Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > மனித முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது…

மனித முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது…

print
ரண்டு நாள் கரூர் பயணத்தில் எக்கச்சக்க அனுபவங்கள். எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. கருவூரார் சன்னதி மற்றும் பசுபதீஸ்வரர் – அலங்காரவல்லி அம்பாளின் தரிசனம், சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகளின் சமாதி என்று ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஆத்மானுபவம். ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்து குவித்திருக்கிறேன். ஒவ்வொன்றாக எத்தனை விரைவில் பகிர்ந்துகொள்ளமுடியுமோ அத்தனை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

இவை தவிர, மஹாளய ஸ்பெஷல் உள்ளிட்ட வேறு பல விஷயங்கள் பதிவளிக்கவேண்டியிருப்பதால் அனைத்தையும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் வீதம் இட்டால் தான் எனது BACKLOGS ஸை கிளியர் செய்ய முடியும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் படிப்பது உங்களுக்குக் சிரமமாக இருக்காது கருதுகிறேன்.

கரூரில் நமக்கு மஹா பெரியவா அவர்களின் மகிமை வெளிப்பட்ட ஒரு சிறு சம்பவத்தை பார்ப்போம்.

உறவினர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள குடும்பத்தோடு கரூருக்கு சென்ற வார இறுதியில் நாம் சென்றிருந்தது நினைவிருக்கலாம். வெள்ளியன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் கரூரில் இருந்துவிட்டு திங்களன்று காலை ரிட்டர்ன் செய்வதாக பிளான். முன்னதாக கரூருக்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கட் புக் செய்ய முயன்றபோது முகூர்த்த நாள் என்பதால் ஒரு டிக்கட் கூட கிடைக்கவில்லை. (தத்கலில் கூட). தமிழக அரசின் விரைவுப் பேருந்தில் புக் செய்யலாம் என்றால் அந்த தளம் வழக்கம் போல ஓப்பனாகவே இல்லை. எனவே வேறு வழியின்றி ஆம்னி பஸ்ஸில் புக் செய்ய தீர்மானித்தோம். அதிலும் கடைசி வரை கிடைப்பது கேள்விக்குறியாக இருந்தது. ஒரு வழியாக REDBUS மூலம் ஒரு பேருந்தில் கிடைத்த சீட்டை மட மடவென்று புக் செய்தபின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.

வெள்ளியன்று மாலை மழை பெய்து ஓய்ந்தபடியால் சென்னை முழுக்க போக்குவரத்து நெரிசல். அதிலும் கோயம்பேட்டை பற்றி கேட்கவேண்டுமா?  உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது பேருந்துகள் பல கி.மீ. நீளத்திற்கு அணிவகுத்து நின்றன. இந்த நெரிசலில் குடும்பத்துடன் கோயம்பேட்டிற்கு சென்று அங்கு பஸ் ஏறிய கதையை ஒரு தனி சீரியலாகவே எடுக்கலாம். அத்தனை விறுவிறுப்பு திடீர் திருப்பங்கள் நிறைந்த அனுபவம் அது.

10.00 மணிக்கு புறப்படவேண்டிய எங்கள் பஸ் 11.30 க்கு தான் கோயம்பேட்டிலிருந்தே புறப்பட்டது. பெருங்களத்தூரை தாண்டும்போது நள்ளிரவு 1.00 ஆகிவிட்டது. எனவே காலை 7.30க்கு கரூரில் இருக்கவேண்டிய நாங்கள் 9.00 மணிக்கு தான் வந்து சேர்ந்தோம்.

ஒரு வழியாக தான்தோன்றிமலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு போய் சேரும்போது 9.30. இந்த தாமதத்தால் எங்களுக்காக மண்டபத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறையை வேறு ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துவிட, எங்களுக்கு ரூம் கிடைக்கவில்லை. நான், அப்பா அம்மா மற்றும் மற்றும் தங்கை குடும்பத்தினர் அனைவரும் குளித்து முடித்து தயாராக வேண்டும் என்பதால் உடனடியாக ரூம் ஏதாவது ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானோம். வந்த இடத்தில் முரண்டு பிடித்து வீண் ஈகோ சண்டைக்கு இடம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே நானும் என் அப்பாவும் கரூர் நகரில் ரூம் ஏதாவது புக் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்து திரும்பவும் கரூர் நகருக்கு கிளம்பிவிட்டோம்.

ஒரு ஆட்டோவை பிடித்து கரூரின் ஒரு அங்குலம் கூட விடாமல் இண்டு இடுக்கெல்லாம் அலைந்தும் கூட எங்கும் ரூம் கிடைக்கவில்லை. முகூர்த்த நாள் என்பதால் அனைத்து தங்கும் விடுதிகளும் ஃபுல். “எதுக்கு சார் வீணா அலையுறீங்க? முஹூர்த்த நாட்களில் இங்கே கரூர்ல ரூம் கிடைப்பது கஷ்டம் சார்….” என்று ஆட்டோ டிரைவர் வேறு கொஞ்சம் பயமுறுத்தினார். கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்களில் கேட்டாகிவிட்டது. நோ யூஸ். நாங்கள் விசாரித்த பாதிக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் மாடியில் முதல் தளம் இரண்டாம் தளம் என்று இயங்கி வந்தன. எனவே ஒவ்வொரு முறையும் படிகளில் வேறு ஏறி இறங்கவேண்டியிருந்தது. நேரமாகிக்கொண்டிருக்கிறது. அம்மாவும் தங்கை குடும்பத்தினரும் ஒரு பக்கம் அங்கு காத்துக்கொண்டிருக்க இங்கு எங்களுக்கு வீண் அலைச்சல். பசி வேறு.

பதினோராவது லாட்ஜிலும் இடம் கிடைக்கவில்லை. இனி இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. வேறு சில வகைகளில் முயற்சி செய்தால் கிடைக்ககூடும். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. திரும்பவும் கீழே படியிறங்கும்போது தான் மஹா பெரியவா நினைவுக்கு வந்தார். “பெரியவா, எதாவது ரூம் கிடைக்கிற மாதிரி கொஞ்சம் அனுக்ரஹம் பண்ணுங்களேன். இதுக்கு மேலே அலையுறதுக்கு தெம்பில்லே எங்களுக்கு…!” என்று கண்களை மூடியபடி அவரிடம் ஆத்மார்த்தமாக முறையிட்டேன்.

அடுத்து பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள ‘ஆனந்தா லாட்ஜ்’ என்கிற விடுதியில் விசாரிக்க… என்ன அதிசயம்… “ஒரே ஒரு அரை இருப்பதாகவும், இரு நபர் தங்கலாம் என்றும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் நான்கு பேர் தங்கலாம்” என்றும் என்று கூறினார்கள். நாம் மறுப்பே சொல்லாமல் உடனடியாக புக் செய்துவிட்டோம்.

அறை கிடைத்துவிட்டது. அதுவும் CHEAP & BEST வாடகையில். மஹா பெரியவாவின் கருணையை எண்ணி எண்ணி வியந்தேன். உருகினேன்.

இதை முதல்லயே செய்திருக்கலாமே? அதாவது மகா பெரியவாவிடம் முதலிலேயே முறையிட்டிருக்கலாமே என்று தானே கேட்கிறீர்கள்?

உழைத்துவிட்டு அனுக்ரஹத்தை கேட்பதற்கும் உழைக்காமலே அனுக்ரஹத்தை கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நான் நன்கறிவேன். மேலும் இறைவனிடம் நாம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைக்கவேண்டும் அல்லவா ? எனவே தான் முதலில் பெரியவா ஞாபகம் வரவில்லை. மேலும் மனிதனின் முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது தான் அங்கு அற்புதங்கள் நடக்கின்றன.

எப்படியோ தகுந்த சமயத்தில் நமக்கு அருள் செய்து, பக்தர்களின் சின்ன சின்ன கோரிக்கைகளை கூட செவிமேற் கொண்டு நிறைவேற்றுபவர் தான் என்பதை மற்றுமொரு முறை நிரூபித்துவிட்டார் நம் மஹா பெரியவா.

[END]

7 thoughts on “மனித முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது…

 1. உண்மையான பிரார்த்தனைக்கு வலிமை அதிகம் .
  அனுபவத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ….
  -மனோகர்.

 2. சுந்தர் சார், இந்த கோயம்பேட்டில் பண்டிகை காலத்தில் பேருந்தை பிடிப்பது (ரிசர்வேஷன் செய்தாலும் கூட) என்பது பயங்கர போராட்டம் தான் சார். இந்த அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது. ரத்த காயங்கள் பெற்ற பயனிகள் ஏராளம் நான் கண்கூடாக பார்த்துள் ளேன்.. ஆனால் நீங்கல் குடும்பத்துடன் சென்றீர்கள் என்பதை நினைக்கும்பொதெ தெரிகிரது..நீங்கல் பட்ட பாடு..

  தேடாமல் எதுவும் கிடைத்துவிட்டால் கடவுளை யாரும் நினைக்க மாட்டார்கள் என்பதற்காகத்தான் நம்மை அவன் அலையவிட்டு கொடுக்கின்ரான். ஏன் என்ரால் அப்போதுதான் அதன் அருமை நமக்கு புரியும். அதை நாம் கடைசி வரை பத்திரமாக வைத்திருப்போம் உஷாராகவும் செயல்படுவோம் என்பதற்காக.

 3. உழைத்துவிட்டு அனுக்ரஹத்தை கேட்பதற்கும் உழைக்காமலே அனுக்ரஹத்தை கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வைத்தீர்கள்.
  இறைவனிடம் நாம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைக்கவேண்டும்
  இந்த மாதிரி நடக்கும் சின்ன விஷயங்கள் நமக்கும் மனதிற்கு ஒரு சந்தோசத்தை கொடுக்கும்

 4. சுந்தர் சார்

  உண்மையான பிரார்த்தனைக்கு வலிமை மிக மிகவும் அதிகம் சார்

  நன்றி

 5. சுந்தர் அய்யா
  பெரியவா ஒரு நடமாடும் தெய்வம் சார் நல்லவர்களுக்கு எப்பொழுதும் கண்கண்ட கடவுள் சார்.வார்த்தையே வரல.
  அன்புடன்
  குருமூர்த்தி.என்

 6. கஷ்டம் வரும்போது தான் நாம் இறைவனின் கரம் பற்ற துடிக்கின்றோம் – எப்படியாவது அவர் நம்மை காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்குகின்றோம் – அப்படி ஒரு வேலை அந்த சமையத்தில் நாம் நினைப்பது நடக்காவிடில் நம் மனதில் எழும் எண்ணங்களுக்கு அளவே இல்லை – சிலர் விரக்த்தியின் உச்சத்திக்கே சென்று இறைவனை துவேசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்

  வாழ்க்கையில் எது வந்த போதும் அது உயர்வோ தாழ்வோ எல்லாவற்றையும் இறைவனின் திருவடிகளில் சமர்பித்து சரணாகதி அடைந்துவிட்டால் அதிசியங்கள் நிகழ்வதை உணரலாம் என்பதற்கு மேற்கூறப்பட்ட சம்பவம் சான்று

  வாழ்க வளமுடன் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *