எனவே பிரச்னையை தனது ஃபேமிலி டாக்டரிடம் கொண்டு சென்றான். “நீங்க தான் டாக்டர் இதுக்கு ஒரு வழி சொல்லணும்…” என்று அவரிடம் மன்றாடினான்.
“ஃபூ…இவ்ளோ தானா? முதல்ல அவளுக்கு சரியா காது கேட்குதா இல்லையான்னு கன்பர்ம் பண்ணிக்கோங்க. சுமார் 30 அடி தூரம் தள்ளி நின்னு அவ கிட்டே சாதாரணமா பேசிப்பாருங்க. அவளுக்கு கேட்கலேன்னா 20 அடி தூரத்துல இருந்து பேசிப்பாருங்க. அப்போவும் கேட்கலேன்னா 10 அடி தூரத்துல நின்னு பேசிப்பாருங்க. அவளுக்கு கேட்கிற வரைக்கும் நீங்க தூரத்தை குறைச்சிகிட்டே போங்க!” என்கிறார்.
அன்று மாலை மனைவி கிச்சனில் டின்னர் தார் செய்துகொண்டிருந்தாள். இவன் மாடியில் தனது அறையில் இருந்தான்.
‘கிட்டத்தட்ட 30 அடிக்கும் மேல நாம் இப்போ தள்ளியிருக்கோம். இப்போ அவ கிட்டே பேசிப்பார்ப்போம். கேட்குதா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம்’ என்று நினைத்த அவன், சாதாரண உரையாடல் குரலில்… “டார்லிங் இன்னைக்கு டின்னருக்கு என்ன?” என்றான்.
ஒரே நிசப்தம். பதில் எதுவும் இல்லை.
சுமார் 20 அடி தூரம் படிகளில் நின்று அதே கேள்வியை கேட்டான். “டார்லிங் இன்னைக்கு டின்னருக்கு என்ன?”
ஹூம்…ஹூம்… நோ ரெஸ்பான்ஸ்.
இன்னும் அருகே சுமார் 10 அடி தூரத்தில் கிச்சனுக்கு அருகே டைனிங் ரூமுக்கு வந்து அங்கிருந்தபடி அதே கேள்வியை கேட்டான்.
“என்னாச்சு உங்களுக்கு? இத்தோட நாலு தடவை சொல்லிட்டேன்…. சப்பாத்தி & டால்னு” என்று அங்கேயிருந்து குரல் வருகிறது! சற்று உரக்கமாகவே!!
நீதி : நம்மை சுயபரிசோதனை செய்த பிறகே அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டவேண்டும். இந்த உலகத்திலேயே முதலில் திருந்த வேண்டிய நபர் யார் தெரியுமா? நாம் தான்!
=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் யார் ? MONDAY MORNING SPL 3
உங்கள் வளர்ச்சியை தடுக்கும் நபரை கண்டுபிடிக்கலாமா? MONDAY MORNING SPL 2
குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL 1
=====================================
[END]
Good Morning sir..
Monday Morning Special…
Very nice sir..
Nandri sir..
சார் , மிக மிக சூப்பர் ஸ்பெஷல் . கண்டிப்பாக நம்மை திருத்திக்கொண்டு , பிறகு அடுத்தவரை சொல்ல வேண்டும் என்பார்கள் . இதை , உன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் துடை . பிறகு அடுத்தவர் முதுகை பார்க்கலாம் என்பார்கள் .
ரியலி வெரி சூப்பர் சார் .
monday spl super
எதிர்பார்த்து கொண்டு இருக்கும் பதிவு.
அனைவரும் டிபன் அல்லது டின்னர் தேடுகிறாரோ இல்லையோ உங்கள் பதிவை திங்கள் அன்று மிகவும் தேடுகிறோம்.
புத்துணர்ச்சி தேடியே
மிகவும் நன்றி சார்.
ஹாய் சுந்தர்,
அருமையான பதிவு!. சுய பரிசோதனை என்பது அனைவருக்கும் உட்பட்டது.
இது நமது நடைமுறை வாழ்க்கையில் மனைவியிடமும்,குழந்தைகளிடமும், அலுவலகத்திலும், சமூகத்திலும் என எல்லா இடங்களிலும் பயன்படக்கூடியது!
எளிமையான நகைச்சுவை! வலிமையான உட்பொருள்!
வழமையான வார்த்தைகள்! வளமையான தத்துவம்!
நன்றி!
கனஹகுமரன்
MONDAY MORNING SPL simply & சூப்பர் .
\\\\நம்மை சுயபரிசோதனை செய்த பிறகே அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டவேண்டும். இந்த உலகத்திலேயே முதலில் திருந்த வேண்டிய நபர் யார் தெரியுமா? நாம் தான்!\\\
என்ன ஒரு நெத்தியடி …
சுந்தர்,
அருமையான பதிவு. எளிமையான நகைசுவை ஆனால் வலிமையான கருத்து. ஒவ்வொருவரும் தம்மை தாமே சுய பரிசோதனை செய்து கொண்டால் வீடு, நாடு, சமூகம் மேன்மை அடையும்.
ஒவ்வொரு திங்கள் காலையும் ஏங்க வைக்கிறிர்கள். உங்கள் பொறுப்பு அதிகமாகிறது.
சுந்தர்ஜி,
அருமையான பதிவு. நீ முதலில் உன்னை பார் பிறகு அடுத்தவனை பர்ர்.
உண்மைதான் எந்த ஒரு தனி மனிதனும் தன்னை திருத்தி கொண்டு
பிறகு தான் அடுத்தவரை குறை கூற வேண்டும்.
நன்றி
சூப்பர் ஜி தேங்க்ஸ்
சிறிய விளக்கம், மிகப்பெரிய கருத்து. ஆட்சியாளர்களை குறை சொல்வதற்குமுன் முதலில் ஒட்டுப்போடு என்று சொல்கிறீர்கள். இந்த வாரத்திற்கு ஒரு நல்ல துவக்கம்.
சுந்தர்ஜி
பழனி சென்று வந்த வேகத்திலும் நச்சுனு ஒரு பதிவு போட்டாச்சு. பதிவோடு படமும் அழகா நச்னு இருக்கு. காலையில் பசுமையா கிளி காதலர்களை பார்த்ததும் ஒரு பசுமை நம் உள்ளத்திலும். நன்றி
உண்மை தான் நாம் ஒருவரை விரல் நீட்டும் பொழுது ,நம்மை மூன்று விரல்கள் நீட்டி சுட்டி காட்டுகிறது என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
நம்மை சுயபரிசோதனை செய்த பிறகே அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டவேண்டும். – உண்மைதான் சார் ..
ஒரு சிறு சம்பவத்தில் எத்துனை பெரிய உண்மை ஒளிந்து கிடக்கிறது பார்த்தீர்களா?
நிலைமை கொஞ்சம் எல்லை மீறி போயிருந்தால் கூட குடும்பத்தில் பொக்ரான் அணுகுண்டு வெடித்திருக்கும் – கணவன் மனைவி இவ்விருவருக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை என்றால் வாழ்க்கை வண்டியை செலுத்துவது மிகவும் கடினம் !!!
காலைப்பொழுதை கலகலப்பாக்கிமைக்கு நன்றி !!!