறேன்.

இந்த எழுச்சியும் வீழ்ச்சியும்தான், இறைவன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கின்றன.

பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனாலே கணிக்கப்பெறுகிறது.

வேறு, வேறான பாதைகளும், வாதைகளும் இறைவனை நினைக்க வைக்கின்றன.    மனிதனைப் பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி மாற்றி அமைக்கிறான்.

விதியும் பூர்வஜென்மமும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதற்குக் காரணமும் இதுதான்.

ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம், `கண்ணா’ என்றோ, `கந்தா’ என்றோ ஒருமுறை அழைத்து, அதைத் தாங்கிக்கொண்டு அமைதியடைய வேண்டும்.

`துன்பம் வரும்போது சிரி; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது’ என்று வள்ளுவன் அறுதியிட்டுக் கூறினான்.

இந்துமதம் வேரூன்றியுள்ள இந்தியாவில் காலநிலையின் மாறுபாட்டுக் கணிதத்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?

கோடைக்கால வெயிலால் காய்ந்துபோன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?

“காலம் ஒருநாள் மாறும் நம்
கவலைகள் யாவும் தீரும்!”

என் வாழ்க்கையிலேகூடப் பல நேரங்களில், துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்ததுண்டு.

அது நடக்காமற் போனதற்குக் காரணம், என்னாலும் `ஏதோ ஆகும்’ என்று இறைவன் எழுதியிருப்பதுதான்.

பலமுறை தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ், இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?

பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.

`போதுமே, இந்தக் கஷ்டம்’ என்று தோன்றும்.

`போய்ச் சேர்ந்துவிடலாம் அவனிடம்’ என்று எண்ணும்.

குழம்பும், புலம்பும், தவிக்கும், தத்தளிக்கும்; நன்மை கிடைத்தவுடன் `வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற சபலம் வரும்.

அது அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் வந்துவிடும்.

அந்த நம்பிக்கையிலேதான் நண்பா சோதனைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.

இறைவன் யாரையும் கைவிடமாட்டான்.

இது சத்தியம்.

நன்றி : கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’

==========================================================

இந்த தளம் யாரை நம்பி நடக்கிறது தெரியுமா? 

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

உங்களை நம்பி உங்களுக்காகவே இந்த தளம் நடத்தப்படுகிறது.

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

==========================================================

[END]

 

8 thoughts on “இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

 1. டியர் சுந்தர்ஜி

  நேற்றைக்கு இரவு முழுவதும் ஊன்றீஸ்வரர் ஆலயத்தில் வேதம் ஓதும் செல்வன். சனத்குமரன் முன்னிலையில், ஒவ்வொரு முறையும் இறைவனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்போது நம் தள வாசகர்களுக்காகவும், நாம் பட்டியலிட்ட பொது நலன்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டதற்கு மிக்க நன்றி

  கண்ணதாசனின் அர்த்தமுள்ள பதிவு மிக அருமை. சோதனை வரும் பொழுது நாம் துவண்டு விடுகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த சோதனையை நினைத்து அழுத நாட்கள் , புலம்பிய நாட்கள் எத்தனையோ? சோதனையை நினைத்து துவண்டு விடாமல் நாம் நமது கடமையை செய்தல் வெற்றி நிச்சயம் தானாக வரும். ரைட் mantra reader ஆன பிறகு எதை பற்றியும் கவலை படுவதில்லை. வருவது வரட்டும் என்ற மன பக்குவம் வந்து விட்டது.

  //இறைவன் யாரையும் கைவிடமாட்டான்.

  இது சத்தியம்.//

  இந்த பதிவு துவண்டு விட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அழகிய பதிவு.

  நேற்றைய சிவராத்திரி பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்

  நன்றி

  உமா

 2. சிவராத்திரி விரதம் மேற்கொண்டு ,அனுஷ்டித்து களைப்பில்,பதிவு கிடைக்காது என்று நினைத்தேன் .ஆனால் விருந்து படைத்தது விட்டீர்கள் …

  நல்ல பதிவு .

  -மனோகர்

 3. அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் ஏதோ குறிப்பால் உணர்த்திஉள்ளது போல தெரிகிறது.
  சோதனைகளை தாங்க நம்பிக்கை வேண்டும் என்று கண்ணதாசனே கூறியுள்ளார்.
  காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஒரு விதை பெரிய தோட்டமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
  இறைவன் யாரையும் கைவிடமாட்டான்.
  நானும் சிவராத்திரி விரதம் நல்லபடியாக பள்ளிகரணை கோவிலில் முடித்தேன். nandri

 4. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

  இடும்பை படா தவர் – குறள்

 5. என் அனுபவத்தில் மிக சிறந்த சரியான வரிகள். இதனை நான் அனுபவித்துள்ளேன்… அனுபவித்து கொண்டும் இருக்கிறேன்.

  சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று அர்த்தம்.

  உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.

  திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான்.

  பக்தர்களைப் பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.

  முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம் பெற்று விடுகிறது.

  பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.

  வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப் போய் நிதானம் வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது.

  சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன.

  சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.

  ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.

 6. சுந்தர் சார் வணக்கம்

  அரிய பொக்கிஷமான தகவல்

  மிகவும் அருமையான பதிவு

 7. நீங்கள் எதை நினைத்து அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் ‘ தெடிநாலும் அதில் விடை இருக்கும் .இது பாமர மக்களின் கிதை கண்ணதாசன் புகழ் ஹிந்து மதம் வுள்ள வரை நிலைக்கும் நன்றி சுந்தர்

 8. உங்கள் பதிவுகள் முள்ளை கூட முத்துக்கள் ஆக்கும் தொடரட்டும் …

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *