Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

print
பிரச்சனைகளில் சிக்கித் தவித்து எல்லா தெய்வமும் தம்மை கைவிட்டுவிட்டதாக கருதுபவர்கள், சிறிதும் தயக்கமோ அவநம்பிக்கையோ இன்றி ஓடிப் போய் பற்ற வேண்டிய பாதங்கள் எது தெரியுமா?

முருகனின் திருப்பாதங்கள் தான்!

Marudhamalai  4

Marudhamalai 5முருகனின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

முருகனின் அகராதியில் தண்டித்தல் என்ற ஒன்றே கிடையாது. அருள் செய்வது மட்டும்தான் அவனுக்கு தெரியும். அசுரர்கள் அனைவரும் இறை அவதாரங்களால் வதம் செய்யப்பட்டது தான் வரலாறு. ஆனால், சூரபண்மனை முருகன் வதம் செய்யாமல் அருள் செய்து தன்னகத்தே வைத்துக்கொண்டான். இது எந்த தெய்வத்திடமும் இல்லாத சிறப்பு.

Marudhamalai 6

அசுரர்களுக்கே அருள் செய்பவன் தன்னை நாடி வந்தோரை கைவிடுவானா?

துதிக்காதவர்களையும் தடுத்தாட்கொள்ளும் தெய்வம் தண்டபாணி தெய்வம். (உ.ம். பகழிக்கூத்தர்)

உங்களுக்கு எத்தனை பிரச்னைகள் இருந்தால் என்ன… ஏதேனும் மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு ஓடுங்கள். படியேறி அவனை தரிசியுங்கள். ஒவ்வொரு படி ஏறும் போதும் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் உங்கள் கண் முன்னே வரவேண்டும்.

Marudhamalai 8

Marudhamalai  3

நேரத்தை வீணடித்தது, ஆதாயத்திற்காக தகுதியற்றவர்களை புகழ்ந்தது, நல்லோர்களை வேதனையுறச் செய்தது, ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தது, கடவுளையும் கடமையையும் மறந்து களித்திருந்தது, கோள் சொல்லியது, பொறாமைப் பட்டது, பிறர் மீது வீண் பழி சுமத்தியது, கடுஞ்சொல் பேசியது. தாய் தந்தையரை புறக்கணித்தது, விலை மகளிரை அணைத்தது, பிறன் மனை நோக்கியது, தீயோரோடு சேர்ந்திருந்தது இப்படி….

இப்படி அவரவர் தாங்கள் செய்த பாவங்ககள் அனைத்தையும் முருகன் காலடியில் சமர்பித்து மன்னிப்பு கோர வேண்டும்.

Marudhamalai 9

முருகனை கருவறையில் காணும்போது கண்ணில் நீர் பெருகி வழியவேண்டும். கண்ணீரால் கழுவ முடியாத பாவங்களே உலகில் இல்லை.

“நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். என் தவறுகள் அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி தவறு செய்யமாட்டேன். உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை. காப்பாற்று கந்தா!” என கதறுங்கள்.

அர்ச்சகர் கொடுக்கும் திருநீறை நெற்றி நிறைய பூசுங்கள்.

பிரகாரத்தை மூன்று முறை வலம் வாருங்கள். “ஓம் சரவண பவ” என்கிற சடாக்ஷர மந்திரம் மட்டுமே உங்கள் நாவினின்றி வரவேண்டும்.

கொடிமரத்தை தாண்டி நமஸ்கரித்துவிட்டு படி இறங்கத் துவங்கும்போதே உங்கள் வாழ்க்கை ஏற்றம் காணத் துவுங்கும்.

தினசரி வேல்மாறல் அல்லது கந்தசஷ்டி கவசம், அல்லது கந்தரலங்கராம், கந்தரனுபூதி இப்படி ஏதேனும் ஒன்றை படித்து வரும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். அவ்வளவு தான் நீங்கள் செய்யவேண்டியது. முருகனின் அருட்பார்வை உங்கள் மீது படும். உங்கள் பிரச்னைகள் யாவும் சூரியனை கண்ட பனி போல மறைந்துவிடும். இது சத்தியம்.

நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

மேற்படி பாடலில்…

முருகனின் தாள்கள் – 2
சிலம்பு – 2
சதங்கை – 2
தண்டை – 2
முகங்கள் – 6
தோள்கள் – 12
கடம்பும் (கடம்ப மாலை) – 1

அனைத்தையும் கூட்டுங்கள் 27 என்று வரும்.

மொத்த நட்சத்திரங்கள் எத்தனை? 27!

ஆக முருகப் பெருமான் 27 நட்சத்திரங்களையும் வெற்றிகொண்டவன். ஆட்கொண்டவன்.

முருகனின் சான்னித்தியம் கிடைத்தால் எந்த நட்சத்திரம் நம்மை என்ன செய்ய முடியும்?

முன் அத்தியாயத்தில் கூறியபடி சின்னப்பா தேவரின் மேற்படி வரலாற்றை அசைபோட்டபடியே மருதமலைக்கு பைக்கில் போய்க்கொண்டிருந்தோம்.

Marudhamalai 12

Marudhamalai 14மருதமலைக்கு போகும் பாதையே சரியான இயற்கை காட்சிகளுடன் எழில் கொஞ்சும் பாதை. அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தமையால் புதிதாக சாலை போட்டிருந்தார்கள்.

மலை ஏற ஏற ஜில்லென்று வீசிய காற்று ஊட்டியில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இன்னும் சற்று நேரத்தில் மருதமலையில் காலடி எடுத்து வைக்கப்போகிறோம் என்பதை எண்ணி மனம் குதூகலித்தது.

Marudhamalai 16

திடீரென பைக்கை ஒட்டிக்கொண்டிருந்த விஜய் ஆனந்த், “திடீர் திடீர் என யானை, புலியெல்லாம் வரும்ணா… பயப்படவேண்டாம்!” என்று நம்மை பயமுறுத்தினார். “வீட்டுக்கு ஒரே பையன்பா.. இன்னும் ஆண்டு அனுபவிக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கு…” என்று மருதாசல மூர்த்தியிடம் ஒரு நொடி வேண்டிக்கொள்ள தவறவில்லை.

Marudhamalai 20

Marudhamalai 17

Marudhamalai 18“முருகா… இந்த மருதமலை பயணமும் தரிசனமும் மறக்க முடியாத ஒன்றாக எங்களுக்கு அமையவேண்டும்” என்று வேண்டிக்கொண்டோம்.

மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மினி பஸ்களில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் கார்களும்  கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்.

Marudhamalai 19

நாங்கள் கட்டணம் செலுத்தி மலைப் பாதையில்  புறப்பட்டோம். அங்கே மேலே ஏறி, பைக்கை பார்க்கிங்கில் விட்டுவிட்டு, படியேறிச் செல்கிறோம். புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது.

இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

நாங்கள் அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு படியேறிச் சென்றவுடன் அங்கே கண்ட காட்சி…

முருகனின் தங்கத் தேர் புறப்பாடுக்கு தயாராக இருந்தது.

Marudhamalai 10

தங்கத் தேரை நேரில் தரிசிப்பது அப்படி ஒரு ஆனந்த அனுபவம். சந்தியாக் காலத்தில் தங்கத் தேர் தக தகவென மின்னியது.

Marudhamalai 21

யாரோ ஒரு பக்தர் வேண்டுதலுக்காக தேர் இழுப்பதாக வேண்டியிருப்பார் போல. அவர் புண்ணியத்தில் காணக்கிடைக்காத தங்கத் தேரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது எங்களுக்கு. சுமார் 10 – 15 நிமிடங்கள் தான். தேர் கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்தவுடன் நிலையில் வைத்து பூட்டிவிட்டார்கள். சிறிது தாமதமாக வந்திருந்தால் கூட மிஸ் செய்திருப்போம்.

Marudhamalai 22

Marudhamalai 23இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

Marudhamalai 24

மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

Marudhamalai 15

ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது. பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.

Marudhamalai 25

நாங்கள் சென்ற அன்று அத்தனை கூட்டமில்லை. எனவே நிம்மதியாக தரிசிக்க  முடிந்தது. வழக்கம்போல டைரியை அடுத்து நமது பெயருடன் வாசகர்கள் சிலரின் குடும்பத்தினருக்கு அர்ச்சனை செய்தோம்.

முருகனின் அழகிற்கு ஈடு இணை ஏதேனும் உண்டா?

காதலாகி கசிந்துருகி கண்ணீர் பெருக்கெடுத்து வந்துகொண்டிருந்தது. வெளியே வரவே மனமில்லை.

வேறு வழியின்றி வெளியே வந்தோம். பிரகாரத்தை ஆசை தீர வலம் வந்தோம்.

மருதமலை அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காணவேண்டிய சன்னதியாகும்.

Marudhamalai 26

Marudhamalai 11

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
தீராத வினை எல்லாம் தீர்ந்துபோகுங்க…
அது தீராவிட்டால் வந்து என்னை கேளுங்க…

(* நண்பரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள ஒரு நாள் பயணமாக கரூர் வந்திருக்கிறோம். திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு தற்போது பசுபதீஸ்வரரை தரிசித்து முடித்துவிட்டோம். நம்முடன் நண்பர் செந்தில் வந்திருக்கிறார். அடுத்து குமார கவுண்டம் புதூரில் உள்ள பாலசுப்ரணிய ஸ்வாமிகள் சித்தர் சமாதி தரிசனம். இறையருளால் அடுத்து கரூரிலிருந்து திருவெண்காடு பயணம். நேரமிருப்பின் பிற தலங்கள். நாளை காலை சென்னை கடற்க்கரையில் சீரணி அரங்கில் மாசிமக தீர்த்தவாரி நேரடி கவரேஜ்.)

=============================================================

Also check :

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=============================================================

[END]

11 thoughts on “மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

  1. Very superb and heart touching article. After reading this article, I am having In mind to see lord maruthamalai. MUrugan. Temple. Regards
    Uma venkat

  2. பதிவு மிகவும் arumai. Padikkum pozuthe மனம் ஜில்ல்லென்று இருக்கிறது. நாங்களும் தங்களுடன் மருத மலை முருகனை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. படங்கள் anaiththum arumai. எனக்குஇந்த்த பதிவை படித்த பிறகுs மருத மலை செல்ல
    வேண்டும் எண்ற ennam erpatrtullathu. Nandri உமா venkat

  3. தங்கத்தேரில் மருதமலை முருகனை இன்று தரிசனம் செய்யும் பாக்கியத்தை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    படங்களும், பதிவின் நடையும் கண்ணுக்கும், மனதிற்கும் மிகுந்த குளுர்ச்சி தருகின்றன.

  4. அப்பா காண கண் கோடி வேண்டும்.தங்கத்தேரில் அழகன் குமரன் . நன்றி சுந்தர் .

  5. அருமையான பதிவு சுந்தர், மருதமலையில் ஒரு சித்தர் கோவிலும் உள்ளது. நான் சில வருடங்களுக்கு முன் இக்கோவிலை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிற அழகான கோவில்.

    நன்றி
    B.D.வெங்கடேஷ்
    பெங்களூரு

  6. Superb article. After reading this, I could see the Lord Murugan here itself. Very good coverage.

  7. மேலும் பாம்பாட்டி சித்தர் குகை , கன்னிமார் சந்நிதி ஆகியவை உள்ளன. பாம்பாட்டி சித்தர்க்கு தண்ணீர் தாகம் ஏற்பட்ட பொழுது முருகன் அருளால் மருத மரத்தில் இருந்து தண்னீர் ஊற்று தோன்றி அவர் தாகம் தீர்த்ததாக ஐதீகம்.

    சித்தர் பாம்பு உருவில் ஆதிமூல சந்நிதி முருகனை வணங்குவதாகவும் சொல்வர்.

    மருத மலை முருகன் கோவில் பின்புறம் உள்ள வனப்பகுதியின் காட்டு வழியாக (வனவிலங்குகள் பாதிப்பு உள்ளதால் தடை செய்யப்பட வழி) சென்றால் அனுவாவி சுப்பிரமணியர் கோவிலை அடையலாம்.மருத மலைக்கு நேர் பின்புறம் உள்ள மலை மீதுதான் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் உள்ளது.

    1. இருட்டுவதற்குள் செல்லவேண்டும் என்கிற ஒரு அவசரத்தில் சென்றதால் நீங்கள் சொன்னவைகளை பார்க்கமுடியவில்லை. அடுத்த முறை அனைத்தையும் பார்த்துவிட்டு விரிவாக பதிவிடுகிறேன். நன்றி.

  8. வாழ்க வளமுடன்

    தை பூசத்திற்கு அடுத்தநாள் நான் அங்கு சென்று வந்தேன் , நீங்கள் சொன்ன அத்தனயும் உண்மை . நான் போன சமயம் மிக அதிகமான கூட்டம். தமிழ் நாடு முழுவதிலுமிரிந்து பக்கதர்கள் காவடி எடுத்து வந்து ஆடி பாடியதை அன்றுதான் பார்தேன். மருதமலை போய் வந்த பிறகு நல்ல மாற்றத்தை தந்தது

    நன்றி

  9. வணக்கம்………

    நினைத்த மாத்திரத்தில் பக்தர்களிடம் முருகன் ஓடி வருவான் என்பது உண்மைதான்………..மருதமலை பற்றிய சென்ற பதிவைப் பார்த்துவிட்டு மருதாசல மூர்த்தியை மீண்டும் எப்போது காண்போம் என்று நினைத்தோம்………இதோ தேரேறி எங்களைக் காண ஓடோடி வந்து விட்டான்………….அவனுக்கும், அவனை அழைத்து வந்த தங்களுக்கும் நன்றிகள் பல………….

  10. திரு சுந்தர் அவர்களுக்கு
    மருதமலை முருகனை எப்போதும் ராஜ அலங்காரத்தில் தரிசிக்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *