Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > Thalaivar is always great!

Thalaivar is always great!

print
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் திரு.பாஸ்கரன். நம் தள வாசகர். நம்மிடம் அலைபேசியில் சில முறை உரையாடியிருக்கிறார். நேரில் சந்தித்தது இல்லை. மார்ச் மாத மத்தியில் ஒரு நாள் நம்மை தொடர்புகொண்டவர், புதிதாக அலுவலகம் திறந்துள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அலுவலகத்தில் வந்து நம்மை சந்திக்க விரும்புவதாக கூறினார். “ஃபோன் செய்துவிட்டு வாருங்கள்” என்றோம்.

சொன்னது போல இரண்டு நாளில் வந்தார். பல விஷயங்கள் குறித்து உரையாடினோம். தான் பணிபுரியும் கம்பெனியின் நிலை (ARVIND REMEDIES) மிகவும் மோசமாக இருப்பதாகவும், எந்த நேரமும் கம்பெனியை மூடிவிடுவார்கள் என்றும் கூறினார். வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

Lord Nataraja

“எல்லாம் நன்மைக்கே. நல்ல இடத்துல மனசுக்கு பிடிச்ச நல்ல வேலையா அடுத்து நீங்க ஜாயின் பண்ணனும். சம்பளத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காதீங்க. மத்த விஷயங்களையும் கன்ஸிடர் பண்ணுங்க” என்றோம்.

நம் தளத்திற்கு சந்தாவாக ரூ.250/- கொடுத்தவர், “நான் இருக்கும் நிலையில் இது தான் சார் முடியும். தவறாக நினைக்கவேண்டாம்” என்றார்.

சந்தாவை கூடுமானவரை அக்கவுண்டில் ஆன்லைன் ட்ரான்ஸ்பர் செய்ய முயற்சிப்பதாகவும் அப்படி முடியாத பட்சத்தில் இந்த பக்கம் வந்தால் கொண்டு வந்து நேரிலேயே தருவதாகவும் சொன்னார்.

“உங்களை போன்றவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் மதிப்பு மிக்கது. உங்கள் சௌகரியம் போல செய்யுங்கள்!” என்றோம்.

ஒரு பதினைந்து நிமிடம் பேசியவர் பின்னர் விடைபெற்று புறப்பட்டு சென்றுவிட்டார்.

அடுத்த மாதமும் இதே போல ஃபோன் செய்துவிட்டு வந்தார்.

வந்தவர் பேசிக்கொண்டிருந்த போது, கம்பெனியை லாக் அவுட் செய்துவிட்டதாகவும் செட்டில்மெண்ட் தராமல் இழுத்தடிப்பதாகவும் செலவுகளை சமாளிக்க என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறினார்.

கூறிவிட்டு அடுத்த மாத சந்தாவையும் தந்தார்.

ஓரளவு திருப்தியான பொருளாதார நிலையில் இருப்பவர்களுக்கு கூட உதவ மனம் வராத நிலையில், வேலையே போய்விட்ட நிலையில், இவர் மறக்காமல் நமக்கு சந்தாவை கொண்டு வந்து கொடுத்தது நம்மை நெகிழச் செய்தது.

அவருக்கு ஏதேனும் பிரதியுபகாரம் செய்ய விரும்பினோம்.

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்! பதிவு குறித்து நினைவுக்கு வந்தது. அந்த பதிவை குறிப்பிட்டு “அந்த பதிவை படித்தீர்களா?” என்று கேட்டோம்.

“ஸாரி சார்… எனக்கிருந்த பிரச்னை காரணமாக நான் கடந்த ஒரு வாரமாக தளத்தை பார்க்க முடியவில்லை… நீங்கள் குறிப்பிடும் அந்த பதிவை நான் இன்னும் படிக்கவில்லை” என்றார்.

நமது அலுவலகத்தில் உள்ள கணினியில், நமது தளத்தை ஒப்பன் செய்து அந்த பதிவை காண்பித்தோம். பின்னர் அந்த பதிவில் நாம் குறிப்பிட்ட அந்த பதிகத்தை பற்றி குறிப்பிட்டு, இந்த பதிகத்தை நீங்கள் தினந்தோறும் படித்து வாருங்கள். உங்கள் பொருளாதார பிரச்னை பறந்து போகும்” என்றோம்.

பின்னர், அந்த பதிகம் உள்ள ‘பலன் தரும் திருமுறை பதிகங்கள்’ நூலை அவருக்கு பரிசளித்தோம்.

வீட்டுக்கு சென்றவுடன் அந்த பதிவை முழுமையாக படிப்பதாகவும் இந்த பதிகத்தையும் பாராயணம் செய்வதாகவும் கூறினார்.

அவரை வழியனுப்பிவிட்டு பணிகளை கவனிக்கலானோம்.

அடுத்த நாள் மாலை, நமக்கு போன் செய்தவர், “சார்… ஒரு சந்தோஷமான நியூஸ். நாளைக்கு நேர்ல வந்து சொல்றேன்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

“பரவாயில்லை சொல்லுங்க…”

“இல்லே சார்… நேர்ல வர்றேனே!”

அடுத்த நாள் மீண்டும் அலுவலகத்துக்கு வந்தார். வந்தவர் நமக்காக இனிப்புக்கள் வாங்கி வந்தார்.

“சார்… நேத்தைக்கு முந்தாநாள் அந்த பதிவை பத்தி சொன்னீங்க…. அந்த புக்கையும் கொடுத்தீங்க. வீட்டுக்கு போனவுடனே முழு பதிவையும் படிச்சேன். அந்த பதிகத்தையும் படிச்சேன். நேத்தைக்கு கம்பெனியில் கூப்பிட்டு செட்டில் பண்ணிட்டாங்க சார். மொத்தம் ரூ.50,000/- துக்கும் மேலே வரவேண்டிய அமௌண்ட் அத்தனையும் வந்துடுச்சு” என்றார் மகிழ்ச்சியுடன். (இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்! இருவரும் படிக்கிறார்கள்!!)

baskaran copy copy
திரு.பாஸ்கரன் நம் அலுவலகதில்…

“உங்களுக்கு மட்டுமா இல்லே எல்லாருக்குமா?”

“என் கூட சேர்த்து கொஞ்ச பேருக்கு… மத்தவங்களுக்கு அப்புறமா செய்றதா சொல்லியிருக்காங்க!” என்றார்.

எத்தனை பெரிய அதிசயத்தை ‘இடரினும் தளரினும்…’ நிகழ்த்தியிருக்கிறது….!

வரவே வராது… வந்தாலும் முழுமையாக வருமா? இக்கட்டான நேரத்திற்கு வருமா? இப்படி ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையில் நேற்று முன்தினம் இருந்தார். ஆனால் இன்று… எத்தனை மகிழ்ச்சி!

இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி? யார் காரணம்?

காரணம் அவரது நம்பிக்கை தான்!

தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பவனிடம் ஒரு கயிற்றை போட்டால் எப்படி சந்தேகத்தையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு கெட்டியாக கயிற்றை பற்றிக்கொள்வானோ அப்படி அவர் அந்த பதிகத்தை பற்றிக்கொண்டார். ஆகையால் முதல்முறையிலேயே பலன் கிடைத்துவிட்டது.

(இது பற்றி இளம்பிறை மணிமாறன் அவர்களை நேரில் சந்தித்தபோது கூற மறக்கவில்லை நாம். இதற்கு சில நாட்கள் கழித்து தான் அவரை நேரில் சந்தித்தோம்!)

God gives

நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் எந்த பதிகத்தை படித்தாலும் எந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தாலும் நமது கோரிக்கை எந்தளவு நியாயமாக இருக்கிறதோ, நமது நம்பிக்கை எந்தளவு ஆழமாக இருக்கிறதோ அந்தளவு பலனும் விரைவாக உறுதியாக கிடைக்கும்.

Thalaivar is always great!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

====================================================================

[END]

8 thoughts on “Thalaivar is always great!

  1. வாவ்…… மிகவும் மகிழ்ச்சியான செய்தி ….

    திரு பாஸ்கரன் அவர்கள் பொருளாதார நிலையில் கஷ்டப்பட்டாலும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத் தினால் தான் நம் ஈசன் அவருக்கு அருள் புரிந்து இருக்கிறார் . அவரின் உயர்ந்த குணத்திற்கு பாராட்டுக்கள்

    எந்த ஒரு ஸ்லோகத்தையும் மிகவும் சிரத்தையுடன் படித்தால் அதற்குரிய பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை ஆணித்தரமாக பதியவைத நம் தளத்திற்கு நன்றிகள் பல.

    நாம் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கைக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை உணர வைத்து இறைவன் மீது அபரிமிதமான நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டீர்கள். அனைவரும் இந்த பதிகத்தை படித்து பொருளாதார அபிவிருத்தி பெற்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் நன்மையை ஏற்படுத்திக் கொள்வோம்.

    நன்றி
    உமா வெங்கட்

  2. சுந்தர்ஜி

    படிக்கும் போதே மெய் சிலிர்கின்றது. பகவானை சரணாகதி அடைந்து விட்டால் எந்த இடையூறும் நேராமல் பகவான் நம்மை காப்பாற்றி விடுவார். அவன்
    கால்களை பற்றி கொண்டால் நம்மை காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். நம்பினார் கெடுவதில்லை.

    நன்றி

  3. வணக்கம் சுந்தர் சார்

    உண்மையியோ உண்மை சார், நம்பினோர் கைவிடப்டார்

    நன்றி

  4. வார்த்தைகள் இல்லை என் உணர்வுகளை வர்ணிக்க !

    என் மனது பாடத்துவன்கியது

    “காதலாகிக்கசிந்து உருகி கண்ணீர் மல்கி ” என

    இதுதான் உண்மைக்காதல் !

    ஐயனே திரு பாஸ்கர் அவர்களுக்கு உதவியதற்கு தளம் சார்பாகவும் தளம் சார்ந்த நண்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

    சிவாய நமஹா சிவாய நமஹா

  5. Sir, where I can get full pathigam in decoded format as meaning will vary if not decoded.also you had given just 1 para of it in decoded format.

  6. சுந்தர் அண்ணா..

    இந்த பதிவு எழுதும் போது,தாங்கள் இருந்த மன நிலை கண்டிப்பாக கொண்டட்டதுக்கான மன நிலையோடு தான் இருந்திருக்க வேண்டும். (நம் தள பதிவுகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தரும்)

    படிக்க படிக்க, இன்பம் பொங்கியது. பதிவுடன் இணைந்த வண்ணப்படம் சூப்பரோ சூப்பர்.
    “கடவுள் நமக்கு நாம் விரும்பியதை தர மாட்டார். அனால் நமக்கு என்ன தேவையோ அதனை கண்டிப்பாக கொடுப்பார் ” – இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    நம் “தலைவரின் ” இது போன்ற திருவிளையாடல்கள் நம் தள(ல)த்தில் அதிகமாய் எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற பதிவுகள், நம்மை இன்னும் பலபடுத்தி, பக்குவபடுத்தும்.

    Thalaivar is always Great – தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

    மிக்க நன்றி அண்ணா..

  7. Wow..

    Very true…God always gives us what we need!!

    குரு சரணம் சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *