Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

print
மது முன்னோர்கள் மற்றும் அரசர்கள் அரும்பாடுபட்டு உயரிய எண்ணத்துடன், பரந்த நோக்குடன் கட்டிய பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்து, செடி, கொடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள் போதிய வருமானம் இன்றி, பணியாளர்கள் இன்றி தவிக்கின்றன. அவ்வளவு ஏன் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையை சுற்றி மூர்த்தத்தின் மீது எண்ணெயே படாத சிவாலயங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு.

சிவபெருமானுக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற திருஎதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் திருக்கோவில்
சிவபெருமானுக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற திருஎதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் திருக்கோவில்

2012 ஆம் ஆண்டு துவக்கத்தில் (ரைட்மந்த்ரா துவக்குவதற்கு முன்னர்) நாம் திருமணஞ்சேரி சென்றிருந்தபோது, அருகே இருந்த திருஎதிர்கொள்பாடி தலத்திற்கு சென்றிருந்தோம். சிவபெருமானுக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற இடம் இந்த தலம். அந்த கோவிலின் நிலையை பார்த்து கண்ணீர் உகுத்தோம். பின்னாளில் நாம் இந்த தளத்தை துவக்கியபோது நமது பணிகளுள் ஒன்றாக உழவாரப்பணி இடம்பெற்றதற்கு இதுவும் ஒரு காரணம்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் கடமை என்ன?

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
– வள்ளலார்

நம்மை ஒவ்வொரு வினாடியும் காத்து ரட்சிக்கும் நம் ஈசனை மறந்து இன்று யார் யார் பின்னோ சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

அண்டசராசரங்களை கட்டிக்காக்கும் ஈசன் நினைத்தால் முடியாதது எதுவும் உண்டா?

திரிபுரங்களை எரிக்க சிவபெருமான் தலைமையில் அனைவரும் புறப்பட்டபோது ஆளாளுக்கு இது தங்களால் தான் ஆகக்கூடும் என்று இறுமாந்திருந்தனர். ஆனால் தனது புன்னகையாலேயே அவற்றை பஸ்பமாகியவன் எந்தை ஈசன். அவன் நினைத்தால் இந்த கோவில்களை கண்ணிமையிப்பொழுதில் பொலிவுறச் செய்யமுடியும்.

ஆனால் பேதைகள் நாம் உய்வுபெறவேண்டும் சிவபுண்ணியம் தேடிக்கொள்ளவேண்டும் என்கிற காரணத்தினால் தான் இந்த வாய்ப்பை நமக்கு நல்குகிறான். கண்ணிருந்தும் குருடர் போல வாழ்ந்து இதை பயன்படுத்திக்கொள்ள தவறலாமா? நம் பொருட்டு தானே அவன் இப்படி எளியோனாக காட்சி தருகிறான்?

உழவாரப்பணியின் மேன்மையை வருங்காலத்தவர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே சைவ சமயக் குரவர்களில் மூத்தவர் அப்பர் பெருமான் உழவாரப்படை கருவியை தனது கையில் எப்போதும் தாங்கிக்கொண்டு அதை ஒரு அடையாளமாகவே ஆக்கிக்கொண்டார்.

SAIVA NALVAR

“அப்பா இது என்ன கரண்டியை இவர் கையில் வைத்திருக்கிறாரே?” என்று நம் குழந்தை கேட்கும்பொழுதாவது, ‘அது உழவாரப்பணி செய்ய பயன்படும் உழவாரக் கருவி’ என்பது நம் நினைவுக்கு வரும் அல்லவா?

சிவாலயங்களுக்கு சென்று ஒட்டடை அடித்து, தரையை பெருக்கி, கழுவித் துடைத்து, பாசி நீக்கி, திருவிளக்குகளை துலக்கி, ஆலயத்தின் பாத்திரங்களை சுத்தம் செய்து, பிரகாரங்களில் மண்டிக்கிடக்கும் புல் பூண்டுகள் அகற்றி, பொலிவுறச் செய்வோம். நம் வாழ்க்கையை பொலிவுற வைப்பான் பொன்னார் மேனியன் என்பது உறுதி.

உழவாரத் திருப்பணியை ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், முதியவர், மாற்றுத்திறனாளிகள் யார் என வேண்டுமானலும் எந்த உடல் தகுதி கொண்டிருப்பவர் வேண்டுமானாலும் எந்த வயதினராலும் செய்யலாம். பணி செய்யவியலாத முதியோர்கள் பக்தர்களின் பொருட்களை பார்த்துக்கொள்ளலாம். பணி செய்யும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் தரலாம். (சிவாலயத்தில் உழவாரப்பணி செய்துகொண்டிருந்த அடியவரிடம் ஒரு சிறு சுண்ணாம்பு மட்டையை எடுத்துக் கொடுத்ததால் ஒருவன் பெற்ற சிவபுண்ணியம் பற்றி தெரியுமா? Please check: சிவபுண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு!)

இந்த அரும்பணியில் அனைவரும் பங்கேற்று அவரவர் தங்களால் முடிந்த பொருளுதவி, உடலுழைப்பு, மற்றும் இதர உதவிகளை செய்து அரனருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த உழவாரப்பணி என்னும் சிவபுண்ணியச் செயலில் பங்கேற்போரின் 21 தலைமுறைகள் (தனக்கு முன், தன்னுடன், தனக்கு பின் என 21 தலைமுறைகள்) சிவகதி அடைந்து பேரின்பப் பெருவாழ்வு எய்துவர் என்பது ஆன்றோர் வாக்கு.

=========================================================

DSC03488

உழவாரப்பணி அறிவிப்பு! 

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு 03/07/2016 அன்று கவரப்பேட்டை அருகே அமைந்துள்ள அரியத்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும். காலை 7.00 மணிக்கு கோயம்பேட்டிலிருந்து வேன் பயணம். (ஏறும் இடம் : CMBT அருகே, நாதெள்ள திருமண மண்டபத்தின் எதிர்புறம்) ஐயப்பன்தாங்கலிருந்து வேன் காலை 6.30 க்கு புறப்படும். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ அவசியம் பதிவு செய்யவேண்டும்.

– ரைட்மந்த்ரா சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

=========================================================

உழவாரப்பணிக்கு வர விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு…

1) தங்கள் வருகையை நமக்கு தவறாமல் (மின்னஞ்சல் / எஸ்.எம்.எஸ். மூலமாக) உறுதிப்படுத்தவும். உணவு, வாகன வசதிகளை தீர்மானிக்க உதவியாக இருக்கும்.

2) தவிர்க்க இயலாத காரணத்தினால் வர இயலாத பெண் வாசகர்கள் சனிக்கிழமை மாலைக்குள் நமக்கு தெரியப்படுத்தவும்.

3) உழவாரப்பணிக்கு முந்தைய தினம் மிதமான எளிய உணவுகளை உட்கொண்டு சீக்கிரம் உறங்கச் செல்வது மிக மிக அவசியம். சனிக்கிழமை அவசியம் சீக்கிரம் உறங்கச் செல்லவேண்டும். அலாரம் வைப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி எழுப்பச் சொல்வது என அனைத்தையும் கையாளவும்.

4) ஞாயிற்றுக்கிழமை பொதுவாக தாமதமாக எழும் வழக்கம் பெரும்பாலானோரிடம் இருப்பதால் சனிக்கிழமை காலையே சீக்கிரம் தூக்கம் விழித்து உடலையும் மனதையும் உழவாரப்பணிக்கு தயார்படுத்துவது மிகவும் முக்கியம்.

5) சோம்பல் காரணமாகவோ அலட்சியம் காரணமாகவோ அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவோ ஒப்புக்கொண்ட உழவாரப்பணியை தவிர்க்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் நமக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்கள் பல.

6) ஒவ்வொரு உழவாரப்பணிக்கும் கூடுமானவரை தவறாமல் வர முயற்சிக்கவும். நியாயமான, தவிர்க்க இயலாத காரணங்களினால் ஒன்றிரண்டு பணிக்கு வர முடியாது போனால் அது குறித்து வருந்தவேண்டாம்.

7) இது தொண்டு மட்டுமல்ல அதற்கும் மேலான சிவபுண்ணியம் என்பதை மறக்கவேண்டாம். ஈசனுக்காக நீங்கள் தியாகம் செய்யும் ஒவ்வொன்றும் உங்களுக்கு அளவற்ற நற்பலன்களை தரும் என்பதை மறக்கவேண்டாம்.

8) பணிக்கு வரும் ஆண்கள் கையில் ஒரு வேஷ்டி, துண்டு SPARE எடுத்து வரவும்.

9) பணியின் போது சம்பந்தப்பட்ட ஆலயத்தையோ, நிர்வாகத்தினரையோ குறை கூறுவது, புறம்பேசுவது இவற்றை தவிர்க்கவும்.

10) பணியின்போது உங்கள் கவனம் பணியின் மீது மட்டும் இருக்கட்டும்.

11) ஒரு ஆலயத்தை தேர்ந்தெடுத்து உழவாரப்பணி செய்வதன் பின்னணியில் எத்தனை விஷயங்கள் உள்ளன என்று பலருக்கு தெரியாது.

12) உங்கள் தேவைகளை மற்றும் இன்னபிற அவசியங்களை ஒருங்கிணைப்பாளரிடம் கூற தயங்க வேண்டாம்.

13) உழவாரப்பணிக்கு செல்லும் வாகனத்தில் ஏற, குறித்த நேரத்தில் வருவது மிகவும் முக்கியம். தாமதமான புறப்பாடுக்கு நீங்கள் காரணமாக இருக்கவேண்டாம்.

14) நமது தளத்தின் செயல்பாட்டுக்கோ அல்லது சேவைக்கோ உதவுபவர்கள் எந்த வித ஐயத்தையும், நெருடலையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு உதவிகளை செய்யவேண்டாம். இத்தகு உதவிகள் நமக்கு ஏற்புடையதல்ல. நாம் கடந்து வந்த பாதையும், இதுவரை ஆற்றிய பணிகளும், நமது உழைப்பும், பதிவுகளுமே நமக்கு உரைகல். மனமுவந்து சந்தோஷமாக நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் கூட மதிப்பு மிக்கது தான். நன்றி.

=======================================================

Maha periyava ashiravad

தெய்வத்தின் குரல்!

றைவனின் திருவடிகளிலே தன்னை அர்ப்பணித்து, எல்லாம் அவன் செயல் என்கின்ற நினைப்பில் வேற்றுமை மறந்து உயிர்களையெல்லாம் ஒன்றாகக் கருதித் தன் அறிவையும் ஆற்றலையும் பிறருக்கு எந்த வகையிலும் பயன்படுத்தலே தொண்டாகும்.

திருநாவுக்கரசர் பெருமான் தொண்டுநெறிக்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்தார். “தன்கடன் அடியேனையும் தாங்குதல்;என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்கிற ஒலியை எழுப்பினவர் அப்பர்பெருமான் ஆவார். அடிகள் கையில் உழவாரப்படை ஏந்தித் திருக்கோயில்களிலும், திருவீதிகளிலும் துப்புரவப் பணிகள் செய்தார். மக்கள் உய்வடைய பல அருள்வாக்குகள் வழங்கினார். பதிகங்கள் பாடினார். ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பல்லக்குத் தாங்கினார். பாம்பால் மாண்ட அப்பூதியடிகளின் சிறுவனை எழுப்பினார். திருவீழிமிழலையில் மழையின்றி வறுமையால் வாடிய மக்களுக்குச் சிவனருள் துணைகொண்டு உணவு அளித்தார். இப்பூவுலகில் எண்ணில் கோடி மக்கள் பெரும்பாலும் தன்னலத்திற்கே அரும்பாடுப்பட்டுத் தங்களது அறிவையும், ஆற்றலையும் வீணாக்குகின்றனர். பயனற்ற வாழ்வை நடத்தி வரும் மக்களிடையே இறை எண்ணத்தை வித்திட்டு, அந்த வித்தானது தன்னலமற்ற உள்ளமாக வளர்வதற்காக அருள்மழையை என்றும் பொழிந்து கொண்டிருக்கும் இறைவன் வழியைத்தொண்டுநெறி மூலமாகத் தெளிவாக எடுத்துக்காட்டித் தன்னையே தொண்டு நெறி மூலமாகத் தெளிவாக எடுத்துக்காட்டித் தன்னையே தொண்டுமயமாக்கிக் கொண்டவர் அப்பர் பெருமான்.

– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

=======================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Want to help us?

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

One thought on “உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

  1. சுந்தர்ஜி

    நான் நிச்சயமாய் கலந்து கொள்வேன்

    மாலதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *