Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு? – Rightmantra Prayer Club

எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு? – Rightmantra Prayer Club

print
ந்த கதையை நாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருக்கிறோம். எங்கு என்று நினைவில் இல்லை. சமீபத்தில் நமக்கு வாட்ஸ்ஆப்பில் வந்தது. பொதுவாக நம் கதைதான் “இதோ பாருங்க நல்லாயிருகுல்ல…” என்று நமக்கே வாட்ஸ்ஆப்பில் வரும். அதிசயமாக வேறொருவர் கதை வந்தது. இக்கதையில் கூறப்படும் கருத்து அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று. பதிவின் இறுதியில் இந்த பதிவை முதன்முதலில் பகிர்ந்தவர் கூறியிருப்பதை கவனியுங்கள். நம் கருத்தும் அதுவே தான்.

* பதிவுக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய விஷயம் : நமது பிரார்த்தனை கிளப்புக்கு மின்னஞ்சல் மூலம் வந்த கோரிக்கைகள் சிலவற்றை பிரசுரிக்காமல் நிறுத்திவைத்திருக்கிறோம். அதில் போதிய விபரங்கள் இல்லை. பெயரை வெளியிடலாமா வேண்டாமா என்று பலர் சொல்லவேயில்லை. விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினால் பதில் இல்லை. அலைபேசியில் விபரங்கள் கேட்கலாம் என்றால் அலைபேசி எண்ணை தரவில்லை. ஓரிரண்டு வரிகளில் அடிப்படை தகவல்கள் இன்றி கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை எப்படி பிரசுரிப்பது? பிரார்த்தனை கோரிக்கைகளை படித்து பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு?

# வாட்ஸ்ஆப்பில் வந்தது 

நாம மகிமையை விளக்கும் பொருட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அவர்கள் சொன்ன ஒரு அருமையான கதை ஞாபகத்திற்கு வருகிறது. இதை விட சிறப்பாக நாம மகிமையை எடுத்துச் சொல்ல எதனாலும் முடியாது என்பதால் இதனையே இங்கே எழுதுகிறேன்.

காராஷ்டிர மாநிலத்தில் பாவம் புண்ணியம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர். அதாவது “இது செய்தால் பாவம், இது செய்தால் புண்ணியம்” என்றெல்லாம் சொல்லி, “இந்த பாவத்தில் இருந்து விடு பட இந்த பரிஹாரம் செய்ய வேண்டும், இந்த ஹோமம், இந்த யாகம், இந்த பூஜைகள் செய்யவேண்டும்” என்று கூறி மக்களை செய்யவைத்து அதற்காக அவர்களிடம் இருந்து தானமாகவும், தக்ஷனையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இதை கண்டு சற்றும் சகியாத சமர்த்த ராமதாசர் ஒரு வேலை செய்தார்.

Samarth Ramadas

ஒரு நாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு அந்த ஊரில், அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்து போய் கொண்டிருந்தார்… அப்போது அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம் பார்த்து உண்டிகோலால் குறிபார்த்து அடித்து ஒவ்வொன்றாக சாகடித்து சாகடித்து தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டே சென்றார். இதை பார்த்த அந்த ஆசாமிகள் குய்யோ, முறையோ என்று கத்திக்கொண்டு வந்துவிட்டனர். “நீங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள், இது எவ்வளவு பெரிய பாவம், இதை போய் நீங்கள் செய்து விட்டீர்களே” என்று கூறினார்.

அதற்கு சற்றும் அசராத சமர்த்த ராமதாசர், “சரி செய்துவிட்டேன் இப்போது என்ன செய்யமுடியும்” என்றார்.

“இதற்கு பரிஹாரம் செய்தாக வேண்டும் இல்லையேல் இந்த பாவம் உங்களை விடாது” என்றனர்.

“சரி செய்கிறேன் ஆனால் அந்த பாவம் என்னை விட்டு அகலவேண்டும்” என்றார். “கண்டிப்பாக அகலும்” என்று உறுதி கொடுத்தனர் அந்த ஆசாமிகள்.

அவர்கள் சொன்ன அனைத்தையும் சமர்த்த ராமதாசர் செய்து முடித்தார். நிறைய பணமும், பொற்காசுகளும் அவர்களுக்கு தக்ஷனையாக அள்ளிக் கொடுத்தார்.

பிறகு “எனது பாவம் என்னை விட்டு போய்விட்டதா?” என்றார். அவர்களும் “நிச்சயாமாக உங்கள் பாவம் கழிந்துவிட்டது” என்றனர்.

“ஆனால் நான் கொன்ற ஒரு கிளி கூட எழுந்து பறக்கவில்லையே?” என்றார் சமர்த்த ராமதாசர்.

“அதெப்படி இறந்த கிளிகள் எப்படி உயிர் பெறும்?” என்றனர்.

DSC03821
அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர்!

“பாவம் கழிந்தது என்றால் கிளிகள் உயிர் பெறவேண்டும் அல்லவா? கிளிகளுக்கு உயிர் வந்தால் தானே என் பாவம் என்னை விட்டு அகன்றுவிட்டது என்று அர்த்தம்” என்றார் சமர்த்த ராமதாசர்.

“அது நடக்காத காரியம். அது எப்படி சாத்தியம்” என்றனர் அவர்கள்.

“இப்படி தான்” என்று தன் பையில் இறந்துகிடந்த ஒவ்வொரு கிளியாக கையில் எடுத்து “ராம் ராம்” என்று கூறி வானத்தில் விட்டெறிந்தார். அந்த கிளிகள் உயிர் பெற்று பறந்து சென்றது. இதை கண்டு வியப்படைந்த அந்த ஆசாமிகள் சமர்த்த ராமதாசரின் திருவடிகளில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்குமாறு வேண்டினர்.

இறைவனின் நாமம் மிக பெரிய நன்மைகளை செய்யவல்லது. மகிமை பொருந்தியது. எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் இறைவனின் நாமத்தின் மகிமையாலேயே பெருந்துன்பத்தில் இருந்து விடுபட்டிருக்கின்றார்கள். அதனாலேயே நான் பக்தியை மட்டுமே அதிகம் நம்புவேன். அதிலும் மந்திர தந்திரங்களை விட நாம மகிமையை மட்டுமே அதிகம் நம்புவேன். அதை மட்டுமே பிரச்சனை என்று என்னை அணுகுவோருக்கு பரிந்துரைப்பேன். ஆனால் 100ல் இருவர் மட்டுமே அதனை செவி மடுப்பார் மற்றவர்கள் அவரவர் வினைவழியே சென்று துயருவர்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்றிரண்டெழுத்தினால்.

Also check… An amazing story on meditating Rama Nama
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த திருமதி.ஜெயா ரங்கராஜன் (61) அவர்கள். 

முகநூல் மூலம் நமக்கு அறிமுகமான திருமதி.ஜெயா ரங்கராஜன் (61) அவர்கள் ஒரு சிறந்த சமூக சேவகர். காஞ்சி மகா சுவாமிகளின் பக்தை. அந்த ஒன்று போதாதா நமது அறிமுகத்திற்கு.

11218202_10205939844396272_1500419729179944763_n

தனக்கு காஞ்சி மகா பெரியவா தான் எல்லாமே என்று கூறும் ஜெயா ரங்கராஜன் அவர்கள் அடிப்படையில் ஒரு HR CONSULTANT. ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் மனிதவள மேபாட்டு துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் இவருக்கு ஒரே மகன். கணவர் திரு.ரங்கராஜன் அவர்கள் காஸ்ட் அக்கவுண்டண்ட் (ஓய்வு).

JAYA RANGARAJANதனது HR துறையில் ஏற்பட்ட அனுபவத்தால் JOB CONSULTANCY நடத்திவந்தார். ஆனால், வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பணிக்கு தேவையான அடிப்படை தகுதி கூட இல்லாமல் பலர் தன்னிடம் வருவதைப் பார்த்து வேதனைப்பட்டு தற்போது குழந்தைகள் – பெற்றோர்கள் இருவருக்கும் தேவையான LIFE SKILLS COUNSELLING நடத்தி வருகிறார். இவர் இதை வணிக ரீதியாக இல்லாமல் ஒரு தொண்டாக தான் செய்து வருகிறார் என்பது தான் இதில் விசேஷமே. ஏழை எளியோரிடம் தந்து வழிகாட்டுதல்களுக்கு எந்த கட்டணமும் இவர் பெறுவதில்லை. (தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கட்டண அடிப்படையில் WORKSHOP நடத்தி தருகிறார்.)

மாற்றம் தேவை குழந்தைகளிடம் அல்ல. பெற்றோர்களிடம் தான் என்பது இவர் கருத்து. அதாவது ஒருவகையில் இவர் அளித்து வருவது வேர் சிகிச்சை. இதைத் தவிர மகளிர் மேம்பாட்டுக்காக ஒரு திட்டம் துவக்கியிருக்கிறார்.

இதைத் தவிர மேலும் பல சமூக / ஆன்மீக சேவைகளை அமைதியாக செய்துவருகிறார்.

இவரது சந்திப்பு விரைவில் நமது அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் மேற்கல்வி தொடர்பான ஆலோசனைகளுக்கு பெற்றோர்கள் இவரை தாராளமாக அணுகலாம்.

இவர் அலைபேசி எண் : +91-9940559699

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு நம் நன்றி.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்: 

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்களில் முதலில் அனுப்பியிருப்பவர் தளத்திற்கு புதியவர். தளத்தின் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளார். நமது பதிவுகளை தவறாமல் படித்துவருகிறார். இயன்றவரை அனைத்தையும் கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரது பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் பெயரின்றி வெளியிட்டுள்ளோம்.

அடுத்தவர் நமது முகநூல் நண்பர். அவரது நிலையை தெரிந்து நாமாக இந்த பிரார்த்தனையை சமர்பித்துள்ளோம். அவரது தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இந்த ஒரு மாதம் பட்ட வேதனை நமக்குத் தான் தெரியும். நாம் தனிப்பட்ட முறையில் இயன்றபோதெல்லாம் பிரார்த்தனை செய்துவந்தாலும், பிரார்த்தனை கிளப் பதிவு கடைசியாக மே 8 அன்று அளிக்கப்பட்டதால் இங்கு பிரார்த்தனை கோரிக்கை சமர்பிக்க முடியவில்லை. இன்று சமர்பித்திருக்கிறோம்.

பொதுப் பிரார்த்தனை… நாளிதழ் படிக்கும்போது தற்செயலாக கண்ணில் பட்டது. திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? மேலும் நம்மிடம் அறிமுகம் இல்லாதவர்களுக்காக அவர்களால் நமக்கு எந்த வகையிலும் பிரதியுபகாரம் செய்ய இயலாது என்று தெரிந்த நிலையில் நாம் செய்யும் பிரார்த்தனை உண்மையில் பன்மடங்கு புனிதமானது. இறைவனின் உடனடி கவனத்தை பெறக்கூடியது. அவனிடம் நமக்கு நன்மதிப்பையும் பெற்றுதரக்கூடியது.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) Property and health issues spoiling my peace of mind

Dear Sir,

I am an ardent reader of rightmantra for the past few months. Would like to appreciate the noble service you are performing. I felt to write this below which may help to ease my mental anxieties and worries which can give Good health.

If you felt the prayer club can pray for my issue I am very much Thankful. Would like to Thank God for his Blessings given to me and my family and we live at Bangalore.

Last year around June/July suddenly started developing (white spots) IGH spots at my skin and seeing this my wife was worried and she started developing Bleeding issues.

Also i have a dispute with my brother in relation with my ancerstral property at madurai. All my inititiaves to settle this amicable ended in vain. We are keeping quiet but I worry from inside. Feeling helpless. My only intention is to retain and protect the ancestral property, and live in peace with Good health. My mother is staying with us at Bangalore since I lost my father since many years. Bit scared and worried of going to legal course of action.

I strongly believe in God and pray to show us a way. The partition documents are very clear.

When I discussed with my some seniors, I realized my health condition (Me with IGH spots at skin and my wife with Bleeding issues) was purely due to the anxieties and worries we carry along with us. I plead to pray for our Good health and plead to pray for the resolution of issues created by my brother at our ancestral property/ common passage at Madurai.

Thanks and Regards,
Your reader

(2) நண்பரின் தாயார் நலம்பெறவேண்டும் அவருக்கு விரைவில் பேச்சு வரவேண்டும்!

கோவையை சேர்ந்தவர் நண்பர் திரு.பிரபு ராகவா. நம் முகநூல் நண்பர். அவருடைய தாயார் திருமதி.சூடாமணி (63) அவர்கள் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக கடந்த மாதம் சுயநினைவின்றி விழுந்துவிட, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் சுயநினைவு இல்லாமே இருந்தார். தீவிர கண்காணிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நினைவு திரும்பியுள்ளது. ஆனால் இன்னும் பேச்சு வரவில்லை.

கடந்த ஒரு மாத மருத்துவ வாசத்திற்கு பிறகு இன்று தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கூடவே இருந்து நண்பரும் அவர் தந்தையும் தாயாருக்கு சிசுருஷைகளை செய்து கவனித்து வந்தனர். இடைப்பட்ட காலங்களில் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக சற்று சவாலான சூழ்நிலை தான். கடனை உடனை வாங்கி எப்படியோ சமாளித்துவிட்டனர்.

நண்பர் ஏற்கனவே பல ஆன்மீக பணிகளிலும் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தவர் தான். அந்த புண்ணியத்தால் தான் அவரது தாயார் தற்போது நினைவு திரும்பியிருக்கிறார் என்று கருதுகிறோம்.

இதற்கிடையே, நண்பரின் மூத்த சகோதரருக்கு அரவிந்த் (31) இன்னும் திருமணமாகவில்லை. அந்த ஏக்கம் வேறு அந்த தாயை நினைவு திரும்பிய நிலையிலும் வாட்டி வருகிறது.

மேலும் நண்பர் தற்போது பணியில் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பார்த்து வந்த வேலையை தவிர்க்க இயலாத காரணத்தினால் துறக்கவேண்டிய சூழல். தாயாரை கவனித்துக்கொள்ள அது சற்று உதவியாக இருந்தது.

திருமதி.சூடாமணி அவர்கள் முற்றிலும் நலம் பெற்று அவருக்கு பேச்சு வந்து அவர் முன்பு போல தனது பணிகளை செய்யவேண்டும். நண்பருக்கு நல்ல வேலைகிடைத்து, அவர் சகோதரருக்கு நல்ல இடத்தில் பெண் அமைந்து அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும். இந்த மருத்துவ சிகிச்சையால் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் நீங்கி, அவர்கள் கிரகத்தில் அமைதியும் இன்பமும் நிலவவேண்டும்.

– ரைட்மந்த்ரா சுந்தர்

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி. 

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது. 

==========================================================

தினகரன் நாளிதழில் வந்த செய்தி 

பொது பிரார்த்தனை

அரசு மருத்துவமனை ஆபரேஷனில் விபரீதம்: 35 நாட்களாக கோமா நிலையில் 8 வயது சிறுமி தவிப்பு

sangethaமதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: “எனக்கு, இளையராஜா என்பவருடன் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். 3வது மகள் சங்கீதா (8), அருப்புக்கோட்டையில் 3ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு தொண்டை வலி ஏற்பட்டதால் அருப்புக்கோட்டையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றேன். தொண்டை சதை பாதிப்பு காரணமாக (டான்சில்) அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என டாக்டர்கள் கூறினர்.

ஏப். 16ல் ஆபரேசனுக்கு முன்னதாக பரிசோதனை மருந்து எதுவும் கொடுக்காமல் நேரடியாக மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இதனால் சங்கீதா கோமா நிலைக்கு சென்றாள். உடனடியாக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக என் மகளை மாற்றினர். அங்கு ஐசியூவில் கோமா நிலையிலேயே இருக்கிறாள். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 35 நாட்களாக கோமாவில் இருப்பதால், மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு மாற்றவும், அதற்குரிய செலவை அரசுத் தரப்பில் ஏற்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. டீன் வைரமுத்து ராஜூ ஆஜராகி, ‘மதுரை அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘பல்வேறு டாக்டர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை ஏற்படுத்தி, சிறுமியை மீட்க தேவையான தொடர் சிகிச்சையை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

சிறுமி சங்கீதா கோமாவில் இருந்து மீண்டு விரைவில் நலம்பெறவேண்டும். இதுவே நம் பொது பிரார்த்தனை.

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

உடலில் வெண்புள்ளிகள் தோன்றி அவதிப்பட்டு வரும் நண்பரும், உதிரப்போக்கால் அவதிப்பட்டு வரும் அவரது மனைவியும் விரைவில் நலம்பெறவேண்டும். அவருடைய சகோதருடனான சொத்துப் பிரச்னையும் தீர்ந்து சுமூகத் தீர்வு கிட்டி இரு தரப்பிலும் அமைதி ஏற்படவேண்டும். இவருடைய மன உளைச்சல் முடிவுக்கு வரவேண்டும். நண்பர் பிரபு ராகவா அவர்களின் தாயார் சூடாமணி அவர்கள் விரைந்து குணமடைந்து அவருக்கு பேச்சு வந்து முன்னைப்போல அவர்கள் வீட்டுபணிகளை கவனிக்கவேண்டும். நண்பருடைய சகோதரர் அரவிந்துக்கும் விரைந்து நல்ல இடத்தில பெண் அமைந்து திருமணம் நடக்கவேண்டும். நண்பருக்கும் நல்ல வேலை கிடைக்கவேண்டும். அவர்கள் கிரகத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படவேண்டும். பொதுப் பிரார்த்தனையாக இடம்பெற்றுள்ள அருப்புக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வி அவர்களின் மகள் சிறுமி சங்கீதா கோமாவில் இருந்து மீண்டு குணமடைந்து முன்னைப்போல ஓடியாடி விளையாடவேண்டும். அவள் பெற்றோர் மகிழவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி. ஜெயாரங்கராஜன் அவர்கள் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பாத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 29, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள கோ-சாலையில் பசுக்களை பராமரிப்பதில் உதவியாக இருந்து வரும் கல்லூரி மாணவர் திரு.பத்ரி

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற வார ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற பத்ரி காசி விஸ்வநாதர் கோ-சாலைக்கு இரண்டு வாரமும் தொடர்ந்து வந்திருந்து பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

IMG_0541

வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!

==========================================================

[END]

3 thoughts on “எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு? – Rightmantra Prayer Club

  1. தகவல்கள்
    அருமை. பாராட்டுக்கள்:. பகிர்வுக்கு
    நன்றிகள்

  2. தகவல்கள்
    அருமை. பாராட்டுக்கள்:. பகிர்வுக்கு
    நன்றிகள். ஸ்ரீ மஹா பெரியவா
    திருவடிகளே சரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *