Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

print
லியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி தம்மை நாடி வருவோரின் பாபங்களை தனது அருட்பார்வையினால் பொசுக்கி, இகபர சுகங்களை அவர்களுக்கு அளித்து வரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் 122 வது மஹா அனுஷ ஜெயந்தி மஹோத்சவம் காஞ்சி ஸ்ரீ மடம், விழுப்புரத்தில் உள்ள அவரது அவதார தலம், கோவிந்தபுரத்தில் உள்ள அவரது தபோவனம், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோ-சம்ரக்ஷன சாலா உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது.

Maha Anusha Mahotsavam 23

இந்நிலையில் மகா பெரியவாளின் 122 வது மஹா அனுஷஜயந்தியை விமரிசையாக கொண்டாடும் விதமாக மேற்கு மாம்பலம் திரு.மேச்சேரி பட்டு சாஸ்திரிகள் அவர்கள் நிர்வகித்து வரும் ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி பக்த ஜன டிரஸ்ட் சார்பாக அவரது மகன் திரு.எம்.சி.மௌலி அவர்களின் மேற்பார்வையில், சென்னை ஆர்யகௌடா சாலையில் இருக்கும் ஸ்ரீ அயோத்யா மண்டபத்தில் 27/05/2015 தொடங்கி 07/06/2015 12 நாட்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. (கடந்த 23 வருடங்களாக இந்த மஹா அனுஷா வைபவம் மேற்படி ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி பக்த ஜன டிரஸ்ட் சார்பாக நடைபெற்றுவருகிறது!)

Maha Anusha Mahotsavam 1

Maha Anusha Mahotsavam 2
இந்த பசுவின் பெயர் லக்ஷ்மியாம். லக்ஷ்மி கொள்ளை அழகு. பரம சாது.

மேற்படி வைபவத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி பெறுவது தொடர்பாக கே.வி.காலனியில் உள்ள மேச்சேரி பட்டு சாஸ்திரிகளின் இல்லத்தில் அவரது மகன் திரு.எம்.சி.மௌலியை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தோம். நம் தளத்தை பற்றியும் நமது பணிகள் பற்றியும் எடுத்துக்கூறி, மேற்படி மஹாஅனுஷ மகோத்சவத்தை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தவர், இந்த உற்சவம் நிறைவடைந்த பின்னர் மேச்சேரி பட்டு சாஸ்திரிகளை நேரில் சந்தித்து பேசவும், பேட்டி எடுக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருக்கிறார். (நாம் சென்றபோது பட்டு சாஸ்திரிகள் ஊரில் இல்லை!)

நிகழ்ச்சியின் முதல் நாளன்று மஹா பெரியவாளின் பஞ்சலோக உற்சவமூர்த்தி மற்றும் அவரது ஸ்ரீ பாதுகை ஸ்ரீ சாய் சேவா சக்ரா குழுவினரின் வேத பாராயணத்துடன் ஊர்வலமாக அயோத்யா மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Maha Anusha Mahotsavam 3

Maha Anusha Mahotsavam 7Maha Anusha Mahotsavam 24அதை தொடர்ந்து கொடியேற்றமும், கோ-பூஜையும் நடைபெற்றது. பின்னர் அச்வபூஜை, கணபதி ஹோமம் ஆகியவையும் நடைபெற்றது.

மாலை 6.00 மணிக்கு சிராங்குடி புலியூர் விட்டல் ராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின் உபன்யாசம் நடைபெற்றது. மாலை 7.30 க்கு மகா பெரியவாளின் பஞ்சலோக உற்சவ மூர்த்தி மற்றும் ஸ்ரீ பாதுகைக்கு நவகலஸ் அபிஷேகம் மற்றும் 108 குடம் மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது. இறுதியாக செதலப்பதி பிரம்மஸ்ரீ சௌந்தரராஜ பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடைபெற்றது.

Maha Anusha Mahotsavam 4

Maha Anusha Mahotsavam 5Maha Anusha Mahotsavam 6Maha Anusha Mahotsavam 12இரண்டாம் நாளான காலை 8.30 அளவில் ஆவஹந்தி ஹோமம், மற்றும் ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம் நடைபெற்றது. மாலை வழக்கம்போல நாமசங்கீர்த்தனமும், பெரியவாளின் பஞ்சலோக உற்சவ மூர்த்திக்கும் பாதுகைக்கும் 108 குடம் பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் விநாயக்ராம் அவர்களின் கடம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

(31 ஞாயிறு மாலை 7.00 மணியளவில் நடைபெறக்கூடிய பாலாபிஷேகதிற்கு நமது தளம் சார்பாக நான்கு குடங்கள் பசும்பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். வாசகர்கள் அது சமயம் வந்திருந்து மஹோத்சவத்தையும் அபிஷேகத்தையும் கண்டுகளித்து மகா பெரியவாளின் ஆசியை பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 6.00 மணிக்கு ‘ஞானவாணி’ இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவு உண்டு. அதை கேட்கத் தவறாதீர்கள்.)

Maha Anusha Mahotsavam 8

Maha Anusha Mahotsavam 9Maha Anusha Mahotsavam 21Maha Anusha Mahotsavam 22இந்த மூன்று நாட்களில் அவ்வப்போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

அயோத்யா மண்டபம் முழுதும் ஹோமம், பூஜை, நாமசங்கீர்த்தனம் என களைகட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் ஆன்மாவுக்கு இதமூட்டும் வேத கோஷங்களும் சுவாசத்திற்கு இதமூட்டும் சாம்பிராணி புகையும் தான். இங்கு வந்தாலே உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும் என்பது உறுதி. இதை ஏற்கனவே பலமுறை உணர்ந்ததாலோ என்னவோ பக்தர்கள் வந்து பெரியவாளையும் அவர் பாதுகையையும் தரிசித்த வண்ணமுள்ளனர்.

வரும் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ‘ஞானவாணி’ திருமதி.இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவு மாலை 6.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

Maha Anusha Mahotsavam 20

Maha Anusha Mahotsavam 10

Maha Anusha Mahotsavam 11.Maha Anusha Mahotsavam 16Maha Anusha Mahotsavam 17Maha Anusha Mahotsavam 18Maha Anusha Mahotsavam 25Maha Anusha Mahotsavam 26Maha Anusha Mahotsavam 14பக்தர்கள் ஹோமத்திற்கான மட்டைத் தேங்காய், மற்றும் அந்தந்த நாட்களுக்குரிய அபிஷேகத்திற்கான பொருட்களை சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் டிரம்களில் தங்கள் பொருட்களை சமர்பிக்கலாம். சென்னையில் உள்ள அன்பர்கள் இந்த மகோத்சவத்தில் கலந்துகொண்டு தேவையான உதவிகளை நல்கி மகா பெரியவாளின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இனி வரும் நாட்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் குறித்த பத்திரிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Maha Anusham 1

Maha Anusham 2Maha Anusham 3

=====================================================================

எத்தனை பதிகங்கள், எத்தனை ஸ்லோகங்கள்? அத்தனையும் படிக்கவேண்டுமா? எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா? என்ற சந்தேகத்திற்கு விடை இந்த பதிவு!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

=====================================================================

மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

=====================================================================

[END]

3 thoughts on “மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

  1. மகபெரியவா ஜெயந்தியின் நேரடி ரிப்போர்ட் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.

    தங்கள் தளம் சார்பாக பால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருப்பது அறிய மிக்க மகிழ்ச்சி.

    அனைத்து படங்களும் அருமை.

    நம் வாசகர்களுக்காக நேரடி ரிப்போர்ட் பதிவாக வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி

    குருவே சரணம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம் சுந்தர். அழகான புகைப்படங்கள் அதிலும் பாதுகையின் பின் உள்ள பெரியவா படம் அருமை. பூஜைகளை மனம்முவந்து ஏற்றுக்கொண்டு பெரியவா எல்லோரோரையும், நம் ஊரையும் ஆசிர்வதிக்கட்டும் . நன்றி.

  3. வழக்கமான குரு தரிசனத்தை மிஞ்சிய பதிவு மற்றும் நேர்த்தியான நேரடி ரிப்போர்ட் என்று சொன்னால் அது மிகையாக..
    நம் தளமும் பெரியவாவின் ஆசியினாலும்,வண்ண படங்களினாலும் அருள் பெற்று கொண்டு இருக்கிறது. அருள் மழையை எங்களுக்கு உணர்த்திட்ட தள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    மஹா பெரியவா சரணம்..

    நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *