ஈசன் நானில்லை என்று ஏய்த்திட்டாலும்
ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே”
காஞ்சியில் மஹா பெரியவாளின் அதிஷ்டானத்திற்கு செல்லும் யாவரும், பிரதக்ஷிணம் வரும் போது இந்த படத்தை பார்க்காமல் இருக்கமுடியாது. தன்னையுமறியாமல் பெரியவா தன்னுடைய தெய்வாம்சத்தை வெளிப்படுத்திய தருணங்களில் ஒன்று இது. (நம்மைப் பொருத்தவரை அவர் ஸ்ரீஹரியின் அம்சம்!)
‘தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை’ என்னும் அரிய நூலில் காணப்படும் மீளா அடிமை என்றழைக்கப்படும் பிரதோஷம் மாமாவின் வாழ்வில் மஹா பெரியவா நிகழ்த்திய சில லீலைகளை இன்றைய பதிவில் பார்ப்போம். பதிவை படித்தால் மேலே கூறிய வரிகள் எந்தளவு சத்தியம் என்பது இதன் மூலம் புலனாகும்.
இன்னொரு விஷயம்…. இன்று ‘கந்தசஷ்டி’ துவங்குகிறது. முருகப்பெருமான் தொடர்புடைய மஹா பெரியவாளின் லீலை ஏதேனும் ஒரு ஒன்றை அளிக்க நினைத்தோம். தேடலில் கிடைக்கவில்லை. நேரம் தான் ஓடியது. சரி… இப்போதைக்கு இதை அளிப்போம் என்று கருதி மேற்கூறிய ‘பால் நினைந்தூட்டும் தாயினும் மேலோன்’ அத்தியாயத்தை படித்துவிட்டு அடுத்த பக்கத்தை புரட்டினால் அடுத்த அத்தியாயத்தின் பெயர் என்ன தெரியுமா?
‘அடிமைக்கு அருளிய முருகனடிமை’.
படித்தபோது கந்தசஷ்டிக்கு அளிக்க இதைவிட பொருத்தமான பதிவு கிடைக்காது என்று தோன்றியது. ஆக… இன்று உங்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல. மாங்கனிகள்!’
அதிதி தேவோ பவ தொடரின் அடுத்த பாகம் அளிக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் பாகத்தின் சுட்டி இறுதியில் அளிக்கப்பட்டுள்ளது. படிக்கவும். பயன்பெறவும். நன்றி.
================================================
பால் நினைந்தூட்டும் தாயினும் மேலோன்
ஒருமுறை எழும்பூரில் ஸ்ரீ மகா பெரியவாளின் ஜயந்தி உற்சவம்! ஸ்ரீ மகா பெரியவாளின் ஜெயந்தி கொண்டாட்டமென்றால் அங்கு வரும் வேதவித்துக்களான வைதீர்களையெல்லாம் ஸ்ரீ பெரியவாளின் அம்சமாகவே பாவிக்கும் ஸ்ரீ பிரதோஷம் மாமா, அவர்களை உபசரிப்பதில் மிக்க சிரத்தைக் காட்டுபவர்.
அது போன்றே மஹாருத்ர ஜபங்கள் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறி, அடுத்தநாள் ஸ்ரீ பெரியவாளின் திருநட்சத்திர அனுஷதினம் கோலாகலமாக கொண்டாடப்பட இருந்தது. ஸ்ரீ பெரியவாளின் பிரசாதமாக வைதீர்களின் ஆகாரம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டுமென்று பிரதோஷம் மாமா எப்போதும் நினைக்க, இவர் தம் ஆழ்ந்த பக்தியால் எல்லா ஜயந்தி உற்சவங்களிலும் அப்படியே நேர்த்தியாக சாப்பாடு அமையும்.
அன்று இரவு பிரதோஷம் மாமாவின் சிந்தனையில் ஒரு அவா எழுந்தது. நாளை வைதீக பிராமணர்களுக்கும், ஜெயந்தியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இனிய அமுதமாக பால்பாயாசம் போடவேண்டும் என்பதே இவருடைய நியாயமான ஆசையாக எழுந்தது.
விடிந்தால் ஜயந்தி! எப்படியும் சுமார் 500 பேராவது சாப்பிடலாமென்ற நிலையில் நூறுலிட்டர் பால் உத்தேசமாக தேவைப்படலாம். கிடைக்குமா, கிடைக்காதா என்றெல்லாம் மாமா கவலைப்படுபவரல்ல. ‘அவா பாத்துப்பா’ என்ற பிறருக்கு உபதேசம் செய்யும் அதே வார்த்தையில் அவர் அசையாத நம்பிக்கையோடு இருப்பவர்.
================================================
Also check : ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்பின் வெற்றிக் கதைகள் @ ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
================================================
”ஏம்ப்பா! ஜெயந்திக்கு பால்பாயாசம் போடணும்… ஏற்பாடு பண்றயா?” என்று தன்னிடம் வாஞ்சையோடு இருந்த அந்த வைணவ பக்தரிடம் அந்த இரவு பிரதோஷம் மாமா உத்தரவாகவே கூறிவிட்டார். வைணவ அன்பருக்கு திடுக்கிட்டது. சுமார் நூறு லிட்டர் பால் என்றால் திடுதிப்பென எங்கே போவது? பால் கிடைப்பதென்பது இப்போது போலல்லாமல் மிகவும் சிரமமான காலக்கட்டங்கள். 1980களில் ஒரு விஷேசமேன்றால் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து பணமும் கட்டியிருந்தால்தான் பால் கிடைக்கும். இப்படி நினைத்த நேரத்தில் நூறு லிட்டர் பால் என்றால் எங்கே போவது?
அன்பருக்கு ஒன்றும் தோன்றவில்லை. இந்த சங்கடத்தை மாமாவிடம் எப்படி சொல்வது என புரியவில்லை. இந்த இரவில் பாலுக்காக எங்கே அலைவது, அப்படி அலைந்தாலும் இத்தனைப் பால் கிடைக்க நிச்சயம் வாய்ப்பே இல்லையே என்றாலும் அன்பர் குழம்பினார். மாமாவிடம் சொல்லவும் தைரியமில்லை.
” என்னப்பா… பதிலையே காணோமே” என்று மாமா இவரைகேட்க, என்ன பதில் சொல்வது என்ற இக்கட்டில் அன்பர் இருக்க, அந்த சமயம் டெலிபோன் ஒலித்தது.
”யார் பாரு” என்று பிரதோஷம் மாமாவின் கவனம் திரும்பி அன்பரை போனை எடுக்கச் சொன்னார்.
போன் செய்தியை கேட்ட அன்பரின் முகத்தில் பளிச்சென்ற பிரகாசம் வீசியது. அந்த கணமே சாட்சாத் ஈஸ்வரரான மகாபெரியவரின் மேன்மையான அருளும், பிரதோஷம் மாமாவின் ஆழ்ந்த பக்திக்கு ஸ்ரீ பெரியவா தரும் அங்கீகாரமும் ஒருமிக்க அனுபவமாக வைணவ பக்தர் உணரமுடிந்தது.
டெலிபோன் வழிவந்த பேரருள் செய்தி இதுதான். ஜோஷி என்ற வடக்கத்தி அன்பர் ஸ்ரீபெரியவாளிடம் பக்தி பூண்டவர். அவர் பசுக்களை வைத்து பரிபாலனம் செய்பவர். அவருக்கும் ஒரு அவா எழுந்தது. பிரதோஷம் மாமா இல்லத்தில் நடக்கும் ஜெயந்திக்கு தன் பால்பண்ணையிலிருந்து பால் அனுப்பி அதை பிரசாதமாக்க வேண்டுமென்று அவர் நினைத்து அதை தெரிவிக்கத்தான் அந்த இரவு போன் செய்தார். ஆக, மாமாவின் நியாயமான ஆவலை பூர்த்தி செய்யும் அளவு பால் கிடைத்தாயிற்று.
சேதியை மாமாவிடம் சொன்னபோது, வைணவ அன்பர் உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கி நின்றார். ஸ்ரீபெரியவா தியானமாகவே இருப்பதன் உயர்வை அவர் உணர்ந்து மெய் சிலிர்த்தார்.
================================================
Also Check : வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
நடுக்காவேரி மகாகணபதி தரிசனம் – பிள்ளையை பார்க்க வழி காட்டிய அன்னை!
தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!
================================================
அடிமைக்கு அருளிய முருகனடிமை
ஒருமுறை எழும்பூரில் மாத ஜயந்தி சுவாமி புறப்பாட்டிற்கு ஏற்பாடுகள் ஆரம்பித்தன. மாதந்தோறும் ஸ்ரீபெரியவாளுக்கு மலர் அலங்காரம் செய்து அருள்பெறும் ஒரு அன்பருக்கு ஏனோ அன்று வர மனமில்லை. நேரம் ஆக, ஆக மீளா அடிமையின் மனம் அடித்துக்கொண்டது. இந்த மலர் மனம் கொண்ட பிரானுக்கு அலங்காரம் பண்ணிப்பார்ப்பதில் குறை வருமா… என்று பலவிதமாக உள்ளத்தில் எண்ணங்கள் ஓடின…
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா கைவிடவில்லை.
எங்கிருந்தோ ஒரு பக்தரை திடீரென்று அனுப்பி வைத்தார் பெருமான். காவியுடை உடுத்தி தீட்சை வளர்த்த அந்த பெரியவர் தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொள்கிறார். தனக்கு அலங்காரம் கை வந்த கலை என்கிறார். அடிமைக்கு அளவிட முடியாத ஆனந்தம். உடனே அலங்காரம் ஆரம்பித்தன. எந்த மாதமுமில்லாமல் இந்தமுறை ஸ்ரீபெரியவாளுக்கு மிக நேர்த்தியாக மலர் ஜோடனை அமைந்து விட, புறப்பட்டு கோலாகலமாக நடந்தேறியது.
சரி எதேச்சையாக யாரோ வந்து அலங்காரம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன அதிசயம் என்று எண்ணலாம்.
திடுதிப்பென்று எங்கிருந்தோ உதித்த ‘முருகனடிமை’ அலங்காரம் முடிந்தவுடன் எங்கோ மாயமாய் ஏன் மறைய வேண்டும்.
அற்புதங்களை அத்தனை சுலபமாக நினைத்துவிட முடியுமா.
அந்த முருகனடிமை, மீளா அடிமைக்காகவேயல்லவா அந்த பெருங்கருணையான சுவாமிநாதனால் அனுப்பப்பட்டிருக்கிறார்.
==========================================================
Please check our new series :
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
==========================================================
Support Rightmantra in it’s mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
================================================
Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!
நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!
நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!
புடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்!
மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!
அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!
‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)
“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!
தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!
தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!
“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)
தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)
மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)
நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)
அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)
“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)
“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)
ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)
மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
================================================
[END]
‘மகா பெரியவா லீலாம்ருதம்’ தலைப்பே அருமை. பதிவு அதைவிட அருமை. புகைப்படங்கள் அதையும் விட அருமை.
பெரியவாளிடம் உண்மையான பக்தியும் அன்பும் கொண்டிருந்தால் அவர் எந்த ரூபத்திலாவது ஓடிவந்து நமக்கு தயை புரிவார் என்பதற்கு மற்றுமொரு (இரு) சான்றுகள்.
நீங்கள் அவதரித்த பூமியில் நாங்களும் இருக்கிறோம் என்பதே எங்களுக்கு சந்தோஷம் தான்.
பெரியவா திருவடி சரணம்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
பெரியவரை பற்றி நினைத்தாலே இனிக்கும் அவாளை பற்றிய செய்திகள் படிக்கும் பொது கிடைக்கும் இன்பத்துக்கு கேக்கவா வேண்டும் //.
உங்களின் அற்புதமே மிக அருமையான போடோஸ் இணைப்பதுதான் /’/
நல்ல நல்ல செய்திகளை வாசிக்கும் நாங்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ./.
முருகனனின் அருள் எல்லோருக்கும் கிட்ட வணங்குகிறேன் .
தங்களின்
ரவிச்சந்திரன்,
கைகா