Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)

print
சென்ற ஞாயிறு காலை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் நினைவு மண்டபத்தில் இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முந்தைய நாள் மாலை தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்திருந்த இளம்பிறை மணிமாறன் அவர்களை மயிலாப்பூரில் அவர் தங்கியிருந்த இடத்திற்கே நேரில் சந்திக்க சென்றிருந்தோம். இளம்பிறை அவர்களுடன் அவரது கணவர் மணிமாறனும் வந்திருந்தார். திரு.மணிமாறன் அவர்களுடன் ஏற்கனவே நமக்கு அறிமுகம் உண்டு. இருந்தாலும் இருவரையும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை. தம்பதிகளை நமது தளம் சார்பாக கௌரவித்தோம். இளம்பிறை அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது மறுநாள் அதாவது ஞாயிறு காலை போயஸ்கார்டனில் சிவந்தி ஆதித்தன் நினைவு மண்டபத்தில் தனது சொற்பொழிவு இருப்பதாகவும் அதில் பங்கேற்கவே சென்னை வந்ததாகவும் கூறினார். இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவை மிஸ் செய்யமுடியுமா? அடுத்த நாள் பல்வேறு பணிகள் இருந்தபோதும், அதற்கு அவசியம் செல்ல விரும்பினோம்.

IMG_1686 copy

இதற்கிடையே நண்பர் முகலிவாக்கம் வெங்கட் காஞ்சிபுரத்தில் வசிக்கும் மகா பெரியவா தொடர்புடைய அவரது உறவினர் ஒருவரை சந்திக்க நீண்ட நாட்களாக நம்மை அழைத்து வந்தார். ‘நீங்கள் காஞ்சி செல்லும்போது சொல்லுங்கள்… நானும் உடன் வருகிறேன்’ என்று கூறியிருந்தோம்.

சனிக்கிழமை மதியம் நம்மை தொடர்புகொண்டவர், ஞாயிறு காலை குடும்பத்தினருடன் காஞ்சி செல்லவிருப்பதாகவும், காமாக்ஷி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட பல திருக்கோவில்களை தரிசிக்கவிருப்பதாகவும், அவருடன் வந்தால் மேற்படி கோவில்களை தரிசித்துவிட்டு அப்படியே அவர் குறிப்பிட்ட பெரியவா தொடர்புடைய அவரது உறவினரையும் பார்த்துவிட்டு வரலாம் என்றும் கூறினார்.

மறுநாள் காலை நாம் இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவுக்கு செல்லவிருப்பதை கூறி, ‘வேண்டுமானால் மதியம் உங்களுடன் JOIN செய்துகொள்கிறேன். அதற்குள் நீங்கள் பார்க்க வேண்டிய கோவில்களை பார்த்துவிடுங்கள்’ என்று கூறினோம்.

அதே போல் ஞாயிறு காலை போயஸ் கார்டன் சென்று இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவை கேட்டோம். என்ன தலைப்பு தெரியுமா? ‘மீனாக்ஷி திருக்கல்யாணம்’. இது பொது நிகழ்ச்சி அல்ல. தந்தி குடும்பத்தினர் திரு.சிவந்தி ஆதித்தன் அவர்களின் நினைவாக ஏற்பாடு செய்த ஒன்று.

அங்கு சென்று அம்மாவின் சொற்பொழிவை கேட்டுவிட்டு அப்படியே அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து உடனே காஞ்சிபுரம் பயணம்.

நாம் காஞ்சி செல்லும்போது மதியம் 3.00 இருக்கும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி, அங்கிருந்து வேறொரு பஸ் பிடித்து காஞ்சி – செய்யாறு சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இறங்கி, காத்திருந்தோம். வெங்கட் அங்கு வந்து நம்மை பிக்கப் செய்துகொண்டார்.

T R Chandramouli Sastrigal

நாம் சந்திக்க சென்ற நபர் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகள். வயது 92. சுமார் 20 ஆண்டுகளுக்கு (1944 – 1965) மேல் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்றவர். அது தவிர காசி காமகோடீஸ்வரர், ஜொன்னவாடா காமாக்ஷி அம்மன் ஆகியோருக்கும் பூஜைகள் செய்தவர்.

மகா பெரியவா பாத யாத்திரை செல்லும்போது அவர் பூஜை செய்த சந்திரமௌலீஸ்வரரை உடன் சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றவர். மேலும் பெரியவா ஸ்ரீ மடத்தில் செய்த கோ-பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பலவற்றுக்கு உதவியாக இருந்தவர். மடத்தின் சார்பாக நடைபெற்ற சஹஸ்ர சண்டி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்களில் கலந்துகொள்ளும் பாக்கியம் பெற்றவர். இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

காஞ்சிபுரம் பங்காரம்மன் தோட்டத்தில் உள்ளது இவரது இல்லம். இவரது சேவைக்காக மகா பெரியவா கொடுத்த இல்லமாம் அது.

மகா பெரியவாவுடனான பல அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகள். அவை ஒவ்வொன்றாக நம் தளத்தின் ‘குருதரிசனம்’ தொடரில் வரவிருக்கிறது.

வீட்டை நாம் புகைப்படமெடுத்த நேரம், ரெட்டை கன்றுக்குட்டிகள் வர, அற்புதமான புகைப்படம் ஒன்று கிடைத்தது.

T R Chandramouli Sastrigal 2

சாஸ்திரிகளுடன் பெரியவா குறித்து பேசிக்கொண்டிருந்தபோது சரியாக நமது வாராந்திர பிரார்த்தனை கிளப் நேரம் வந்தது. (Sunday Evening 5.30 pm) அதை பற்றி இவரிடம் எடுத்துக்கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தவர்களுக்கு நாங்கள் பிரார்த்தித்ததோடு நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தோருக்காகவும் பிரார்த்தனை செய்தோம். பூகம்பத்தில் உயிர்நீத்த அனைவரது ஆன்மாவும் மகா பெரியவா அருளால் சாந்தியடைந்து சிவபதத்தில் நிலைபெறும் என்று ஆசி கூறியருளினார்.

திரு.சந்திரமௌலி சாஸ்திரிகள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் அனைவரும் நம்மிடம் மிகவும் அன்னியோன்யமாக பழகி, சந்திப்பை மறக்க முடியாததாக்கிவிட்டனர். அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!

திரு.சந்திர மௌலி சாஸ்திரிகளை பார்த்துவிட்டு புறப்படும்போது, அருகே தான் ஓரிக்கை என்பதால் அப்படியே ஓரிக்கை மகா பெரியவா மணிமண்டபம் சென்றிருந்தோம். அங்கு தரிசனம் முடித்து பிரசாதம் பெற்றுக்கொண்டு அங்குள்ள கோ-சாலையை பார்க்கச் சென்றோம். அப்போது இந்த நல்ல செய்தி கிடைத்தது.

Orikkai 2

ஓரிக்கை கோ-சாலையை சேர்ந்த பசு ஒன்று ஞாயிறு காலை சுமார் 11.00 மணியளவில் ஆண் கன்று ஈன்றதாம். தாயும் சேயும் நலம்.

ஸர்வ காம துகே தேவி
ஸர்வ தீர்த்தாபிஷே சினி
பாவனே ஸீரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே

நாம் சென்ற நேரம் மகனை வாஞ்சையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தாள் கோ-மாதா. இதோ உங்களுக்காக காமதேனு தரிசனம்!

Orikkai 1

தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூ போலே வைத்துன்னை காப்பதென் பாடு
பூ போலே வைத்துன்னை காப்பதென் பாடு

சத்தியம் நீயே தருமத் தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தை வடிவே தெய்வ மகளே

(நம் முகநூலில் இதை ஏற்கனவே அப்டேட் செய்துவிட்டோம். இந்த பதிவின் நோக்கம் கோ-தரிசனம் தான். சந்திப்பு குறித்து விரிவான பதிவு ‘குருதரிசனம்’ தொடரில் இடம்பெறும்.)

=====================================================================

நம் தளத்தில் மகா பெரியவா தொடர்புடைய இதர சந்திப்பு + பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Also Check :

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ?

நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

=====================================================================

[END]

3 thoughts on “அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)

  1. திருமதி இளம்பிறை மணிமாறனின் ‘மீனாக்ஷி திருக்கல்யாண உற்சவம்’ சொற்பொழிவு பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன். நான் போன வாரம் மதுரை சென்ற பொழுது 19.4.2015 அன்று இம்மையில் நன்மை தருவார் கோவில் அவரது சொற்பொழிவு மாலை நடைபெற்றது, 20ம் தேதி அந்த கோவிலுக்கு சென்ற பொழுது தான் போஸ்டரை பார்த்தேன், ஜஸ்ட் மிஸ் பண்ணி விட்டோமே என்ற வருத்தம் எனக்கு இருந்தது.

    அந்த நேரத்தில் மீனாக்ஷி அம்மன் கோவில் தங்க தேர் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

    காஞ்சி பெரியவருடன் தொடர்புடைய திரு சந்திரமௌலி சாஸ்திரிகளை நம் தளத்திற்கு அறிமுகப் படுத்தியாதில் மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு எனது நமஸ்காரங்கள் . அவருடனான அனுபவங்களை நம் குரு தரிசனத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோ சாலையில் பசு கன்று ஈன்ற நிகழ்வு மிகவும் நல்லது.

    இரட்டை பசுக்களை பார்ப்பதற்கு ராம் லக்ஷ்மன் போல் உள்ளது.

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம் சுந்தர். நிற்க நேரமில்லாமல் ஓடி கொண்டு இருகிறீர்கள். சந்திப்பு, சொற்பொழிவு என.அழகான பதிவு, பெரியர்வரின் அறையில் சுவற்றில் மாட்டி இருக்கும் படம் அழகாக இருக்கிறது. அதில் அன்னையை வரைந்தது போல் இல்லை .ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது. குரு பதிவுகளுக்க காத்து கொண்டு இருக்கிறோம் . நன்றி.

  3. சுந்தர் அண்ணா..

    கோ தரிசனம் – கோடி புண்ணியம் என்றே சொல்ல வேண்டும். உமா அம்மா சொன்னது போல..பார்ப்பதற்கு ராம் -லக்ஷ்மன் தான்.

    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் போல – திருமதி இளம்பிறை மணிமாறன் மற்றும் சந்திரமௌலி சாஸ்த்ரிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.

    விரிவான பதிவுகளை( திருமதி இளம்பிறை மணிமாறன் மற்றும் சந்திரமௌலி சாஸ்த்ரிகள்) எதிர் நோக்கி ஆவலாய் உள்ளேன் அண்ணா.

    மிக்க நன்றி அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *