Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > “தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

print
ன்றைய அவசர யுகத்தில் எத்தனையோ கேள்விகள் நம் மனதில் வட்டமடிக்கின்றன. அவற்றுக்குரிய சரியான பதிலை தரும் மெய்ஞானிகள் தான் யாருமில்லை என்கிற அபிப்ராயம் பலருக்கு இருக்கிறது. ஆனால், உங்கள் மனதில் எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு அன்றே காஞ்சி மகான் பதிலளித்திருக்கிறார் தெரியுமா? சற்று அழுத்தமாகவே!! ஆம்… தன் தெய்வத்தின் குரலில். பாமரர்களின் மனதில் எழக்கூடிய சந்தேகங்களை வினாக்களாக அடுக்கி வைத்துக்கொண்டு ‘தெய்வத்தின் குரல்’ என்னும் அந்த பொக்கிஷத்தில் அவர் கூறியிருப்பவற்றை அதற்கு பதிலாக தந்திருக்கிறார் நண்பர் ‘அம்மன் பதிப்பகம்’ அம்மன் சத்தியநாதன் அவர்கள். வித்தியாசமான அசத்தலான இந்த கேள்வி-பதிலை இன்றைய குரு வார ஸ்பெஷலாக தந்திருக்கிறோம்.

கேள்விகள் அத்தனையும் நிச்சயம் உங்கள் மனதில் பல காலங்களாக உள்ளவை தான். அவற்றுக்கு நடமாடும் தெய்வத்திடமிருந்தே பதில் கிடைத்துள்ளது. கல்வெட்டில் பொறித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்பற்ற வசதியாக இருக்கும். குறிப்பாக கடைசி இரண்டு கேள்வி-பதில்கள்.

(இந்த தொகுப்பை நம் தளத்தில் வெளியிட அம்மன் சத்தியநாதன் அவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று இங்கே அளித்திருக்கிறோம்!)

தெரிந்தோ தெரியாமலோ பல காலமாக செய்து வரும் கெட்ட காரியங்களை எப்படி போக்கிக்கொள்வது ஸ்வாமி?

கேள்வி 1 : இந்த அவசர யுகத்தில் பாராயணம், ஜபம், தியானம் போன்றவற்றை அனுஷ்டிக்க முடியவில்லையே ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : இப்போது இருக்கும்படியான லோக வழியில் இதைப் பற்றி யோசிக்கச் சாவகாசம் இல்லை. மந்திரத் தியானமோ ரூபத் தியானமோ பண்ணுவதற்கான அவகாசம் இல்லை. ஏதாவது ஒரு மந்திரத்தை ஜெபிப்பது, ஓர் உருவத்தை தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம். தேவியினுடைய சரண கமலத்தை எப்போதும் உபாசித்தால் அவளுடைய கடாக்ஷத்தால் ஜனன நிவிருத்தி ஏற்படும். அதற்கு முதல்படி பாராயணம். அதற்க்கப்புறம் ஜெபம். அதன் பின்பு தியானம் பண்ணுவது. அப்படி தியானம் பண்ணும்போது, “பராசக்தி! இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக்கொண்டிருக்கும்படியாக அநுக்ரஹம் செய்ய வேணும்!” என்று பிரார்த்திதுக்கொள்ளவேண்டும்.

கேள்வி 2 : அடி மேல் அடி வருகிறதே ஸ்வாமி என்ன செய்ய?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : என்ன என்னவோ வருகின்றனவோ வரட்டுமே! அவை வருவதற்கு என்னவோ பண்ணியிருக்கிறோம். அவை வருகின்றன. வந்தால் என்ன? நாம் செய்ய வேண்டிய கடமை என்னவோ அதை நன்றாக செய்யவேண்டுமே தவிர, இப்படி வந்துவிட்டதே என்று எதற்க்காக மனசினாலே விசாரப்படவேண்டும்? விசாரப்படுவதினால் வருவது நிற்கப்போகிறதா? அல்லது வந்துவிட்டது தான் உடனே போய்விடப்போகிறதா?

Maha Periya Aradhanai 1

கேள்வி 3 : ஒரு பாவம் செய்யவேண்டியிருக்கிறது. அதைச் செய்தால் தான் நாலுபேருக்கு நன்மை விளையும். அப்போது அந்த பாவம் செய்வது தவறில்லையா சுவாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : ஒரு காரியத்தை செய்யவேண்டிய அவசியம் வந்துவிட்டது. இது பாவந்தான். அதை செய்யாவிட்டால் தேசமோ தேச மக்களோ அழிந்துபோவார்கள். அவர்களை ரட்சிப்பதற்காக வேண்டி வேறு வழியில்லாமல் அந்த காரியத்தை செய்தோம். காரியம் செய்தாகிவிட்டதல்லவா? அப்புறம் அந்த காரியத்தினால் ஏற்பட்ட பாவத்தை குழ்விக்கொள்ள பிராயச்சித்தம் செய்துகொள்கிறோம். இந்த தர்மத்தை லோகத்திற்கு காட்டுவதற்காக வேண்டியே ராமரும் ராவண சம்ஹாரத்துக்கு பிறகு அநேக இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி பூஜை செய்ததாக சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி 4 : இப்போதெல்லாம் ஆங்காங்கே மதம் விட்டு மதம் மாறும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளனவே. அவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன சுவாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அநுக்ரஹம் செய்கின்ற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு மத ஜனக் கூட்டத்தின்  மனப்பான்மையையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும் தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டிய அவசியமில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தை குறைவுபடுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவுபடுத்துகிறார்கள்.

கேள்வி 5 : எல்லா மதக்கோட்பாடுகளும் ஒரே மாதிரி இருந்துவிட்டால் எந்த பிரச்னையும் வராமலிருக்கும் அல்லவா?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அனுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்றே போல ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பது தான் அவசியம். UNIFORMITY அவசியமில்லை. UNITY தான் அவசியம்.

கேள்வி 6 : பாபத்தை எப்படி தீர்த்துக் கொள்வது ஸ்வாமி ?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : பாபத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக்கொள்ள முடியும். ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாவனைகளை இன்னொரு ஜன்மாவிலாவது தீர்த்துக்கொள்ளட்டும் என்கிற மஹா கருணையினால் தான் ஈஸ்வரன் மறுபடி ஜன்மா தருகிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? புண்ணியங்களை பண்ணாமலிருப்பதோடு இப்போது வேறு புதுசு புதுசாய் பாவங்களை செய்து மூட்டையை பெரிதாக்கிக்கொள்கிறோம். இப்படி பாபங்களை பெருக்கிக்கொள்ளாமல் அவற்றை கரைத்துக்கொள்வதற்காகத் தான் தர்மத்தையும் பக்தியையும் ஞானத்துக்கு அங்கமாக வைத்தார் பகவத் பாதாள்.

Maha Periya

கேள்வி 7 : கடன். கடன். கடன். எந்தப் பக்கம் திரும்பினாலும் கடன். இதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லையா ஸ்வாமி ?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : சோற்றுச் செலவைவிட ஜாஸ்தியாகும் காபியை நிறுத்துவது, பட்டுத் துணி வேண்டாம் என்று விடுவது, ஸ்வயம்பாக நியமத்தால் ஓட்டல் செலவை அடியோடு குறைப்பது; சினிமாவிற்கு போவதை நிறுத்துவது என்று இந்த நாலை மட்டும் செய்துவிட்டால் போதும். எவனும் கடன் கஸ்தி படாமலிருப்பதோடு, பிறத்தியாருக்கும் திரவிய ரூபத்தில் கொஞ்சமாவது உபசரிக்கமுடியும். வரதட்சனை இல்லை, கல்யாணத்துக்காக ஆயிரம் பதினாயிரம் என்று செலவழிப்பதில்லை என்றால் எந்தக் குடும்பத்திலும் பணமுடை, கடன் உபத்ரவம் ஏற்படவே ஏற்படாது.

கேள்வி 8 : தெரிந்தோ தெரியாமலோ பல காலமாக பல கெட்ட காரியங்களை செய்துவிடுகிறோம். இவற்றை எப்படி போக்கிக்கொள்வது ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : வீட்டிலே இருக்குற குழந்தை சதா ஏதோ விஷமம் பண்ணிக்கொண்டிருக்கிறது. கத்திரிக்கோல் எடுத்து நல்ல துணிகளை முக்கியமான காகிதங்களை நறுக்கிவிடுகிறது, செடிகளை வெட்டிவிடுகிறது. இப்படித் துஷ்டத் தனம் பண்ணுகிறது. அதையே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டால், இத்தனை மணிக்கு போகவேண்டும், இன்ன இன்ன பாடங்களை அதற்குள் எழுதிவிடவேண்டும், திரும்ப இத்தனை மணிக்குத் தான் வரமுடியும், வந்தால் இதைச் செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு அதற்கு ஏற்பட்டுவிடுகிறது. முன்பு காணப்பட்ட விஷம குணங்கள் எங்கோ போய்விடுகின்றன. பள்ளிக்கூடம் இல்லை லீவு நாள் என்றால் மறுபடியும் விஷம குணங்கள் தலை தூக்குகின்றன. அதே போல், நாம் கெட்ட எண்ணத்திலும் காரியத்திலும் ஈடுபட அவகாசமின்றி நல்ல காரியங்களை ஒரு விதிப் பிரகாரம் ஒழுங்கு தப்பாமல் செய்வது தான் முக்கியம். இதற்குத் தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் போட்டிருக்கின்றன.

கேள்வி 9 : தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டியது எதை ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : தினமும் தூங்கப் போகும் முன்பு இன்று ஜன சமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கரியம் பண்ணினோமா என்று கேட்டுக்கொள்ளவேண்டும். ‘ஈஸ்வரனைப் பற்றி பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’ என்று தேவாரத்தில் சொல்லியிருக்கிறதே அந்த மாதிரி நாம் பரோபகாரம் பண்ணாமலே ஒரு நாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே! அன்றைக்கு நாம செத்துப்போனதற்கு சமம் என்று வருத்தப்படவேண்டும்.

கேள்வி 10 : இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கஷ்டம். ஏழைக்கும் கஷ்டம். பணக்காரனுக்கும் கஷ்டம். இந்த கஷ்டங்களை எப்படி மறப்பது ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : மனிதர்களாக பிறந்துவிட்டோம். கஷ்டம்தான் எப்பொழுதும் நமக்கு அதிகமாகத்தான் இருக்கும். சுகம் எப்பொழுதோ வரும். எவ்வளவுக்கெவ்வளவு பெரிய மனிதர்களாக இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பெரிய கஷ்டம். திண்ணையிலிருந்து விழுந்தால் சிராய்ப்போடு சுளுக்கோடு நின்றுவிடுகிறது. அதுபோலவே பெரியவர்களுக்கு அதிகமாக துன்பம். சின்னவர்களானால் அவர்களுக்கு ஏற்றபடி சின்ன துன்பம். ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் துன்பம் நிறைய வந்துகொண்டுதானிருக்கும். நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது. நம்முடைய கஷ்டம் பெரிதே அன்று. நம்மாலாவது உலகம் சிறிது ஷேமமாக இருக்கும் என்று தெரிந்தால் நம் கஷ்டத்தை மறந்து லோக ஷேமத்திற்காக பாடுபடவேண்டும். நாம் கஷ்டப்பட்டாலும் படுவோம். நம் கஷ்டம் நம்மோடு இருக்கட்டும். லோகம் எல்லாம் ஷேமமாக இருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை உடனே செய்யவேண்டும். நம்மைக் காட்டிலும் லோக ஷேமமே பெரிது என்கிற ஞானம் இன்றைக்கு உண்டாக வேண்டும்.

(நன்றி : அம்மன் பதிப்பகம் | ஸ்ரீ பரமாச்சாரியாள் பதிலளிக்கிறார் |  தட்டச்சு : www.rightmantra.com )

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

=====================================================================

Also check : மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

=====================================================================

எத்தனை பதிகங்கள், எத்தனை ஸ்லோகங்கள்? அத்தனையும் படிக்கவேண்டுமா? எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா? என்ற சந்தேகத்திற்கு விடை இந்த பதிவு!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

=====================================================================

மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

=====================================================================

[END]

8 thoughts on ““தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

  1. 10 கேளிவிகளுக்கும் மிகவும் தெளிவான பதில் அளித்து இருக்கிறார் நம் நடமாடும் தெய்வம். இந்த அனைத்து வினாக்களும் ஒவ்வொரு வாசகர்கள் மத்தியிலும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் கண்டிப்பாக தோன்றி இருக்கும். இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான பதில் கிடைத்து இருக்கும்

    நாம் நமது கஷ்டத்தை பற்றியே நினைத்து கொண்டு இராமல் உலக நலத்திற்காக பாடுபட வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன்/

    அழகிய பதிவிற்கு நன்றி

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    உமா வெங்கட்

  2. குரு சரணம்.

    அத்தனையும் தெளிவான ஞான வழிகாட்டல்.
    இதை நாம் கடைபிடிக்க குருவின் ஆசிகள் நமக்கு துணை நிற்கட்டும்.

    highlight – நம் வாழ்வில் ” எதுவும் வருவதற்கு நாம் எதுவோ செய்திருக்கிறோம்”.. பெற்றதும் பட்டதும் கர்ம பலன்.

    தெய்வத்தின் குரல் – சத்திய படிமம்.
    குரு சரணம்.

  3. பரமாச்சார்யாளின் ஒவ்வொரு பதிலும் ஒரு வேதம் போல ஒலிக்கிறது. அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு கேள்விகளும் அதற்கேற்ற பதிலும். கடனில்லாமல் வாழும் வழிகள் பற்றி மகா பெரியவா கூறியிருப்பது அவ்வளவும் சத்தியம் சத்தியம்.

    பாபத்தை போக்கிக்கொள்ள புன்னியதால்தான் முடியும் – எவ்வளவு ஒரு ஆழமான அர்த்தமுள்ள பதில். இத்தனை நாளா எனக்கு இது புரியலையே.

    மிக மிக பயனுள்ள ஒரு பதிவு. நமக்காக இதுபோல் தேடித்தேடி நல்ல விஷயங்களை பகிரும் சுந்தருக்கு பல கோடி நன்றி.

  4. சுந்தர்ஜி

    மகா பெரியவா அவர்களின் கருத்துகள் கடலின் ஆழத்தைவிட மிகவும் ஆழமானது.

    நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய மிகவும் பயன் உள்ளது .

  5. Maha Periyava ThiruvadigaLee CharaNam! He will always give simple solutions, realising our inadequacies. Praying to Him and trying to follow His Upadesams to the extent possible, will help us to evolve further. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  6. பதிவின் தலைப்பை படித்து விட்டு, பதிவின் முன்னுரையை படித்த உடன், கேள்வி 9,10 தான் படித்தேன். இதுவரை எவளோ நாட்களை வீணாக்கி விட்டேன் என்று புரிகிறது. இனிவரும் நாட்கள் பிறவா நாட்களாக அமையாதிருக்க இறைவனை வேண்டுவோம். இறைவனிடம் வேண்டுவதோடு, நாமும் இறைவனை பற்றியும், இறை நாமம் பற்றியும் எப்படியாவது பேச முயல்வோமாக.

    துன்பத்தை தூசி தட்டிவிட்டு..இறை சிந்தையில் மூழ்கி , உலக நன்மைக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    பதிவிட்ட 10 கேள்விகளும் அதற்கான எளிய பதில்களும் – “தெய்வத்தின் குரல்” தான். தெய்வத்தின் குரலை நாம் அடிக்கடி அசை போட வேண்டும். அப்போதுதான் மனம் தெளிவாகி, பாராயணம், ஜெபம், தியானம் என்ற உன்னத நிலை அடைய முடியும்.

    இந்த பதிவை நாம் “print” செய்து, அடிக்கடி பார்க்கும் இடத்தில் ஒட்டி வைத்து, முயற்சித்தல் சிறப்பு..நான் தொடங்கிவிட்டேன்.

    குரு வாழ்க.!
    குருவே துணை..!!

    கோடான கோடி நன்றிகள் அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *