ஊரார் அடிக்கடி இவர்கள் வீடு தேடி வந்து இவர்களின் பெற்றோரிடம் புகார் செய்வது வழக்கம். என்ன சொன்னாலும் கண்டித்தாலும் இவர்கள் திருந்துவதாக தெரியவில்லை.
ஒரு நாள் தங்கள் பிள்ளைகளுக்கு கடவுளை குறித்த பயத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்களை திருத்த ஒரு துறவியை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார் அவர்கள் அன்னை.
வீட்டில் ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்த அந்த துறவி…. ஒவ்வொரு மகனாக என்னிடம் அனுப்பு. முதலில் இருவரில் மூத்தவனை அனுப்பு என்றார்.
இருவரில் அப்போது வீட்டில் இருந்த பன்னிரண்டு வயது நிரம்பிய மூத்தவன் வரவழைக்கப்பட்டான்.
துறவி முன்பு அமரவைக்கப்பட்டான்.
துறவி கேட்டார்… “கடவுள் எங்கே இருக்கிறார்?”
இவன் பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென விழித்தான்.
மறுபடியும் சற்று சத்தமாக “கடவுள் எங்கே இருக்கிறார்?” என்றார் துறவி.
இம்முறையும் அவன் பதில்சொல்லாமல் அமைதியாக அவரை பார்த்தபடி இருந்தான்.
மூன்றாவது முறையும் அதே கேள்வியை அவர் கேட்டவுடன், இவன் விருட்டென்று அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டான்.
நேரே தம்பியிடம் சென்றவன், “நாம் பெரிய பிரச்னையில மாட்டியிருக்கோம்டா…”
கடைசியா என்ன விஷமம் பண்ணோம்… என்ன புதுப் பிரச்சனயில் சிக்கியிருக்கிறோம்னு தெரியலியே என்று யோசித்த இரண்டாமவன், “ஏன் என்னாச்சுடா??” என்றான் கலவரத்துடன்.
“கடவுளை காணோமாம். நாம தான் அவரை எங்கோ ஒளிச்சி வெச்சிருக்கோம்னு சந்தேகப்படுறாங்கடா…. நீ எங்கேயாச்சும் பார்த்தியா?” என்று கேட்டான்.
குறும்பு செய்யும் குழந்தைகள் என்றுமே சுவாரஸ்யம்தான்!
பி.கு: தலைப்பை பார்த்தவுடனே நாம ஏதோ பெரிய மெசேஜ் சொல்லப்போறோம்னு நினைச்சி ஏமாந்தீங்களா? ஹா….ஹா…ஹா….! வெளியே பார்த்து உள்ளே இருக்குற சரக்கை எடைப் போடக்கூடாது. அது தான் இந்த பதிவோட மெசேஜ்!
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Also check :
“நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா?
பக்கத்து வீட்டு துணிங்க அழுக்கா இருக்கா?
ஆண் Vs பெண் – சில வித்தியாசங்கள் !
அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் !
வீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்….
“என்ன சொன்னே? குடும்பத்துல பிரச்னைன்னு தானே?”
“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன?”
=====================================================================
[END]
பதிவை படித்த பிறகு தான் ஹி…ஹி..ஹி.. தாங்கள் சொல்ல வந்த மெசேஜ் புரிந்தது. பலாப் பழ தோலைப் பார்த்து அதன் பழத்தை எடை போடக் கூடாது என்பதை புரிந்து கொண்டேன்.
இதைப் போன்ற ….கருத்துள்ள !!!! பதிவும் எங்களுக்கு தேவை தான்….. வெயில் நேரத்திற்கு இது போன்ற பதிவுகளும் தேவை தான் …….
நன்றி
உமா வெங்கட்
ஹா……ஹா…….ஹா……நல்ல மெசேஜ்……
இது போங்கு ஆட்டம்.
சுந்தர்ஜி
சிரிக்கவைக்க ஒரு பதிவு.
சிந்திகவைக்க ஒரு பதிவு.
நல்ல ஜோக்
He he comedylaum oru message athu than rightmantra sundar
வழக்கம் போல், சிரிப்புடன் கூடிய சிந்தனையை தூண்டும் பதிவு.
Packaged better to attract views.
**
That way, this post is success. he he he.
**
And lesson too nice – since most of us all get deceived by outer appearance but failed to look into inner lovely thing.
**
Thanks ji for this nice message.
**
**Chitti**.
ஹா ஹா ஹா
பதிவை படித்து முடித்த உடன் இரண்டு நிமிடங்களுக்கு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிந்திக்க சிரிக்க வைக்கும் சிறப்பான சிறிய பதிவு.
இது போல மேலும் பல நகைச்சுவை பதிவுகள் வரட்டும்.
சாதம், சாம்பார் பொரியல் என்று இல்லாமல் பல கலவை சாதங்களும் எங்களுக்கு பிடிக்கும் தானே.
எப்படி!!! உங்கள் பாணியிலேயே பதில் கூறிவிட்டேனா?
உணமையிலேயே அனுபவித்து சிரித்தேன். சட்டென்று மூளை புத்துணர்வு பெற்றது.(சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் எலி கதை கேட்டு விஜயகுமார் சொல்வது போல பி.பி குறைந்தது.)
என்றும் அன்புடன்.