Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

print
மது தளத்தில் வாசகர்களுக்கு நாம் அடிக்கடி வலியுறுத்தி வரும் விஷயம் உங்கள் பிள்ளைகளிடம் “படி, படி அப்போ தான் நல்ல வேலைக்கு போகமுடியும் கை நிறைய சம்பாதிக்க முடியும்” என்று சொல்லி வளர்க்காமல் பிள்ளைகளுக்கு நற்பண்புகளை சொல்லிக்கொடுத்து, திருக்குறள், திருமுறைகள் போன்றவற்றை கற்றுக்கொடுத்து, உங்கள் கஷ்டங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தி வளர்க்கவேண்டும் என்பதே. (மேலும் அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதிக்கவேண்டும்!) பணம் தரும் ஏ.டி.எம் எந்திரங்களாக மட்டுமே தங்கள் பிள்ளைகளை வளர்க்க நினைக்கும் பெற்றோர்கள் பிற்காலத்தில் முதியோர் இல்லத்தில் தான் காலத்தை கழிக்க நேரிடும் என்பதை மறக்கவேண்டாம். (Please check : பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?)

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குஜராத்தை சேர்ந்த ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் என்று நமக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

கூலி வேலை செய்த கோடீஸ்வரர் மகன் – ஏன், எதற்கு, எங்கே?

Savji Dholakiaகுஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தோலாக்கியா. இவரது நிறுவனம் சுமார் 80 க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கு வைரங்களை ஏற்றுமதி செய்கிறது. தன்னிடம் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் மற்றும் பிளாட்டுக்களை வழங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். பணிபுரிந்தால் இப்படி ஒரு நிறுவனத்தில் பணிபுரியவேண்டும் என்கிற ஏக்கம் அனைவரிடமும் ஏற்பட்டது.

தோலாக்கியா அவர்களின் மற்றுமொரு பரிமாணம் அண்மையில் வெளியே தெரிந்தபோது இன்னும் அவர் மீது மதிப்பு ஏற்பட்டது. உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து சல்யூட் அடித்தோம். அவர் மிகப் பெறும் செல்வந்தராகவும் அனைவரும் அண்ணாந்து பார்க்கும் உயரத்திலும் இருப்பதில் வியப்பு இல்லை.

இந்த முறை தலைப்புச் செய்தியில் இடம்பெற்றிருப்பது தோலாக்கியாவின் 21 வயது மகன் த்ரவியா.

surat billionaire cars as diwali bonus 2

அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு வழக்கத்தின் படி, 21 வயதே நிரம்பிய த்ரவியா, மூன்று செட் ஆடைகள் கையில் கொஞ்சம் பணம் (அதுவும் அவசரத் தேவைக்கு மட்டுமே) ஆகியவற்றுடன் ஒரு வேலையை தனக்காக தேடும் பொருட்டு ஒரு மாதம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டார்.

பணம் மற்றும் சமூக அந்தஸ்து, எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பின் அருமையை மகனுக்கு புரிய வைக்கவேண்டும் என்று சாவ்ஜி விரும்பியுள்ளார்.

“என்மகனிடம் நான் சொன்னது ஒன்றுதான். வேலை தேடுவதும் அந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள படும் சிரமங்களையும், சம்பாதிக்கும் பணத்தின் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். அதனால் நமது மாநிலம் அல்லாத ஊருக்குச் சென்று உன்னுடைய திறனால் வேலை தேடி சம்பாதித்து ஒருமாதம் வாழ்ந்து காட்டு. எதற்கும் என்னுடைய பெயரை செல்வாக்கை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றேன். அவரும் அதே போல வாழ்ந்து காட்டியுள்ளார்.” என்கிறார் பெருமிதமாக.

இது குறித்து த்ரவியா கூறியதிலிருந்து சில பகுதிகள்…

Dravya Dholakiaகேள்வி : இது போன்றதொரு ஏற்பாட்டின் நோக்கம் என்ன?

பதில் : ஒரு சராசரி மனிதன் நாட்டில் எப்படி வாழ்கிறான் என்பதை உணர்ந்துகொள்வதே பிரதான நோக்கம். அடுத்து, எனக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு எனக்கு முன்பின் தெரியாத ஒரு நகரத்தில் சூழலில் வாழ்ந்து பழகவேண்டும். 12 வருடங்களுக்கு முன்பு இதே போல எனது cousins சிலரும் செய்திருக்கிறார்கள். தற்போது என் முறை. இது எங்கள் குடும்பத்தில் பல காலங்களாக உள்ள நடைமுறை.

கேள்வி : இந்த யோசனை எப்படி உதித்தது?

பதில் : நான் ‘BORN WITH SILVER SPOON’ என்று சொல்லக்கூடிய செல்வ செழிப்பான குடும்பத்தில் சூழ்நிலையில் பிறந்தவன். நான் விரும்புவது எதுவேண்டுமானாலும் அது எனக்கு கிடைக்கும். அதனால் இயல்பாகவே பணத்தின் அருமை புரியாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது. இது போன்றதொரு பயணம் பணத்தினை அருமையை எனக்கு உணர்த்துவதோடு வாழ்க்கையில் மக்கள் படும் துயரங்களையும் உணர்ந்துகொள்ள உதவுகிறது.

கேள்வி : இப்படி ஒரு பயணத்திற்கு உங்களை அனுப்பவேண்டும் என்று உங்கள் தந்தைக்கு எப்படி தோன்றியது?

பதில் : எல்லா பெற்றோரும் கஷ்டம் தெரியாமல் தான் தங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், END RESULT மதிப்புமிக்கதாக இருக்கும்போது படும் கஷ்டங்கள் ஒரு விஷயமே அல்ல. பணத்தால் பல விஷயங்களை நாம் வாங்க முடியும். அனுபவங்களை ஒருபோதும் வாங்க முடியாது. அனுபவத்தின் மூலம் மட்டுமே சில விஷயங்களாய் தெரிந்துகொள்ளவேண்டும். எனவே தான் என் தந்தை என்னை இவ்வாறு அனுப்பினார்.

Dholika working in bakery

கேள்வி : அதை உங்களால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடிந்ததா? தயக்கம் எதுவும் இல்லையா?

பதில் : முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேன். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே சிலர் இந்த பரீட்சைகளாய் எதிர்கொண்டு வெற்றிபெற்றிருப்பதால் எனக்கு அது குறித்த அச்சமோ தயக்கமோ ஏற்படவில்லை. சொல்லப்போனால், என்னை நானே பரிசோதித்துக்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.
கேள்வி : உங்களுடன் என்ன கொண்டு செண்றீர்கள்? உங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன?

பதில் : மூன்று செட் உடைகள், ரூ.7,000/- பணம் அவ்வளவு தான். அதுவும் மிக மிக அவசரமாக இருந்தாலொழிய அந்தப் பணத்தை நான் செலவு செய்ய அனுமதியில்லை. என்னுடைய உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவை நான் தான் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். அதுவும் ஒரு வாரத்திற்கு மேல் எங்கும் வேலை பார்க்கக் கூடாது.

கேள்வி : உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்… என்ன நடந்தது? எப்படி உணர்ந்தீர்கள்?

பதில் : ஜூன் 26 நான் புறப்பட்டேன். ஒரு சாதாரண பையில் மூன்று செட் உடைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். முன்தினம் இரவு நான் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் வரை எனக்கு அடுத்த நாள் எங்கே போகப்போகிறோம் என்று தெரியாது. என் அப்பா தான் எனக்கு டிக்கெட் புக் செய்தனர். நான் செல்லப்போகும் இடம் கேரள மாநிலம் கொச்சி என்று பின்னர் தான் தெரிந்துகொண்டேன்.

Goal

முதல் ஐந்து நாட்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்காமல், வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். சுமார் 60 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை கேட்டு ஏறி இறங்கினேன். நான் யார் என்று யாருக்கும் தெரியாது. மொழி வேறு தெரியாது. எனவே என்னை யாரும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளவில்லை. ஆறாவது நாள் ஒரு ரெஸ்டாரண்டில் வேலை கிடைத்தது. பேக்கரி பொருட்கள் விற்கும் வேலை கிடைத்தது. மற்ற ஊழியர்களுடனேயே நானும் தங்கினேன். அவர்கள் சாப்பிடுவதையே நானும் சாப்பிட்டேன். அந்த வாரம் முடிந்து போனதால் வேறு வேலை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. (ஒரு வாரத்திற்கு மேல் ஒரு இடத்தில் வேலை பார்க்கக்கூடாது!)

நீண்ட நெடிய தேடலுக்கு பிறகு அடிடாஸ் ஷோரூமில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலை ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நான் அதற்கு தகுதியுடையவன் என்று நினைத்தார்களோ என்னவோ, “நீ போய்ட்டு அப்புறம் வா தம்பி” என்று அனுப்பிவிட்டார்கள்.

த்ரவியா சொன்ன அந்த ஜெராக்ஸ் கடை த்ரவியா சொன்ன அந்த ஜெராக்ஸ் கடை

விரக்தியின் உச்சிக்கு சென்றேன். இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒரு கால் சென்டரில் சேர்ந்தான். அந்த நிறுவனமா, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான தகவல் பரிவர்த்த்தனைகளை செய்துவருகிறது. யூ.எஸ்.ஸில் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அங்கு ஓரளவு நன்றாக வேலை பார்த்தேன். அங்கு தான் தினக் கூலி தர ஒப்புக்கொண்டார்கள். அது மிகச் சிறிய நிறுவனம் என்பதால் சம்பளம் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை. இந்த காலகட்டத்தில் நான் ஒரே ஒரு வேலை தான் சாப்பிட்டான். மதியம் சாம்பார் சாதம் மட்டும் தான் சாப்பிட முடிந்தது. மாலை கம்பெனியில் குளுக்கோஸ் பிஸ்கெட் தருவார்கள். அதை சாப்பிட்டு பசியை கொஞ்சம் போக்கிக்கொண்டேன்.

என் பரீட்சையில் கடைசி கட்டத்தில், மெக்டொனால்டு உணவகத்தில் மணிக்கு ரூ.30/- சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அதற்குள் எனக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்துவிட்டதால் எங்கள் நிறுவனத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல ஆட்கள் வந்துவிட்டார்கள்.

கடைசி இரண்டு நாட்கள் – நன்றியறிவிப்பிலே செலவிட்டேன். இந்த ஒரு மாதகாலமும் என்னை நம்பி, எனக்கு வேலையும் உணவும் சம்பளமும் தந்தவர்களை சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி கூறினேன். அவர்களுக்கு சிறு சிறு அன்பளிப்புக்கள் அளித்தான். (வைரம், வைரம்!)

கேள்வி : சரி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

பதில் : நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம் – பச்சாதாபம். மேலும் வேலை இல்லாமல் இருப்பதும் அதைத் தேடி அலைவதும் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து கொண்டேன். நாம் வாழ்க்கையில் பலரிடம் அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் கடுமையாக நடந்துகொள்கிறோம். என் அனுபவம் எனக்கு கற்றுத்தந்தது என்னவென்றால், சக மனிதர்களின் துயரங்களை கஷ்டங்களை உணர்ந்து புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதே. எல்லாருக்கும் மனசு என்கிற ஒன்று இருக்கிறது. எனவே யாரையாவது நாம் புண்படுத்தும் முன், நிராகரிக்கும் முன் ஒரு கணம் யோசித்துப் பார்க்கவேண்டும். இதை உணர்ந்துகொண்டதால் புறக்கணிப்பு மற்றும் மனச்சோர்வு இரண்டும் ஒருவருக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று புரிந்துகொண்டேன். இதன் மூலம் மரியாதை மிக்க ஒருவனாக நான் வாழ முடியும்.

Dravya Dholakia 2
த்ரவியா தங்கியிருந்த அறை!

கேள்வி : உங்கள் பயணத்தில் நீங்கள் மறக்க முடியாத ஒரு நபர்?

பதில் : ஒரு சிலர் இருக்கிறார்கள். ஒரு வயதான பெரியவர் ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார். அவரிடம் ஜெராக்ஸ் எடுக்கச் சென்றபோது, நான் வேலை தேடிக்கொண்டிருப்பதை அறிந்து, என்னிடம் பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். வேலை கிடைத்தவுடன் பணம் கொடு என்று பெருந்தனமையோடு கூறிவிட்டார். அதே போல ஒரு செக்யூரிட்டி கார்டு நான் வேலை தேடிக்கொண்டிருப்பதை அறிந்து அவர் வீட்டையும் உணவையும் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

கேள்வி : இதனால் உங்களிடம் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றம் ஏதாவது ?

பதில் : யந்திரத் தனமான தேவைகளில் இருந்து நான் விடுபட்டிருக்கிறேன். என்னிடம் விதவிதமான ஷூக்களை வாங்கி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது தேவைக்கு இரண்டு ஜோடி ஷூக்களை வைத்துக்கொண்டு மற்ற ஷூக்களை எல்லாம் அவை அத்தியாவசியமாக உள்ள ஏழை எளியோருக்கு கொடுத்துவிட முடிவு செய்திருக்கிறேன். இரண்டாவது வாழ்வில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய துணிவையும் எனக்கு இந்த ஒரு மாத தனிமை வழங்கியுள்ளது. மிகக் கடினமான காலகட்டங்களை கூட எளிதில் தாண்டி வந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது!

**************************************************************

Also check :

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

**************************************************************

Rightmantra needs your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Paypal id : ‘rightmantra@gmail.com’

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

**************************************************************

Similar articles….

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

‘கலைவாணி’ என்னும் கறுப்பு வைரம்!!

கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

நண்பா… நீ மனிதனல்ல தெய்வம்!

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

**************************************************************

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

**************************************************************

[END]

4 thoughts on “ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

 1. அருமையான பதிவு
  மிகவும் அவசியமான பதிவு

  வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது
  கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது என்பதற்கு வாழும் உதாரணம்

  திரவ்யாவிற்கு எமது பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்

  இப்படியொரு அக்னிப்பரீட்சையை தமது மகனுக்கு வைத்து எல்லோருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் திரு சாவ்ஜி அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர இந்த சுய சோதனை மிக முக்கியமானது

  கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தாலே விண்ணில் மிதப்பவர்களுக்கு இந்த பதிவு ஒரு சவுக்கடி

  வாழ்க்கையின் தத்துவத்தை உணர்வோம்
  வாழ்க்கையை ரசிப்போம்
  வாழ்க்கை பாடத்தை படிப்போம்
  நாமும் நெறியுடன் வாழ்ந்து மற்றவரையும் வாழவைக்க முயல்வோம்

  மகிழ்ச்சி

 2. திஸ் ஐஸ் அந்த ஐலண்ட் மெசேஜ். ஹொவ் எ பேர்சொன் தாஸ் டு லைவ் த்ரௌக் தி டிபிகல்ட்டிஸ் போர் ஏர்னிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *