Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > “தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள். திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.

ramanaரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.

தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.

பகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள்? அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன? உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா? அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா? இது என்ன நியாயம்?’’ என்றார்.

பக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Ramanar-with-Maruthi.jpg

அது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா? அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்!’’ என்றார்.

அப்புறம் என்ன? மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.

நீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா? பகவான் ரமண மகரிஷியைத் தவிர!

ஓம்-நமோ-பகவதே-ஸ்ரீ-ரமணாய!!

நீ ஒருவனுக்குக் கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ பிறருக்குத் தீங்கு செய்யும்போது உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். –பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.

(நன்றி : balhanuman.wordpress.com)

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை சேவை மையத்தின் நிறுவனர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள்.

Ramanadhasanதிரு.பாலசுப்ரமணியன், பொள்ளாச்சியை அடுத்துள்ள மலையாண்டிபட்டணத்தில் ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை என்கிற சேவை மையத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்திவருகிறார். ரமணதாசன் என்பது இவரது புனைப்பெயர். இவர் ஒரு ஆசிரியரும் கூட.

இதுவரை சுமார் ஏழு லட்சம் பேருக்கு ‘ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை’ புத்தகத்தை இலவசமாக கொடுத்திருக்கிறார். நமது ஆண்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற போது வந்திருந்த அனைவருக்கும் அந்நூல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது சேவையில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் இவரது பகுதியை சுற்றியுள்ள சுமார் 100 பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு மணிநேரம் ஆன்மீக பயிற்சி வகுப்பு கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தேவாரம், திருவாசகம், திருக்குறள், உள்ளிட்ட பக்தி மற்றும் நீதி நூல்கள் அம்மாணவர்களுக்கு அது சமயம் போதிக்கப்படுகிறது. தவிர, மாணவர்களுக்கு தியானம் செய்வது குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.

நமது தளம் சார்பாக நாம் வெளியிட்ட ஆலய தரிசன விதிமுறைகள் நோட்டீஸ் இம்மாணவர்களிடம் படித்து காண்பிக்கப்பட்டு அவர்களும் அவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் முன்பு அளித்த “ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!” என்ற பதிவை பார்க்கவும்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/08/photo0092.jpg

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். தமது ஆன்மீக பயிற்சி  வகுப்பு மாணவர்கள் அனைவரிடமும் கூறி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு வந்திருக்கும் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையை படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இது ஆங்காங்கே நடப்பது வழக்கம் தான் என்றாலும் நமது தெரிந்த ஒருவருக்கே இந்த அனுபவம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. விரும்பிய தெய்வத்தை தொழுவது அவரவர் உரிமை, விருப்பம். ஒருவர் தானாக விரும்பி, ஒரு மதத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அந்த மதத்தை ஏற்பதும் மதம் மாறுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். அது குறித்து நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் ஒருவரது பொருளாதார சூழ்நிலையை பயன்படுத்தி அவருக்கு ஆசைவார்த்தைகளை கூறி மதமாற்றம் செய்வது தவறான செயல். பணத்துக்காக கடவுளை காட்டிக் கொடுக்கலாமா?

இறைவன் என்பவன் ஒருவனே. அப்படியிருக்கும்போது மதம் மாறுவதன் தேவை என்ன?

அடுத்த கோரிக்கை ஒரு அபலைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி பற்றியது. தெளிந்த நீரோடை போன்ற திருமண வாழ்க்கை அனைவருக்கும் சாத்தியமில்லை. அது கிடைக்காதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். நல்ல கணவனும் நல்ல மனைவியும் வாய்க்கப்பெற்றவர்கள், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொண்டு, அன்போடு இல்லறம் நடத்தி முடிந்த வரை அடுத்தவர்களுக்கு நன்மைகளை செய்து பரோபகார சிந்தனையுடன் வாழவேண்டும். பலருக்கு மறுக்கப்படும் ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது என்கிற எண்ணம் எப்போதும் வேண்டும். இறைவன் தந்த அருட்கொடையாகிய திருமண பந்தத்தை அலட்சியம் செய்வது மிகப் பெரிய தவறு.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போம்…

மதமாற்ற கூட்டத்திடம் சிக்கி படாத பாடு படும் குடும்பம்!

சார் நான் தங்கள் தளத்தின் நீண்ட நாள் வாசகி. பணத்தாசை காட்டி அப்பாவி மக்களை மதமாற்றம் செய்யும் கும்பலால் என் நிம்மதியே பறிபோய்விட்டது.

திருமணமாகி மனைவியுடன் தனியாக வசிக்கிறான் என் தம்பி. அவனது பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ஏதேதோ ஆசை வார்த்தைகளை கூறி அவனை மதமாற்றம் செய்துவிட்டனர். தொடர்ந்து வேறு சில உறவுகளையும் இதே போன்று ஆசை வார்த்தைகளை கூறி இழுத்துவிட்டனர். இறுதியாக என் அம்மாவையும் அவர்கள் மூளைச் சலவை செய்துவிட்டனர். என் அம்மா என் வீட்டில் இருந்துகொண்டு, எங்களுக்கு எதிராக எங்கள் மத உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டுவருகிறார். பெற்ற தாய் என்பதால் ஏதும் சொல்ல இயலாத நிலையில் தவிக்கிறேன்.

அவர்கள் அடுத்த குறி, பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் என் மகளும் மகனும் ஆவர். அவர்களிடமும் என் தம்பியை விட்டு ஏதேதோ ஆசை வார்த்தை கூறி மூளைச் சலவை செய்ய முயன்றுவருகின்றனர்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதனால் என் மன அமைதியே போய்விட்டது.

எனக்காகவும் எங்கள் குடும்பத்தினரின் மன அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும், என்றும் நாங்கள் சிவனின் திருவடியை மறவாதிருக்கவும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
பெயர் ஊர் வெளியிட விரும்பாத உங்கள் வாசகி.

================================================================

மறுமணமும் தோல்வியில் முடிந்து நிற்கதியாய் நிற்கும் அபலைப் பெண்!

என் நண்பருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண் அவர். அவருக்கு முதல் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் குடிக்கார கணவனின் சித்ரவதை தாங்காமல் திருமணமான ஒரு மாதத்திலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டார். விவாகரத்தும் பெற்றுவிட்டார். சரி… முதல் மணம் தான் இப்படி போய்விட்டதே… இரண்டாம் திருமணம் செய்துவைப்போம் என்று கருதி வேறு ஒரு இடத்தில் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைத்தார்கள். அந்த பையன் இந்த பெண்ணை மணமான நாள் முதல் தொடக்கூட இல்லையாம். சொல்லப்போனால் வீட்டுக்கே வருவதில்லையாம். கனவுகளை சுமந்து சென்ற அந்த பெண் தாய் வீட்டுக்கு கண்ணீரோடு ஓடிவந்துவிட்டாளாம். அடுத்தடுத்த இரண்டு திருமணமும் தோல்வியில் முடிந்துவிட்டதால் அப்பெண்ணுக்கு புத்தி பேதலித்துவிட தற்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறாராம். இவர்கள் வசதிமிக்கவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்கும்போதே கண்கள் கலங்கிவிட்டது. எந்த பிறவியில் எந்த பாவம் செய்திருந்தாலும் இந்த தண்டனை அந்த பெண்ணுக்கு அதிகம். இனியாகிலும் இறைவன் அவரை சோதிக்காமல் அவருக்கு ஒரு நல்ல மண வாழ்க்கையை தந்தருள வேண்டும். அந்த பெண் பரிபூரண குணமடைந்து திருமணம் செய்துகொண்டு கணவனுடன் சந்தோஷமாக வாழவேண்டும்.

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

பூமியின் பசுமை காக்கப்படவேண்டும்!

உலக சுற்றுச் சூழல் தினம் (WORLD ENVIRONMENT DAY) உலகம் முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு சுற்றுச் சூழல் தினத்துக்கான கருப்பொருள் “குரலை உயர்த்துங்கள். கடல் மட்டத்தை அல்ல!” என்பதாகும்.

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

Mother nature

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.

இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும். இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

இது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வரவேண்டும். நம் பூமியின் பசுமை பாதுககப்படவேண்டும் என்பதே நமது பொது பிரார்த்தனை.

நம் வாசகர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு, பூமியின் பசுமைக்கு துணை நிற்கவேண்டும்.

மாற்றம் நம்மிடம் இருந்தே துவங்கட்டும்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் கூட்டத்தால் நிம்மதி இழந்து தவிக்கும் நம் வாசகி, நிம்மதி பெறவும், அவரது குடும்பத்தினர் யாவரும் சைவ நீதியையும் சிவனின் திருவடியையும் மறவாதிருக்கவும், திருமண வாழ்க்கை அடுத்தடுத்து தோல்வியடைந்து நிற்கதியாய் நிற்கும் அந்த பெண்ணுக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்கவும் இறைவனின் அரிய இந்த பூமியின் பசுமை பசுமை காக்கப்படவும், அது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படவும் இறைவனை வேண்டுவோம். இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை சேவை மையத்தின் நிறுவனர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் எல்லா நலன்களும் வளமும் பெற்று அவர் எடுத்துக்கொண்டுள்ள பணியை செவ்வனே முடித்து பகவான் ரமண மகரிஷியின் புகழை மேன்மேலும் பரப்பவும் அருணாச்சலேஸ்வரரை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூன் 8,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சேவை செய்து வரும் திரு.குரு அவர்கள்.

6 thoughts on ““தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. குரங்குகளையும் தோழர்களாக நினைக்கும் பகவான் ரமணரின் உன்னத குணம் நாம் எல்லோரும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும்.தன்னை போல் பிறரையும் நினை என்பது அவர் நமக்கு கற்று தந்த பாடம்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். அவர் 7 லட்சம் பேருக்கு அருணாச்சல அட்சர மாலா புத்தகம் இலவசமாக கொடுத்து அருணாச்சலேஸ்வரரின் அன்புக்கும் பக்திக்கும் எடுத்துகாட்டாக திகழ்ந்திருக்கிறார். குழந்தைகளுக்கு ஆன்மிக பயிற்சியும் தியான பயிற்சியும் கொடுக்கும் அவரது செயல் போற்றத்தக்கது.

    நமது தளத்தின் ஆலய தரிசன விதிமுறைகளை அம்மாணவர்கள் கடைபிடிக்க அறிவுறித்தியது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகிகளுக்காக வும் மற்றும் அனைவருக்காகவும் பிரார்தனை செய்வோம்.

    நம்மால் முடிந்தவரை சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம். பிளாஸ்டிக் பொருட்களை உபயோக படுத்தாமல் இரூப்போம்.

    லோக சமஸ்த சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா .

  2. மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் கூட்டத்தால் நிம்மதி இழந்து தவிக்கும் நம் வாசகி, நிம்மதி பெறவும், அவரது குடும்பத்தினர் யாவரும் சைவ நீதியையும் சிவனின் திருவடியையும் மறவாதிருக்கவும், திருமண வாழ்க்கை அடுத்தடுத்து தோல்வியடைந்து நிற்கதியாய் நிற்கும் அந்த பெண்ணுக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்கவும் இறைவனின் அரிய இந்த பூமியின் பசுமை காக்கப்படவும், அது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படவும் இறைவனை வேண்டுவோம். இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை சேவை மையத்தின் நிறுவனர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் எல்லா நலன்களும் வளமும் பெற்று அவர் எடுத்துக்கொண்டுள்ள பணியை செவ்வனே முடித்து பகவான் ரமண மகரிஷியின் புகழை மேன்மேலும் பரப்பவும் அருணாச்சலேஸ்வரரை வேண்டுவோம். –
    நன்றி ..

  3. இந்த வாரம் பிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை வைத்திருக்கும் சகோதரியின் துயரத்தை நாங்களும் அனுபவித்து இருக்கிறோம். எங்களது அண்ணன் மகனுக்கு ஐந்து வயதில் மூளைக்காய்ச்சல் வந்தது, இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்ட இந்த மதமாற்றக் கும்பல் அவர்களை மதம் மாற்றிவிட்டனர்……….பெயர் மாற்றி ஞானஸ்தானம் கூட செய்து விட்டனர்………….ஆனால் சில வருடங்களில் எங்களின் இடைவிடாத இறை நம்பிக்கையினால் என் அண்ணன் குடும்பத்தினர் அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு தற்போது நம் ஆலயங்களூக்குச் செல்வது, நமது விழாக்களைக் கொண்டாடுவதென இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டனர். இதே போல அச்சகோதரியின் குடும்பத்தினரும் விரைவில் இறைவன் அருளால் மனம் திரும்புவர் . இரண்டாவது கோரிக்கை வேதனையானது…..தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக ஆகிவிட்டது…….அச்சகோதரியின் வாழ்விலும் அமைதி திரும்ப வேண்டுகிறேன். இப்புவியின் வளம் காக்க உறுதி எடுக்கிறேன். நன்றி!……

  4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு… அன்பே கடவுள்’

  5. மறுமணமும் தோல்வியில் முடிந்து நிற்கும் பெண்ணிற்கு சிவனருளால் அடுத்த மண வாழ்கை நன்கு அமையும் …கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திலுள்ள மணம் தவிழ்ந்த புத்தூரில் மீனாட்சி உடனுறை சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஊர் “புத்தூர்” என்று முன் காலத்தில் அழைக்கப்பட்டது. சுந்தரரருடைய திருமணத்தைத் தடுத்து அவரை ஆட்கொண்ட தால் மணம் தவிர்த்த புத்தூர் என்றும், பின்னர் அது மருவி மணம் தவிழ்ந்த புத்தூர் என வழங்கப்படுகிறது. சடைய நாயனார், இசைஞானியார் தம்பதிக்கு திருநாவலூரில் பிறந்தவராவார் சுந்தரர். இவருக்கு தந்தையிட்ட பெயர் நம்பி ஆரூரன் அந்நாட்டு மன்னரான நரசிங்க முனையரையர் சுந்தரரின் சிறு வயது அழகை பார்த்து அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியுடன் தத்தெடுத்து தானே வளர்த்து வந்தார். சுந்தரரின் பதினாறாவது வயதில், அவருக்குத் திருமணம் நடத்திட நினைத்த மன்னர் இன்றைய பண்ருட்டியை அடுத்த புத்தூரில் வாழ்ந்திருந்த சடங்கவி என்ற சிவாச்சாரியாரின் மகளான கமலஞானப் பூங்கோதையினைத் தேர்வு செய்து நிச்சயம் செய்தார்.திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, முதியவர் ஒருவர் சுந்தரரின் திரு மணத்தை தடுத்து நிறுத்தினார். அவர் சுந்தரரை பார்த்து, “அப்பனே! நீ எனது அடிமை ! உன் தகப்பன், பாட்டன் எல்லோரும் எனக்கு அடிமை! என் அனுமதியின்றி நீ மணம் முடிக்க முயன்றது குற்றமாகும்!” என்றார். அதற்கு சுந்தரர், “நான் அடிமை என்பதற்கு அத்தாட்சி என்ன?” என்று கேட்க, “இதோ உன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை ஓலை” எனக்கூறி ஓர் ஓலையை நீட்டினார் முதியவர். அதைப் படித்துக் கூடப் பார்க்காமல் கிழித்து, அக்னியில் இட்டார் சுந்தரர்.முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. “இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு செல்வோம் வா! அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறினார் முதியவர்.அதற்கு சுந்தரரோ, “அப்படியோர் வழக்கு இருக்குமெனில் அதை முடித்த பின்னரே மணம் முடிப்பேன்” எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார். பிறகு இந்த வழக்கு திருவெண்ணெய் நல்லூரில் நடந்தது யாவரும் அறிந்ததே .சுந்தரருடன் மணம் முறிந்த நிலையில் கமலஞானப் பூங்கோதை வழக்கு நடந்த இடத்திற்கு சென்று இறைவனிடம் முறை யிட்டார். ஈசன் அவருக்கு காட்சியளித்து கமலஞானப் பூங்கோதையை அவர் பிறந்த ஊரான மணம் தவிழ்ந்த புத்தூர் வந்து தவம் இயற்றி என் திருவடியை வந்து சேர் எனக் கூறினார். அந்த அம்மையாரும் திரும்பி இந்த ஸ்தலத்திற்கு வந்து இறைவனுடைய திருவடியை அடைந்தார். பின்னர் சிவனருளால் அவரை திருமணம் செய்து கொண்டாராம் சுந்தரர்.இங்கு ஒரு திருக்குளம் இருந்ததாகவும் அதில்தான் மணம் முறிந்த உடன் வெறும் கையுடன் சென்ற சுந்தரர் வந்த தேர், குதிரை எல்லாம் சென்று மறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு திருமணத்தடை பரிகார ஸ்தலமாகும். திருமணத்தில் ஏற்படும் தடைகள் நீங்கவும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் இக்கோவிலில் திங்கள் கிழமைகளில் பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது..எனவே மணம் தவிழ்ந்த புத்தூர் மீனாட்சி உடனுறை சொக்கநாதீஸ்வரர் திருகோயில் சென்று திங்கள் கிழமைகளில் பரிகார பூஜைகள் அக்கோயில் முறைப்படி செய்து ஈசன் அருளால் நல் வாழ்க்கை அமைத்து கொள்ளவும் …அருகில் உள்ள சிவாலயத்தில் தொடர்ந்து 8 ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில்,8 வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து ,புனுகு பூசி பானகம்,சர்க்கரைப்பொங்கல் படைத்துஅர்ச்சனை செய்து வரவும் .ஒருமுறை வளர்பிறை அஷ்டமி நாளில் திருவிசநல்லூர்[கும்பகோணம் அருகில் ] சென்று அங்கு உள்ள சவுந்தரநாயகி உடனுறை சிவயோகிநாதர் திருகோயில் சென்று அங்கு உள்ள யுகத்திற்கு ஒரு பைரவராக[நான்கு பைரவர்கள் ] தோன்றிய சதுர்கால பைரவர்களை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும் …இதனை வளர் பிறை அஷ்டமியில் செய்வது சிறப்பு ..அசைவம் தவிர்த்து விடவும் …பதிகம் 48 நாட்கள் எப்போதும் படித்து வரவும் …
    மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
    நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
    தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
    மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
    நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
    என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
    பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
    நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
    அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
    தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
    தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
    தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
    கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
    அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
    நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
    மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
    நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
    அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
    என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
    நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
    சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
    கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
    நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
    நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
    சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
    நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

  6. மதமாற்ற கூட்டத்திடம் சிக்கி தவிக்கும் குடும்பம் மீண்டு வர, பதிகம் தினமும் 48 நாட்கள் படித்து வரவும் எப்போதும் …

    திருச்சிற்றம்பலம்

    செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே.

    சித்த னேதிரு ஆலவாய் மேவிய
    அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
    சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பக்க மேசென்று பாண்டியற் காகவே.

    சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
    அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
    துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
    அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.

    தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
    அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
    வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
    பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.

    செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
    அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
    கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
    பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.
    .

    தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
    ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.

    தாவி னான்அயன் தானறி யாவகை
    மேவி னாய்திரு ஆலவா யாயருள்
    தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.

    எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
    அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
    குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    அப்பன் ஆலவா யாதி யருளினால்
    வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
    கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
    செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

    திருச்சிற்றம்பலம்[சம்பந்தர் ]

    ………………………………………………………………………………..

    திருச்சிற்றம்பலம்

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
    அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
    புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
    உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
    இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
    இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்
    துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்
    சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.

    வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
    மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
    நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
    நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங்
    காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
    கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்
    பாராண்டு பகடேறித் திரிவார் சொல்லும்
    பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.

    உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
    உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
    செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
    நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
    நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
    நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்
    சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
    சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.

    என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
    இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
    சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்
    சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
    ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
    உறுபிணியார் செறலொழிந்திட் டோ டிப் போனார்
    பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
    புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

    மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
    மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
    தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்
    செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
    நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
    நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
    காவலரே யேவி விடுத்தா ரேனுங்
    கடவமலோங் கடுமையொடு களவற் றோமே.

    நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
    நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
    அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
    அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
    தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
    ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
    பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
    பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே.

    ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை
    இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
    தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
    சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
    நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
    நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன
    வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
    வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.

    சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
    சாம்பலும் பாம்பு மணிந்த மேனி
    விடையுடையான் வேங்கை யதள்மே லாடை
    வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த
    உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
    உம்மோடு மற்று முளராய் நின்ற
    படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
    பாசமற வீசும் படியோம் நாமே.

    நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
    நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
    ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்
    அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
    தேவாதி தேவன் சிவனென் சிந்தை
    சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து
    கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங்
    குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே.

    திருச்சிற்றம்பலம்[அப்பர்]
    ………………………………………………………………………………………

    திருச்சிற்றம்பலம்

    வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
    ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்
    ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்
    கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்
    தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த
    நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்
    சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
    துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்
    பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்
    புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
    திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
    மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்
    கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
    அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்
    அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
    செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
    பீடழியச் சாடி யருள்கள் செய்த
    முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்
    முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
    அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்
    அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
    சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    தூயவன்காண் நீறு துதைந்த மேனி
    துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
    தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
    சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்
    ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்
    அடியார்கட் காரமுத மாயி னான்காண்
    சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
    பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
    நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
    பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி
    பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்
    சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
    வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
    மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
    வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
    கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்
    காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்
    செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    கலையாரு நூலங்க மாயி னான்காண்
    கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
    மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
    மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்
    தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
    தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட
    சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
    .

    திருச்சிற்றம்பலம்[அப்பர்]
    ………………………………………………………………………………………………………….
    ஒருமுறை குண்டடம் வடுகநாதர் கோயில்[பைரவர் கோயில்] சென்று வழிபடவும் …குண்டடத்து பைரவரின் திருநாமம், ஸ்ரீகாலபைரவ வடுகநாத சுவாமி. இங்கு
    உறையும் ஈசனின் திருநாமம் விடங்கீஸ்வரர்.
    அம்பாள் திருநாமம். விசாலாட்சி.என்றாலும்
    பைரவர் கோயில், வடுகநாதர் கோயில் என்று சொன்னால்தான் பலரும் இந்தக்
    கோயிலை அடையாளம் காட்டுகிறார்கள். அசைவம் தவிர்க்கவும் …பைரவர் தடுத்திடுவார் ,காத்திடுவார் …பைரவர் பூசனை தொடர்ந்து உங்கள் வீட்டில் செய்து வரவும் …அஷ்டமி நாட்களில் [வளர்பிறை ,தேய்பிறை ]பைரவர் பூசனை திருகோயில்களில் தவறாமல் செய்து வரவும் …உங்களை விட்டு செண்டவர்கள் தேடிவருவர் …அன்பே சிவம் ….அதுவே நிஜம் …குண்டடம், பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ….
    தாராபுரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவு…..

    .”மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
    முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
    றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
    அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ
    டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்
    கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
    காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *