சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்?
சிரார்த்தம், திவசம் என்றால் காலம் சென்ற முன்னோர்களின் நினைவு நாளன்று (திதி) அவர்களுக்கு பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.
ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.
தர்ப்பணம் செய்ய அந்த வேத மந்திரங்கள் தெரிந்த வேதியர் தான் வேண்டும் என்பதில்லை செய்பவர்களுக்கு அந்த மந்திரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் போதும்.
சிரார்த்தம் செய்விக்க உபாத்தியார் ஒருவரும் அன்னமிட தகுந்த நபர்களும் தேவை. சிரார்த்தத்தில் குறிப்பிடத் காய்கறிகள் மட்டுமே சேர்க்கவேண்டும்.
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், அமாவாசை தினம் சிறந்தது. மாதம் தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை தரும். மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம்.
அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யவேண்டுமா?
மறைந்த பெற்றோருக்கு சாப்பாடு போட்டு மகிழ்வித்து அவர்களது ஆசியைப் பெறும் விதமாகச் செய்யப்படும் சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை ஒரே குடும்பத்து வாரிசுகள் ஒன்றாக செய்ய வேண்டுமா அல்லது தனித் தனியாக செய்ய வேண்டுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது.
இறந்தவருக்கு சிரார்த்தம் தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கடன் நிவர்த்தி வம்ச விருத்தி முதலான பலன்கள் கிடைக்கும். பித்ருக்களுக்கான கர்மாக்களை யார் முறையாகச் செய்யவில்லையோ அவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்ற சில துன்பங்கள் நேரிடலாம்.
ஆகவே சகோதர்களுக்குள் யாரோ ஒருவர் செய்து விட்டாரே நாம் ஏன் சிரார்த்தம் தர்ப்பணம் மறுபடியும் செய்ய வேண்டும் என்று தவறாக எண்ணி ஒருவர் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம் தர்ப்பணம் போன்றவற்றைச் செய்யாமல் இருந்து விட்டால், நஷ்டம் அவருக்குத்தானே தவிர, பித்ருக்களுக்கு இல்லை.
அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மாக்களைச் செய்யாதவனுக்கு பித்ரு தோஷம் ஏற்படலாம். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால் பித்ரு தோஷத்தை ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்காமல் போனாலும் அந்த பித்ரு தோஷத்தை அவனது வம்சத்தினர் அனுபவிக்க நேரலாம்.
ஆகவே அவரவர்களின் அப்பா தாத்தா செய்து வந்த வழிமுறையை ஒட்டி பித்ருக்களுக்கான சிரார்த்தம் தர்ப்பணம் முதலானவற்றை அந்தந்த காலங்களில் தவறாது செய்து விட வேண்டும். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு கர்மாக்களை செய்வது நல்லது.
அவர்களுக்கு நாம் எந்த ஒரு சொத்தும் பணமும் சேர்த்து வைக்காவிட்டாலும், பித்ரு கர்மாக்கள் செய்யாததால் ஏற்படும் பித்ரு தோஷத்தை சொத்தாக வைத்து விட்டுச் செல்லக்கூடாது.
ஆகவே அண்ணன், தம்பிகள் பலர் இருந்தால் அனைவரும் தனித்தனியே அவரவர்களுக்குரிய கடமைகளை அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை தனித்தனியே கட்டாயம் செய்ய வேண்டும். அல்லது அண்ணனோ, தம்பியோ பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து நின்றாவது பித்ரு கர்மாக்களைச் செய்யவேண்டும்.
(நன்றி : மாலைமலர்.காம்)
=======================================
சுந்தர் சார்,
மஹாளய பட்சம் மற்றும் மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா? ..சிலர் போட கூடாது என்று கூறுகின்றனர் ..
அமாவாசையன்று கோலம் போடக்கூடாது.
ஆனால் மஹாளய நாட்களில் கோலம் போடலாம். ஆனால் பெரிதாக இல்லாமல் சிறிதாக போடவேண்டும். மஹாளய நாட்களில் நம் முன்னோர்களின் திதியன்று கோலம் போடக்கூடாது.
– சுந்தர்
நன்றி சுந்தர் சார்…
மஹாலய அம்மாவாசைக்கு திதி கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் அதன் நன்மைகளையும் எளிய முறையில் சிறு சிறு விஷயங்களை கூட விளங்க சொல்லி புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி !!!