Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

print
யிலாடுதுறை – சீர்காழி சாலையில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது நாகங்குடி என்னும் கிராமம். மெயின்ரோட்டில் சாலையில் அமைந்துள்ளது சிறிய நாகங்குடி. சாலையிலிருந்து சுமார் 2 கி.மீ. உள்ளே சென்றால் பெரிய நாகங்குடி வரும் .

சுற்றிலும் வயலும் வரப்புமாக பசுமையாக காட்சியளிக்கும் ஊர் இந்த நாகங்குடி. சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் (1952) இந்த ஊரில் கோவில் ஒன்றுக்கு திருப்பணி நடைபெற்றது.

Nagangudi

ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பொருள் திரட்டி திருப்பணி துவக்கினார்கள். பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் அந்த அசம்பாவிதம் நடைபெற்றது. திருப்பணி குழுவில் இடம்பெற்றிருந்த அறங்காவலர்களில் ஒருவர் திடீர் மரணமடைந்தார். இதையடுத்து திருப்பணி நிறுத்தப்பட்டது.

சில மாதங்கள் கழித்து மீண்டும் திருப்பணி துவங்கியது. வேறொருவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டு பணி மீண்டும் துவங்கியது. இந்த அறங்காவலரும் திடீரெனெ போய் சேர்ந்துவிட்டார்.

Nagangudi 2

அவ்வளவு தான்… ஏதோ சாமிக் குத்தம் போல என நடுநடுங்கிப் போன கிராமத்தார் திருப்பணியை நிறுத்திவிட்டனர். அதற்கு பிறகு எவரும் அறங்காவலர் பதவியை ஏற்க முன் வரவில்லை. எத்தனை நாள் தான் பாலாலயத்தை  வைத்துக்கொண்டிருப்பது?

செய்வதறியாது அந்த மக்கள் திகைத்து  நின்றபோது, ஈஸ்வரனே தன் பிரதிநிதியை அந்த ஊருக்கு அனுப்பிவைத்தான்.

Maha periyava nagangudiஆம்…. நடமாடும் தெய்வம் மகா பெரியவா அந்த கிராமத்திற்கு விஜயம் செய்து சில நாட்கள் தங்கினார்கள்.

கிராமத்தார் பெரியவாவிடம் ஓடினார்கள். “சாமி…. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ தெரியலே…  அடுத்தடுத்து இந்த மாதிரி நடந்துடுச்சு… கோவில் திருப்பணியும் நின்னு போச்சு… சாமி தான் ஏதாவது வழி காட்டணும்” நடமாடும் தெய்வத்திடம் விண்ணபித்துக் கொண்டார்கள்.

பெரியவா கோவிலை சென்று பார்த்தார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை… “கோவிலை சுற்றி முதலில் அகழி வெட்டுங்கள். அப்புறம் திருப்பணியை துவக்கலாம்!” என்றார்.

பெரியவாவின் உத்தரவை அடுத்து கோவிலை சுற்றி உடனடியாக பெரிய அகழி வெட்டப்பட்டது.

Nagangudi 3
அந்தக் கோவில்!

கோவில் கிராமத்திலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு தனித் தீவு போல காட்சியளித்தது.

வெகு விரைவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகமும் நிறைவு பெற்றது. மக்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

அது சரி…பெரியவா  ஏன் அகழி வெட்டச் சொன்னார்கள்? என்ன தோஷம்? எந்த தேவதைக்கு கோபம்?

அது சங்கர ரகசியம்!

Nagangudi 5
அகழி!

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பின்னர் எப்படியாவது நாகங்குடி சென்று மேற்படி கோவிலை சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் நமக்கு ஏற்பட்டது.

Nagangudi 4
தீவு போல காட்சியளிக்கும் கோவில்!

இதனிடையே கடந்த வாரம் ஒரு நாள் வடலூரில் வாழும் வள்ளலாராக விளங்கி வரும் திரு.சிவப்பிரகாச சுவாமிகளிடம் பேச நேர்ந்தது.  (சுவாமிகள் என்றால் ஏதோ காவி உடுத்திக்கொண்டு கீதையும் ராமாயணமும் பேசிக்கொண்டு மக்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருப்பார் என்று நினைக்கவேண்டாம். இவர் தினுசே வேறு!)

வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் பற்றியும் அவர் ஆற்றி வரும் சேவைகளை பற்றியும் ஏற்கனவே நமது தளத்தில் விரிவான பதிவுகளை  வெளியிட்டிருக்கிறோம். (பார்க்க : ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!)

சுவாமிகளையும் பற்றியும் அவர் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தையும் பற்றியும் படித்ததிலிருந்து நம் வாசகர்கள் பலர் அவரை பார்க்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து  வந்தனர். இதையடுத்து கடந்த மே மாதம் நம் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் வடலூர் சென்று சுவாமிகளை சந்தித்து அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு நாள் செலவிட்டு மகிழ்ந்தது  உங்களுக்கு தெரிந்திருக்கும். (சுவாமிகளை பற்றியும் அவர் நடத்தி வரும் இல்லத்தை பற்றியும் பதிவளித்தாகிவிட்டது. நேரமின்மை காரணமாக நமது வாசகர்களுடன் வடலூர் சென்று வந்ததைப் பற்றி மட்டும் இன்னும் பதிவளிக்கவில்லை. விரைவில் அளிக்கிறோம்!)

இதனிடையே சென்ற வாரம் ஒரு நாள் நமக்கு வரன் பார்க்கும் விஷயம் தொடர்பாக சுவாமிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “ஞாயிற்றுக் கிழமை முடிஞ்சா வந்துட்டு போங்களேன்…” என்று கேட்டுக்கொண்டார்.

நமக்கு நாகங்குடி செல்லவேண்டும் என்கிற ஆவல் ஏற்கனவே பன்மடங்கு ஏற்பட்டிருந்தமையால் வடலூர் சென்று சுவாமிகளை பார்த்துவிட்டு அப்படியே மயிலாடுதுறை (நாகங்குடி) செல்லலாம் என்று முடிவு செய்து சென்ற சனிக்கிழமை இரவு வடலூர் புறப்பட்டோம்.

ஞாயிறு காலை வடலூர் சென்று அங்கு சுவாமிகளின் ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் மூன்று மணிநேரம் செலவழித்துவிட்டு பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறை பயணம். வடலூரில் இருந்து நாங்கள் செல்ல டாக்ஸி ஒன்று ஏற்பாடு செய்துவிட்டோம். நம்முடன் புதுவையை சேர்ந்த நண்பர் சிட்டி வந்திருந்தார்.

நாகங்குடியை பற்றி பலருக்கு தெரியவில்லை. ஆங்காங்கு விசாரித்தபடி தான் சென்றுகொண்டிருந்தோம்.

ஒரு வழியாக சீர்காழி – மயிலாடுதுறை சாலையில், நாகங்குடியை கண்டுபிடித்தபின்னர் ஊருக்குள் பயணம்.

பசுமை மாறாத விவசாய பூமி இந்த நாகங்குடி..!

சிறிய கிராமம் தான் என்றாலும் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கோவில், குளம் அந்த ஊரில் தென்பட்டது.

இந்த கோவிலாக இருக்குமோ? அந்தக் கோவிலாக இருக்குமோ? என்று அவ்வப்போது வண்டியை நிறுத்தி இறங்கி ஓடிப்போய் பார்த்தபடி சென்றோம்….

கடைசியில்….

* அது என்ன கோவில்?

* சுவாமி பெயர் என்ன?

* எப்படி நாம் கோவிலைக் கண்டுபிடித்தோம்?

* நமக்கு ஏற்பட்ட கிலி!!!!!!!!!!!!

* திருப்பணி தடைப்பட்டது ஏன்?

* பெரியவா ஏன் அகழி வெட்டச் சொன்னார்?

அடுத்த வாரம் தொடரும்….

[திரு.டி.எஸ். கோதண்டராம சர்மா அவர்கள் எழுதிய ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்னும் நூலில் கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து இந்த பதிவு நேரடியாக சென்று ஆய்வு செய்து சற்று விரிவாக, நமது பிரத்யேக புகைப்படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது!]

=================================================================

Also check from our archives…

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் புதிய தகவல்களுடன் தயாராகி வருகிறது. அடுத்த வாரம் முதல் நிச்சயம் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

8 thoughts on “சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

  1. குருதேவா சரணம்……..சரணம்……..

    குரு தரிசனத்திலும் சஸ்பென்ஸ் வைக்கிறீர்களே…………இது சரியா?

  2. மகா பெரியவா சரணம்

    மகா பெரியவா அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைக்க வாழத்துக்கள்

    நன்றி
    உமா

  3. நாகங்குடி கிராமம் கொள்ளை அழகு. கோவில் அதைவிட அழகு. பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    அகழி வெட்டினால் பிரச்னை தீரும் என்று அவருக்கு எப்படி தெரிந்ததோ… மகா பெரியவாவின் ஞானம் வியக்கவைக்கிறது… !!!!!!!

    அடுத்த பாகத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறோம்.

    வடலூர் செல்ல ஆவலாக இருக்கிறேன். வீட்டில் அவரிடம் கூறியிருக்கிறேன். தைப்பூசத்திற்கு செல்லும்போது செல்லலாம் என்று கூறியிருக்கிறார்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. இந்த இடங்களை எல்லாம் பார்க்கும்போதே மனஅமைதி ஏற்படுகிறது..

    பெரியவா தொடர் படிக்க
    பெரிய அவா…

    1. வால்டேர் என்னை தொடர்புகொள்ளச் சொல்லி உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேனே… பார்க்கவில்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *