Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > கண்காணிக்க எவரும் இல்லாதபோது நீங்கள் எப்படி? MONDAY MORNING SPL

கண்காணிக்க எவரும் இல்லாதபோது நீங்கள் எப்படி? MONDAY MORNING SPL

print
ந்த ஊரில் அவன் ஒரு புகழ் பெற்ற சிற்பி. பக்கத்து ஊரில் கட்டப்பட்டு வரும் ஒரு கோவிலில் வைப்பதற்காக பல சிலைகளை கல்லில் செதுக்கிக் கொண்டிருந்தான்.

அவனை பார்ப்பதற்காக வந்த அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் வந்தார். அப்போது ஒரு அழகான தெய்வத்தின் சிறிய சிலை ஒன்றை சிற்பி மிகவும் மெனக்கெட்டு செதுக்கி கொண்டிருந்தான். அருகில் கோவிலுக்கு தேவையான தூண்கள், படிக்கற்கள் உள்ளிட்ட பல செதுக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன. அப்போது சிற்பியின் அருகே அவன் செதுக்கொண்டிருக்கும் விக்ரகம் போல ஏற்கனவே ஒரு விக்ரகம் செதுக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பதை அந்த பெரிய மனிதர் கவனிக்கிறார்.

“ஒ… ஒரே மாதிரி இரண்டு விக்ரகம் செய்யனுமா?” சிற்பியிடம் வினவுகிறார்.

“இல்லை இல்லை. ஒன்று தான் தேவை. முதலில் செய்த சிலையில் முடிக்கும் தருவாயில் ஒரு தவறு நிகழ்ந்து சேதம் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தான் அதே போல ஒரு சிலையை இம்முறை மிகவும் கவனத்துடன் செய்கிறேன்.” என்றான் இவரை நிமிர்ந்து பார்க்காமலே.

“அப்படியா? அச்சச்சோ…” என்று உச்சுக்கொட்டியபடியே கூறியபடி அந்த பெரிய மனிதர் அந்த விக்ரகத்தை ஆராய்கிறார். ஆனால் அவரால் எந்த சேதத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“சேதம் எங்கேன்னு கண்டுபிடிக்கமுடியலியே…..”

“விக்ரகத்தோடு மூக்கு மேல பாருங்க… ஒரு சின்ன வெட்டு இருக்கும்…” இம்முறையும் நிமிர்ந்து பார்க்காமல் தன வேலையை செய்துகொண்டே பதில் சொன்னான் சிற்பி.

அவன் சொன்ன பிறகு தான் மூக்கின் மேல் ஒரு சின்ன வெட்டை கவனிக்கிறார்….. “அட… ஆமாம்…!”

“கோவில்ல எங்கே வைக்கப்போறீங்க விக்ரகத்தை?”

“25 அடி உயர தூண் மேல”

“ஏன்பா… அவ்வளவு உயரமான தூண்ல வைக்கப்போறேன்னு சொன்னா இதையே வெச்சிடலாமே… மூக்கு மேல இருக்கும் சின்ன தழும்பு யாருக்கு தெரியப்போகுது?”

தற்போது செதுக்குவதை நிறுத்திவிட்டு சிற்பி இவரை பார்த்து சொன்னான்….”ஏன் எனக்கு அது தெரியுமே. கடவுளுக்கும் தெரியுமே…!” என்றான்.

நம்மை கண்காணிக்க எவரும் இல்லாத போது நாம் நடந்துகொள்ளும் முறைக்கு பெயர் தான் ‘நேர்மை’! அப்படி பல சந்தர்ப்பங்களை நமக்கு ஏற்படுத்தி தந்து தான் இறைவன் நம்மை சோதிப்பான். எனவே எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

அதே போன்று ஒரு காரியத்தை உன்னதமாக செய்யவேண்டும் என்கிற வேட்கையானது நம்மை ஒருவர் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் நமக்கு இருக்கவேண்டும். நமது தனித்தன்மையிலிருந்து நாம் எப்போதும் விலகக்கூடாது. அது தான் உண்மையான தாகம். அப்போது தான் நீங்கள் EXCELLENT என்ற பாராட்டுக்கு நீங்கள் உண்மையில் தகுதியானவர்!

‘பிரமாதம்’ அதாவது ‘Excellence’ என்கிற வார்த்தை நமக்கு உள்ளேயிருந்து வரவேண்டும். அது பிறரிடமிருந்து வர வேண்டிய வார்த்தை அல்ல.

எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யுங்கள். மற்றவர்கள் கவனித்து பாராட்டவேண்டும் என்பதற்காக அல்ல. நமது திருப்திக்காக.

பிரதிபலன் எதிர்பார்க்காமல் நான் செயலாற்றி வந்தாலும் கடந்த காலங்களில் மனிதர்களின் அங்கீகாரத்துக்காக என் மனம் ஏங்கியதுண்டு. காரணம் உழைப்பவனின் ஏக்கம் அது. (ஆசை  அல்ல!).

ஆனால் என்றைக்கு நான் இறைவனின் கட்டளைப்படி என் வாழ்க்கையை, என் பாதையை அமைத்துக்கொண்டேனோ அந்த நொடியிலிருந்து என் வாழ்வில் மகிழ்ச்சியின் அலைகள் தான்!

அவனுக்காக அவனை வேண்டி அவன் விரும்பும் எந்த செயலை செய்தாலும் நிச்சயம் அந்த செயலில் நேர்த்தியும் மனதில் ஒரு திருப்தியும் இருந்தே தீரும்! அனுபவப்பூர்வமான உண்மை!!

11 thoughts on “கண்காணிக்க எவரும் இல்லாதபோது நீங்கள் எப்படி? MONDAY MORNING SPL

 1. சுந்தர் சார், திரு.பி.சுவாமிநாதன் சார் இருவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  நேற்று மாலை சிவன் கோயில் பிரார்தனை செய்தேன்.

  திரு சுவாமிநாதன் சார் பெருமையை பற்றி கேள்விபட்டுளேன்.
  மஹா பெரியவர் அவர்களை பற்றி அவர் விவரித்து சொல்லும் போது அப்படியே உருகிவிடலாம். நம் மஹா பெரியவர் விழாவில் நான் அவரை பார்த்துள்ளேன்.
  அவர் தன் முக நூலில் பகிர்ந்து நமக்கு முன் பின் தெரியாதவர்களை எல்லாம் நமக்காக பிரார்த்தனை செய்தது நாம் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்.
  அவருக்கு எங்கள் நன்றிகள் பல.

 2. சுந்தர் சார்,
  சிற்பியின் நேர்மை மிகவும் உயர்வானது.
  நன்றியுடன் அருண்

 3. moday மார்னிங் spl பதிவு எல்லோரும் எதிர்பார்க்கும் முக்கியபதிவு .நேர்த்தியான பதிவில் நேர்மைக்கு உதாரணமான கதை .

  \\\அவனுக்காக அவனை வேண்டி அவன் விரும்பும் எந்த செயலை செய்தாலும் நிச்சயம் அந்த செயலில் நேர்த்தியும் மனதில் ஒரு திருப்தியும் இருந்தே தீரும்! அனுபவப்பூர்வமான உண்மை!!\\\

  \\\நம்மை கண்காணிக்க எவரும் இல்லாத போது நாம் நடந்துகொள்ளும் முறைக்கு பெயர் தான் ‘நேர்மை’! அப்படி பல சந்தர்ப்பங்களை நமக்கு ஏற்படுத்தி தந்து தான் இறைவன் நம்மை சோதிப்பான். எனவே எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.\\\

  இந்த பதிவின் மூலம் மீண்டும் என்னை செதுக்கிக்கொண்டேன் .நேர்மைக்கு ஒரு கண்காணிப்பாளர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .

  இன்றைய பதிவு நேர்மைக்கான நேர்த்தியான பதிவு .

  நன்றி ஜி .

 4. சுந்தர்ஜி,

  இதே போல் எல்லோரும் இருந்திருந்தால் நம் நாடும் தமிழ் நாடும் என்றைக்கோ முன்னேறி இருக்கும். இன்றைக்கு பாதியும் தனி மனித ஒழுக்க கேட்டினால் விளைந்தவையே.

  பதிவிற்கு வாழ்த்துக்கள்.

 5. மிக அருமையான செய்தி உண்மையில் அவர் அவர் தாங்கள் நேர்மையாக இருக்க முயன்றாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் ஆனால் அது தான் நடப்பது இல்லை

 6. மிக அருமையான பதிவு.
  இதைபடிக்கும்போது இந்த குறள் நினைவில் வருகிறது:

  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
  திண்ணியர் ஆகப் பெறின்.

  ஒரு செயலை செய்து முடிக்க எண்ணுபவர், அச்செயலில் மிக்க உறுதியுடையவர் ஆவார் என்றால், அவர் நினைத்ததை நினைத்தபடியே அடைவார்

  சுந்தர்ஜி, இது உங்களுக்கும் பொருந்தும்.

 7. சுந்தர்ஜி,

  அருமையான பதிவு. வாழ்கையில் நாம் செய்யும் எந்த ஒரு செயலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

  நன்றி

 8. நம்மை கண்காணிக்க எவரும் இல்லாத போது நாம் நடந்துகொள்ளும் முறைக்கு பெயர் தான் ‘நேர்மை’! அப்படி பல சந்தர்ப்பங்களை நமக்கு ஏற்படுத்தி தந்து தான் இறைவன் நம்மை சோதிப்பான்.

  மனசாட்சியுடன் உழைப்பவனுக்கு என்றுமே வெற்றிதான் …

 9. டியர் சுந்தர்,

  உங்கள் படைப்புகளுக்கு நன்றிகள். நல்லவர்களுக்கு நல்லவர்களே நண்பர்கள் என்பது ஆண்டவன் சித்தம். எல்லோருக்கும் அந்த ஆண்டவன் சித்தம் கிடைக்க தினமும் பிரார்த்திப்போம்.

 10. Nice article which teaches us the meaning of sincerity. That dedication is required from all of us!!
  Another article that sets the TEMPO for the rest of the week–!!
  Regards
  R.HariHaraSudan.
  “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

 11. செய்யும் செயலை முழுமனதோடு ச்ரத்தையுடன் மனசாட்சிக்கு துரோகம் இல்லாமல் செவ்வனே செய்து முடிப்பது அவசியம் – இன்றைய அவசர யுகத்தில் பொருளுக்காக கொடுக்கப்பட்ட காரியத்தை அவசரகதியில் முடித்து அதன் பலனாக பல உயிர்கள் பலிஆனதை நாம் நித்தம் செய்தித்தாளில் படிக்கின்றோம் – இவை தவிர்க்கப்படவேண்டும்

  நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *