Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, May 15, 2024
Please specify the group
Home > Featured > ஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்? குட்டிக்கதை!

ஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்? குட்டிக்கதை!

print
யிரம் ரூபாய் நோட்டும், ஒரு ரூபாய் நாணயமும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயத்தை அலட்சியமாக பார்த்தது. பின்னர் செருக்குடன் பெருமையடித்துக் கொண்டது.

“என்னைப் பார்… நடிகர்கள் கையில் புரள்கிறேன். தொழிலதிபர்கள் பெட்டியில் தூங்குகிறேன். அரசியல்வாதிகள் கைகளில் தவழ்கிறேன். விலையுயர்ந்த கார்களில் பறக்கிறேன். தங்க நகைகள் விலை உயர்ந்த பொருட்கள் வாங்க பயன்படுகிறேன். வாழ்க்கையே பரபரப்பாக இருக்கிறது. ஆனால் பாவம் நீ இதையெல்லாம் பார்த்திருக்க மாட்டாய்” என்கிறது எகத்தாளமாக.

five-hundred-vs-one-ruppee

ஒரு ரூபாய் நாணயம் அமைதியாகச் சொன்னது… “நான் அங்கெல்லாம் போய் அவஸ்தைப் பட்டதே கிடையாது. கோவில் உண்டியல்களில் கடவுள் என்னைப் பாதுகாக்கிறார். மண் உண்டியல்களில் குழந்தைகள் என்னைப் பத்திரமாக வைத்திருக்கின்றனர். அந்தப் பெருமையே எனக்கு போதும்!” என்றது.

இவர்கள் உரையாடலை அங்கிங்கெணாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் கேட்டுக்கொண்டிருந்தான். ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு மட்டுமல்ல, அதைப் போல போல கர்வம் பிடித்து அலையும் அனைவருக்கும் பாடம் புகட்டுவது என்று முடிவு செய்தான்.

மறுநாள் கறுப்பு பணத்தையம் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் விதமாக யாரும் எதிர்பாராத வகையில் அரசாங்கம் திடீரென ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் யாவும் செல்லாது என்று அறிவித்தது.

ஒரே நாளில் ஒரே இரவில் செருக்குடன் திரிந்துகொண்டிருந்த ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் யாவும் வெற்றுக் காகிதங்களானது. அதை யாரும் வாங்க மறுத்தனர். அதை பதுக்கி வைத்திருந்த செல்வந்தர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் செய்வதறியாது விழித்தனர். “எல்லாம் போச்சே போச்சே” என்று கதறினர். துடித்தனர். உறக்கம் வராது தவித்தனர். பலருக்கு மாரடைப்பே வந்துவிட்டது.

ஒரே நாளில் எப்படி அவ்வளவு பணத்தையும் மாற்றுவது? மாற்றவேண்டும் எனில் வங்கிகளுக்கு தான் வரவேண்டும். அப்போது பணத்திற்கு கணக்கு கொடுக்கவேண்டும். எதற்கு வம்பு என்று அந்நோட்டுக்களை தீயிலிட்டும் சுக்கு நூறாய் கிழித்தும் சிலர் அழித்தனர். சிலர் குப்பையோடு குப்பையாக அவற்றை போட்டனர். இன்னும் சிலர் அவற்றை மூட்டை கட்டி இரவோடு இரவாக சாக்கடையில் போட்டனர்.

அடுத்தவரை அழவைத்து முறையற்ற வழிகளில் திரட்டிய செல்வம் அனைத்தும் இப்படி அதை ஈட்டியவர்களை அழைவைத்தபடி சென்றன.

இங்கோ மண் உண்டியல்களில் குழந்தைகள் சேமித்த நாணயங்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டது. “என் கண்ணு நீ சேர்த்து வெச்ச காசு தான் இன்னைக்கு சமயம் சமயத்துக்கு உதவுது. என் செல்லம்” என்று அதை சேர்த்துவைத்த குழந்தைகள் பெற்றோரால் கொண்டாடப்பட்டனர். கோவில் உண்டியல்களில் ஏழை எளியோர்கள் போட்ட நாணயங்கள் மற்றும் பத்து, இருப்பது ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் மதிப்பு ஏற்பட்டது.

ஒரே நாளில் இப்படி நிலை மாறியது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.

ஆண்டவன் சிரித்துக்கொண்டான்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (குறள் 659)

பிறர் அழ அவரிடம் இருந்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.

நண்பர் ஒருவர் (கோசல்ராம்) முகநூலில் சென்ற மாதம் பகிர்ந்த நான்கு வரிக்கதை ஒன்றை நமது பாணியில் மெருகூட்டி நமது தளத்தின் ஓவியரைக் கொண்டு பிரத்யேக ஓவியம் வரைந்து இங்கே தந்திருக்கிறோம். இதிலென்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால், இந்த கதைக்கான கருவை நாம் ஓவியரிடம் சொல்லி ஓவியம் வரைந்து தருமாறு கூறி பத்து நாட்களுக்கு மேல் இருக்கும். ஓவியருக்கு இருந்த பல்வேறு கமிட்மெண்ட்டுகளால் இதை உடனே அவரால் வரையமுடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வரைந்துவிட்டு தயாராக இருக்கிறது என்றார். சரி மேலும் சில கதைகளுக்கான கான்செப்டை சொல்லிவிடுகிறேன். ஒன்றாக அனைத்தையும் கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டோம். ஆனால் பொருத்தமான சூழல் எழவே உடனடியாக ஓவியத்தை பெற்று கதையை சூழலுக்கு ஏற்றவாறு மேலும் சற்று விரிவுபடுத்தி அளித்திருக்கிறோம்! – ரைட்மந்த்ரா சுந்தர்

copyright-notice-2

==========================================================

Some similar stories…

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

99 பொற்காசுகள் வேண்டுமா?

கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

நேர்மைக்கு ஒரு விலை!

==========================================================

Like our website? Kindly extend your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

தளத்தில் இதற்கு முன்பு வெளியான நீதிக்கதைகள் :

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

99 பொற்காசுகள் வேண்டுமா?

கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

நேர்மைக்கு ஒரு விலை!

ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

இளநீர் வியாபாரி செய்த தானம்!

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *