Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

print
‘பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்?’ என்கிற நமது முந்தைய பதிவில் – மகா பெரியவா ஆன்மீகத்தில் தொடாத விஷயங்களே இல்லை என்று கூறி – இது தொடர்பாக பெரியவாவின் மகிமை ஒன்றை பகிர்வதாக கூறியிருந்தோம். இதோ… ஒன்றல்ல இரண்டு பகிர்கிறோம். ஒன்று கருணை. மற்றொன்று பாடம்.

அதற்கு முன்:

பரிகாரம் என்றால் என்ன?

தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தான் தெய்வத்தின் குணம் என்று கூறுவார்கள். To err is human and to forgive is divine என்று ஆங்கிலத்தில் கூட ஒரு பொன்மொழி உண்டு. அப்படி தவறு செய்யும் மனிதன் அதை சமன் செய்ய எடுக்கும் முயற்சிக்கு  பெயர் தான் பரிகாரம். பரிகாரம் என்கிற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் சமன் செய்தல் என்று பொருள்.

இறைவனின் அருங்குணங்களுள் ஒன்று மன்னித்தல். ‘மன்னிப்பு’ என்ற ஒன்றை மட்டும் இறைவன் நமக்கு வழங்கவில்லை என்றால் இந்த உலக வாழ்க்கை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு துன்பமயமானதாக இருக்கும். நாம் சுவாசிப்பதால் உயிர்வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதால் உயிர் வாழ்கிறோம் என்பதை என்றும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

FOR MORE INFO pLEASE CHECK : ‘பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்?’ 

==========================================================

உழவாரப்பணி அறிவிப்பு!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு 03/07/2016 அன்று கவரப்பேட்டை அருகே அமைந்துள்ள அரியத்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும். காலை 7.00 மணிக்கு கோயம்பேட்டிலிருந்து வேன் பயணம்.  (ஏறும் இடம் :  CMBT அருகே, நாதெள்ள திருமண மண்டபத்தின் எதிர்புறம்) ஐயப்பன்தாங்கலிருந்து வேன் காலை 6.30 க்கு புறப்படும். கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ அவசியம் பதிவு செய்யவேண்டும்.

– ரைட்மந்த்ரா சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

Also check : அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

==========================================================

என்னைப் பார்ப்பதற்காக வரவில்லை…

Periyava sittingஸ்ரீ மடம் வேதபாடசாலை ஆசிரியருக்கு வேண்டிய ஒரு செல்வந்தர் தரிசனத்திற்கு வந்தார். வந்தனம் செய்துவிட்டு எழுந்து சற்றுத் தள்ளி நின்றார் பிரமுகர். அவர் ”உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டும்”என்று பாடசாலை ஆசிரியரிடம் சொல்லியிருந்தார். அதனால் எப்படியாவது உடனே அவருக்குப் பிரசாதம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற துடிப்பில் ஒரு மரத்தட்டில் பிரசாதத்தை வைத்துப் பெரியவாள் முன் நீட்டினார். பெரியவாள் மென்மையாகப் புன்னகைத்தார்.

”உங்க சிநேகிதர் காஞ்சிபுரத்துக்கு ஏன் வந்தார் தெரியுமோ? பட்டுப்புடவை வாங்குவதற்காக வந்திருக்கிறார்! என்னைப் பார்ப்பதற்காக வரவில்லை. தரிசனத்திற்கென்றே வருபவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கணும். எங்கோ போகிற வழியில் மடத்துக்குள் நுழைகிறவர்களுக்கெல்லாம் பிரசாதம் கொடுக்கணுமா? ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய் விட்டார்கள்.

அந்தப் பிரமுகருக்குத் தன் தவறு புரிந்தது. பெரியவா தரிசனத்துக்கு என்ற நோக்கத்துடன் அவர் ஒரு தடவை கூட காஞ்சிபுரம் வந்ததில்லை.

பாடசாலை ஆசிரியரின் தேறுதல் சொற்கள் அவர் செவிகளில் ஏறவில்லை. பிரமை பிடித்தாற்போல் கீழே உட்கார்ந்து விட்டார். சற்று நேரம் கழித்து பெரியவாள் வெளியே வந்தார்கள். பிரமுகரை அழைத்து அன்பாகப் பேசினார்கள். பின், பிரசாதம் கொடுத்தார்கள். பெற்றுக்கொண்ட பிரமுகரின் கண்களில் நீர் வெள்ளம். அதற்குப் பின், பெரியவா தரிசனத்தைக் குறிக்கோளாகக் கொண்டே குடும்பத்துடன் காஞ்சிபுரம் வரலானார். பெரியவாளின் கோபமும் ஒரு அனுக்கிரஹம்தான்!

– எஸ்.கோதண்ட ராம சர்மா | மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்

==========================================================

டுத்து ரா.கணபதி அவர்களின் ‘மைத்ரீம் பஜத’ புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவத்தை தருகிறோம்.

கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

Periyava _ discourseசென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள்.

“காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது” என்று அழுதாள்.

“நீ எவ்வளவு எழுதினாய்” என்று பெரியவர் கேட்டார்.

“8,500 நாமம் எழுதினேன்”.

“பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?”

“பொய் சொன்னேன்”.

“அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?” என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.

“இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது. இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா”?

அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:

“நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்” என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.

என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு.

கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

*************************************

அந்த சிறுமிக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவளைப் போலவே நாமும் பல நேரங்களில் சுயநலத்தினால் சபலப்பட்டு அற்ப ஆதாயங்களுக்காகவும் சுகங்களுக்காகவும் தர்மத்துக்கு புறம்பான காரியங்களை செய்கிறோம். தவறிழைக்கிறோம். பின்னர் செய்த தவறுக்கு வருந்துகிறோம். இறைவனிடம் மன்னிப்பும் கேட்கிறோம். இறைவன் மன்னிப்பானா? நிச்சயம் மன்னிப்பான். இந்த சிறுமிக்கு ஏற்பட்ட மனமாற்றம் நம்மிடமும் ஏற்பட்டால். பெரியவாள் அந்த சிறுமியிடம் எதிர்பார்த்தது அந்த மனமாற்றத்தை தான். எனவே தான் அதற்கு மதிப்பு கொடுக்கவேண்டி, அவளை மன்னித்து மற்றவர்களைக் கொண்டு ராமநாமாவைப் பூர்த்தி செய்து அவளுக்கு தங்கக் காசே கொடுத்துவிட்டார்.

எனவே பரிகாரம் செய்பவர்களும் இத்தகைய மனநிலையில் பயபக்தியுடன் பரிகாரம் செய்யவேண்டும். நிச்சயம் வெள்ளிக்கு பதில் தங்கமே கிடைக்கும். ஒரே கண்டிஷன்… மாற்றம் உண்மையானதாக இருக்கவேண்டும்.

==========================================================

Also check : பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

==========================================================

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உதவிடுங்கள்…!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

Don’t miss Maha Periyava’s miracle @ Kanchi Lingappan street

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

==========================================================

Also check our earlier articles on Ramana Maharishi

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

[END]

4 thoughts on “தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

 1. Excellent Information about Maha Periyva.
  Periyva Thiruvadi Saranam.
  A good Lesson to all RM Viewers.
  Thank You For Sharing.

  S.Narayanan.

 2. A different perspective and an amazing way of connecting events to the subject of the article that has been well written Sundarji.

 3. Dear ஜி,

  அருமை! புதன் கிழமை பதிவு தான் என்றாலும், இன்று வியாழக்கிழமை படித்து குரு அருளை பெறுகிறோம். படங்களும் அருமை! குரு தரிசனமும் பெறுகிறோம், (லேட்டா படித்தாலும் பலன் அதிகம்). அது இந்த கருணாமூர்த்தியாலயே முடியும்.

  மஹா பெரியவா சரணம்!

  வளர்க உங்கள் தொண்டு!

  அன்பன்,
  நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *