Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > ‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

print
ள்ள அள்ள குறையாத அருட்சுரங்கம் அன்னை ஆண்டவன் பிச்சி அவர்களின் சரிதம். அந்தளவு பிரமிக்க வைக்கும் பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பல விஷயங்களுக்கு ஆதாரம் இல்லை என்பது தான் சோகம். இருப்பினும் நமது தேடலில் ஆராய்ச்சியில் கிடைத்த நம்பகமான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறோம். சில சந்தேகங்களுக்கும் விளக்கமளித்திருக்கிறோம்.

(இந்த பதிவின் முதல் பாகத்திற்கு : ‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2)

kalikambal-1

(இந்த பதிவில் அன்னை ஆண்டவன் பிச்சி வரலாறு தொடர்பாக ஆராய நாம் காளிகாம்பாள் கோவில் சென்ற புகைப்படங்களையும், போரூர் பாலமுருகன் கோவில் கந்தசஷ்டி அலங்கார புகைப்படங்களையும், நாம் நெரூர் சென்றபோது எடுத்த புகைப்படங்களையும் இணைத்திருக்கிறோம்.)

வாழ்க முருக பக்தி! ஓங்குக அன்னை ஆண்டவன் பிச்சியின் புகழ்!!

maha periyava1. அன்னை ஆண்டவன் பிச்சி வாழ்வில் மகா பெரியவா 

மரகதம் அம்மாள் முதிர்ந்த வயதில் அனாதையாக திரிந்துகொண்டபோது காஞ்சி ஸ்ரீமடம் சென்றதாகவும் அங்கே அவரை அனைவரும் துரத்தியதாகவும் உடனே அதை கவனித்த மகா பெரியவா அவரை அழைத்து “வருத்தப்படாதே நீ ஆண்டவன் பிச்சை” என்று அசீர்வதித்து அனுப்பியதாகவும் அது முதலே அவர் பெயர் அவ்வாறு நிலைபெற்றதாகவும் ஒரு கருத்து உலவுகிறது. அது உண்மையல்ல. மேலும் அம்மா ஒரு தெய்வப்பிறவி. அவர் இப்படி அநாதரவாக திரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை. மரகதம் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்ததில் அவர் ரமணாஸ்ரமம் சென்று ரமணரை தரிசித்தது பற்றி தான் தகவல்கள் இருக்கின்றனவே காஞ்சி ஸ்ரீமடம் சென்றது பற்றி தகவல் இல்லை. ஆனால், மகா பெரியவாவுக்கு மரகதம் அவர்களை பற்றி அனைத்தும் தெரிந்திருக்கிறது. இருவருக்கும் இடையேயான சந்திப்பு பற்றி தான் ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ஆண்டவன் பிச்சி அவர்கள் எழுதிய பாடல்களை தொகுத்து ‘ஸ்தோத்திரமாலா கீர்த்தனை’ என்கிற பெயரில் வெளியிடப்பட்ட நூலுக்கு மகா பெரியவா ஸ்ரீமுகம் அளித்திருக்கிறார். 1961 ஆம் ஆண்டு, சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நாராயணி அம்மாள் திருமண மண்டபத்தில் அந்நூல் ஆண்டவன் பிச்சி அவர்களின் உறவினரான மகாலிங்க அய்யர் என்பவரால் வெளியிடப்பட்டது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, முசிறி சுப்ரமணிய அய்யர் உட்பட பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது லலிதா என்பவர் அன்னையை கௌரவிக்கும் விதம் அவர் முன்பு அவர் எழுதிய பாடல்க்ளை அந்நிகழ்ச்சியில் பாடினார்.

andavan-pichai-amma2) ஒரு உடல் இரண்டு ஆன்மா 

ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் அம்மா ஒரு அதிசய பிறவி. எப்படியெனில் அவரது உடல் ஒன்றுதான். ஆனால் அது இரு ஆன்மாவை சுமந்துகொண்டிருந்தது. இது பற்றி கூறப்படுவதாவது….

மரகதம் அம்மா ஒரு முறை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கோமாவில் படுத்துவிட்டார். அப்போது அவர் உடலுக்குள் நெரூர் அருகே உள்ள பின்னவாசல் என்ற ஊரில் வாழ்ந்த ராமகிருஷ்ணர் என்கிற தேவி உபாசகர் / துறவியின் ஆன்மா புகுந்துகொண்டதாக கூறப்படுகிறது. கட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு எப்போது பார்த்தாலும் தேவி உபாசனை தேவி உபாசனை என்று ராமகிருஷ்ணர் வாழ்ந்து வந்தமையால், அவர் மனைவி கொதித்துப்போய் “நீயும் என்னைப் போல கணவரால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணாக இந்த பூமியில் உலவ வேண்டும். அப்போது தான் உனக்கு இதன் கொடுமை புரியும். அதன் பிறகே நீயும் சந்நியாசி ஆகமுடியும்” என்று சபித்து விடுகிறார். பதிவிரதையின் சாபம் என்பதால் பலித்தே ஆகவேண்டும் அல்லவா?

என்ன வழி என்று யோசித்தபோது, இந்த பூதவுடலை விடுத்து நாம் வேறு ஒரு உடலுக்குள் புகுந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கிறார். மனைவியின் சாபப்படி அவர் ஒரு பதிவிரதையின் உடலுக்குள் இவர் புகுந்தால் தான் அந்த துன்பத்தை அனுபவிக்க முடியும். அப்போது அவரது குருநாதர் சதாசிவ பிரும்மேந்திரரின் வழிகாட்டுதலின் படி அவர் தேர்ந்தெடுத்தவர் தான் ஆண்டவன் பிச்சி. ஆண்டவன் பிச்சி மகா பதிவிரதை மட்டுமல்ல, முருகனை நெஞ்சில் சுமந்து அவரது உடலே ஒரு கோவில் போல இருந்தது. எனவே ராமகிருஷ்ணர் பிரவேசிக்க ஏற்றவர் அன்னை ஆண்டவன் பிச்சி என்று முடிவானது.

இதே நேரம் இங்கே சென்னையில் தனது இல்லத்திலிருந்து போது படியேறுகையில் அன்னை தலைசுற்றி விழுந்துவிடுகிறார். மருத்துவமனையில் பேச்சு மூச்சற்று சில நாட்கள் கிடந்தவரின் உடலில் ராமகிருஷ்ணர் புகுந்துகொள்ள மருத்துவர்கள் உட்பட அனைவரும் வியக்கும் வண்ணம் அன்னை எழுகிறார். ஆக ஒரே உடலுக்குள் இரண்டு ஜீவன்கள். இது சரித்திரத்தில் இதற்கு முன்பு நான்கு முறை நிகழ்ந்துள்ளதாக மகா பெரியவா குறிப்பிட்டிருக்கிறார். அதாவது வேறு ஒரு ஆன்மாவை தனது உடலில் அனுமதித்தது இதற்கு முன் ராஜா விக்ரமாதித்யன், ஆதி சங்கரர், திருமூலர், அருணகிரிநாதர் ஆகியோரே ஆவர். அதற்கு பிறகு மரகதம் அம்மாள் தான் என்பது மகா பெரியவரின் கருத்து.

சிருங்கேரியில் தற்போதைய ஆச்சார்யாள் சாரதாம்பாளுக்கு பூஜை செய்யும் காட்சி!
சிருங்கேரியில் தற்போதைய ஆச்சார்யாள் சாரதாம்பாளுக்கு பூஜை செய்யும் காட்சி!

3) சிருங்கேரியில் நடந்த அதிசயம் 

அன்னை ஆண்டவன் பிச்சி சிருங்கேரி சென்றபோது அங்கே சிருங்கேரி சங்கராச்சாரியார் முன்பு சாரதா தேவி மீது ஒன்பது அதியற்புதமான கீர்த்தனைகளை பாடினார். பாடி முடிக்கும் வேளையில் அன்னை சுயநினைவை இழந்து சமாதி நிலைக்கு சென்றார். அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் அவரது உச்சந்தலையிலிருந்து குருதி பீறிட்டு கிளம்பியது. தேவி பூஜையில் இருந்த சிருங்கேரி சங்கரராச்சாரியார் உடனே கைநிறைய குங்குமத்தை அள்ளி ஆண்டவன் பிச்சி அம்மாவின் தலையில் வைத்து பெருக்கெடுத்த ரத்தத்தை நிறுத்தினார். இது பலர் முன்னிலையில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

4) சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானத்தில் நடந்த அதிசயம் 

நெரூர் சதாசிவ பிரம்மமேந்திராள் அதிஷ்டானம் அனைவரும் தரிசிக்கவேண்டிய ஒன்று. பல சக்திகளை உள்ளடக்கியது. கரூர் செல்பவர்கள் நேரம் ஒதுக்கி நேரூருக்கும் செல்லவேண்டும். neroor-sadhasiva-brammaendhirar-adhistanam-1

அன்னை ஒரு முறை சதாசிவ பிரம்மமேந்திராள் அதிஷ்டானத்திற்கு சென்றிருந்தார். அங்கு சில பண்டிதர்கள் அமர்ந்து ஸ்ரீருத்ரம் ஓதிக்கொண்டிருந்தனர். அன்னையும் ஒரு ஓரமாக உட்கார்ந்து ஸ்ரீருத்ரம் ஜபிக்கத் தொண்டங்கினார். ஒரு பெண் ஸ்ரீருத்ரத்தை ஜபிப்பது கண்டு அதிர்ச்சியும் அசூயையும் அடைந்து அவர்கள் அங்கிருந்து அகன்று வேறொரு இடத்தில் ஜபிக்க முயன்றபோது அவர்களுக்கு ஸ்ரீருத்ரமே மறைந்துபோனது. உடனே தங்கள் தவறை உணர்ந்து வெட்கி தலைகுனிந்து, அன்னையின் கால்களில் வந்து வீழ்ந்தனர். மீண்டும் அனைவரும் ஒரே இடத்தில அமர்ந்து ருத்ரம் ஜபித்தனர்.

andavan-pichi-song-in-kalikalmbal-temple

5) பாடும் பணியே அருள்வாய் 

அன்னை ஆண்டவன் பிச்சியை பற்றிய தகவல்கள் சிதறிக்கிடக்கின்றன. அவரது வரலாறு புரிந்துகொள்ள முடியாத சூட்சும ரகசியங்கள் நிறைந்தது. முருகனருளால் பிறந்து முருகனுக்காகவே வாழ்ந்து அவனை பாடவே பணிக்கப்பட்டவர் ஆண்டவன் பிச்சி.

போரூர் பாலமுருகன் கந்தசஷ்டி முதல் நாள் அலங்காரம் - அம்பாளும் முருகனும்!
போரூர் பாலமுருகன் கோவில் கந்தசஷ்டி முதல் நாள் அலங்காரம் – அம்பாளும் முருகனும்!

அருணகிரிநாதருக்கு இட்டது போலவே மரகதம்மாளுக்கும் கோவில் கோவிலாக சென்று பாடவேண்டும் என்பதுதான் முருகப்பெருமான் அவருக்கு இட்ட கட்டளை. அதை உணர்ந்த அவர் தனது இறுதிக்கு காலம் வரை அதை தவறாமல் செய்து வந்தார். அப்படி அவர் காளிகாம்பாள் கோவிலுக்கு 1952 ஆம் ஆண்டு வரும்போது பாடியது தான் மேற்கண்ட இந்த ‘உள்ளம் உருகுதையா’ பாடல்.

6)  ‘நான் ஏன் பிச்சி ஆனேன்’ – அன்னை எழுதிய சுயசரிதை 

ஆண்டவன் பிச்சி அம்மாள் 1980 ஆம் ஆண்டு ‘நான் ஏன் பிச்சி ஆனேன்’ என்று ஒரு சுயசரிதை எழுதியிருக்கிறார். ‘ஆண்டவன் பிச்சை பஜனை மண்டலி’ என்கிற அவரது பக்தர்களின் அமைப்பு ஒன்று அதை 1980 களின் பிற்பகுதியில் வெளியிட்டுள்ளனர். அதில் பல விஷயங்களை அவர் குறிப்பிட்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஆனால், அந்த பஜனை மண்டலி பற்றியோ அந்த நூல் பற்றியோ விபரங்கள் கிடைக்கவில்லை.

rishikesh-2

இது தவிர ஆண்டவன் பிச்சி அம்மா ரிஷிகேஷ் சென்று சுவாமி சிவானந்தரையும் சந்தித்திருக்கிறார். அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது முருக பக்தியால் பிறந்த வீட்டில் எப்பெடியெலாம் கஷ்டப்பட்டேன் என்று கூறியிருக்கிறார். அவரை அவரது வீட்டார் மனநிலை பாதிக்கப்பட்டவராகவே கருதி நடத்தி வந்ததாக அதில் கூறியிருக்கிறார் ஆண்டவன் பிச்சி. ரிஷிகேஷில் சுவாமி சிவானந்தர் இவருக்கு சடாக்ஷர மந்திரத்தை உபதேசிக்க அதை ரிஷிகேஷில் உள்ள குகை ஒன்றில் பசி, தூக்கம் பாராது பல லட்சம் தடவை ஜபித்து வந்தார் அம்மா.

ரிஷிகேஷ் சிவானந்தா ஆஸ்ரமத்தில் அன்னை ஆண்டவன் பிச்சி பிரதிஷ்டை செய்ததாக கருதப்படும் முருகப்பெருமான்!
ரிஷிகேஷ் சிவானந்தா ஆஸ்ரமத்தில் அன்னை ஆண்டவன் பிச்சி பிரதிஷ்டை செய்ததாக கருதப்படும் முருகப்பெருமான்!

இறுதியில் முருகனின் விக்ரகம் ஒன்றை முருகன் அவரிடம் தர, அதை தன் கைகளாலேயேயே ரிஷிகேஷில் உள்ள சிவானந்த ஆஸ்ரமத்தில் பிரதிஷ்டை செய்த்துவிட்டார் மரகதம். இப்போதும் நீங்கள் ரிஷிகேஷ் சிவானந்த ஆஸ்ரமம் சென்றால் அதை பார்க்கலாம். தொடர்ந்து அவருக்கு சந்நியாச தீட்சை அளித்து சிவானந்தர் ஆண்டவனாந்த மாதாஜி என்கிற திருநாமத்தை சூட்டி காவி உடையும் அளித்தார்.

7) அன்னையின் இறுதிக் காலம் 

அன்னை ரிஷிகேஷத்தில் துறவறம் பெற்றதற்கு அவர் கணவர் நரசிம்ம சாஸ்திரி உட்பட குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு மனைவியாகவும் ஒரு தாயாகவும் அவருக்கு இன்னும் பல கடமைகள் பாக்கியிருப்பதை உணர்ந்த மகா பெரியவா, அவர் கணவர் இருக்கும் வரை அவருடன் வீட்டிலேயே வசிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே நரசிம்ம சாஸ்திரி தனது காலத்துக்கு பிறகு தனது மனைவி மரகதம் என்கிற ஆண்டவன் பிச்சி வசிக்க ஒரு எளிய குடிசை ஒன்றை கட்டிக்கொடுத்தார். ஆனால் சூழ்நிலை மீண்டும் ஆண்டவன் பிச்சி அம்மாவை ரிஷிகேஷத்திற்கே அனுப்பியது. அகவை 85 ஐ கடந்தபோது தனது உடல் இதற்கு மேல் ஒத்துழைக்காது இறுதி காலத்தில் குடும்பத்தினருடன் கழிக்கவேண்டும் என்று கருடதிய அம்மா 1988 ஆம் ஆண்டு ரிஷிகேஷிலிருந்து மீண்டும் சென்னைக்கு வந்தார். அவரது உறவினர்களும் பேரன் பேத்திகளும் அவரை கவனித்துக்கொண்டனர். ஒரு நாடோடி போல பல கோவில்களுக்கு சென்று முருகனைப் பாடிய ஆண்டவன் பிச்சி அம்மா 1990 ஆம் தனது உடலை உதிர்த்து முருகனடி சேர்ந்தார்.

8) அன்னை ஆண்டவன் பிச்சி இயற்றிய நூல்களுள் சில… 

திருத்தணிகை மும்மணிக்கோவை, வைஷ்ணவி பஞ்சதபிப் பாமாலை, வைஷ்ணவி அருள் பத்து, வைஷ்ணவி அநுக்கிரக மணிமாலை, ஸ்ரீபகவத் கீதை போதம், தேவி நவசக்ர கீர்த்தனைகள் ஆகியவை ஆண்டவன் பிச்சை எழுதிய நூல்களுள் சில.

பகவத்கீதை ஸ்லோகங்கள் முழுவதும் படித்து உள்வாங்கி, அதன் கருத்தையொட்டி 79 ஸ்லோகங்களைத் தனிக் கவிதைகளாக, தமிழ்ப்பா வகையில் தெளிவான நடையில் தந்திருக்கிறார். (அவர் எழுதியதை சமகாலத்தில் முறையாக தொகுத்தவர்கள் இல்லாததால் அன்னை எழுதிய பல பாடல்கள் கிடைக்கவில்லை. நூல்கள் விபரங்களும் கிடைக்கவில்லை.)

அவரது புலமைக்கு ஒரு சான்று…

ஏலார் குழலி ஏகாம் பரர் இடப்
பாகத் தமர்ந்த காமாக்ஷி
பாலார் மொழியாய் பங்கய விழியாய்
பாதகம் தீர்த்திடும் பதமுடையாய்
சேலார் வயல் சூழ் திருமுல்லை வன
நாயகி நாரணர் úஸாதரியே
மேலார் தவத்தால் தோன்றிய வடிவே
மேன்மைமிகும் திரு வைஷ்ணவியே! ¶¶

==========================================================

இந்தப் பதிவின் சுட்டியை எமது முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு கே.என். பாலசுப்ரமணியன் என்னும் அன்பர் ஒரு பின்னூட்டம் இட்டார். அது உங்கள் பார்வைக்கு…

“நான் முன்னமே கேள்வியுற்ற செய்தி எனினும் ஆதாரங்களுடனும் விளக்கமாகவும் படிக்க ஆர்வமாகவும் தேவர்பிலிம்ஸ் படம் பார்பதைபோல இருந்தது மேலும் 1966 முதல்1968 வரை சென்னை மருத்துவ கல்லூரியில் பயின்ற போது MMC Men’s Hostel லில் இருந்து கந்தசாமி கோவிலுக்கு செல்வேன் 1972 முதல் சென்னையில் இருந்து வருகிறேன் ஆனாலும் ஆண்டவன்பிச்சி பற்றி தெரியவில்லை அன்று
எனக்கு கீழ் பணிபுரிந்த பெண் நீண்ட காலம் குழந்தை இன்றி இருந்து காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று பின் கருவுற்று ஆண் குழந்தை பெற்றாள் காளீஸ்வரன் எனும் பெயருடன் ;நானும் பல முறை காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சத்திரபதி சிவாஜி அங்கு வந்தது போன்றவை களை கண்டேன் ஆனாலும்
இந்த கல்வெட்டை தங்கள்மூலம் கண்டேன் மேலும் ஆண்டவன் பிச்சி படமும் கண்டு மகிழ்ந்தேன் இதை பாடிய ஐயா TMS அவர்களுக்கு பொன்னாடை போற்றி ஆசி பெற்றேன் காமரஜர் அரங்கில் என்பதில் மகிழ்ச்சியே.”

==========================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Some important updates….

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

==========================================================

Related posts :

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS!

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

[END]

2 thoughts on “‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

  1. Sundar ji,

    All your postings are always good. I became the devotee of Maha Periyava because of your postings on him. Last week, I went to a temple hill named as “Othimalai” which is located near to Bhavanisagar Dam, in Mettupalayam Road. Here lord Murugan blesses the devotees with five faces and eight hands which is really an wonderful structure. If you have time, visit this temple and experience the divinity in it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *