இதற்கிடையே நாமும் நண்பர் சிட்டியும் மறுநாள் அதிகாலை எழுந்து அருகாமையில் இருந்த சத்திரத்துக்கு சென்று வெந்நீர் போட்டு குளித்து முடித்து தயாராகிவிட்டோம். பின்னர் நண்பர் சிட்டி, நாம், திரு.சீதாராமன் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் தவபீடத்தில் நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டோம்.
அறுபடைவீட்டு முருகப்பெருமானையும் தவக்கோலத்தில் அமர்ந்துள்ள வள்ளி நாயகியையும் வழிபட்டோம். இந்த தவ பீடம் வாரியார் ஸ்வாமிகள் கட்டியது. வள்ளி அமர்ந்து தவம் புரிந்த இடம் அது. அந்த தவ பீடத்தில் ஆறுபடை முருகன் சன்னதி ஒன்றும் உள்ளது.
தவப்பீடத்தின் புகைப்படங்களை நீங்கள் கண்டு ரசிக்கும் இந்த தருணத்தே… அன்னை வள்ளி, தெய்வானை இருவரது பிறப்பின் ரகசியத்தை பற்றி முருகப்பெருமான் கூறியதையும் இருவரையும் கரம் பற்றியதையும் பார்ப்போம். இந்த பதிவே தவப்பீடத்தின் அறுபடை வீட்டு புகைப்படங்களுக்காகத் தான்.
==========================================================
இந்த தொடரின் முந்தைய பாகங்களுக்கு…. DON’T MISS!
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
==========================================================
சுப்ரமணிய சுவாமி வள்ளியை மணமுடித்து அழைத்து ஸ்கந்தகிரி அழைத்துச் சென்றபோது தெய்வானை எதிர்கொண்டு வரவேற்றாள். வள்ளியை நோக்கி, “நீ எனக்கு நல்ல துணையாக வந்தாய்” என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டாள்.
தனது சிம்மாசனத்தில் இருவருடனும் அமர்ந்தார் சுப்ரமணிய சுவாமி. அப்போது தெய்வானை, “சுவாமி… வள்ளியின் சரிதத்தை எனக்கு கூறியருளவேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொண்டாள்.
முருகப் பெருமான் திருவாய் மலர்ந்து, “தேவி, நீங்கள் இருவரும் முன்ஜென்மத்தில் மகாவிஷ்ணுவின் புதல்விகளாக அவரது கண்களில் இருந்து தோன்றினீர்கள். என்னை மணந்து கொள்ள விரும்பி இருவும் தவமியிற்றினீர்கள். நான் சூரசம்ஹாரம் முடித்தபிறகு இருவரையும் மணம் புரிந்துகொள்வதாக வரமளித்தேன். அதன்படி வள்ளியை பூவுலகிலும், உன்னை இந்திரனிடத்திலும் பிறக்கும்படி செய்தேன்.
நீங்கள் அவ்வாறே பிறந்து வளர்ந்தீர்கள். இந்திரனின் மகளான உன்னை முதலில் மணம்செய்துகொண்டேன். ஆனால், வள்ளியோ தன் தேகத்தை அக்னியில் அற்பணித்துவிட்டு சூட்சும சரீரம் பெற்று காஞ்சியை ஒட்டியுள்ள ‘லவலீ’ என்னும் அழகான மலையில் அமர்ந்து என்னை நோக்கி தவம் செய்துகொண்டிருந்தாள். (புராண காலத்து லவலீ மலை தான் இன்றைய வள்ளிமலை!)
அப்போது மகாவிஷ்ணு, கன்வ மகரிஷியின் சாபத்தினால் சிவமுனி என்னும் முனிவராக மாறி, அங்கு வனத்தில் கடும் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அப்போது லக்ஷ்மி தேவியானவள், ஒரு மான் போல வடிவம் கொண்டு அவர் எதிரே துள்ளித் திரிந்தாள். மானின் அழகில் வசப்பட்ட சிவமுனி அதை பார்க்க, அந்த பார்வையின் தீட்சன்யத்தினால் அந்த அழகிய பெண் மான் கருத்தரித்தது. அங்கு லவலீ என்று அழைக்கப்படும் வள்ளி கொடியின் புதரில் ஒரு அழகிய குழந்தையை ஈன்றது. அக்குழந்தை தான் இந்த வள்ளி.
புத்திரப் பேறில்லாத அந்த பகுதியின் வேடுவர்குலத் தலைவன், அக்குழந்தையின் அழுகுரலை கேட்டு அதை கண்டு எடுத்து வாஞ்சையுடன் வளர்த்து வரலானான். இவளை சாஸ்திர முறைப்படி மணந்து, திருத்தணிகை சென்று சில காலம் இருந்துவிட்டு இங்கு அழைத்து வந்திருக்கிறேன்!” என்று கூறி முடித்தார்.
அதைக் கேட்டு பேரானந்தம் அடைந்த தெய்வானை, “வெவ்வேறு இடத்தில் பிறந்த எங்களை ஒன்று சேர்த்துவிட்டீர்கள் சுவாமி” என்று கூறி நெகிழ்ச்சியடைந்தாள்.
வள்ளியும் தெய்வானையை நோக்கி, “அக்கா.. இன்று முதல் நீங்கள் என்னை ஆதரித்து வரவேண்டும்” என்று கூறி வணங்கினாள். தெய்வானையும் தனது சகோதரியை கட்டியணைத்துக்கொண்டு தனது ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினாள்.
வள்ளியின் பிறப்பு வளர்ப்பு தெரிந்துவிட்டது. அடுத்து தெய்வானை?
முருகப் பெருமான் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும் சுந்தரவல்லியும் தங்களுக்கு பார்வதி மைந்தனுடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணப் பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அவர்கள் முன் தோன்றி அமுதவல்லியிடம் ”நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்” என்றார்.
அமுதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த தேவேந்திரனிடம் சென்று “நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன்” என்றாள். மாலவன் மகளை வளர்க்கும் பொறுப்பு என்றால் சும்மாவா? மிகவும் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் தேவருலகத்தின் பட்டத்து யானை ஐராவதத்தை அழைத்து “இந்த குழந்தையை வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது” என்று கூறினான். ஐராவதமும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தது. இவ்வாறு யானையினால் வளர்க்கப்பட்ட பெண் என்பதால் அவளுக்கு ‘தெய்வயானை’ (தெய்வானை) என்ற பெயர் ஏற்பட்டது. அவளுக்கு திருமண வயது வந்தபோது, அசுரர்களை அழித்து தேவர்களை காப்பற்றியதன் நன்றிக்கடனாக சுப்ரமணியருக்கு தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து வைத்தான் இந்திரன்.
சுப்ரமணிய சுவாமியின் தோற்றம் ஒரு மாபெரும் சூட்சுமம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகிய மூன்று சக்திகளின் சங்கமே வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி ஆகும்!
வள்ளியின் திவ்ய சரிதத்தையும் வள்ளி தவப்பீடத்தையும் கண்டு ரசித்திருப்பீர்கள். அடுத்து வள்ளிமலை தரிசனம்!
‘வள்ளிமலை அற்புதங்கள்’ தொடரும்…
(முந்தைய அத்தியாயங்களின் சுட்டிகள் பதிவுக்கு இடையே அளிக்கப்பட்டுள்ளன)
==========================================================
பிரபல சொற்பொழிவாளர் வள்ளி உமாபதி அவர்களுடன் நம்மை வள்ளிமலைக்கு அழைத்துச் சென்ற திரு.சீதாராமன் குடும்பத்தினர் (இப்படத்தில் காணப்படும் சிறுமிகளே வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள் வள்ளி, லோச்சனா!)
நீண்டநாட்கள் புத்திரபாக்கியம் இன்றி தவித்த சீதாராமன் – காயத்ரி தம்பதியினர் வள்ளிமலைக்கு வந்து வள்ளியை தரிசித்ததன் பலனாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. வள்ளியின் பெயரையே அக்குழந்தைக்கும் சூட்டினர். அடுத்து பிறந்த குழந்தைக்கு லோச்சனா என்று பெயர் சூட்டினர். இருவரும் தங்கள் கொள்ளுத் தாத்தாவின் வழிநின்று ஆலயங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் தேவாரம், திருப்புகழ் இவற்றை பாடி வருகின்றனர். இவர்களுடனான சந்திப்பு நமது தளத்தில் வெளிவந்துள்ளது. Please check : தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
==========================================================
வில்வம் கோவிந்தசாமி!
வள்ளி தவப்பீடத்தில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வழிபாட்டு குழுவினர் படி உற்சவத்திற்கு மலைக்கு கிளம்ப ஆயத்தமான தருணத்தில் தவப்பீடத்தில் வெளியே நாம் பார்த்த இம்முதியவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தோம்.
அவர் பெயர் ‘வில்வம்’ கோவிந்தசாமி. வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் வள்ளிமலையில் இருந்த காலத்தே (1940 களில்) அவருக்கு பலவிதங்களில் தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவர்களாம். பேச்சினூடே அவர் சர்வ சாதாரணமாக இதைக் கூற நமக்கு தூக்கிவாரிப்போட்டது.
“என்னது வள்ளிமலை ஸ்வாமிகள் கூட இருந்தீர்களா நீங்கள்? எப்பேற்பட்ட பாக்கியசாலி… முதலில் என்னை ஆசீர்வதிக்கவேண்டும்” என்று கூறி, தொபுக்கடீர் என்று அவர்கள் கால்களில் வீழ்ந்துவிட்டோம்.
வில்வம் கோவிந்தசாமி அவர்கள் இன்றும் காங்கேயநல்லூரில் உள்ள வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானத்துக்கு பிரதி மாதம் அவரது நட்சத்திர தினத்தன்று வில்வம் கொண்டு போய் கொடுத்து வருகிறாராம். அதனால் இவருக்கு வில்வம் கோவிந்தசாமி என்றே பெயர் ஏற்பட்டுவிட்டதாம். ஆஹா.. எத்தனை அருமையான ஒரு தகவல்.
வள்ளிமலை சுவாமிகளை பற்றி மேலும் பல விபரங்கள இவரிடம் கிடைக்கும் என்பதால் அலைபேசி நம்பர் கேட்டோம். ஆனால்,. இவர்களிடம் அலைபேசி இல்லை. முகவரி மட்டுமே கிடைத்தது. குழுவினர் புறப்பட்டுக்கொண்டிருந்ததால் இவர்களிடம் விரிவாக பேசமுடியவில்லை. அடுத்த முறை வரும்போது பார்ப்பதாக கூறியிருக்கிறோம். எப்படியோ முதுபெரும் அடியார்க்கு அடியார்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
தங்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை தபாலில் அனுப்பமுடியுமா என்று கேட்டார்கள். தாரளமாக என்று கூறி, அவர்களை தவபீடத்தின் வள்ளியம்மை முன்னே நிற்க வைத்து படமெடுத்து அதை சென்னை வந்தவுடன் ஃபோட்டோ பிரிண்ட் போட்டு கூரியர் அனுப்பிவைத்தோம்.
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் ¶¶
==========================================================
* இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட அனைவரின் பங்களிப்பும் அவசியம் தேவை…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
==========================================================
[END]
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
வள்ளிமலை திருத்தல தரிசனம் நாங்களும் கிடைக்கபெற்று மகிழ்ந்தோம் .
வள்ளிமலை ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்த வில்வம் கோவிந்தசாமி அவர்களின் ஆசியை பெற்றிருப்பதும் மகிழ்ச்சி . இறையருள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய பாக்கியம் .
என்ன தரிசனம் சார், தொண்டர்கள்/ கொள்ளு பேத்திகள்/ வாரியார் சுவாமிகள் என்று ஏக பட்ட செய்திகள் . ரொம்ப ரொம்ப நன்றி
சோ. ரவிச்சந்திரன்