Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > ‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

print
பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மரை சந்திக்காமல் நாம் எந்த முக்கிய முடிவும் எடுப்பதில்லை என்று உங்களுக்கு தெரியும். வரும் பிப்ரவரி 1 ஞாயிறு காலை ரைட்மந்த்ராவுக்கென பிரத்யேக அலுவலகம் மேற்கு மாம்பலத்தில் திறக்கப்படவுள்ளதையடுத்து (நேற்று) வியாழன் மாலை நரசிம்மரை தரிசிக்க பேரம்பாக்கம் சென்றிருந்தோம்.

Perambakkam Narasimmar

செல்லும் வழியே ஒரு ரம்மியம் தான். இந்த கோபுரத்தை இது வரை நூறு முறையாவது படமெடுத்திருப்போம் என்று கருதுகிறோம். ஒவ்வொருமுறையும் ஒரு வித புதுமையோடு நம்மை ஈர்க்கிறது. (எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த கோபுரத்தை எப்போது பார்க்கிறீர்களோ அந்த நொடியே உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமாகிவிடும்.)

Perambakkam Narasimmar Temple

நமக்கு முன்பாக திருவள்ளூரில் இருந்து நண்பர் மனோகரன் வந்து காத்துக்கொண்டிருந்தார். கோவில் முன்பாக பைக்கை பார்க் செய்துவிட்டு முன்னே உள்ள கோ-சாலையில் புதிதாக பிறந்துள்ள கன்றுக்குட்டியை சிறிது நேரம் கொஞ்சி மகிழ்ந்துவிட்டு உள்ளே செல்கிறோம். பட்டர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். நம்மைப் பார்த்ததும் “இதோ அவர் தான் ரைட்மந்த்ரா சுந்தர்!” என்று நம்மை காட்டி யாரிடமோ என்னமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

Perambakkam Narasimmar ko sala

“வாங்க சார்…. எப்படி இருக்கீங்க?”

நரசிம்மரை காட்டியபடி “அவர் இருக்கும்போது எனக்கென்ன குறை சார்…” நாம் சொன்னோம்.

ஆம் அவரின்றி நானில்லை. இந்த தளமும் இல்லை.

IMG_19700102_072133 copy copyசற்று பின்னோக்கிச் செல்வோம்.

இப்போது நாமிருக்கும் ஒரு உன்னத நிலையில், இங்கே இதையெல்லாம் சொல்லவேண்டுமா என்று சற்று யோசித்தோம். இப்படி யோசிப்பதே தவறல்லவா? ஏனெனில் இந்த வாழ்க்கையே அவன் போட்ட பிச்சை தானே… இதோ சொல்கிறோம். அப்போது தானே உங்களுக்கும் புரியும் என் நரசிம்மரின் மகத்துவம்!

2010 ஆம் ஆண்டு டிசம்பர். அப்போதைய நம் நண்பர்கள் (?!) சிலர் ஆணவத்திலும், பணத்திமிரிலும், பொறாமையினாலும் செய்த சில கீழ்த்தரமான செயல்களினாலும் சூழ்ச்சியினாலும் மிகுந்த அவமரியாதைக்கும் அவமானத்துக்கும் உள்ளான நாம் நிலைகுலைந்து அழுதபடியே ஒரு முழு நாளை கழித்தது மறக்கமுடியாது. வாழ்க்கையே சூனியமாகிவிட்டதை போல இருந்தது. எங்கே யாரைப் பார்த்தாலும் நம் முதுகில் குத்துவதற்கு கத்தியை மறைத்து வைத்திருப்பது போல தோன்றும். எங்கே போவது? யாரிடம் போய் அழுவது? எந்த சபைக்கு போய் நமக்கு நிகழ்ந்த அநீதியை கூறுவது? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? நம் கண்ணீருக்கான காரணத்தை யாரிடம் சொல்லி அழுகிறோமோ அவர்களே அதை பின்னர் உபயோகப்படுத்தி பின்னர் நம்மை அழவைத்துவிடுவதால் எவர் மீதும் நம்பிக்கை வரவில்லை.

IMG_19700102_071052 copy copy

திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? முன்பொருமுறை பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) சென்றபோது ‘நாளை என்பதில்லை நரசிம்மனிடம்’ என்ற வாசகத்தை சன்னதியில் பார்த்தது நினைவுக்கு வந்தது. நியாயம் கேட்டு நரசிம்மரிடம் ஓடினோம். “ஐயனே… இனி என் நிலை என்ன? நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ வை. தலை நிமிர்ந்து வாழ வை….” சன்னதியில் வேண்டிக்கொண்டிருக்கும்போதே உடைந்து நொறுங்கி அனைவர் முன்பாக அழுதுவிட்டோம். உடன் வந்த நண்பர் ஆறுதல் கூறி அழைத்து வந்தார்.

(பிற்பாடு தான் புரிந்தது அந்த சோதனைகள் அனைத்தும் நன்மைக்கே என்று. அது தான் நம்மை நாம் அடையாளம் காண உதவியது. சீரழியவிருந்த வாழ்க்கையை திசை திருப்பி உயர்த்தியிருக்கிறது என்று. நல்லது நடக்கும்போது அழுத ஒரே முட்டாள் இந்த உலகில் நானாகத் தான் இருப்பேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்!)

DSC02104 copy copy

அப்போது நாம் கிட்டத்தட்ட ஒரு பூஜ்ஜியம். அதாவது அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் ஒருவன். இது தான் வாழ்க்கை என்று நாம் தீர்மானித்திருந்த ஒன்று மிகப் பெரிய அவமானத்திற்கு நம்மை உள்ளாக்கி நம்மை குப்புற தள்ளியும் விட்டிருந்தது.

ஆனால்… இன்று?

rightmantra inaugural invite

யோசித்துப் பாருங்கள்…. ‘ரைட்மந்த்ரா.காம்’ என்னும் தளத்திற்கு ஒரு ஆசிரியர். ‘ரைட்மந்த்ரா சுந்தர் இவர் தான்’ என்று கூறுமளவிற்கு பெயருக்கு முன்னே ஒரு அடையாளம். மனிதர்களை படித்து படித்து பாடம் கற்ற ஒரு ஆன்மா.

DSC00356 copy copy

இதோ மரகதவல்லித் தாயார் சன்னதியில் நேற்று நின்றுகொண்டிருந்தோம். “சுவாமி… புதுசா ஆபிஸ் ஒன்னு ஒப்பன் பண்றேன். தாயார் கிட்டே இந்த இன்விடேஷனை வெச்சு அர்ச்சனை பண்ணி கொடுங்க”

அழைப்பிதழில் மஞ்சள் குங்குமமிட்டு தாயாரின் பாதத்தில் அழைப்பிதழை வைத்து அர்ச்சனை செய்தார் பட்டர்.

“அம்மா… எல்லாம் உன் அருளாசி. மேன்மேலும் இந்த தளம் வளர வேண்டும்! எம் வாசகர்கள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெறவேண்டும்!” தாயாரிடம் பிரார்த்தித்துக்கொண்டோம். வழக்கம் போல நண்பர்கள் சிலர் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

சென்ற ஆண்டுவிழாவிற்கும் அழைப்பிதழை இதே போல மரகதவல்லி தாயாரிடம் முதலில் வைத்து அர்ச்சனை செய்தது நினைவுக்கு வந்தது.

“நீங்க வேணும்னா பாருங்க…  நினைக்கிறதை விட பங்க்ஷன் சிறப்பா நடக்கும்!” பட்டர் கூறிய வார்த்தைகள் காதில் இன்றும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. (சிட்டி, வெங்கடேஷ் பாபு உள்ளிட்ட நண்பர்கள் அப்போது நம்முடன் கோவிலுக்கு வந்திருந்தனர்).

அவர் சொன்னது போலவே விழா சிறப்பாக நடைபெற்றதோடல்லாமல், அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன் அவர்கள் எதிர்பாராமல் வந்திருந்து நம்மை திக்குமுக்காட வைத்தது நினைவிருக்கலாம்.

அடுத்து நரசிம்ம சுவாமி சன்னதி (மூலவர்) சென்று அங்கு நரசிம்மரின் திருவடியில் அழைப்பிதழ் வைக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது.

சுவாமியிடம் வைத்த அழைப்பிதழை பட்டர், ஒரு சிறிய தாம்பாளத்தில் வைத்து நம்மிடம் திருப்பித் தருகிறார். கூடவே கொஞ்சம் புஷ்பங்களும் துளசியும். அதை வாங்கும்போது நம்மையுமறியாமல் கண்களின் ஓரத்தில் கண்ணீர் அரும்புகிறது. ஆனந்தக் கண்ணீர்.

மழைக்கு பள்ளிக் கூடத்தின் ஓரம் ஒதுங்கிய எழுத்தறிவில்லா பரதேசி ஒருவன் அந்த பள்ளியிலேயே ஆசிரியராக உயர்ந்தால்  எப்படியிருக்கும்? அப்படி இருந்தது நமக்கு.

நாம் இப்படி சொல்ல காரணம் இருக்கிறது.

நமக்கென்று இருந்த ஒரு அடையாளமும் சூறையாடப்பட்டு எந்த சன்னதியில் நிர்கதியாய் நின்று கொண்டிருந்தோமோ அதே சன்னதியில்  இன்று ஒரு மிகப் பெரிய, கௌரவமான ஒரு அடையாளத்தோடு நின்றுகொண்டிருக்கிறோம். இது சாதாரண விஷயம் அல்ல.

இடைப்பட்ட இந்த காலங்களில் ரைட்மந்த்ரா சார்பாக இரண்டு முறை இந்த ஆலயத்தில் உழவாரப்பணி செய்திருக்கிறோம். பெரிய பெடஸ்ட்ரல் ஃபேன், தீப மேடை ஆகியவை வாங்கித் தந்திருக்கிறோம். படித்தாலே புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டும் நமது பெயர் சொல்லும் பிரார்த்தனை படத்தை ஆலயத்தில் வைத்திருக்கிறோம்.

Rightmantra Prayer

ஆண்டவனுக்கு இதை செய்தோம்… அதை செய்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள இதைச் சொல்லவில்லை. அப்படி செய்யும் நிலையில் அவன் நம்மை ஏற்றினான் பாருங்கள் அதை உங்களுக்கு உணர்த்த இதை சொல்கிறோம்.

நம் கண்ணீரையே துடைத்துக்கொள்ள வழியின்றி நின்றுகொண்டிருந்த நாம் இன்று பலர் கண்ணீரை துடைத்துகொண்டிருக்கிறோம்.

அது தான் இந்த நரசிம்மர்.

ஜஸ்ட் ஒரு முறை… ஒரே ஒரு முறை…  இவரை போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்களேன்… இவருடைய மகத்துவம் புரியும்.

எத்தனை பிரச்னை உங்களுக்கு இருந்தால் என்ன? நம் இறைவன் அவை எல்லாவற்றையும்விட பெரியவன் அல்லவா?

ஒருமுறை போய் தரிசனம் செய்து பாருங்க. வாழ்க்கையே மெல்ல மெல்ல 180 டிகிரி திரும்பிவிடும் என்பது உறுதி.

நாம் ஏற்கனவே பலமுறை  கூறியிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் இவரை தரிசிக்கும்போதும் வாழ்க்கையில் சில படிகள் மேலே ஏறியிருப்பது போல தோன்றும். அது பிரமையல்ல. உண்மை. சத்தியமான உண்மை.

கட். ரைட்மந்த்ரா அலுவலகம் துவக்கப்படும் விஷயத்திற்கு வருவோம்.

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்… இராமனையும் அழைத்துக்கொண்டு!!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆன்மீக சுயமுன்னேற்ற கருத்துக்களை பதிவு செய்து வரும் நம் Rightmantra.com தளத்திற்கென தனியாக அலுவலகம் தேவைப்படும் கட்டத்தை நாம் எட்டிவிட்டதையடுத்து அதற்க்கான பணிகளில் கடந்த ஒரு மாதகாலமாகவே ஈடுபட்டிருந்தோம்.

வேலைக்கும் போய்க்கொண்டு புறநகரில் உள்ள நம் வீட்டிலிருந்தபடி இந்த தளத்தையும் நிர்வகிப்பது என்பது சிரமமாய் இருந்தது. எனவே முந்தைய பதிவில் கூறியதைப் போல தளத்தின் பணிகளை கவனிப்பதற்கென்றே பிரத்யேகமாக சென்னை நகருக்குள் ஒரு எளிமையான அலுவலகத்தை துவக்கவிருக்கிறோம்.

Rightmantra Invitation Final for print

பாம்பே ஞானம் அவர்களின் இந்த ‘ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள்’ நாடகத்தை பல முறை நம் வாசகர்களுடன் கண்டு ரசித்திருக்கிறோம். தளத்தில் அது பற்றி விசேஷ பதிவு வந்திருக்கிறது.

வாணிமகாலில் இந்த நாடகம் நடைபெற்றபோது பாம்பே ஞானம் அவர்களை வாசகர்களுடன்  கௌரவித்தது மறக்கமுடியாத அனுபவம்.

Bombay Gnanam 3

‘ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள்’ நாடகத்திற்கு நாம் பதிவெழுதி பப்ளிசிட்டி தருவது, பாம்பே ஞானம் அவர்களின் தொண்டைப் பற்றி எழுதுவது என்பதெல்லாம் ச்சும்மா… லுலுவாய்க்கு தான். சூரியனுக்கே டார்ச் அடிக்கும் குழந்தைத் தனம் அது. ஞானசூரியனுக்கு விட்டில் பூச்சிகள் விளம்பரம் தரமுடியுமா? அந்த நாடகத்தை பற்றி நாம் பதிவெழுதி இராமநாமத்தை பரப்பும் புண்ணியத்தில் நாமும் பங்கெடுத்துக்கொண்டோம் என்பதே உண்மை.

Bombay Gnanam

Bombay Gnanam 2பாம்பே ஞானம் அவர்கள் எத்தனை பெரிய ஒரு புண்ணியாத்மா, எவ்வளவு பெரிய கலைஞர் என்பது அவர் நாடகத்திற்கு சென்றவர்களுக்கு தெரியும். அந்தவகையில் அவர்கள் நமது அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றுகிறார் என்பது ஸ்ரீ போதேந்திராளின் பரிபூரண ஆசி தான். (சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தபுரத்தில் உள்ள அவரது அதிஷ்டானம் சென்றிருந்தோம்).

அவருடைய உதவியாளர் திருமதி.பத்மாவதி பார்த்தசாரதி அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

ரைட்மந்த்ரா நண்பர்களும் வாசகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்து எமக்கு நல்லாசி வழங்கிடவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடம் : ரைட்மந்த்ரா.காம், நிர்வாக அலுவலகம், கடை எண் : 64, 2வது தளம், முருகன் காம்ப்ளெக்ஸ், (வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் அருகே), பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600033.

நேரம் : பிப்ரவரி 1, ஞாயிறு காலை 10.00 – 11.00

இராம நாமம் பரவட்டும், பக்தியும் அறமும் பெருகட்டும், வையகம் சிறக்கட்டும்.

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், ரைட்மந்த்ரா.காம்

===========================================================

Also check :

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

===========================================================

[END]

31 thoughts on “‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

 1. வாழ்த்துக்கள் சுந்தர். வரும் காலங்களில் நீங்கள் 1000 பேருக்காவது வேலை வாய்ப்பினை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மேலும் என்னைப் பொருத்த வரை, பின்வரும் குறள் உங்களுக்குச் சால பொருந்தும்.

  இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
  துன்பம் துடைத்தூன்றும் தூண்.

  நன்றி,
  கே.எஸ்.வெங்கட்,
  முகலிவாக்கம், சென்னை – 125

 2. இனிய காலை வணக்கம்…

  பலவித விரக்தியின் விளிம்பிற்கு சென்ற தங்களுக்கு புதிய பாதையை காண்பித்த நரசிம்மருக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். இல்லை என்றால் இந்த தளம் உருவாகி இருக்காது. உங்களுக்கு இவ்வளவு பெரிய புகழும் மரியாதையும் கிடைத்து இருக்காது.

  கல்லடி படாத மா மரம் உண்டா. உங்களை நோக்கி அடித்த கல் இன்று பல கனிகளாக பூத்து குலுங்குகிறது (பல பதிவுகளாக ) .

  //(பிற்பாடு தான் புரிந்தது அந்த சோதனைகள் அனைத்தும் நன்மைக்கே என்று. அது தான் நம்மை நாம் அடையாளம் காண உதவியது. சீரழியவிருந்த வாழ்க்கையை திசை திருப்பி உயர்த்தியிருக்கிறது என்று. நல்லது நடக்கும்போது அழுத ஒரே முட்டாள் இந்த உலகில் நானாகத் தான் இருப்பேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்!//

  எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை வார்த்தைகள். இது தான் உங்களை இவ்வளவு உயரத்திற்கு அழைத்து சென்று இருக்கிறது.. நாங்களாக இருந்தால் மீண்டு வர வெகு நாட்கள் ஆகி இருக்கும்.

  வாவ்… பாம்பே ஞானம் நம் ரைட் மந்த்ரா அலுவலகத்தை குத்து விளக்கு ஏற்றி தலைமை தாங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. மிகவும் பொருத்தமான chief guest . ஏனெனில் அவர்கள் சுவாசிக்கும் காற்றே ராம நாமமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மா அவர். அவருடைய போதேந்திரா நாடகத்தை வாணி மகாலில் போன வருடம் கண்டு கழித்ததை வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாது. அவர்களை நம் தளம் சார்பாக கௌரவப் படுத்தியதை நினைத்தால் மிக்க மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது அந்த வாய்பை கொடுத்த சுந்தருக்கு நன்றிகள் பல

  விழா நல்லபடியாக நடக்க அந்த இறைவன் அருள் புரிவான். பல விருதுகள் மற்றும் பட்டங்களும் தங்களை தேடி வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. தங்களின் வெற்றிக்கு பின்னால் நாங்கள் என்றும் துணை இருப்போம். பத்திரிக்கை அருமையாக உள்ளது ….

  நம்பினோர் கெடுவதில்லை … இது நான்கு மறை தீர்ப்பு ….

  மகா பெரியவா….. சரணம்

  நன்றி

  உமா வெங்கட்

 3. சுந்தர் அவர்களுக்கு காலை வணக்கம்

  அழைப்பிதழுக்கு நன்றி.
  எல்லாம் வல்ல இறைவன் அருளலும் மகான்கள் அருளலும் நல்ல படியாகவே நடந்தது, நடக்கிறது மேலும் நல்லபடியாகவே நடக்கும்.

  Every article and message from you is not only Right Mantra but also Bright Mantra for everyone’s life..

  வாழ்த்துக்களுடன்
  kk-navi mumbai

 4. Right decision, made at the right time!! This is going to be an important milestone in your life. Our best wishes.

  Om Nama Sivaya

 5. காலை வணக்கம் சுந்தர்

  அழைப்பிதழுக்கு நன்றி.

  எல்லாம் வல்ல இறைவன் அருளாலும், மகான்கள் அருளாலும், நன்றாகவே நடந்தது, நடக்கிறது மேலும் நன்றாகவே நடக்கும்.

  Every article from the Divine Website is not only the ‘Right Mantra’ but always A ‘Bright (Positive) Mantra’ for everyone’s walks of Life.

  வாழ்த்துக்களுடன்
  KK-Navi Mumbai

 6. எங்களின் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள் என்றென்றும்………

 7. வணக்கம் அண்ணா

  எல்லாம் வல்ல இறை என்றும் துணையிருப்பார்

  01-02-2015 (ஞாயிறு) அன்று காலை சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரமும் வருகிறது. அன்று பட்ச பிரதோஷமும் கூட….

  ரைட்மந்த்ரா அலுவலகத்தை துவக்கி வைப்பவர் ராம நாம மகிமையை பரப்புபவர்…

  தாங்கள் அடிக்கடி கூறும் சைவவைணவ ஒற்றுமை இதிலேயே அடங்கி விட்டது.

  ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்ப ஸஷித ஸ்ரீ அகஸ்திய குருவே போற்றி

  நன்றி அண்ணா

 8. எங்களின் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள் என்றென்றும்………

 9. Hi Ji,

  I’m happy that your journey is going to be in full swing henceforth.

  And happy to have been associate with you from the beginning. Though I didn’t contribute much either to site’s activities and other monetary help or so. But this year I believe that I would do so.

  The journey of two – three past years have been so fruitful to you i guess even though full of hectic time and shortage of funds.

  Before this year ends, you will blessed in all ways – most inspiring and lovely life.

  Periyava bless you. Be happy always.

 10. சுந்தர்ஜி

  வாழ்த்துகள்

  பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் என்றும் துணை இருப்பார்
  ரைட்மந்த்ரா அலுவலகத்தை துவக்கி வைப்பவர் பாம்பே ஞானம் அவர்களுக்கு நன்றி

  1. வாழ்த்துக்கள் சுந்தர் சார்,
   இந்த நாள் என்று வரும் என்று 2012 முதல் எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்.
   சிற்பி சிலையை செதுக்கும் போது வலி தாங்காத கல் சிலையாகாது என்று நாம் கேள்விபட்டுளோம்.
   உங்களுக்கு நடந்ததும் அப்படித்தான்.
   இனி எல்லாம் ஜெயமே.
   தொடரட்டும் உங்கள் வெற்றிகள்

 11. சுந்தர் சார்,
  இதயப் பூர்வமான ழ்த்துக்கள்.

 12. Sundarji,
  All the Very Best for Your Forthcoming Journey. Maha Periyava Will guide and take You in Good Path. Once Again All the Best to Right Mantra.

  Thanks & Regards,
  S.Narayanan.

 13. நல்ல நேரம் தாங்கள் ரைட் mantra ஆரம்பித்த நாள் முதல் . தங்களுக்கு மட்டும் அல்ல தங்களால் பலருக்கும் . தாங்கள் குரு பக்தி மற்றும் இறை பக்தி உள்ளவர். அவர்கள் தங்களுக்கு தங்களின் முழு அருளையும் வழங்குவார்கள் . தங்களின் நல் எண்ணம் நல்லதே தரும். ஆகாயத்துக்கும் எல்லை உண்டு, அனால் குரு, திரு அருளுக்கு ஏது எல்லை . வாழ்த்துகள். மஹா பெரியவா திருவடி போற்றி.

  வாழ்த்துகள்.

  சிவசுப்ரமணியன்

 14. Congratulations Sundar Sir for inauguration of new office for Right Mantra.com. “Confidence makes a man perfect”. Definitely you will reach further heights and win many laurels. All the very best to you.

  Ram, Ram

  Usha Sethuraman

 15. டியர் சுந்தர் சார்,

  தாங்கள் தளத்திற்காக புதியதாக அலுவலகம் தொடங்குவதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நரசிம்மன் அருளால் மென்மேலும் சிறந்த வளர்ச்சியை தளம் அடையும் என மிக்க உறுதியோடு கூறுகிறேன். தளத்தின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை தருவேன்.

  ராம் ராம் ராம்.

  ஓம் நமச்சிவாய.

 16. வாழ்த்துக்கள் சுந்தர்ஜி . தங்களின் இந்த பணி சிறக்க இறைவனின் அருள் என்றும் துணையிருக்கும் .

 17. வாழ்த்துக்கள் சுந்தர். நான்கு வாலிப நண்பர்கள் சேர்ந்து கூடி குட்டி சுவரில் உட்கார்ந்தால், materialstic life பற்றி பேசுவதே வாடிக்கை. ஆனால் நீங்கள் வாழ்க்கை இலட்சியம், மஹா அவதார் பாபாஜி, மஹா பெரியவா, ஸ்ரீ ராகவேந்தர் பற்றி பேசுவீர்கள். இறைவனுக்கு தெரியும் யாரை எப்படி உருவாக்குவது என்று.மேலும் நன்றாகவே நடக்கும்.

  Regards,
  பிரேம் கண்ணன்

 18. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடு்ம்பைக்கு
  இடும்பை படா தவர் (குறள் 623 )

  எல்லாம் செயல்கூடும் ௭ன்ஆணை ௮ம்பலத்தே!!! – – வள்ளலார்..

  குருவருளே திருவருள்!!
  திருவருளே குருவருள்!!!
  We pray to our Guru to bless you
  .I am sure with His Blessings, you will scale new Peaks….
  Iஎங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்…

  சி. இராஜேந்திரன் இ. வ.ப & மலர்க்கொடி
  விசாகப்பட்டினம்

 19. சுந்தர்ஜி,
  வாழ்த்துக்கள். குரு ராகவேந்திரா மற்றும் பெருமாள் அனுக்ரஹம் உடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

 20. வாழ்த்துக்கள் சுந்தர் சார்,

  உங்கள் எண்ணம் உயர்வாக இருந்ததால்..
  உயரிய இலட்சியங்கள் தோன்றியது!
  உன்னத இலட்சியங்கள் தோன்றியதால்
  உங்கள் பணிகள் உயர்ந்து..
  உங்களுக்கு என்று ஒரு பாதை உருவாக்கி..
  உன்னத இடத்தை நோக்கி
  உள்ளத்தில் உறுதியுடன் பயணிக்க ஆயத்தமாகி விட்டீர்கள்!
  உங்கள் உறுதி, இந்த சமுதாய முன்னேற்றத்திற்கு
  உறுதுணையாக, அஸ்திவாரமாக இருக்கும்!

  இந்த நாளை தான் வாசகர்கள் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.
  இந்த நிலைக்கு வர உங்கள் அர்பணிப்பு மகத்தானது.
  வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நீங்கள்..
  உங்களை வாழ்த்தி உங்களோடு பயணிக்க நாங்கள்..

  குருவருளும், திருவருளும் உங்களை வெற்றி அடைய செய்யும். எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

 21. வாழ்த்துக்கள் சுந்தர், உண்மையும் உழைப்பும் இருக்கும் வரையில் வெற்றி நிச்சயம். என்னுடைய மனமார்ந்த நல்லாசிகள்.

  பாம்பே ஞானம்

 22. Dear Sundar,

  Congratulations on opening a New office. It’s been quite a long time I interacted with you through emails. I have been following your articles every day and each one is fabulous and touching. Feel glad that I am also a part of this site.(Mission and Vision).

  Regards
  Raman

 23. அறுகு போல் வேருன்றி விட்டீர்கள். ஆல் போல் தழைத்து விட்டீர்கள். இனி விழுதுகள் விட்டு பரந்து விருட்சம் போல் வளர்வது தான் பாக்கி. இறை அருளில் இதுவும் வெகு விரைவில் நிறைவேறும். உங்கள் நோக்கம் இனிது நிறைவேறவும் உங்கள் பணி சிறந்து வெற்றியடையவும் இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

  கந்தையா, லண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *