
சில மாதங்களுக்கு முன்பு, திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றபோது, கோவில் அமைந்திருந்த அதே வீதியில் சேக்கிழார் மணிமண்டபத்தை பார்க்க நேர்ந்தது. அதன் அழகால் ஈர்க்கப்பட்டு நமது தளத்தின் சிறப்பு பதிவுக்காக தமிழ் புத்தாண்டு அன்று சென்றிருந்தோம்.

சென்ற தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை சார்பாக பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டப்பட்ட இந்த மணிமண்டபத்தை தற்போது பரமாரிக்கும் பணியை ‘குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை’ என்கிற அமைப்பு ஏற்றுக்கொண்டு வெகு சிறப்பாக பராமரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் துவக்கத்தில் சேக்கிழார் குருபூஜை முடிந்தவுடன், இந்த மணிமண்டபத்தில் பெரியோர்களையும் சமயச் சான்றோர்களையும் தமிழறிஞர்களையும் வைத்து சேக்கிழார் விழா சிறப்பாக நடத்தப்படுவதுண்டு. (சேக்கிழார் குருபூஜை சமயத்தில் திருநாகேஸ்வரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறபடியால், இந்த மணிமண்டபத்தில் சேக்கிழார் விழாவை சற்று தள்ளி தான் நடத்துவார்கள்!)
அதுசமயம், மொத்த மணிமண்டபத்தையும் ஒட்டடை அடித்து, அலம்பி, பெருக்கி பராமரிப்பு பணிகளை செவ்வனே செய்வது வழக்கம். இந்த ஆண்டு, சேக்கிழார் விழா ஜூன் இரண்டாம் வாரம் வரும் என்று தெரிந்ததையடுத்து, ஜூன் 8, ஞாயிறன்று நாம் இங்கு உழவாரப்பணி செய்து, மிகப் பெரிய பொறுப்பை சுமந்திருக்கும் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளைக்கு தோள் கொடுப்பது என்று முடிவானது. உரியவர்களை சந்தித்து நமது உழவாரப்பணி குறித்து விளக்கி அனுமதியும் பெற்று வந்துவிட்டோம்.
=================================================================
Also check : கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
=================================================================
இந்நிலையில் சென்ற மே 27 அன்று நம் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் அவர்கள் எதிர்பாராதவிதமாக இறைவனடி சேர்ந்தது தெரிந்ததே. 10 நாள் காரியங்கள் முடிந்து ஜூன் 8 அன்று வரக்கூடிய 13 ஆம் நாள் சுபம் முடிந்த பிறகு தான் நாம் கோவிலுக்கோ அல்லது இது போன்ற பணிகளுக்கோ செல்லவேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டார்கள். இந்நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஜூன் 8 ஞாயிறு அன்று எப்படி சேக்கிழார் மணிமண்டபத்தில் உழவாரப்பணி செய்வதாம்?
ஒரு வாரம் தள்ளி ஜூன் 15 வைத்துக்கொள்ளலாம் என்றால் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்கு உழவாரப்பணி செய்ய ஒப்புக்கொண்டுள்ளோம். சரி… இன்னும் ஒரு வாரம் கழித்து ஜூன் 22 அன்று சேக்கிழார் மணிமண்டபத்தில் பணி வைத்துக்கொள்ளலாம் என்றால் அதற்குள் ‘சேக்கிழார் விழா’ மணிமண்டபத்தில் நடந்து முடிந்துவிடும். சேக்கிழார் விழாவையொட்டித் தான் அங்கு நாம் உழவாரப்பணி செய்யவே விரும்பினோம். அவர்களும் அனுமதி கொடுத்தார்கள். விழா முடிந்து உழவாரப்பணி செய்து யாருக்கு என்ன பயன்?
சேக்கிழார் மணிமண்டபத்தில் நம் பாதம் படுவதற்கே நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அப்படி ஒரு சான்னித்யம் நிலவும் இடம் அது. சேக்கிழாரின் ஆன்மா அங்கு உறைகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை. எனவே அங்கு உழவாரப்பணி செய்ய நாம் மிகுந்த ஆவல் கொண்டிருந்தோம். சொல்லப்போனால் அந்த நாளுக்காக காத்திருந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்பாராத காரணங்களினால் அந்த பொன்னான வாய்ப்பு நமக்கு பறிபோனதை எண்ணி கலங்கிப்போனோம்.
சேக்கிழாரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். “ஐயனே… உங்கள் மணிமண்டபத்தில் உழவாரப்பணி செய்யும் பொன்னான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தும், எதிர்பாராத காரணத்தினால் அது முடியாமல் போனதற்கு மன்னிக்கவேண்டும். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். உங்களுக்கு பணி செய்ய இன்னும் ஒரு வருடம் நாங்கள் காத்திருக்கவேண்டும். அடுத்த ஆண்டாவது எங்களுக்கு அந்த வாய்ப்பை தாருங்கள்!” என்று அவரிடம் மனமுருகி பிரார்த்தித்துக்கொண்டோம்.
முதலில் சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளருக்கு ஃபோன் செய்து பாட்டியின் மறைவை விளக்கி பணிக்கு வர இயலாத சூழலை தெரிவிப்போம். சேக்கிழார் விழா நெருங்குவதால் அவர் வேறு யாரையாவது வைத்து பணி செய்துகொள்வார் என்று முடிவு செய்து மணிமண்டபத்தின் பொறுப்பாளரான தெய்வ சேக்கிழார் அறக்கட்டளையை சேர்ந்த திரு.பாலு அவர்களை தொடர்புகொண்டு அனைத்தையும் விவரித்தோம்.
ஆனால் அவரோ….. “சார்… ஒன்னும் பிரச்சனையே இல்லை. இப்போ தான் தேதி ஃபைனலாச்சு. ஜூன் 28 ஆம் தேதி தான் சேக்கிழார் விழா நடக்கப்போகுது. நீங்கள் 22 ஆம் தேதி கூட வந்து பண்ணா போதும். சொல்லப்போனால் முன்னாடியே பண்ணா பிரயோஜனம் இல்லை. விழாவுக்கு முந்தி வர்ற ஞாயிற்றுக் கிழமை பண்ணீங்கன்னா தான் சரியா இருக்கும். நீங்க 22 ஆம் தேதி வந்து உழவாரப்பணி பண்ணுங்க. எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக்குறேன்!” என்றார்.
பறிபோனதாக நினைத்த வாய்ப்பு மீண்டும் கிடைத்ததையடுத்து நமக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. ஹப்பா… சேக்கிழார் நம்மை கைவிடவில்லை. தொண்டர்களின் குறைகளை தீர்க்க தொண்டர்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழாருக்கு தெரியாதா என்ன? அவரின் கருணைக்கு மானசீகமாக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம்.
எப்போதும் வைகாசி பூச நட்சத்திரத்தில் வரக்கூடிய (ஜூன் 2) சேக்கிழார் குருபூஜை திருநாகேஸ்வரம் கோவிலில் முடிந்தவுடன் ஜூன் மத்தியில் சேக்கிழார் விழா இந்த மணிமண்டபத்தில் நடத்தப்படும். ஆனால் இம்முறை ஏதோ காரணத்தால் ஆவணி 12 ஆம் தேதி ஒத்தி (ஜூன் 28 ஆம் தேதி) வைத்திருக்கிறார்கள். நிச்சயம் இது இந்த எளியவர்கள் மீது சேக்கிழார் கொண்டுள்ள கருணை தான் என்பதில் சந்தேகம் இல்லை.
“ரொம்ப நன்றி சார். எங்கே சேக்கிழாருக்கு சேவை செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைக்காம போய்விடுமோ என்று தவித்துப் போய்விட்டேன்!”
“கவலையே படாதீங்க சார்… 22 ஆம் தேதி வந்துடுங்க. எத்தனை பேர் வர்றாங்கன்னு மட்டும் எனக்கு ரெண்டு நாள் முன்னே ஃபோன் பண்ணி சொல்லுங்க. எல்லாருக்கும் மதிய சாப்பாடு அரேஞ் பண்ணிடுறேன்!” என்றார்.
எனவே நண்பர்களே ஜூன் 22 ஞாயிறு அன்று குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நம் உழாவாரப்பணி நடைபெறும்.
அதற்க்கு முன்னதாக ஜூன் 15 அன்று பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் நமது உழவாரப்பணி நடைபெறும்.
=================================================================
பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் (இரண்டாம் முறை) உழவாரப்பணி கிடைத்த கதை!
இதற்கிடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு நரசிம்ம ஜெயந்தியையொட்டி பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் ஆலயத்திற்கு சென்றபோது, ஜூன் 19 முதல் நடைபெறவிருக்கும் பிரம்மோற்சவம் குறித்த நோட்டீஸை அங்கு பார்த்தோம்.
ஆலய அறங்காவலர் பெரியவர் திரு.நந்தகுமார் அவர்களிடம் பேசும்போது, சென்ற ஆண்டு நடைபெற்ற நமது உழவாரப்பணியை மெச்சியவர் இந்த ஆண்டும் நாம் உழவாரப்பணி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். (சென்ற ஆண்டும் இதே சமயம் பிரம்மோற்சவத்துக்கு முன்பாக அங்கு தளம் சார்பாக உழவாரப்பணி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.).
எப்பேற்ப்பட்ட வாய்ப்பு ! விட்டுவிடுவோமா?
ஜூன் 19 பிரம்மோற்சவம் துவங்கவிருக்கிற படியால் ஜூன் 15 ஞாயிறு இங்கு பணி செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளோம்.
அடுத்தடுத்து இரண்டு ஞாயிறு உழவாரப்பணி வருவதால் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை. நம் நிகழ்சிகளை பொறுத்தவரை நாம் தலைகளை எண்ணுவதில்லை. இதயங்களை தான் எண்ணுவோம். நான்கு பேர் வந்தாலும் மனமுவந்து வந்திருந்து கைங்கரியத்தில் பங்கேற்றாலே போதும்.
உழவாரப்பணியின் போது நிறைவேற்ற கோவிலின் தேவைகள் பற்றி விசாரித்தபோது, இரண்டு அத்தியாவசியத் தேவைகள் பற்றி குறிப்பிட்டார்கள்.
1) தீபம் ஏற்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன – அடுக்குகளுடன் கூடிய – தீப மேடை
2) உள்ளே பக்தர்கள் க்யூவில் நிற்கும் இடத்தில் காற்றோட்டம் இல்லை என்பதால் அங்கு மாட்ட HEAVY DUTY WALL MOUNTING FAN ஒன்று. (நாம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு வாங்கித் தந்தோமே அதே போல.)
இரண்டுமே நாம் வாங்கித் தரவிரும்பினாலும் எவ்வளவு தொகை நம்மால் திரட்ட முடியும் என்று தெரியாததால் இரண்டையும் வாங்கித் தருவதாக ஒப்புக்கொள்ள நமக்கு தயக்கம்.
“ஏதாவது ஒன்றை நிச்சயம் வாங்கித் தருகிறோம். எது உங்களுக்கு மிக முக்கியம் என்று நீங்களே சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டபோது, “விளக்கு ஏற்ற மேடை தான் முக்கியம். அதையே வாங்கிக் கொடுங்கள்!” என்று சொன்னார். காரணம், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சேவார்த்திகள், கோவிலின் சுவற்றில் விளக்கு ஏற்றி, ஏற்றி அந்த இடத்தையே பாழ் செய்து வருகின்றனர். (பார்க்க புகைப்படம்). எனவே உடனடித் தேவை தீப மேடை தான் என்று புரிந்தது.

நமக்கு தெரிந்து தீபமேடை எப்படியும் ரூ.15,000/- வரை வரும் என்று தெரிகிறது. கூடவும் ஆகலாம். எனவே தீபமேடையை மட்டுமே வாங்கித் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளோம். நிதி கூடுதலாக திரண்டால் ஃபேனும் வாங்கித் தர எண்ணியிருக்கிறோம்.
எனவே இந்த கைங்கரியத்தில் தாரளமாக உதவும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.
தீபமேடை மாடல் மற்றும் விலை குறித்து சரியாக தெரிந்துகொள்ள இன்று மாலை பாரிமுனை செல்லவிருக்கிறோம். (தீபமேடையை வாசகர்கள் யாராவது அவர்களே முன்னின்று வாங்கித் தருவதாக இருந்தால் மிகவும் நன்று. நம்மிடம் பணம் தரத்தேவையில்லை. அவர்களே நேரடியாக வாங்கித் தரலாம்.).
தொகை சேருவதை பொறுத்து ஃபேனும் வாங்கப்படும். எனவே வாசகர்கள் இந்த அரிய பணிக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற விஷயங்களை நாம் ஒப்புக்கொள்வதற்கு காரணம்… நாம் உழவாரப்பணி செய்யும் ஆலயங்களில் துப்புரவு பணி செய்வதோடு மட்டும் அல்லாமல் மிகவும் பயனுள்ள ஒன்றை செய்து நம் பணிக்கு ஒரு அர்த்தம் கொடுக்கவேண்டும் என்பதற்க்காகவே.
* மேற்படி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கோ-சாலை உள்ளபடியால், நாம் உழவாரப்பணிக்கு செல்லும்போது, பசுக்களுக்கு தீவனமும் வாங்கி செல்லப்படும்.

இந்த ஆலயத்திற்கு நாம் விரும்பும் மேற்படி பணிகளை செய்ய முடிந்தால் அதைவிட மிகப் பெரிய பாக்கியம் நமக்கு வேறு கிடைக்கமுடியாது. அரங்கன் துணை நின்று நல்லபடியாக நடத்தித் தரவேண்டும்.
அடுத்தடுத்து நரசிம்மரும், சேக்கிழார் நாயன்மாரும் நமக்கு மிகப் பெரிய பணியை தந்திருக்கிறார்கள். நாம் ஒரு கருவி. அவ்வளவே. செய்யப்போவது நீங்கள் தான். நண்பர்களும் வாசகர்களும் துணை நின்று வெற்றிகரமாக நடத்தித் தரவேண்டும்.
தீபமும் வால் மவுண்டிங் ஃபேனும் வாங்கித் தரும் கைங்கரியத்தில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பும் வாசகர்கள், கீழ்காணும் நமது தளத்தின் வங்கி கணக்கிற்கு தங்கள் நிதியை செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் குறைவாக இருக்கிறது. எனவே உங்கள் உதவி தாமதிக்காது விரைந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இரண்டு உழவாரப்பணிகளிலும் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.
பேரம்பாக்கம் பயணம் வேன் மூலம் இருக்கும். ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30க்கு புறப்பட்டு மீண்டும் மதியம் 1.30 க்கு திரும்புவோம். காலை உணவும், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படும்.
நன்றி!
=================================================================
கீழே நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அளித்திருக்கிறோம். இந்த அரிய பணிக்கு உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவும்படி வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நம் தளத்திற்கு விளம்பர வருவாயோ இதர வருவாயோ இல்லை என்பதால் நிதியளிக்கும்போது நம் தளத்தின் நிர்வாகச் செலவுகளுக்கும் சேர்த்து நிதியளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்களே அதற்குரிய BREAK UP ஐ தெரிவித்தால் நன்று.
Bank A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
=================================================================
* பேரம்பாக்கம் ஆலயத்தில் நடைபெற்ற நமது முந்தைய உழவாரப்பணி குறித்த பதிவு விரைவில் வெளியிடப்படும்.
* அதே போல வடலூர் பயணம் பற்றிய பதிவும் விரைவில் வெளியிடப்படும்.
=================================================================
Also check :
=================================================================
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
=================================================================
[END]
தங்கள் முன்னர் அறிவித்தது போல் சேக்கிழார் மணி மண்டப உழவார பணி தங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதால் உழவார பணி செய்யும் வாய்ப்பு miss ஆகி விட்டது என்று நினைத்தோம்/ ஆனால் 22ம் தேதி உழவார பணி செய்ய தேதி அறிவித்தது பற்றி மிக மகிழ்ச்சி அடைந்தோம். நம் தளத்திற்கு சேக்கிழாரின் ஆசி பரிபூரண மாக இருக்கிறது, அதனால் தான் சேக்கிழார் விழா தேதி தள்ளிபோய் மீண்டும் பணி செய்ய ஒரு opportunity கிடைத்திருக்கிறது.
பேரம்பாக்கம் நரசிமர் கோவில் பணிக்கு போன முறை நாம் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் நாம் அப்பொழுது ரைட் மந்திர வாசகர் இல்லை. அதனால் அந்த chance யை மிஸ் பண்ணி விட்டோம். தீப மேடை வாங்குவதற்கு நம்மாலான உதவியை செய்து இறை அருள் பெறுவோம்.நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார் என்பது ஆணித்தரமான உண்மை
பேரம்பாக்கம் நமக்கு பிடித்த எழில் கொஞ்சும் அழகான கோவில்.
நாம் குன்றத்தூர் மற்றும் பேரம்பாக்கம் உழவாரபனியில் கலந்து கொள்வோம் .
நன்றி
உமா .
நம் பணியை பாராட்டிய அதே பேரம்பாக்கம் கோவிலில் மறுபடியும் நமக்கு பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது பற்றி மிகவும் சந்தோசம்.
நாம் பணி செய்ய ஆரம்பித்ததில் இருந்து எல்லா பணிகளையும் போல இந்த முறையும் நம் ரைட் மந்த்ரா தூள் கிளப்பும்.