Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > நீங்க வாத்தியாரா ஸ்டூடண்ட்டா ? காகிதமா கற்பூரமா ?

நீங்க வாத்தியாரா ஸ்டூடண்ட்டா ? காகிதமா கற்பூரமா ?

print
காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். ஏராளமான பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம். இனம் புரியாத அசூயை.

“இவர் என்ன ஜகத்குரு என்றுபட்டம் போட்டுக்கொள்வது?… ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !”

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், “அது யார், ஜகத்குரு?”

“நான் தான் !…” என்றார் பெரியவாள்.

“ஓஹோ? நீங்க ஜகத்துக்கே குருவோ?”

“இல்லை….”

“ஜகதாம் குரு: ந
ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:”

(“நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குரு என்ற பொருளில், நான் ஜகத்குரு!”)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

periyava-kasi-sparrow

பெரியவாள், அந்தப் பெரிய அறையின் சுவர்களின் மேற்பகுதியில், புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக் கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, “கிமிதம்”? (இது என்ன?) என்று கேட்டார்.

“நீட:” (கூடு)

“கேன நிர்மிதம்?” (யாரால் கட்டப்பட்டது?)

“சடகே…” (குருவிகள்)

“கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன. நமக்குக் கை-கால் உண்டு. என்றாலும், பறவைகள் மாதிரி கூடு கட்ட முடியவில்லை. குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு…” என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

பண்டிதர்கள் பெரியவாள் கால்களில் வீழ்ந்து வணங்கினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?

பெரியவாள் எத்தனை அழகாக சொல்லிவிட்டார் பாருங்கள். பெரியவாள் போன்ற பிரம்மஞானிகளே காக்காய், குருவிகளை தங்கள் குரு என்கிறார்கள். அப்படி என்றால் நாம் எவ்வாறு இந்த உலகத்தை அணுகவேண்டும்?

இதே போன்று ஆதிசங்கரர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் உண்டு. அதுவும் காசியில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியம்.

காசிக்கு ஆதிசங்கரர் செல்லும்போது, ஒரு சண்டாளன் (சிவபெருமான்) நாய்களுடன், கள் பானையை ஏந்தி குறுக்கே வர, இவர் ஒருவித அசூயையுடன் “எட்டி நில்” என்பார். அதற்கு சண்டாளன், “எதை எதனிடமிருந்து விலகச் சொல்கிறீர்கள்? ஆத்மாவுக்குள் பேதமுண்டா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்புவான். இறுதியில் அவனிடம் ஞானம் பெரும் சங்கரர் அவன் கால்களில் வீழ்ந்து “உங்களையே என் சற்குருவாக ஏற்கிறேன்” என்பார்.

ஆக, இந்த உலகில் நாம் பாடம்கற்றுகொள்ளத் தான் வந்திருக்கிறோமே தவிர பாடம் நடத்த அல்ல. இதை உணர்ந்துகொண்டால், வாழ்க்கையில் நடக்கும் எந்த சம்பவமும், ஏமாற்றமும் நம்மை பாதிக்காது. “நீங்கள் கற்றுக்கொள்ள தயார் என்றால் ஒரு புழுவிடமிருந்துக் கூட கற்றுக்கொள்ளமுடியும்” என்று முந்தைய பதிவு ஒன்றில் நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

வாழும்வரை போராடு!

ந்த உலகில் ஒவ்வொரு விலங்கும், உயிரனமும் போராடித் தான் வாழ்கின்றன. உணவுக்கு, உயிருக்கு என நொடிக்கு நொடி போராட்டம் தான். இந்த ஜீவ மரணப் போராட்டத்தில் நம்பிக்கையுடன் போராடும் விலங்குகளே தப்பி பிழைக்கின்றன. நாமாவது நிம்மதியாக உறங்குகிறோம். காட்டில் உள்ள விலங்குகள் பலவற்றுக்கு அது கூட கியாரண்டி இல்லை. தூங்குபோதே எதிரிகளுக்கு இரையாகும் உயிரினங்கள் பல உண்டு. காட்டில் பல விலங்குகள் NOCTURNAL என்று சொல்லக்கூடிய இரவில் வேட்டையாடும் விலங்குகள் தான்.

ஆனால், நாம் இரவு படுத்தால் காலையில் எழுந்திருக்கிறோமே இது எத்தனை பெரிய வரம்…!

கீழ்கண்ட இந்த காணொளியை அனைவரும் பாருங்கள்….

இந்த மான் எத்தனை அழகாக சிந்தித்து, சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்கிறது.

(* இந்த காணொளியை காண ஆடியோ அவசியமில்லை. எனவே அலுவலகத்தில் இருப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம். ஆனால் அவசியம் பார்க்கவும்.)

ஒரு சாதாரண, சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய காணொளி ஒன்று வாழ்க்கையின் மிகப் பெரிய பாடத்தை எந்த வித குரலும், அறிவுரையும் இல்லாமல் நமக்கு சொல்லித் தரும் என்று நாம் கனவிலும் நினைத்ததில்லை.

உலகில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்கள் கற்றுத் தரும் பாடங்களை விட இந்த மான் கற்றுத் தரும் பாடம் மிகப் பெரியது. நமது கல்வி முறைகள் பொருளீட்டத் தான் கற்றுத்தருகின்றனவே தவிர வாழ அல்ல. எனவே தான் மெத்தப் படித்தவர்கள் கூட இக்கட்டான தருணங்களில் முடிவெடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த மானுக்கு இருக்கும் தன்னம்பிக்கையில் தைரியத்தில் நூற்றில் ஒரு பங்கு நமக்கு இருந்தால் கூட நாம் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.

camphor-2_

சுவாமி விவேகானந்தர் சொல்வதைப் போல “உனக்கு மரணம் நிச்சயம் எனும்போது துருப்பிடித்து சாவதைவிட போராடி சாவதே மேல்”. வாழ்க்கையில் ஜெயிக்க, சில சந்தர்ப்பங்களில் சில ரிஸ்க்குகளை எடுத்துத் தான் ஆகவேண்டும். நமது COMFORT ZONE ல் இருந்து வெளியே வந்து தான் ஆகவேண்டும். போராட்டங்களில் தோற்பவர்களைவிட விட முடிவுகளை ஒத்திப்போடுவதாலும் ரிஸ்க் எடுக்க தயங்குவதாலும் தான் பலர் வாழ்க்கையில் தோற்கின்றனர்.

தீ வந்து மேலே விழுந்தால் காகிதம்தான் பயப்படவேண்டும் கற்பூரம் அல்ல. கற்பூரமாக இருப்போம்!

==========================================================

உங்கள் உதவி இந்த தளத்திற்கு அவசியம் தேவை…! 

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Kindly inform us via mobile or email once you transfer your fund. Thanks.

Rightmantra Sundar| E : editor@rightmantra.com | M : 9840169215

==========================================================

Also check:

ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தரும் பாடங்கள்! 

உதை மேல் உதை – ஒட்டகச் சிவிங்கி கற்றுத் தரும் பாடம் – MONDAY MORNING SPL 30

தாயை இழந்து தவிக்கும் குரங்குக் குட்டி மீது சிறுத்தை காட்டும் பாசம்! MUST WATCH VIDEO!!

நாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே?

==========================================================

[END]

3 thoughts on “நீங்க வாத்தியாரா ஸ்டூடண்ட்டா ? காகிதமா கற்பூரமா ?

  1. அருமையான காணொளி
    பகிர்ந்தமைக்கு நன்றி

    குருவே சரணம்

    நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி உள்ள ஒவ்வொன்றும் நமது குரு தான்
    அது நமக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு புதிய பாடத்தையும் வாழ்க்கை தத்துவத்தையும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன

    இதை உணர்ந்தவன் ஞானியாகிறான்
    உணராதவன் வெறும் சதைப்பிண்டமாக இவ்வுலகில் வாழ்ந்து மாண்டு போகிறான்

    இப்பிரபஞ்சத்தில் நமக்கென விதிக்கப்பட்டிருக்கும் கடமையை அறிவோம்
    ஆழ்ந்து சிந்திப்போம்
    சூழ்நிலைகள் சொல்லித்தரும் பாடம் படிப்போம்
    விழிப்புடன் நமது பணிகளை செய்வனே முடிப்போம்
    சற்றேய நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் பயன்படுவோம்
    வந்த வேலை முடித்து நற்கதி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *