Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன? – கந்தசஷ்டி SPL 4

இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன? – கந்தசஷ்டி SPL 4

print
ன்று கந்தசஷ்டி நான்காம் நாள். இன்று வாரியாரைப் பற்றி பார்ப்போம். தேனும் அதன் சுவையும் போல வாரியார் சுவாமிகளையும் முருகப்பெருமானையும் பிரிக்கவே முடியாது. வாரியார் சுவாமிகளை நினைக்கும்போதெல்லாம வள்ளி மணாளன் நினைவுக்கு வருவான். அதே போன்று வள்ளி மணாளனை நினைக்கும்போதெல்லாம் வாரியார் நினைவுக்கு வருவார். இது எத்தனை பெரிய பேறு…!

அவரை பற்றிய பதிவு இல்லாமல் கந்தசஷ்டி சிறப்பு பதிவுகள் பூரணம் பெறுமா?

dsc06368

குமுதம் இதழுக்காக பிரபல புத்தக வெளியீட்டாளர் திரு.வானதி திருநாவுக்கரசு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாரியார் சுவாமிகளை பேட்டி கண்டபோது வாரியார் அளித்த பதில்களை தொகுத்து தந்திருக்கிறோம்….! காலத்தை விஞ்சி அவர் பதில்கள் நிற்பதை பாருங்கள். உங்கள் நட்பு மற்றும் சுற்றத்திடம் பகிருங்கள்…! நன்றி!!

==========================================================

வாரியார் சுவாமிகள் பற்றி நம் தளத்தில் வெளியான பதிவுகள் சில : (இறுதியில் மேலும் சில சுட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன)

எப்படி வாழவேண்டும்? வாரியார் காட்டும் வழி!

“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

கல் கடவுளாவது எப்போது? வாரியாரின் அற்புதமான விளக்கம்

==========================================================

திரு.வானதி திருநாவுக்கரசு : இப்போது எல்லோரும் எதற்கெடுத்தாலும் நேரமில்லை, நேரமில்லை என்று சொல்லிக் கடவுளைக் கும்பிடக்கூட நேரமில்லாமல் அவர்கள் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறார்களே… இது சரியா?

வாரியார் : நேரம் இல்லை என்று சொல்வதையே நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன் தெரியுமா? நான் காரிலோ, ரயிலிலோ, விமானத்திலோ தினமும் இருநூறு முன்னூறு மைல் பிரயாணம் பண்றேன். அப்படி இருந்தும் தினமும் இரண்டு மணி நேரம் பூஜை பண்றேன். ஆறு மணிக்கு ரயில்னா, மூணு மணிக்கு எழுந்துடுவேன். அஞ்சரைக்குப் பூஜை முடிஞ்சுடும். நேரமில்லைன்னு சொல்றவங்க, சவரம் பண்ணிக்காமல் இருக்காங்களா? குளிக்காமல் இருக்காங்களா? மலஜலம் கழிக்காமல் இருக்காங்களா? இதுக்கெல்லாம் நேரம் இருக்கும்போது சுவாமியை நினைக்க மட்டும் எப்படி நேரம் இல்லாமல் போகும்? சோம்பல்தான் காரணம். நாம் சுறுசுறுப்பாக இறைவனைச் சிறிது நேரம் கும்பிட்டாலும் ஆத்ம திருப்தி உண்டாகும்.

திரு.வானதி திருநாவுக்கரசு : பலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு மற்றவர்களும் நாமும் பணம் சம்பாதிக்க இதேபோல் குறுக்கு வழியை நாடினால் என்ன? என்று எண்ணம் தோன்றிக் கெட்டுப் போகிறார்கள். மக்கள் இந்தப் பேராசையிலிருந்து விடுபட முடியாதா?

வாரியார் : குறுக்கு வழியில் சம்பாதித்த செல்வம் எல்லாம் நிலைத்து நிற்காது. திருவள்ளுவர் சொன்னார். ‘அழக் கொண்டதெல்லாம் அழப்போம்’னார். திருவள்ளுவர் சொன்னால் அது சுப்ரீம் கோர்ட் மாதிரி. பிறர் வருந்த நாம் தேடிய பொருள் எல்லாம் நாம் வருந்தும்படி நம்மை விட்டுப் போகும்னு இதற்குப் பொருள். அற வழியில் அல்லாத பொருள் வரும்போது வருவதுபோலத் தோன்றினாலும் அது பச்சை மண் பாத்திரத்திலே தண்ணீர் வார்த்தது போலாகும். அந்தத் தண்ணீர் நிற்குமா? ஆகவே நாம் கொஞ்சம் சம்பாதித்தாலும் அற வழியிலே பொருளை ஈட்டல் வேண்டும். அதுதான் நமக்கும் துணை செய்யும். நம் மக்களுக்கும் துணை செய்யும்.

dsc06382

திரு.வானதி திருநாவுக்கரசு : பக்தி வளர்ந்திருக்கிறது. ஆனால் மக்களிடையே ஒழுக்கம் குறைந்திருக்கிறது என்று சமீபத்தில் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிக்கிறீர்கள். அப்படிக் கூறக் காரணம் என்ன?

வாரியார் : ஒழுக்கத்தோடு இருப்பதற்குக் கொஞ்சம் திட சித்தம் வேண்டும். இப்போது அனேகம் பேருக்கு உள்ளத்திலே உறுதி இல்லை. ஆண்டவன் அருளினாலேதான் உறுதி கிடைக்கும். உள்ளத்தில் ஒழுக்கத்துடன் கடவுளை வணங்க வேண்டும். ஒழுக்கமில்லாமல் கடவுளை வணங்கினால் அது பத்தியமில்லாமல் மருந்து சாப்பிடுவது போலாகும். தெய்வத்துக்குச் சத்தியம். மருந்துக்குப் பத்தியம். ஆகவே பக்தி செய்யும்பொழுது ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். அஹிம்சா தருமத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் உண்மையான பக்தி.

திரு.வானதி திருநாவுக்கரசு : இத்தனை வயதிலும் சோர்வே இல்லாமல் உலகமெல்லாம் சுற்றி வருகிறீர்களே, எப்படி உங்களால் முடிகிறது.

வாரியார் : இறைவனைத் துணை கொண்டால் உடம்பிலே சோர்வு வராது. ”வெள்ளையனே வெளியேறு”ன்னு காந்திஜி சொன்னார். அவர் கையில் என்ன ரிவால்வரா இருந்தது? அவர் ராம் ராம் ராம் ராம் என்று ராம நாமத்தைச் சொல்லிச் சொல்லி, தெய்வத்தோடு இணைந்திருந்தார். அதனால் அவருக்கு ஆத்ம திருப்தியும் தெய்வ சக்தியும் உண்டாயிற்று. ஆகவே இளமையிலேயே நாம் தெய்வத்தைத் துணை பெற்றிருக்க வேண்டும். சில சிறுவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கண்ணாமூச்சி சொல்வார்கள். அதையே ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு சுற்றியவாறு கண்ணாமூச்சி சொன்னார்கள் என்றால் மயக்கம் வந்தாலும் கீழே விழமாட்டார்கள். ஆகவே தெய்வத்தையே துணை பற்றியிருந்தால் எல்லாமே சுலபம்.

திரு.வானதி திருநாவுக்கரசு : குரல் வளத்துக்கு ஏதேனும் தனிப்பயிற்சி எடுக்கறீங்களா? மருந்து எதுவும் சாப்பிடுறீங்களா?

வாரியார் : (க்ளுக்கென்று குழந்தைபோல் சிரிக்கிறார்). குரல் வளத்துக்கு நான் தனிப் பயிற்சியும் செய்யறதில்லை. அதுக்கு மருந்தும் கிடையாது; கடவுளை முழுவதுமாய் நம்பியிருப்பதாலேயே அன்று தொட்டு இன்று வரைக்கும் குரல் வளமாகவே இருக்கிறது. அதுக்கு மிகவும் முக்கியமான காரணம் ஒழுக்கம். ஒழுக்கத்தோடு உள்ளவங்களுக்கு மட்டும்தான் குரல்வளம் என்னிக்கும் இருக்கும்.

dsc02871

திரு.வானதி திருநாவுக்கரசு : இல்லற வாழ்வில் மக்கள் இன்று எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன?

வாரியார் : பரம ஏழைகளாக, அங்கஹீனர்களாக, உழைக்க முடியாதவர்களாக, வயோதிகர்களாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எத்தனையோ பேர்கள் உழைத்தும் போதுமான வசதியில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ரகசியமாய் ஒரு கவரில் பத்தோ இருபதோ போட்டுக் கொடுக்கலாம். உள்ளவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம். நாலாயிரம் ரூபாய்க்கு ஜவுளி வாங்கும்போது பன்னிரண்டு ரூபாய்க்கு ஒரு துணி வாங்கிக் கொண்டுபோய் ஓர் ஏழைக்குக் கொடுக்கலாம். ஐந்து லட்சம் ஏழு லட்சம் செலவழித்துக் கல்யாணம் செய்யும்போது ஓர் ஏழைக்குத் திருமாங்கல்யம் செய்ய அரைப்பவுன் தானம் செய்யலாம்; ஏழைக்கு உதவி செய்தால்தான் தெய்வம் நமக்கு உதவி செய்யும்.

திரு.வானதி திருநாவுக்கரசு : கன்னிப் பெண்களுக்குச் (பையன்களுக்கும் தான்) சீக்கிரம் திருமணமாக என்ன தோத்திரங்கள் சொல்ல வேண்டும்?

வாரியார் : ‘சடையாயெனுமால், சரண் நீ எனுமால்’ என்ற ஞானசம்பந்தரின் பத்துப் பாடல்களைப் பாராயணம் பண்ண வேண்டும். அருணகிரிநாதர், ‘விறல்மாரனைந்து’ என்று ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார்கள். திருச்செந்தூர்த் திருப்புகழ். இதைக் கன்னிப் பெண்கள் ஆறுமுறை பக்தியோடு பாராயணம் செய்தால் சீக்கிரமாய்க் கல்யாணம் ஆவதுடன் நல்ல கணவன் வருவான். நான் சொல்லி நிறைய பேர் அனுபவத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

திரு.வானதி திருநாவுக்கரசு : மிகவும் நன்றி ஐயா. வணக்கம். ¶¶

==========================================================

* நம் தளத்திற்கு இந்த மாத விருப்ப சந்தாவை செலுத்திவிட்டீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Some important updates….

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

==========================================================

Related posts :

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS!

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *