Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > அருட்பார்வை பெற்றுத் தந்த கண் பார்வை – Rightmantra Prayer Club

அருட்பார்வை பெற்றுத் தந்த கண் பார்வை – Rightmantra Prayer Club

print
து நடந்து 50 – 60 வருஷம் இருக்கும். சுவாமிநாதன்னு ஒருத்தர் சங்கர மடத்துல கைங்கரியம் பண்ணிட்டு இருந்தார். பெரியவா மேல அவருக்கு அதீத பக்தி. மரியாதை. அவருக்கு கல்யாணமாகி சில வருஷம் கழிச்சி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சுவாமிநாதனும் அவர் மனைவியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா அவங்க சந்தோஷம் நீடிக்கலை. குழந்தைக்கு கண்ல ஏதோ குறைபாடு. பார்வையே இல்லாம இருந்தது கண்டுபிடிச்சாங்க.

“ஈஸ்வரா உன்னோட அனுகிரகத்தால குழந்தை பிறந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டோம். கடைசீயில அதுக்கு இப்படி பார்வையில்லாம பண்ணிட்டியே…” அப்படின்னு கதறினார் சுவாமிநாதன். ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடினார். “கரு உருவாகும்போதே குறைபாடோட உருவாயிடுச்சு. ஒன்னும் பண்ணமுடியாது” அப்படின்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.

Maha Periyava Aseervadh copy copy

என்ன பண்றதுன்னு தெரியாம சுவாமிநாதன் இடிஞ்சி போய் உட்கார்ந்திருந்தபோது, எதுக்கும் பெரியவா கிட்டே குழந்தையை ஒரு தரம் காண்பிப்போம் அப்படின்னு நினைச்சி ஒரு நாள் குழந்தையை தூக்கிட்டு நேரா மடத்துக்கே வந்துட்டார்.

பெரியவா முன்னாள் தன்னோட குழந்தையை கிடத்தி, “இந்த குழந்தையோட பார்வைக்கு நீங்க தான் ஏதாவது வழி சொல்லணும் பெரியவா…” அப்படின்னு கதறினார்.

பெரியவா குழந்தையோட கண்ணை உத்துப் பார்த்தார். மடத்து சிப்பந்திகளை கூப்பிட்டு கொஞ்சம் கல்கண்டு எடுத்துட்டு வரச்சொல்லி, குழந்தை மேல் ஆசீர்வாதம் பண்ணுவது போல அதை போட்டார். ஒரு கணம் கண்களை மூடி தியானித்தார்.

“குழந்தையை கொண்டு போ… கவலைப்படாதே எல்லாம் சரியாயிடும்” என்றார்.

சுவாமிநாதனுக்கு ஒரே சந்தோஷம். ‘பெரியவாவே சரியாயிடும்னு சொல்லிட்டார்’. ‘பெரியவாவே சரியாயிடும்னு சொல்லிட்டார்’ என்று சொல்லி சொல்லி பரவசப்பட்டார்.

(அவர் ஏன் எடுத்தவுடனேயே பெரியவா கிட்டே போகலேன்னு உங்களுக்கு தோணலாம். மனுஷா கைவிட்ட பிறகு தெய்வத்துக்கு கிட்டே ஓடி வந்திருக்கார். அவ்ளோதான்.)

அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. பெரியவாவின் வாக்கும் பொய்க்கவில்லை. (அது வார்த்தையல்ல… சத்தியவாக்கு என்பது தான் உங்களுக்கு தெரியுமே…!) குழந்தைக்கு மெல்ல மெல்ல பார்வை திரும்ப வந்தது.

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே!

(இந்த திருமந்திரப் பாடலை நாம ஏன் அடிக்கடி பதிவுகளில் பயன்படுத்துகிறோம் என்றால், குருவருள் இருந்தால் எப்பேற்ப்பட்ட ஊழ்வினைகளை துடைத்தெறிந்துவிட முடியும். அவரவர் தகுதிக்கேற்ப, வினைகளை குருமார்கள் பிடித்து பிசைந்து மாற்றிவிடுவார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவும், எப்பேர்ப்பட்ட சோதனை வந்தாலும் உங்கள் தெய்வபக்தியும் குருபக்தியும் குறையக்கூடாது என்பதற்காகவும் தான்!)

அந்த குழந்தை வளர்ந்து பெரிய மனுஷியாகி, கல்யாணமாகி, தற்போது ‘அனுராதா’ என்கிற ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிவிட்டாள். சுவாமிநாதன் தற்போது மகளுடனும் பேத்தி அனுராதாவுடனும் பெருங்களத்தூரில் வசித்து வருகிறார்.

சுவாமிநாதன் அவ்வப்போது காஞ்சிபுரம் வந்து காமாட்சியம்மனை தரிசித்துவிட்டு அப்படியே நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் வீட்டுக்கும் வந்து அவரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு செல்வார்.

– திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் நம்மிடம் கூறியதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.

==================================================================

* நமது பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பி அது நிறைவேறிவிட்டதாக மொத்தம் நான்கு வாசகர்கள் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். அவை விரைவில் சிறப்பு பதிவாக அளிக்கப்படும்.

* வேலையில்லாமல் அவதிப்படுவோர் மற்றும் பணியிடத்தில் குறைந்த ஊதியம், அங்கீகாரமின்மை, தேக்கநிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவதியுறுவோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு அடுத்த வாரம் இடம்பெறும். அது தொடர்பான ஆலய தரிசன பதிவை எழுதி வருகிறோம். அந்த பதிவை வெளியிட்ட பின்னரே வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பதிவை அளிப்பது பொருத்தமாக இருக்கும். வாசகர்கள் சற்று பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

==================================================================

வேலை தேடுவோர் & வேலையில் பிரச்சனை உள்ளோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு!!

நல்ல வேலை வேண்டுவோர், திறமையும் தகுதியுமிருந்தும் நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுவோர் ஆகியோருக்கு சிறப்பு பிரார்த்தனை அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. மேற்கூறிய பிரச்சனை உள்ள அனைவரும் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். அடுத்த வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்கக்கூடியவர் இது தொடர்பான ஒரு திருக்கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளவர். எனவே நம்பிக்கையுடன் சமர்பிக்கவும்.

உங்கள் கோரிக்கைகளை சற்று விரிவாக, தமிழிலோ ஆங்கிலத்திலோ உங்கள் முழு பெயர், ஊர், வயது, மற்றும் உங்கள் பிரச்னை ஆகியவற்றை குறிப்பிட்டு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தமிழில் டைப் செய்ய இயலாதவர்கள், ஒரு தாளில் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

Rightmantra Sundar | Mobile : 9840169215
E-mail :
editor@rightmantra.com  | Website : www.rightmantra.com
Facebook : Righmantra Sundar (Pers)  | www.facebook.com/RightMantra (Official)

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : மகா பெரியவாவிடம் வேதம் படித்த பெருமையையுடைய அவரது மாணவர் திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்

பெரியவா கடாக்ஷம் - சர்வ மங்களம் உண்டாகட்டும்!
பெரியவா கடாக்ஷம் – சர்வ மங்களம் உண்டாகட்டும்!

திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்த்ரிகளுடனான நமது சந்திப்பு நம் தளத்தில் தொடராகவே வந்துவிட்டபடியால் சாஸ்த்ரிகளை பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை எனக் கருதுகிறோம்.

பெரியவாவிடமே வேதம் படிக்கும் பாக்கியம் பெற்றவர் எனும்போது அதைவிட வேறு என்ன சிறப்பு ஒருவருக்கு இருக்கமுடியும்.

சாஸ்திரிகளின் மகன் திரு.சியாமா சாஸ்திரிகளை தொடர்பு கொண்டு நமது வாராந்திர பிரார்த்தனை கிளப் பற்றியும் அதில் பல்வேறு அருளாளர்கள் ஒவ்வொரு வாரமும் தலைமை ஏற்று நமக்காக பிரார்த்திப்பது பற்றியும் விளக்கி இந்த வார பிரார்த்தனைக்கு திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்த்ரிகள் தலைமை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டோம். பிரார்த்தனை பதிவை அளித்த பின்னர் சாஸ்த்ரிகளையே தொடர்புகொண்டு யார் யாருக்கு பிரார்த்தனை செய்யவேண்டும் என கூறுவதாகவும் தெரிவித்தோம்.

மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புகொண்டார். அவருக்கும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவிருக்கும் அவர் தந்தைக்கும் மனமார்ந்த நன்றி.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

==================================================================

இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் அனைவரை பற்றியும் ஒரு சிறு குறிப்பு.

முதல் கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகர் திரு.ஆனந்த் நம் தளத்திற்கு புதியவர் என்று கருதுகிறோம். குடும்பத்துடன் ஒன்று சேரவேண்டும் என்று கோரிக்கை அனுப்பியிருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையினால் குடும்பத்தை பிரிந்திருப்பார் போல தெரிகிறது. என்ன காரணம் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும் அவர் மீது எந்த தவறும் இருக்காது என்று நம்புகிறோம். அப்படி ஏதேனும் இருந்தால் அதை திருத்திக்கொள்ளவேண்டும். அப்போது தான் இந்த பிரார்த்தனை பலிக்கும். அவருக்கு மட்டுமல்ல, நமது பிரார்த்தனை கிளபுக்கு கோரிக்கை அனுப்பும் எவரும், தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொண்டு பின்னர் அனுப்பவும்.

அடுத்து நண்பர் ராஜா. இவர் வெளிமாநிலம் ஒன்றில் வசிக்கிறார். அவர் கோரிக்கை அனுப்பியிருப்பது உடன் பிறந்த தங்கைக்காக அல்ல. தங்கை போல தான் பாவித்து வரும் ஒரு அபலைப் பெண்ணுக்காக. அவர் நல்ல உள்ளத்திற்கு அவர் கோரிக்கை நிச்ச்சயம் நிறைவேறும்.

அடுத்து கடைசி கோரிக்கை அனுப்பியிருக்கும்நண்பரை கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தெரியும். நல்லவர். நமது பணிகளுக்கு இயன்றபோதெல்லாம் உதவுபவர். ஆழ்ந்த இறை நம்பிக்கையும் குரு பக்தியும் மிக்கவர். அண்மையில் பேசும்போது தன் தங்கையின்  வாழ்க்கையில் எதிர்பாராமல் வீசிய புயல் குறித்து நம்மிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டார். அவருக்கு ஆறுதல் அளிக்கவும் அவரும் அவர் பெற்றோரும் இதனால் படும் மனவேதனை முடிவுக்கு வரவும் அவர் தங்கைக்கு நல்லதொரு வாழ்க்கை இனி அமையவும் நாம் தான் நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை அவர் கூறிய வார்த்தைகளின்படி சமர்பித்திருக்கிறோம்.

==================================================================

1)  Want family re-union

Deart sir,

I am Ananth, aged 59, presently at neyveli.

I am separated from my wife named Raji, and with my daughter named Aarthi.

Please pray for reunion with Raji and Aarthi.

Thanks with warm regards,
Ananth

==================================================================

2) Relief for my sister!

Dear Sir,

This week prayer club can u pls pray for my younger sister?
She is facing several years of domestic harassment, pls pray for her peaceful & prosperous leading life as she desired.
I could not tell everything in detail as it may affect her. She just want to get rid of harassment & lead a peaceful life.
Regards,
P.Raja

==================================================================

3) தங்கையின் வாழ்வில் வசந்தம் வீசவேண்டும்!

அனைவருக்கும் வணக்கம்….

என்ன சொல்வது எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. கலங்கியபடி தான் இதை சொல்கிறேன்.

என் தங்கைக்கு பார்த்து பார்த்து சென்ற ஆண்டு திருமணம் செய்துவைத்தோம். ஆனால், அவள் வாழ்க்கை எதிர்பார்த்தது போல அமையவில்லை. மாப்பிள்ளையின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டாள்.

எல்லாம் ஆராய்ந்து பல ஜோதிடர்களை கலந்து ஆலோசித்து ஜாதகமெல்லாம் பார்த்து தானே திருமணம் செய்துவைத்தோம். அப்படியிருந்தும் ஏன் இப்படி ஆயிற்று என்று புரியவில்லை. போலியான ஜாதகத்தை தயார் செய்து எங்களை ஏமாற்றியிருக்கிறார்களோ என்று சந்தேகமாய் இருக்கிறது. அதை உறுதி படுத்துவது போல சில தகவல்கள் கிடைத்தன.

எப்படியோ தென்றல் வீசவேண்டிய என் தங்கை வாழ்வில் புயல் வீசிவிட்டது. அவள் நிலை கண்டு நானும் என் பெற்றோரும் வருந்தாத நாளே இல்லை. ஒவ்வொரு நொடியும் நரகமாய் இருக்கிறது. ஆறுதல் வேண்டி அவன் அருட்பார்வை வேண்டி திருப்பதி உள்ளிட்ட பல இடங்களுக்கு பாதயாத்திரை போய் வந்தோம்.

இந்தளவில் என் தங்கை பத்திரமாக எங்களிடம் திரும்பி வந்தாளே என்று மனம் ஆறுதல் அடைகிறது. சுமூகமான (MUTUAL CONCERN)  விவாகரத்திற்கு ஏற்பாடு செய்துவருகிறோம். அதற்கு அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அனைத்தும் நல்லபடியாக முடிந்து அவளுக்கு புதிய, நல்லதொரு வாழ்க்கை அமைந்து அவள் வாழ்வில் வசந்தம் வீசவேண்டும். எங்கள் துன்பமும் சோதனையும் முடிவுக்கு வரவேண்டும்.

சக ரைட்மந்த்ரா வாசகர்களை இதற்காக பிரார்த்திக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

– பெயர் ஊர் வெளியிட விரும்பாத வாசகர்

==================================================================

பொது பிரார்த்தனை

வேத ரக்ஷனை, கோ ஸம்ரக்ஷணம், ஆலய புனருத்தாரணம்!

மகா பெரியவா தான் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி வலியுறுத்தி வந்த விஷயங்களில் மிக முக்கியமான மூன்று : வேத ரக்ஷனை, கோ ஸம்ரக்ஷணம், ஆலய புனருத்தாரணம் இவை தான்.

18fr_Ramar_2_JPG_1848757g

நம் இந்து மதத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள் வேதங்கள். ஆனால் இன்று வேதங்களை போதிக்கும் வேதக்கல்வி முறைகளின் நிலை என்ன? வேத பாடசாலைகளின் நிலை என்ன? தமிழகத்தில் உள்ள வேத பாடசாலைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். வேதங்களின் மீது பற்றும், அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தீவிர சிந்தனையும் உடையவர்கள்கூடத் தங்கள் பிள்ளைகளை அல்லது பிள்ளைகளில் ஒருவனை வேதம் படிக்கப் பாடசாலைக்கு அனுப்புவதில்லை.

இந்நிலை மாறவேண்டும். வேதம் கற்பவர்களை ரட்சிக்கவேண்டும்!

“இந்த காலகட்டத்தில் லௌகீகக் கல்வி பயிலுதலே நிறையப் பணம் சம்பாதிக்க வழி என்று அனைவரும் எண்ணும் காலம். வேத அத்யயனம் செய்பவனுக்கும், தான் சுகவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே? ஆகவே அவர்களும் செல்வம் பெற்று வாழ விரும்பினால், அதைத் தவறு என்று கூற வாய்ப்பில்லை. புரோஹிதர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும். நாமே பொருளும் ஊக்கமும் தராமலிருந்தால், அவர்கள் எப்படித்தான், வேத அத்யயனம் செய்யவேண்டும் என்று இறங்குவார்கள்? ஆகவே, நாம் வேதம் கற்றுத் தருபவர்களை மரியாதையுடன் நடத்தி, ஆதரவளிக்க வேண்டும். மேலும், அவர்களும் கர்வத்திற்கும் பேராசைக்கும் இடங்கொடாமல் சிரத்தையோடு வேத அத்யயனம் செய்வதில் உதவ வேண்டும்”  –  சிருங்கேரி ஆச்சார்யாள்  ஒரு முறை கூறியது.

Ko-Sala

அடுத்து கோ-ஸம்ரக்ஷணம். கோ-ஸம்ரக்ஷணம் குறித்து நம் தளத்தில் எண்ணற்ற பதிவுகள் வந்துள்ளன. பசுக்களை அவற்றுக்கு உரிய முறையில் தீவனம் முதலானவைகளை தந்து பராமரிப்பது பற்றியும், அறுப்புக்கு போகும் பசுக்களை காப்பாற்றி கொண்டு வந்து போஷிக்கவேண்டியதன் அவசியத்தையும் அடிக்கடி பெரியவா குறிப்பிடுவார்.

Siva temple ruins

அடுத்து ஆலய புனருத்தாரணம். நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் சிதிலமடைந்து ஒரு வேளை பூஜைக்கு கூட வழியின்றி உள்ளன. புதுப் புது கோவில்களாக கட்டுவதற்கு பதில் மேற்கூறிய ஆலயங்களை புனருத்தாரணம் செய்து அங்கு மூன்று வேளை பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்யமுடியும். அதன் மூலம் நமது பாரம்பரியத்தின் அடையாளங்களாக விளங்கும் ஆலயங்கள் காப்பாற்றப்படும். அந்த சர்வேஸ்வரனும் மனம் குளிர்வார்.

மகா பெரியவாவின் மேற்கூறிய மூன்று கனவுகள் நிறைவேறவேண்டும். அதற்குரிய சூழல் கனியவேண்டும். நமது பங்கை நாம் அதில் ஆற்றவேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

=============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Check for our bank account and other details….

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநெய்வேலியை சேர்ந்த திரு.ஆனந்த் அவர்கள் தனது மனைவி மகளுடன் மீண்டும் ஒன்று சேர்ந்து எஞ்சிய காலத்தை தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாககழிக்கவும், நண்பர் திரு.ராஜா அவர்களின் சகோதரி படும் துன்பம் முடிவுக்கு வரவும், அவருக்கு நிகழும் கொடுமைகள் நீங்கி அவர் சந்தோஷமாக வாழவும், பெயர் வெளியிட விரும்பாத நம் நண்பரின் தங்கைக்கு புதியதோர் வாழ்க்கை மலர்ந்து அவரது வாழ்வில் வசந்தம் வீசவும் எல்லாம் வல்ல இறைவனையும் நமது குரு மகா பெரியவாவையும் பிரார்த்திப்போம்.

மேலும் பெரியவாவின் மிக முக்கியமான மூன்று விருப்பங்களான வேத ரக்ஷனை, கோ ஸம்ரக்ஷணம், ஆலய புனருத்தாரணம் ஆகியவை நல்ல முறையில் நடந்து அதனால் மாதம் மும்மாரி பொழிந்து பசுமை தழைக்கவும் வையகம் சிறக்கவும் பிரார்த்திப்போம்.

மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ அன்னை காமாக்ஷியை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 19, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் அர்ச்சகராக சேவையாற்றி வரும் திரு.சேஷாத்ரி பட்டர்.

6 thoughts on “அருட்பார்வை பெற்றுத் தந்த கண் பார்வை – Rightmantra Prayer Club

 1. அனைவரும் மன அமைதி பெற வேண்டூம். குரு பாதம் பணிவோம்.

  எந்த பாவத்துக்கும் மன்னிப்பு உண்டு. அனால் ஒரு பெண்ணை மணம் செய்து அவளை கொடுமை படுத்துவர்கள் என்றும் நல கதி அடைய மாட்டார்கள்.

  அவர்கள் முகம் பார்த்தல் மிக மிக பாவம். சகோதரி அந்த பாவி வீட்டில் இல்லாமல் இருப்பது மன நிம்மதி தருகிறது. நல வாழ்வு அடைந்து சகோதரி நலமாக வாழ்வார்.

  குரு பாதம் பணிந்து வேண்டுவோம்.

  கே. சிவசுப்ரமணியன்

 2. சுந்தர் அண்ணா..

  அருள் மழை பொழிந்த பதிவு என்று தான் சொல்ல வேண்டும்.

  தாங்கள் மேற்கோள் காட்டியது போல், எந்த சூழ்நிலையிலும் குரு பக்தியையும் இறை பக்தியையும் விடாது இருக்க வேண்டும்.குரு பக்தி மட்டுமே இறை பக்திக்கும் வழி செய்கிறது
  என்பது இன்றைய பதிவின் சாராம்சம்.

  அண்ணா..தங்களுடன் சேர்ந்து செய்த கடந்த வார பிரார்த்தனை இன்னும் என்னை விட்டு அகல வில்லை. இந்த வாரம் பிராத்தனைக்கு சமர்ப்பித்த அனைவரது வாழ்விலும்,அவர்களது கோரிக்கை நிறைவேறிட,எல்லாம் வல்ல குருவருளும்,திருவருளும் துணை செய்திட, நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

  மிக்க நன்றி அண்ணா..

 3. வணக்கம்…….. இந்த வாரம் பிரார்த்தனை கோரிக்கை சமர்ப்பித்துள்ளவர்கள் அனைவரின் துயரும் தீர வேண்டியும் பொதுப் பிரார்த்தனைகள் நிறைவேறவும் குருவருளையும், திருவருளையும் வேண்டுகிறோம்…….

 4. திரு.சுவாமிநாதன் அவர்களின் மகளுக்கு தன் பார்வையாலேயே பார்வை கொடுத்த பெரியவாளின் அற்புதம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
  அவரின் கடைக்கண் அருள் பெற்றால் போதும் நாம் பெரும் பேறு பெற்றோம்.
  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் சாஸ்திரிகள் அவர்களை பற்றி நாம் நம் பதிவின் மூலம் அறிந்து பெரும் பேறு பெற்றோம்.
  இந்த வார கோரிக்கை அனுப்பிஉள்ள அனைவருக்கும் கோரிக்கை நிறைவேற பிரார்த்திப்போம்.
  பொது பிரார்த்தனை பற்றி சார் கூறியுள்ளது மிகவும் முக்கியமானது.
  நம்மால் முடிந்தவரை நாம் அதை நிறைவேற்றுவோம். அதன் புண்ணியம் நம்மை மட்டுமல்ல நம் தலைமுறையையும் காக்கும்.
  என்றும் அன்புடன்.

 5. மகா பெரியவாவின் பார்வையும், அருட்கடாக்ஷமும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கும். தீயில் இட்ட பஞ்சு போல் நம் கவலைகளும் தீரும்.

  மேலே உள்ள பெரியவா படம், நம்மை அவர் வாஞ்சையுடன் அழைப்பது போல் உள்ளது. அவரது கரத்தையும், பாதாரவிந்தங்களையும் இறுக பற்றிக் கொள்வோம்.

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளுக்கு என் நமஸ்காரங்கள்..

  குருவருளாலும் திருவருளாலும் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். மகா பெரியவாவின் மூன்று கனவுகளும் மெய்பட வேண்டும்.
  மகா பெரியவா …கடாக்ஷம்

  லோகா சமஸ்தா சுகினோ பவந்து

  ராம் …ராம் …… ராம்

  நன்றி
  உமா வெங்கட்

 6. வணக்கம் சுந்தர். மஹா பெரியவா அருளினால் கண் பார்வை பெற்ற குழைந்தையும் ,அதன் பெற்றோரும் எவளவு புண்ணியம் செய்து இருக்கவேண்டும். கூட்டு பிரதனையினால் இறைவன் மகிழ்ந்து வினைகள் தீர அருளட்டும் .நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *