Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > கற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள் – Rightmantra Prayer Club

கற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள் – Rightmantra Prayer Club

print
ந்த வார பிரார்த்தனைப் பதிவில் இடம்பெற்றிருக்கும் கதையை நாம் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்த ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் படித்தோம். படித்தபோது அத்தனை பிடித்துப் போனது. உங்களிடையே அக்கதையை பகிரலாம் என்று அதை தட்டச்சு செய்து தயார் செய்து வைத்த நிலையில், ஏனோ அப்போது அதை வெளியிட சந்தர்ப்பம் அமையவில்லை. பின்னர் ஒரு தருணத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து, DRAFT ல் SAVE செய்து வைத்துவிட்டோம். அப்படி ஒரு கதையை தயார் செய்து வைத்ததையும் மறந்தேபோய்விட்டோம். சமைத்ததை பரிமாற விரும்பும் தாய்மார்களின் மனநிலை தான் ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பை தயார் செய்த பின்பு இருக்கும். ஆனால், அந்தக் கதையை நாம் தயார் செய்து வைத்த நிலையில் பிரசுரிக்க இயலாமல் போனது. ஆனால் அது ஏன் என்று சமீபத்தில் தான் புரிந்தது.

கதையை படியுங்கள். பின்பு இந்த வார கோரிக்கைகளில் முதலில் இடம் பெற்றிருக்கும் கோரிக்கையை படியுங்கள்…! எத்தனை பொருத்தம்!!! ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் அச்சேறும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்று புரியும். கற்பனை ஒரு வடிவம் எடுத்திருக்கிறது என்றால் அது சாதாரண விஷயமா என்ன? கற்பகாம்பாள் தாயே சரணம்! சரணம்!!

உன் கருணைக்கு ஈடேது?

காற்றாகி கனலாகி கடலாகினாய்
கருவாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!

DSC03710-22

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை!

  • ஸ்ரீராம கிருஷ்ண விஜயம் | செப்டம்பர் 2014

ருள்மிகு கற்பகாம்பாள் சன்னதி. தேவி பிரசன்னமாகக் காட்சி தருகிறாள். சன்னதியில் வேறு பக்தர்கள் இல்லை.

குருக்களைப் பார்த்து அர்ச்சனா தயங்கி நின்றாள்.

“ஏன் அங்கேயே நிக்கறேள்? இங்கே வாங்கோ. அர்ச்சனையா? பேர் சொல்லுங்கோ?” என்றார் குருக்கள்.

குருக்கள் தன் வேண்டுகோளைக் கேட்பாரா? அதைக் கேட்டு மனப்பூர்வமாக அம்பாளிடம் வேண்டிக் கொள்வாரா? என அர்ச்சனா தயங்கினார்.

“பேர் சொல்லுங்கோம்மா?”

“சுவாமி, உங்களிடம் ஒரு வேண்டுகோள்” என்றார் அர்ச்சனா மெல்ல.

“வேண்டுகோளா? என்னிடமா? அம்பாள் தானம்மா அனைத்தையும் ஆட்டுவிக்கிறாள்…”

“சுவாமி, நீங்க என் குறைகளைக் கேட்டு அம்பாளிடம் சொல்லி அர்ச்சனை செய்யணும்….”

சற்று மெல்லிய குரலில் குருக்கள் கேட்டார்: “ஆத்துலே ஏதாவது பிரச்னையா?”

“இல்லை சுவாமி, இன்னிக்கு +2 பரீட்சை எழுதுற என் பிள்ளைகள் நல்லா, சமர்த்தா எழுதணும்னு அம்பாளுக்கு அர்ச்சனை செஞ்சு கொடுங்கோ”

“சரி, பிள்ளைங்க பேரைச் சொல்லுங்கோ”

“சுவாமி அதுக்கு முன்னாடி, எதை முன்னிட்டு என் பிள்ளைங்களுக்காக அர்ச்சனை செய்யணும்னு நான் சொல்லணும்” என்றார்.

“நெறைய மார்க் வாங்கணும்னுதானே…?”

DSC03755-22
அருள்மிகு கற்பகாம்பாள், திருமயிலை (உற்சவர்)

அர்ச்சனா தீர்க்கமாக ஆரம்பித்தாள்:

“அது மட்டுமில்லே சுவாமி. என் பிள்ளைங்க இன்னிக்குப் பரீட்சை எழுதப் போகுதுங்க. மொதல்ல, பரீட்சை நேரத்துலே அவங்க ஆரோக்கியமா இருக்கணும்.”
……………

“ரெண்டாவது, என் பிள்ளைங்களுக்குப் பரீட்சைப் பயம் வந்துடவே கூடாது.”

……………

“மூணாவது, சரியா தேர்வு எழுத முடியாதுன்னு நினைச்சி அவங்க டென்ஷனாயிடக் கூடாது” என அர்ச்சனா கூறுவதற்குள், குருக்கள், “பலே, பிள்ளைங்க நிறைய மார்க் வாங்கணும்னு சொல்ற அம்மாக்கள பார்த்துருக்கேன். ஆனா நீங்க வித்தியாசமா இருக்கேள்” என்றார் அவளது கழுத்தில் தொங்கிய டாலரைப் பார்த்தபடி.

அர்ச்சனா தொடர்ந்தார்: “இன்னும் ரெண்டு இருக்கு சுவாமி. என் பிள்ளைங்க, படிச்ச எதையும் மறந்திடக் கூடாது; அதோட சரியான நேரத்துக்குள்ளாற தேர்வை முழுசா எழுதி முடிச்சுடணும்.”

“கடைசியா அவங்க எக்ஸாம் ஹாலுக்குப் போகும்போது தன்னம்பிக்கையோட போகணும்; பரீட்சை எழுதி முடிச்சதுக்கப்புறம் சந்தோஷமாவும், நிறைவாவும் ஹாலை விட்டு வெளியில வரணும்.”

தன் பிள்ளைகள் மீது ஒரு தாய்க்கு இவ்வளவு அறிவுப்பூர்வமான பாசமா என வியந்தார் குருக்கள்.

வழக்கமாகக் கூறும் சஹ குடும்பானாம்… என்ற பூஜை மந்திரங்களைச் சொல்லாமல், “ஒங்களுக்கு அம்பாள் நிச்சயம் அனுக்ரஹம் செய்வாள். சரி, உங்க ரெண்டு பிள்ளைங்களோட பேரையும் சொல்லுங்க?” என்று கேட்டார் குருக்கள்.

அர்ச்சனா அம்பாளை வணங்கியபடி, ரெண்டு பிள்ளைங்க இல்ல சுவாமி… என்று கூறி ஒரு பெரிய பட்டியலை நீட்டினார். குருக்கள் அதைப் படித்தார்.

அபிஜித், அமலா, மோகனா, ரஞ்ஜன் என்று தொடங்கி சையது, ஸ்டீபன்… என்று முடிந்த பட்டியலைப் பார்த்த அவர், “என்னம்மா இது? இவாள்ளாம் யாரு?” என வியந்தபடியே கேட்டார்.

“அவங்கள்ளாம் என் பிள்ளைகள்!”

“கடைசி ரெண்டு பேரும் கூடவா?”

“ஆமா சுவாமி, அவங்க 52 பேரும் நல்லா படிச்சி, பெரிய ஆளா வந்து நம்ம சமுதாயத்துக்கு நல்ல பேரு வாங்கித் தரணும்” என்றார் அந்த அரசுப் பள்ளி ஆசிரியை அர்ச்சனா!

=================================================

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது.)

பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும்.

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணைஅவசியம் குறிப்படவேண்டும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

முக்கிய அறிவிப்பு 

நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

நரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேஷ பிரார்த்தனை இன்னும் இரண்டு வாரம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. 690நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஷேஷ பிரார்த்தனை கிளப் பதிவு வாசகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை சமர்பித்து வருவதால் சிலரது வேண்டுகோளை ஏற்று அப்பிரார்த்தனை சற்று ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்து அளிக்கக்கூடிய பிரார்த்தனை அது தான். முன்னரே குறிப்பிட்டது போல பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார். எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ள வாசகர்கள் தங்கள் பிரார்த்தனையை அவரவர் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் சற்று விரிவாக நமக்கு அனுப்பவும். உங்கள் அலைபேசி  எண்ணை மறக்காமல் குறிப்பிடவேண்டும்.

பிரார்த்தனை கோரிக்கையை வரும் 10/08/2016 க்குள் editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம். அலைபேசி : 9840169215. இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள். (வயலூர் முருகப் பெருமான் அருணகிரிநாதர் வாழ்விலும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்விலும் மிக முக்கிய பங்காற்றியவர்.)

karthikeyan 2நாம் சமீபத்தில் வயலூர் சென்றபோது தான் திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அதற்குள் நமக்கு மிகவும் நெருங்கிய நண்பராகிவிட்டார். நமது உடன்பிறவா சகோதரர்.

இவரைப் பற்றியும் இவரது விஷய ஞானம், வித்தை, சமூக சமயத் தொண்டு ஆகியவற்றை பற்றி அறிந்துகொண்டபோது இமயத்தை அடியிலிருந்து அண்ணாந்து பார்த்தது போன்ற பிரமிப்பு தான் நமக்கு ஏற்பட்டது.

திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள் பல சிவப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். இவரது தாத்தா திரு.ஜம்புநாத சிவாச்சாரியார் அவர்கள், சுதந்திரம் பெற்ற காலகட்டத்திற்கு முன்பிருந்தே வயலூர் முருகனுக்கு பல திருப்பணிகள் செயது, ஆலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறார். வாரியார் ஸ்வாமிகள் இவரது சேவையை பாராட்டி, மகரகண்டி அணிவித்து பாராட்டியிருக்கிறார். இவரது தந்தை ஸ்ரீ குஞ்சிதபாத குருக்கள் காஞ்சி காமகோடி மடம் நடத்திய சதஸில் பங்கேற்று மகா பெரியவாவின் திருக்கரங்களால் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

தற்போது 33 ஆம் அகவையில் இருக்கும் திரு.கார்த்திகேயன் குருக்களின் தாத்தா, அப்பா என்று அனைவருமே வயலூரில் முருகனுக்கு தொண்டு செய்து வந்த பரம்பரை என்பதால் சிறுவயதிலிருந்தே வயலூர் முருகனுக்கு தொண்டாற்றி வருகிறார் கார்த்திகேயன் குருக்கள். (குருக்களாக கடந்த 13 ஆண்டுகளாக!)

திரு.கார்த்திகேயன், கோவிலூர் பாடசாலையில் ஏழு வருடங்கள் வேதமும், அவரின் மாதாமகரிடம் சைவ சித்தாந்தமும் ஜோதிடமும் பயின்றார். அதுமட்டுமல்லாது திருவாவடுதுறை ஆதீனத்தில் சேர்ந்து சைவ சித்தாந்த கல்வி பயின்று ‘சித்தாந்த ரத்தினம்’ என்கிற பாராட்டும் பத்திரமும் பெற்றிருக்கிறார்.

வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நடத்திய சைவ, சாக்த, வைணவ ஆகம பரீட்சையில் பங்கேற்று மூன்றிலும் தேர்ச்சி பெற்று 100% மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக வந்தார்.  இவர் ஒருவர் மட்டும்தான் மூன்றிலும் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்ரீ சுந்தர சிநேகம்’ என்கிற அமைப்பின் மூலம் பல சமூக பணிகளும் செய்துவருகிறார்.

தன்னை நாடி வருபவர்களுக்கு சமய தீட்சாதி முதலான வைபவங்களை செய்து வைக்கிறார். மந்திரபோதேசமும் செய்கிறார்.

வயலூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திரு.கார்த்திக் சிவம் அவர்களை நம் தளம் சார்பாக கௌரவித்தபோது...
வயலூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திரு.கார்த்திக் சிவம் அவர்களை நம் தளம் சார்பாக கௌரவித்தபோது…

கும்பகோணத்தை அடுத்த கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உட்பட 75 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார். அது மட்டுமா… வயலூரில் கோடி அர்ச்சனை, லக்ஷ ஜெப ஹோமம் முதலியவற்றை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். எண்ணற்ற ஏகாதச ருத்ர ஹோமம் , சண்டி ஹோமம் முதலியவற்றில் பங்கேற்றிருக்கிறார். நூறு சண்டி ஹோமத்தில் கலந்துகொண்டமைக்காக ‘சிவசாஸ்திர கலாநிதி’ பட்டத்தை பெற்றிருக்கிறார்.

karthikeyan 1

சமய சேவை மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர் திரு.கார்த்திகேயன். தனது ஊரில் உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு இலவசமாக பல விலை உயர்ந்த உபகரணங்களை வாங்கிக்கொடுத்து, ஆரோக்கியமான சமூகம் உருவாக உதவியிருக்கிறார்.

நமது பிரார்த்தனை கிளப்பி பற்றி எடுத்துக்கூறி நமது வாசகர்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

இந்த ஞாயிறும் அடுத்த ஞாயிறும் நமக்காகவும் நமது வாசகர்களுக்காகவும், இதற்கு முன்பு பிரார்த்தனை சமர்ப்பித்த அனைவருக்காகவும் வயலூர் முருகனிடம் விஷேஷமாக பிரார்த்திக்கவிருக்கிறார். இன்று திதி, வாரம், நட்சத்திரம் – திருவாதிரை கூடிய பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை திரயோதசி – இப்படி அமைவது மிகவும் அபூர்வம். எனவே பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டுள்ளவர்களுக்காக வயலூரில் எழுந்தருளிருக்கும் ஆதிநாயகி சமேத அக்னீஸ்வரருக்கு (அக்னி ஸ்தாபித்து பூஜித்த இறைவன் என்பதால் இவர் பெயர் அக்னீஸ்வரர்!) இன்று மாலை பிரார்த்தனை நேரத்தில் ப்ரார்த்தனையாலர்களின் பெயர், ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்வதாக கூறயிருக்கிறார். (*இதற்காகத் தான் பிரார்த்தனையாளர்கள் அவசியம் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம்  இவற்றை அனுப்பவேண்டும் என்று நாம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறோம். இப்போது புரிகிறதா?)

பிரார்த்தனை நேரத்தில் ருத்ர திரிசதியும் இன்னபிற வேத மந்திரங்களும் சொல்லி பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். நமது பிரார்த்தனை கிளப்புக்கு எத்தனை பெரிய பாக்கியம். நம் வாசகர்களுக்கு எத்தனை அரிய ஒரு வாய்ப்பு…! முருகா சரணம்!!!

திரு.கார்த்திகேயன் அவர்கள் பழகுதற்கு இனியவர். அர்பணிப்பு உணர்வும் பக்தியும் மிக்கவர். திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு ஒரு பையன், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். வேதம், சிவாகமம் முதலிவற்றை திறம்பட கற்று முருகனுக்கு தொண்டு செய்வதோடு, தன் குழந்தைகளுக்கு சனாதன தர்மத்தின்படி அற்புதமான கல்வியை கற்பித்து வருகிறார்.

தான் கற்ற அனைத்து வித்தைகளையும், பாராட்டுக்களையும் புகழையும் தனது குருநாதர் கோடிமங்கலம் சிவஸ்ரீ கணேச சிவாச்சாரியார், திருவையாறு அவர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பதாக கூறுகிறார் கார்த்திகேயன் அவர்கள்.

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:

இந்த வாரம் வெளியாகியிருக்கும் முதல் கோரிக்கை நெகிழ வைக்கும் ஒன்று. இந்த தளம் துவக்கி இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு பொது நோக்கம் கொண்ட பிரார்த்தனை வந்ததில்லை. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நம் தளத்தை படிக்கிறார்கள் என்பதே நமக்கு பெருமை தான். அவர் நமக்கு அனுப்பியிருக்கும் பிரார்த்தனை அற்புதமான விரிவான ஒன்று. தன் பெயரோ ஊரோ தெரியவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் சில பல காரணங்களுக்காக இங்கு தளத்தில் வெளியிட கூட விரும்பவில்லை. நாம் தான் அவர் பிரார்த்தனையை சற்று சுருக்கி, அதன் சாராம்சத்தை மட்டும் தந்திருக்கிறோம். காரணம் அவசியம் அனைவரும் அவருக்காகவும் அவர் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கவேண்டும்.

அடுத்து பிரார்த்தனை அனுப்பியிருக்கும் வாசகர், தனது மனைவிக்காக பிரார்த்தனை அனுப்பி அது நிறைவேறிய மகிழ்ச்சியை தெரிவித்தவர், மகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு கொடிய நோய்க்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். படித்தபோது பதறிப் போய்விட்டோம். இறைவன் நிச்சயம் அவர்களுக்கு உடனடி நிவாரணம் தரவேண்டும். நமது பிரார்த்தனை அந்தளவு சத்தியத்துடனும் ஆத்த்மார்த்தமாகவும் இருக்கவேண்டும்.

மூன்றாவது பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிறது. எப்படியோ நமது பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. தற்போது பிரார்த்தனை கிளப் பதிவை தயாரிக்க பிரார்த்தனைகளை தொகுத்தபோது தான் கண்டுபிடித்தோம். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு சம்பந்தப்பட்ட வாசகருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். (எனவே தான் வாசகர்கள் தாங்கள் சமர்பிக்கும் பிரார்த்தனை குறித்த காலகட்டத்திற்குள் இந்த மன்றத்தில் இடம்பெறவில்லை என்றால் நமக்கு அதை நினைவூட்டும்படி கேட்டுவருகிறோம். இப்போது புரிகிறதா?)

பொதுப் பிரார்த்தனை… நெஞ்சை பதறவைக்கும் ஒன்று. நமது நாட்டைக் காக்கும் நம் ராணுவ வீரர்களுக்காக நாம் செய்யவேண்டியது. நாம் என்ன செய்வது? பிரார்த்திப்போம்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) என் மாணவர்கள் சாதிக்கவேண்டும்!

மேலே உள்ள கதையில் உள்ள ஆசிரியை போல, மாணவர்களின் நலன் மீது அக்கறை உள்ள ஒரு ஆசிரியை நமக்கு இந்த வாரம் பிரார்த்தனை அனுப்பியிருக்கிறார். தற்கால மாணவர்களை சமாளிப்பதிலும் அவர்களை பன்படுத்துவதிலும் இருக்கும் சிரமங்களை கூறியிருக்கும் அவர், இந்த அரும்பணியில் மேலும் தன்னை தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ள இறைவனின் ஆசியை வேண்டுகிறார். அவரிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று நாடும் வீடும் போற்றும்படி வாழ்க்கையில் உயரவேண்டும் என்பதே அவர் ஆசை. அவர் ஆங்கிலத்தில் அனுப்பிய மின்னஞ்சலை தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.

சார் வணக்கம்…!

நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரார்த்தனையிலும் பங்கேற்று பிரார்த்தித்து வருகிறேன்.

நான் ஒரு பள்ளி ஆசிரியை. இப்போதெல்லாம் மாணவர்களை நிர்வகிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்களை பன்படுத்த பல்வேறு வழிமுறைகளை நாங்கள் கையாளுகிறோம். வாழ்க்கையின் உன்னதமான பல விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். இந்த தளத்தில் நீங்க எழுதும் கதைகளையும் அவர்களுக்கு கூறிவருகிறேன். எங்கள் கடமையை சரியாக ஏன் அதற்கு மேலும் செய்கிறோம். இருப்பினும் அவர்களின் கவனச் சிதறலை எங்களால் தடுக்கமுடியவில்லை. மாணவர்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ‘தலைமுறை இடைவெளி’யை எங்களால் உணர முடிகிறது. எனவே மாணவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொள்கிறேன். இருப்பினும் என் அன்பையோ அக்கறையையோ அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சில சமயம், இந்தப் பணிக்கு நான் தகுதியுடையவள் தானா என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டுவிடுகிறது. அப்படி ஒருக்கால் இல்லையென்றால் அதற்கு என்னை தகுதியுடையவளாக ஆக்கிக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்.

என் மாணவர்களுக்கு நானே எல்லாவகையிலும் – சொல்லாலும், செயலாலும், நடத்தையிலும் உதாரணமாக திகழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இறைவனின் அருள் வேண்டும். எனக்கு மட்டுமல்ல சக ஆசிரியர்கள் அனைவருக்கும். நான் ரெகுலராக பிரார்த்தனை செயது வருகிறேன். இருப்பினும் கூட்டுப் பிரார்த்தனை மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு.

என் மாணவர்களுக்காக தயவு கூர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். மாநிலத்திலேயே முதல் இடம் பிடிக்கக் கூடிய அளவு சாதுரியமும் புத்திக்கூர்மையும் உள்ள மாணவர்கள் என்னிடம் உள்ளார்கள். தவிர சராசரிக்கும் மேலான, சற்று தாமதமாக பிரகாசிக்ககூடிய மாணவர்களும் என்னிடம் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் வாழ்க்கையை சிறந்த முறையில் எதிர்நோக்க வேண்டும். பாஸிட்டிவான மனப்பான்மையுடன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் மிகச் சிறந்த முறையில் பள்ளிக்கல்வியை முடித்து அவரவர் உயர்ந்த இலக்கை அடையவேண்டும்.

இது தவிர என் சகோதரி தற்போது கருத்தரித்திருக்கிறாள். அவளும் அவள் வயிற்றில் சுமக்கும் கருவும் நன்றாக இருக்கவேண்டும். அவளுக்கு நல்ல முறையில் சுகப் பிரசவம் ஏற்பட்டு, ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். என் தங்கைக்கு மட்டுமல்ல கருவுற்றிருக்கும் எல்லா தாய்மார்களுக்கும் குழந்தை நல்ல முறையில், ஆரோக்கியமாக குழந்தை பிறக்கவேண்டும். எங்கள் பெற்றோர்கள் தற்போது எங்களிடையே இல்லை. அவர்கள் அமரத்துவம் பெற்றுவிட்டார்கள். இப்போது எங்கள் பெற்றோர் அம்மையப்பன் பார்வதியும் பரமேஸ்வரனும் தான்.

இது தவிர என் இரண்டு தம்பிகளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. அவர்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் பெண் கிடைத்து திருமணம் கைகூடி, வாழ்வில் எல்லாவிதமான நலனும் வளமும் அவர்கள் பெறவேண்டும் என பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி

(2) மகளுக்கு முதுகுத் தண்டில் காசநோய் குணமாகவேண்டும்!

சுந்தர் சார் வணக்கம் !

கடந்த வருடம் என் மனைவின் கால் வலி நீங்க பிராத்தனை செய்ய வேண்டுகோள் விடுத்து அவ்வலி நிவாரணம் பெற்றதை நினைவுக்கூறுகின்றேன், அது போல் என் அன்பு மகள் லட்சுமி பிரதாவிற்கு (12) முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள காசநோய் முற்றிலும் மருந்தினாலேயே விரைவில் குணமாக தாங்கள் பிராத்தனை செய்ய தாங்களை மிகவும் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

நன்றி!

இவன்
செந்தில் குமரன்,
சென்னை-14.

(3) சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பூரண நலம் பெறவேண்டும்!

ஐயா வணக்கம்

தங்கள் தளத்தின் முலம் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை பற்றி அறிந்தேன். எனது மகன் ஷாருக்கேஷ் எட்டு வயதாகிறது. மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு பிறந்ததில் இருந்து ஒரு சிறுநீரகம் இடம் மாறி செயல்படாமல் இருப்பதாக தற்போது எடுத்த ஸ்கேன் சொல்வதாக மருத்துவர் சொல்கிறார்.

எங்கள் குழந்தையின் நலமே எங்கள் மகிழ்ச்சி. அவன் எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க நலமுடன் வாழ பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

– தாமரைச்செல்வன்,
ஐய்யாரப்பர் தெற்கு வீதி, மயிலாடுதுறை.

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

காணாமல் போன இந்திய விமானப் படை விமானத்தில் பயணம் செய்தவர்களுக்காக பிரார்த்திப்போம்!

தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட விமான படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக போர் விமானம் நேற்று (22 ம் தேதி) மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். விமானத்தை தேடும் பணி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

jul1623 iaf

29 பேருடன் மாயாமான விமானத்தை தேடும் பணியில் கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. 6 விமானங்கள், 17 கப்பல்களும், விமானத்தை தேடி வருகின்றன. விமானத்தை தேடும் பணியில், கடற்படை, கடற்படையுடன், கடலோர காவல்படையும் ஈடுபட்டுள்ளது. சென்னையிலிருந்து 200 கி.மீ., கிழக்கே, விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.

விமானத்தில் பயணம் செய்த நம் விமானப்படையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்போம்.

என்ன நடந்தது, நடந்திருக்கும் என்று யூகிக்கக்கூட முடியாத சொல்லமுடியாத ஒரு சூழல் இது.

இறைவன் அனைவருக்கும் மனதைரியத்தையும் ஆறுதலையும் தருவானாக.

நமச்சிவாய!

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

தனது பிள்ளைகள் நல்லபடியாக படித்து, முன்னேறி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தரவிரும்பும் அந்த ஆசிரியையின் பிரார்த்தனை நிறைவேறி, அவரது குடும்பத்தினருக்காக அவர் வேண்டியுள்ள நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்து அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், வாசகர் செந்தில் குமரன் அவர்களின் மகள் லக்ஷ்மி பிரதாவிற்கு முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள காசநோய் பாதிப்பு நீங்கி அவள் விரைந்து நலம் பெறவும், பள்ளிக்கு முன்புபோல சென்று கல்வி பயிலவும், சிறுநீரகம் இடம் மாறி பழுதடைந்து தவிக்கும் வாசகர் தாமரைச்செல்வனின் மகன் ஷாருக்கேஷ் அந்த பாதிப்பு முற்றிலும் நீங்கி, ஆரோக்கியத்துடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

மேலும் கடலின் மேல் பறக்கும்போது காணாமல் போயிருக்கும் நம் கடற்ப்படை விமானத்தில் பயணித்தவர்களுக்காக்வும், அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்போம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.கார்த்திக் சிவம் குருக்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 31 ஞாயிறு & ஆகஸ்ட் 7 2016  | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையாருக்கு  தொண்டு செயதுவரும் திரு.பாலசுப்ரமணிய குருக்கள் அவர்கள். 

Pillaiyarசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.பாலசுப்ரமணிய குருக்கள் மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை சமர்பிக்கப்பட்ட முதல் வாரம், பிரார்த்தனை நேர்த்தில் நாம் அவருடன் இருந்தோம். அதற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களும் அவர் பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு அலைபேசியில் நம்மை தொடர்புகொண்டு பிரார்த்தனை செய்த விபரத்தை நம்மிடம் தெரிவித்தார். அவருடைய சிரத்தைக்கு மிக்க நன்றி.

* நமது பிரார்த்தனை பிரிண்ட்-அவுட் பிள்ளையாரின் திருப்பாதத்தில் வைக்கப்பட்டிருப்பதை காணலாம்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *