Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

print
கான்கள் வாழும் காலத்தை விட அவர்கள் மறைந்த பின்பே அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஈசன் வகுத்த இந்த விதியின் சூட்சுமம் இன்று வரை விளங்கப்படாத ஒன்று. சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதி முதல் பெருந்தலைவர் காமராஜர் வரை பல அருளாளர்கள் நம்மிடையே வாழ்ந்த போது அவர்களின் அருமையை நாம் உணரவில்லை. இன்றைக்கு அவர்கள் மீண்டும் பிறக்கமாட்டார்களா நம்மை வழி நடத்தமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

DSC07684

காஞ்சி மகா பெரியவாவை பொருத்தவரை, அவர் வாழும்போதே அவருடைய புகழ் குன்றிலிட்ட விளக்காய் தான் இருந்தது என்றால், தற்போது அது கயிலையில் ஏற்றிய தீபமாய் ஜொலித்து அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டி வருகிறது.

நம் தளத்திலோ அல்லது முகநூலிலோ அல்லது சான்றோர்களின் சொற்பொழிவுகளிலோ மகா ஸ்வாமிகள் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களை பற்றியும் கேள்விப்படும் பலர், “அவர் வாழும் காலத்தே அவர் அருமை தெரியாமல் போய்விட்டதே… தெரிந்திருந்தால் தினமும் அவரது காலடியில் கிடந்திருப்போமே… பார்வையினாலேயே எங்கள் பிரச்சனைகளை பொசுக்கியிருப்பாரே” என்று தங்களை நொந்து கொள்கிறார்கள்.

DSC07696

மகா ஸ்வாமிகள் எங்கும் போகவில்லை. நம்மிடையே தான் இருக்கிறார். ஸ்தூல சரீரத்தில் இருந்தவர் தற்போது ஸ்ரீமடத்தில் உள்ள அவரது பிருந்தாவனத்தில் சூட்சும சரீரத்துடன் இருக்கிறார். தன்னை நாடி வரும் தனது பக்தர்களின் கண்ணீரை துடைக்கிறார். அபயம் அளிக்கிறார். ஆறுதல் கூறுகிறார்.

சிலர் அடிக்கடி “அந்த கோவிலுக்கு போனா ஒரு வைப்ரேஷனை ஃபீல் பண்ணலாம்… இந்த இடத்துக்கு போனா ஒரு வைப்ரேஷன் கிடைக்கும்…” என்றெல்லாம் கூறுவதை கேட்டிருப்போம்.

அப்படியெல்லாம் சொல்வது உண்மையா? ஒரு இடத்திற்கு செல்லும்போது ‘வைப்ரேஷன்’ ஏற்படுமா என்ன? இல்லை நம்மால் அதை உணர முடியுமா என்ன ? ஒருவேளை ஃபேண்டசிக்கு கூறுகிறார்களோ…?” என்று சில சமயம் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம்.

வைப்ரேஷன் என்றால் உண்மையில் என்ன?

காஞ்சி ஸ்ரீ மடத்தில் உள்ள மஹாஸ்வாமிகள் பிருந்தாவனத்திற்கு சென்று பாருங்கள்…உள்ளே அடியெடுத்து வைக்கும்போதே உங்களால் அந்த ‘வைப்ரேஷனை’ உணர முடியும்.

DSC07716

ஒரு இடத்திற்கு செல்லும்போது உங்கள் மனதில் ஏற்படும் மாற்றம், கிடைக்கும் ஒரு வித இன்ஸ்டன்ட் ஆறுதல், நிம்மதி – இதைத் தான் வைப்ரேஷன் என்கிறோம்.

இறையருள் பெருமளவு புதைந்துகிடக்கும் இடங்களுக்கு செல்லும்போது தான் பெரும்பாலும் நாம் இந்த வைப்ரேஷனை உணரமுடியும்.

காஞ்சி சங்கர மடத்தில் நுழையும்போதே உங்களால் அதை உணர முடியும்.

அந்த இடத்திற்கு மட்டும் எப்படி இப்படி ஒரு சக்தி கிடைத்தது?

DSC07701

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ

என்கிற வல்லாளாரின் பாடல் தான் இதற்கு விடையாய் இருக்க முடியும்.

இறைவன் நித்யவாசம் புரியும் ஒருவர் உள்ளம் எப்படிப்பட்டதாய் இருந்திருக்கவேண்டும்?

கைலாசபதி சங்கரனே இந்த சங்கரனின் இதயத்தில் இருந்திருக்கிறான் எனும்போது அவர் வாசம் செய்த இடம், அவர் பிருந்தாவனஸ்தராகியிருக்கும் இடம் எப்படிப்பட்டதாய் இருக்கவேண்டும்?

யோசித்து பாருங்கள்!

DSC07699

பொதுவாகவே அதிஷ்டானத்தில் எழுந்தருளியிருக்கும் குருமார்களுக்கு வரம் தரும் சக்தி அதிகம். காரணம், தங்கள் புண்ணியத்தை நமக்கு கொடுத்து நமது பாவக்கணக்கை சமன் செய்வார்கள்.

அதெப்படி என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

ஒரு மிகப் பெரிய வங்கி ஒன்றில் – அது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியாக இருந்தாலும் சரி வேறு வங்கியானாலும் சரி – ஒரு அவசரத்திற்கு உங்களுக்கு பெர்சனல் லோன் தேவைப்படுகிறது என்று வைத்துகொள்வோம்… அதை நீங்கள் அத்தனை சுலபத்தில் வாங்கி விட முடியுமா?

* உங்கள் வங்கிக் கணக்கை நீங்கள் சரியாக பராமரித்திருக்கவேண்டும்.

* உங்கள் FINANCIAL TRACK RECORD நன்றாக இருக்கவேண்டும்.

* சிபில் ரெக்கார்ட் சுத்தமாக இருக்கவேண்டும்.

* செக் பவுன்சிங் இருக்கக் கூடாது.

*  கடனை திருப்பிச் செலுத்தகூடிய வருவாய் ஆதாரங்கள் உங்களுக்கு இருக்கவேண்டும். இப்படிப் பல.

சுருக்கமாக சொன்னால், உங்களுக்கு கடன் உதவியே தேவையில்லை என்னுமளவிற்கு உங்கள் பொருளாதார நிலை பாதுகாப்பாக உள்ளது என்பதை நிரூபித்தால் தான் 99% வங்கிகளில் கடன் கிடைக்கும். இது தான் நிதர்சனம்.

மேற்கூறிய காரணிகளில் ஒன்று சரியில்லை என்றால் கூட உங்களுக்கு கடன் மறுக்கப்பட்டுவிடும்.

ஆனால், அடகுக்கடைகளில் இந்த தொல்லை கிடையாது. அவர்களிடம் நீங்கள் பிணையாக வைக்கும் பொருளுக்கு இணையாக நீங்கள் பணம் பெற்றுகொள்ளலாம். மற்றபடி வேறு எந்த தலையை கிறுகிறுக்க வைக்கும் ஃபார்மாலிட்டிகள் கிடையாது. அவர்களுக்கு தேவை அடகுக்கு ஒரு பொருள். ஒன்றைக்கொடுத்து இன்னொன்று வாங்கு என்பது தான்.

DSC00633

கடவுளுக்கும் குருமார்களுக்கும் இது தான் வித்தியாசம். உங்கள் டிராக் ரெக்கார்ட் நன்றாக இருந்தால், உங்கள் கணக்கு சுத்தமாக இருந்தால் கடவுள் அருள் உடனே கிடைத்துவிடும். குருமார்களை பொருத்தவரை, அவர்கள் அருள் புரியும் விதமே வேறு. மனிதர்களாக பிறந்து தெய்வமாக உயர்ந்ததால் மனித வாழ்க்கையின் கஷ்டங்களை, துன்பங்களை அறிந்தவர்கள் அவர்கள். அவர்களை சரணடையும்போது அவர்களின் புண்ணியப் பலனை உங்கள் கணக்கில் வைத்துவிட்டு உங்கள் பிறவிக் கடனை (ஊழ்வினையை) சமன் செய்வார்கள்.

(பக்தர் பிரஹலாதனில் ஆரம்பித்து, பாஹ்லீக மகாராஜா, ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் என்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பல அவதாரங்கள் எடுக்க காரணம் இது தான்! அதாவது அவரது கணக்கில் சேர்ந்து போன எண்ணற்ற புண்ணியப் பலன்களை நமக்கு கொடுத்து நமது பாவங்களை தீர்ப்பது!)

மஹா பெரியவாளை பொருத்தவரை அவர் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியப் பலன்கள் அளவிட முடியாத ஒன்று.

==========================================================

Check our exclusive articles…

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன? 

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்

பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!

=========================================================

தாம் பீடத்தில் இருந்த காலகட்டங்களில் நித்திய கர்மாக்களை சரிவர தான் செய்தது முதல் மற்றவர்களையும் செய்ய வைத்து, விரதங்களை வழிபாட்டு முறைகளை தவறாமல் அனுஷ்டித்து, பல ஆலயங்களுக்கு புனருத்தாரணம் செய்து, குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்து, கோ-சம்ரட்சணம், வேத சம்ரட்சணம், அன்னதானம் முதலியவற்றை செய்து, செய்யவைத்து, பலரது உள்ளத்தில் இருந்த அஞ்ஞான இருளை விரட்டி அங்கு அறிவு  என்னும் தீபம் ஏற்றி, அஹிம்சையை கடைப்பிடித்து இப்படி பல அருஞ்செயல்கள் மூலம் எண்ணற்ற புண்ணியத்தை சேர்த்துக்கொண்டு, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அதனை வாரி வாரி வழங்கி வருகிறார்.

இப்படி சொல்கிறோம் என்பதற்காக பாபங்களை மூட்டைக் கொண்டு போய் அவர் முன் அவிழ்க்கக் கூடாது.

கண்ணதாசன் மிக அழகாக கூறியிருக்கிறார்…

முன்னோர்கள் செய்த பாபம் முன்தெய்வம் செய்த கோபம்
முற்பிறவி செய்த பாபம் முத்தீயாய் சுட்டெரிக்க
முன்வந்து சங்கமித்து மூவேணி கங்கையாகி
முத்தீயை அழித்து காக்கும் ஜகத் குரு பெரியவா சரணம்
– கண்ணதாசன்

DSC00664
கண்ணதாசனின் மணிமொழிக்கு கௌலி கூறிய சாட்சி!

மஹா பெரியவாளின் ஆராதனை தினத்தில் நாம் கூறுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவரை பற்றி அறிந்துகொள்வதை விட அவர் கூறிய உபதேசங்களின் படி வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

1330 குறட்பாக்களையும் தெரிந்து வைத்திருப்பதற்கும் ஓரிரு திருக்குறளையேனும் கடைப்பிடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

திருக்குறளே தெரியாமல் திருக்குறள் கூறும் கருத்துக்கள் படி வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். எது உயர்ந்தது?

கீதையை தெரிந்து வைத்திருப்பவன் சிறந்தவனா? கீதை தெரியாவிட்டாலும் அதன் படி நடப்பவன் உத்தமனா?

‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ தொகுப்பில் படித்த ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஒரு பக்தர், “உங்களிடம் வரும்போது உங்கள் முன்னால் எல்லாரும் பயபக்தியுடன் ஆச்சாரமாக இருக்கிறார்கள். வெளியில் போனவுடனே சுயவேஷம் வந்துவிடுகிறது” என்றார்.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே “என் தபசு போதவில்லை. வெளியிலும் அவர்கள் நல்லபடியாக இருக்க செய்ய முடியவில்லை” என்றாராம்.

மடத்தில் ஏதாவது தவறு நடந்தால் ஸ்ரீ ஸ்வாமிகள் தானே உபவாசம் மேற்கொள்வார். குற்றம் தன்னையே சாரும் என்று சொல்வார்.

பரமேஸ்வரன் பாற்கடலில் வந்த விஷத்தை தான் உண்டு, பிறருக்கு அமிர்தம் தரவில்லையா என்ன?

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன்
எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்

அது போல நம் குரு நம் பாவத்தை தான் ஏற்றுக்கொண்டு நமக்கு அருளென்னும் அமுதத்தை அள்ளித் தருகிறார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் மஹா பெரியவா அவர்களின் ஆராதனை தினத்தில் அவரை பற்றி அறிந்துகொள்ள நாம் காட்டும் ஆர்வத்தைப் போல அவர் காட்டிய வழிமுறைப்படி வாழவும் முயற்சிப்போம். இது ஒன்றே நாம் அவருக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய நன்றி!

==========================================================

வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

இம்மாத இறுதியில் இடம்பெறக்கூடிய பிரார்த்தனைக்கு வழக்கறுத்தீஸ்வரர் கோவில் திரு.நாகராஜ குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். (பிரார்த்தனை தேதி பின்னர் அறிவிக்கப்படும்). எனவே வழக்கு மற்றும் இதர சட்டப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் வாசகர்களும் அன்பர்களும் தங்கள் பிரார்த்தனைகளை நமக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். தங்கள் பிரார்த்தனைகளுடன் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது!

==========================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava…

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. To contribute us click here!

==========================================================

[END]

5 thoughts on “தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

  1. மஹா பெரியவ பற்றிய பதிவு, Megavium அற்புதம்.

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

    மஹா பெரியவ திருவடி சரணம்.

    குரு அருள் இருந்தால் திரு அருள் தானாக வரும்.

    நன்றியுடன்,

    நாராயணன்.

  2. மகா சுவாமிகளின் ஆராதனை அன்று மிக மிக அற்புதமான ஒரு பதிவு.

    குருமார்களுக்கும் கடவுளுக்கும் இருக்கும் வேறுப்பாட்டை வங்கியுடனும் அடகுக்கடையுடனும் ஒப்பிட்ட விதம் அருமை. இல்லையெனில் நீங்கள் கூற வந்த விஷயம் புரிந்துகொள்வது கடினமாய் இருந்திருக்கும்.

    குருமார்கள் தாங்கள் சேர்த்த புண்ணியப் பலனை நமக்கு வாரி வாரி வழங்குகிறார்கள் என்பது மிகப் பெரிய உண்மை.

    பதிவின் ஒவ்வொரு புகைப்படமும் அருமை. பெரியவாவை நேரிலேயே தரிசித்தது போல உள்ளது.

    கண்ணதாசனின் வரிகள் அவருக்கு நிகர் அவர் தான் என்பதை உணர்த்தியது. கௌலி சாட்சி என்று கூறுவது இதைத் தானோ? உங்கள் கண்ணில் மட்டும் எப்படி இவையெல்லாம் படுகிறதோ.

    பெரியவா சரணம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. வணக்கம் சுந்தர் சார்

    மஹா பெரியவா பற்றிய பதிவு மிகவும் அருமை

    நன்றி

  4. நேரில் காணமுடியாத சந்தர்ப்பம் இதோ தங்களின் பதிவின் மூலம் கண்டேன் // பெரியவாளை நேரில் தரிசித்த புண்ணியம் உங்கள் அருளால் இன்று கிடைத்தது ////.

    மிக மிக நன்றி சார், அவர் வழியில் நடக்க முயல்வோம்/\\.

    தங்களின்
    சோ ரவிச்சந்திரன்
    கர்நாடகா

  5. கருணைக் கடல்

    இது சாதாரண வார்த்தை அல்ல..அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.இந்த பதிவை படித்த பின்பு கருணைக் கடல் என்றாலே நம் பெரியவா தான் நினைவிற்கு வருகிறார் என்பதே இந்த பதிவின் வெற்றி.

    பதிவின் ஆரம்பத்திலேயே…காண கிடைக்காத பெரியவா படமும்..என்னை நினை..உன்னை மற என்ற சத்திய வாக்கும்…!
    பெரியவாவின் வெவ்வேறு தரிசனங்கள் கண்டோம்.

    குருவிற்கும்,திருவிற்கும் உள்ள மெல்லிய நூலிழை வித்தியாசத்தை அருமையான விளக்கத்தோடு சொன்னது..Rightmantra வின் உழைப்பு தெரிகிறது.

    பெரியவாவின் கருணைக் கடலில் நாமும் மூழ்கி முத்து எடுப்போம்.

    ஜெய ஜெய சங்கர ..ஹர ஹர சங்கர.
    மகா பெரியவா திருப்பாதம் சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *