இந்தியன் அமெரிக்கனிடம் சொன்னான், “இந்தியாவில் உள்ள என் பெற்றோர்கள் என்னை என் உறவுக்காரப் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அவர்கள் பார்த்துள்ள அந்த பெண்ணோ ஒரு சரியான பட்டிக்காடு. நகரத்துக்கு நாகரீகமே தெரியாதவள். நான் அவளை பார்த்தது கூட கிடையாது. இதை எங்கள் ஊரில் ARRANGED MARRIAGE என்று சொல்வோம். எனக்கோ ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள ஆசை. அதாவது LOVE MARRIAGE. நான் விரும்பாத, காதலிக்காத ஒரு பெண்ணை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று என் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். ஆகையால் வீட்டில் ஒரே பிரச்னை. எனவே குடிக்க வந்தேன்.”
அமெரிக்கன் சொன்னான் : “ஓ…நீ காதல் திருமணம் பத்தி சொல்றியா? இரு என் கதையை சொல்றேன். நான் ஒரு விதவையை 3 வருஷமா காதலிச்சேன். அவ கூட டேட்டிங் எல்லாம் போயி அப்புறமா கல்யாணம் பண்ணிகிட்டேன். சில வருடங்கள் கழித்து என் வளர்ப்பு மகளை (மனைவியின் முதல் கணவருக்கு பிறந்தவள்) என் அப்பா விரும்பித் தொலைக்க, என் அப்பா எனக்கு மருமகனானார். நான் மாமனாராகிவிட்டேன்.”
இவன் அதிர்ச்சியுடன் பார்க்க… அவன் தொடர்ந்தான் : “இதனால் என் மகள் எனக்கு அம்மாவாகிவிட்டாள். என் மனைவி பாட்டியாகிவிட்டாள். எனக்கு என்று ஒரு மகன் பிறந்தபோது பிரச்னை அதிகமானது. என் மகன் என் அப்பாவின் மைத்துனன் என்பதால் அவன் எனக்கு ஒரு வகையில் மாமா முறை வேண்டும். என் அப்பாவுக்கு குழந்தை பிறந்தபோது பிரச்னை மேலும் அதிகமானது. என் அப்பாவுக்கு பிறந்த என் தம்பி, எனக்கு ஒரு வகையில் பேரன் ஆவான். கடைசீயில் நான் எனக்கே தத்தாவாகிவிட்டேன். நானே எனக்கு பேரனும் ஆகிவிட்டேன்!!!!!!!!!!!!”
“ஆமா… நீ என்ன சொன்னே? குடும்பத்துல பிரச்னைன்னு தானே? கொஞ்சம் இரு ஒரு பிரேக் எடுத்துக்குறேன்….” என்று அமெரிக்கன் முடிக்க, நம்ம ஆளு எப்பவோ கீழே விழுந்து மயக்கம் போட்டிருந்தார்.
நகைச்சுவையாக இருந்தாலும் இந்த கலாச்சாரம் தான் தற்போது மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது.
இது தான் அந்த நாடுகளுக்கும் நம் புண்ணிய பூமிக்கும் உள்ள வித்தியாசம்.
இந்தியனாக இரு. இந்தியனாக இருப்பதில் பெருமைப்படு. இந்தியாவில் இருப்பதில் பெருமைப்படு.
I LOVE INDIA AND ITS CULTURE! WHAT ABOUT YOU?
=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன?” MONDAY MORNING SPL! 4
மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் யார் ? MONDAY MORNING SPL 3
உங்கள் வளர்ச்சியை தடுக்கும் நபரை கண்டுபிடிக்கலாமா? MONDAY MORNING SPL 2
குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL 1
=====================================
[END]
சுந்தர் சார் நாம் எல்லாருமே இந்தியாவில் பிறந்ததுக்காக இறைவனுக்கு என்றென்றும் கடமைபட்டுளோம் நன்றி வாழ்க வளமுடன்
இனிய காலை வணக்கம் சார்
நகைச்சுவையாக இருந்தாலும் யோசிக்க வேண்டிய நல்ல பதிவு சார்..
.
நம் நாடு புண்ணிய பூமி தான் சார் அதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்
நன்றி ..
படித்ததும் முதலில் சிரிப்பை வரவழைத்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவு. BE PROUD TO BE A INDIAN. நன்றி
எல்லோரும் மேற்கத்திய கலாச்சார முறைகளில் கட்டுண்டு கிடக்கிறோம்.. மேற்கத்தியர்களைப் போல உணவுப் பழக்கம், உடைகள், நுனி நாக்கு ஆங்கிலம் போன்றவைகளை மட்டும் தான் பின்பற்றுகிறோம்…ஆனால் அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது வேறு..உதாரணமாக சாலை விதிகளைப் பினபற்றுதல்…அங்கே இரவு 1 மணிக்குக் கூட சாலைகளில் சிக்னல்களை மீறாமல் செல்கிறார்கள், சாலையில் எந்த வாகனமும் இல்லை என்றாலும் கூட (என் நண்பர் யு.எஸ் இல் இருக்கிறார்)…மேலும் ஊரை, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தாமல் இருத்தல்,,இது போல இன்னும் சில விஷயங்கள்….
—
அதற்காக நம்மை குறைக் கூறவில்லை…நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, இயற்கைவளம், சீதோஷ்ணம், ஆலயங்கள், ஆன்மிகம், இறை வழிபாடு, மனிதவளம்…இன்னும் பிற விசயங்களைக் கண்டு மேற்கு நாடுகள் இன்னமும் ஆச்சரியப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன…இருப்பினும் நம் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டால், நம் நாடு உலகை ஆளும்.
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
இந்தியனாக இரு. இந்தியனாக இருப்பதில் பெருமைப்படு. இந்தியாவில் இருப்பதில் பெருமைப்படு.
அருமையான வாசகங்கள்.
மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தை பார்த்து விட்டு நாம் சிரிகின்றோம். அனால் தற்போது இந்திய கலாசாரத்தை விட்டு விட்டு மேற்கத்திய முறைகளில் நம் நாடு போய கொண்டு உள்ளது என்பதுதான் உண்மை.
உண்மையில் இந்தியனாக இருப்பதில் பெருமைப்பட வேண்டுமென்றால் நம் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்தை பற்றி அடிக்கடி சொல்லி கொடுத்து நல்ல குழந்தைகளாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் உள்ளது. இல்லை என்றால் மேற்கத்திய நாடுகளை போல் நம் நாடும் வெகு விரைவில் மாறி விடும் என்பது உறுதி.
சுந்தர் சார்,
சிந்திக்க வைக்கவேண்டிய விஷயம்.
நினைத்து பார்கையில் சிரிப்பு ….. சான்ஸ் லெஸ்.
“எவ்வேரி டைம் இந்திய இஸ் பெஸ்ட்”.
நன்றியுடன் அருண்
சிந்திக்கதூண்டும் அருமையான பதிவு !!!
சொர்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா என்பது மயக்கம் தெளிந்த பின் அந்த இந்தியனுக்கு புரிந்திருக்கும் – பொதுவாக உறவுமுறைகளை புரிந்துகொள்வதே மிகவும் கடினம் – அதில் அந்த அமெரிக்கன் கூறியதை கேட்டவுடன் படிக்கும் நமக்கும் தலைசுத்தி தலைவலி தைலத்தை தேடி அலைந்திருப்போம் என்பது எனக்கு நன்றாக புரிகிறது
மூன்று முடிச்சு பாலச்சந்தரே மூன்று முறை படித்தாலும் விளங்காத உறவுமுறையாக அல்லவா இருக்கிறது !!!