Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club

print
வர் ஒரு அரசு உயரதிகாரி.  கடவுள் நம்பிக்கையெல்லாம் அவருக்கு கிடையாது. கோவிலுக்கெல்லாம் செல்வது கிடையாது. அப்படியே சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சென்றாலும், உள்ளே செல்லமாட்டார். வெளியே உட்கார்ந்துவிடுவார் அல்லது பொழுதுபோக்க கோவிலை சுற்றிப் பார்ப்பார். அவ்வளவு தான்.

நண்பர் ஒருவர் மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி ஆலயத்திற்கு சென்றதையடுத்து அவருடன் செல்லவேண்டிய நிர்பந்தம்.

mADDUR

நண்பர் அம்பாளை தரிசித்து அர்ச்சனை முதலியவற்றை செய்து பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது, கடவுள் நம்பிக்கையற்ற இவரது நண்பர் ஒருவர் உள்ளே வராமல் வெளியே நின்றுகொண்டிருப்பதை மணிகண்ட குருக்கள் அறிந்துகொள்கிறார்.

குருக்கள் அவரிடம் பேசுகையில் “இவள் மற்ற கோவில்கள் பல, ஆவாகனம் மட்டும் செய்யப்பட்டவள் அல்ல. பிரத்யட்சமாக இங்கே எழுந்தருளியிருப்பவள். உங்கள் கோரிக்கை ஏதாவது இருந்தால் இவளிடம் சமர்பித்து பாருங்கள். பிறகு உங்களுக்கே புரியும்” என்றார்.

“குருக்களே, எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் நீங்க கேட்கிறதுனால சொல்றேன். இப்போ நான் வேலை பார்த்துக்கிட்டுருக்குற இடத்துல எனக்கு வேலை செய்ய பிடிக்கலே. எனக்கு என் சொந்த ஊர்ல வீடு இருக்கு. ஆனா, இங்கே வேலை செய்றதுனால தண்டத்துக்கு வாடகை கொடுத்துக்கிட்டுருக்கேன். என்னோட சொந்த ஊர்ல எனக்கு டிரான்ஸ்பர் வேணும். நானும் என் சக்தியெல்லாம் யூஸ் பண்ணி எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். என்னால முடியலே. இங்கே உங்க அம்மன் எனக்கு சொந்த ஊர்லேயே டிரான்ஸ்பர் வாங்கி தரமுடியுமா?” என்று தென்மாவட்டத்தில் உள்ள பிரபல நகரம் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அங்கு டிரான்ஸ்பர் வேண்டும் என்று தனது தேவையை வெளிப்படுத்தினார்.

இவர் மட்டுமல்ல, பெரும்பாலானோர் இப்படித்தான். நடக்கவே நடக்காது என்று தாங்கள் நம்பும் ஒன்று, தெய்வ சக்தியால் ஒருவேளை நடைபெற்றால் தெய்வத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது தெய்வத்திற்கு செக் வைத்து விளையாடுகிறார்கள். ஆனால், ஒரு விஷயத்தை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். தெய்வத்தை நாம் ஏற்றுகொள்கிறோமா இல்லையா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. தெய்வம் நம்மை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோமா என்பது தான் முக்கியம்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (குறள் 295)

எவ்வளவு அழகாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார் பாருங்கள். ஒருவன் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வாய்மையை கடைப்பிடித்து வந்தால் அவன், தவம், தானம் இவற்றை செய்பவர்களைவிட சிறந்தவன் ஆவான்.

Maddur Amman Print J

Download link : http://rightmantra.com/wp-content/uploads/2015/10/Maddur-Amman-Print-J.jpg

மத்தூரை பொருத்தவரை அம்பிகை இங்கே கோபத்தை விடுத்து, மழலை போல புன்னகையை சிந்துபவள். (ஒரு தரம் மத்தூர் போய் பாருங்க. அம்மனை அதற்கு பிறகு விடவேமாட்டீங்க!!)

தனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை, நல்லது நடந்தால் சரி என்கிற மனப்பான்மையுடன் சென்ற பௌர்ணமி பூஜையின்போது, மேலே  குறிப்பிட்ட அந்நபர் அம்பாளை தரிசித்து அர்ச்சனை செய்து அம்பாளிடம் பிரார்த்தித்தார். பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.

இது நடந்து ஒரு வாரம் கழித்து அவருக்கு ஒரு ரெஜிஸ்டர் தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால் “டிரான்ஸ்பர் ஆர்டர்”. அதுவும் அவர் விருப்பப்பட்ட ஊரிலேயே.

இவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் பரவசத்தையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை. தீபாவளி கழிந்து தனது சொந்த ஊருக்கே மாற்றலாகி செல்லவிருக்கிறார்.

குருக்களை அழைத்து விஷயத்தை சொன்னவர், நிச்சயம் இந்த அம்மனுக்கு ஏதோ ஒரு விசேஷ சக்தி இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு, மத்தூர் மகிஷாஷுர மர்த்தனியை தொழ ஆரம்பித்துவிட்டார்.

அவருடைய ஐடெண்டிட்டியை காக்கவேண்டி, அவர் பெயர் மற்றும் பணியாற்றிய துறை பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. மற்றபடி சம்பவம் முற்றிலும் உண்மை. மணிகண்ட குருக்களிடம் பேசும்போது நம்மிடம் கூறிய தகவல் இது.

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

நம்பிக்கையே வாழ்க்கை. மத்தூர் செல்லுங்கள் நல்லருள் பெறுங்கள்.

(திருமண கோரிக்கைகளை பொருத்தவரை, அந்த பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவிருப்பவர் வேறு ஒருவர் தான். அவரும் மிக மிக உயர்ந்த மனிதர். அருளாளர். இருப்பினும், திருமண வரம் வேண்டி பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்புபவர்கள் அனைவரின் பெயர்களிலும் மத்தூரிலும் சிறப்பு வழிபாடு + அர்ச்சனை நடைபெறும். இங்கு அது சமயம், நாமே நேரில் வந்திருந்து அத்தனை பேருக்கும் மணிகண்ட குருக்களை கொண்டு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யவிருக்கிறோம். எனவே திருமண ப்ராப்தம் வேண்டி நமது பிரார்த்தனை கிளபுக்கு கோரிக்கை அனுப்பியவர்கள் யாவரும் மீண்டும் நமக்கு அதே மின்னஞ்சலை பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் (தெரியும் என்றால்) குறிப்பிட்டு தங்கள் அலைபேசி எண்ணுடன் நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்! ஏற்கனவே அனுப்பியிருந்தாலும் மீண்டும் அனுப்பவும்!!!)

===============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் :  மத்தூர் மகிஷாஷுர மர்த்தனி அம்மன் கோவிலில் குருக்களாக தொண்டாற்றும் திரு.மணிகண்ட குருக்கள் (36).

இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். திருத்தணி தான் இவரது பூர்வீகம். திருத்தணி மலையில் பிறந்தவர் இவர். இவரது தந்தை திருத்தணி பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயகணபதி ஆலயத்தில் பல ஆண்டு காலம் குருக்களாக இருந்தவர். இவரது பரம்பரையினர் யாவரும் திருத்தணி முருகனுக்கு அர்ச்சகர்களாக தொண்டு செய்தவர்களே.

Maddur 2

திரு.மணிகண்ட குருக்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்தூரில் அம்பாளுக்கு பூஜை செய்து வருகிறார். தற்போது டூ-வீலர் வைத்திருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் சைக்கிளில் வந்து அம்பாளுக்கு பூஜை செய்வார்.

பிள்ளையார்பட்டியில் உள்ள சிவாகம வேதாகம பாடசாலையில் ஐந்து ஆண்டு பட்டப்படிப்பு படித்து சான்றிதழ் பெற்றவர் இவர்.

மத்தூர் அம்பாளுக்கு மிகவும் சிரத்தையாக பூஜை செய்து வருகிறார். நமது குழுவினரின் உழவாரப்பணி சிறந்து விளங்க பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருந்தார்.

உழவாரப்பணி நிறைவில் திரு.மணிகண்ட குருக்களை கௌரவிக்கும்போது...
உழவாரப்பணி நிறைவில் திரு.மணிகண்ட குருக்களை கௌரவிக்கும்போது…

நமது பணி நடைபெற்ற ஞாயிறு அன்று நவராத்திரி விழா தொடர்பாக முக்கியப் பிரமுகர்களுக்கு அவர் திருத்தணி சென்று நேரில் அழைப்பிதழ் கொடுக்கவேண்டியிருந்தது. அந்த சூழ்நிலையிலும் நம்முடன் நேரத்தை செலவிட்டார். பணி முடித்து இறுதியில் அம்பாளை அர்ச்சனைக்காக தரிசித்தபோது நிதானமாக எங்கள் அனைவருக்கும் சங்கல்பம் செய்து வைத்தார். பணியில் பங்கேற்றோர் அனைவரின் பெயர்கள் தவிர, நாம் வழக்கமாக செய்யும் நமது நண்பர்கள் பெயருக்கும் அர்ச்சனை நடைபெற்றது. யாவருக்கும் சிறந்த முறையில் சங்கல்பம் செய்து வைத்தார். அம்பாளை பற்றியும் துர்கை அங்கு எழுந்தருளிய கதை பற்றியும் விவரித்து அனைவருக்கும் பிரசாதத்தை தனது கைகளால் கொடுத்து வாழ்த்தினார்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி கூறி இந்த வாரம் அனைவருக்காகவும் பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

வரும் ஞாயிறு பிரார்த்தனை நேரத்தில் கோரிக்கை சமர்பித்திருக்கும் மூவரின் பெயர்களிலும் (தனிப்பட்ட முறையில் நாம் அளித்திருக்கும் வேறு சிலரது பெயர்களிலும்) அர்ச்சனை செய்து அம்பாளை பூஜிப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

நவராத்திரி தொடர் பதிவில் கூடுதல் தகவல் இடம்பெறும்! நன்றி!!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் தளபதி முத்துகுமார் (இவர் முழு பெயரே இது தான்!) அவர்களுக்கு நம்மை கடந்த பல ஆண்டுகளாக (?!!) தெரியும். ஆனால், நமக்கு கடந்த சில ஆண்டுகளாக தான் அவரை தெரியும். மேலும் மத்தூர் உள்ளிட்ட வேறு சில உழவாரப்பணிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

நமது பணிகளில் பலவிதங்களில் துணை நிற்பவர். சிறந்த பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவர். இவர் ‘வேல்மாறல்’ குறித்த அற்புதம் ஒன்றை ஏற்கனவே நம்மிடம் பகிர்ந்திருக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் தனது சித்திக்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். ஏற்கனவே இவர் வழிபாடு பாராயணம் முதலியவற்றை அவர் பொருட்டு செய்து வந்தாலும், கூட்டுப் பிரார்த்தனைக்கு என்று ஒரு சக்தி இருப்பதால் இங்கே நமது பிரார்த்தனை மன்றத்தில் தனது கோரிக்கையை சமர்பித்திருக்கிறார். அவர் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது.

அடுத்து பிரார்த்தனை சமர்பித்திருக்கும் அருள் அவர்களக்கு அவர்கள் நமது தளத்தின் வாசகர் என்பது மட்டும் நமக்கு தெரியும். மற்றபடி வேறு எதுவும் நமக்கு தெரியாது. அவருக்கு விரைவில், நல்ல வாழ்க்கை துணை கிடைக்க பிரார்த்திப்போம். இவர் பிரார்த்தனையில் இவர் குறிப்பிட்டுள்ள மற்றொரு விஷயத்தை கவனிக்கவேண்டும். பசு தொடர்புடைய சுதேசி பொருட்களை கொண்டு ஒரு புதிய வியாபாரத்தை துவக்கியிருக்கிறார். அந்த வியாபாரம் நன்கு வளர்ந்து லாபம் ஈட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். கோமாதா நிச்ச்சயம் இவரை கைவிடமாட்டாள் என்பது உறுதி.

அடுத்து, கடைசியாக கோரிக்கை அனுப்பியுள்ள திருமதி.அமுதா கிரி அவர்கள் தளத்திற்கு புதியவர் என்று தெரிகிறது. நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு தான் தனது கோரிக்கை பற்றி தெரிவித்தார்.

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!

===============================================================

நம் வாசகர்களுக்காக நடைபெற்ற பிரார்த்தனை

சென்ற பிரார்த்தனைக்கு தலைமையேற்ற சுப்ரமணிய குருக்கள் அவர்கள், அவரது சித்தப்பா மற்றும் மகன் சனத் குமாரன் ஆகியோர் பூண்டி (திருவெண்பாக்கம்) ஊன்றீஸ்வரர் கோவிலில், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்து, பிரார்த்தனை செய்தனர். சென்ற வாரம் நாம் திருவெண்பாக்கம் சென்றிருந்தபோது, இது பற்றி நம்மிடம் தெரிவித்தார். (இரண்டு வாரமும் பிரார்த்தனை ரிப்பீட் செய்யப்பட்டபடியால், சென்ற வாரமும் இதே போன்று சுப்ரமணிய குருக்கள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.). அவருக்கு நம் நன்றி. சென்ற வாரம் பிரார்த்தனை சமர்பித்தவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறுகிற பட்சத்தில் திருவெண்பாக்கம் சென்று ஊன்றீஸ்வரரையும் மின்னொளி அம்மையையும் தரிசித்துவிட்டு அபிஷேகம் அர்ச்சனை முதலியவைகளை செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். நல்லது நடக்கட்டும்! அதுவும் விரைந்து நடக்கட்டும்!!!

===============================================================

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Wish a quick relief for my aunt who is suffering from cancer

Dear Sundar,

My Aunt’s (Younger Sister of my Mother) Meena Jayakumari, age 57 has been diagnosed with breast cancer (stage 2).

A month before it was removed from her body and now she is undergoing chemotherapy. As everybody aware this treatment is very painful and she has to undergo this 6 times. And doctors are not assuring that it can be cured 100% even after this therapy. Both my uncle and my cousin brother are totally vexed and even all my family members.

The only option now is ALMIGHTY and he is the only one who can cure her disease completely. So plz pray for her wellness and quick and complete recovery.

Thank you.

Thalapathy Muthukumar,
Chennai

===============================================================

Want marital bliss and good progress in business!

Dear sir and friends,

My name is Arul Prakash. I am a reader of right mantra for past 3 years. Despite my best efforts my first marriage failed and i am now looking for second marriage. Please pray that i should get a good life partner.

Also i had started to invest in small amounts in selling local desi-cow products. Please pray the business should flourish and my life to prosper.

friendly
M. Arul,
Salem

===============================================================

பாடாய் படுத்தும் மூட்டுவலி குணமாகவேண்டும்!

மேற்கு தாம்பரத்தில் வசித்து வரும் திருமதி.அமுதா கிரி (65) என்பவர் கடந்த சில வாரங்களாக நமது தளத்தை பார்த்து வருகிறார். தனக்கு சமீப காலங்களாக மூட்டு வலி படுத்தி எடுத்து வருவதாகவும் இதனால் பூஜை, ஆலய தரிசனம், வீட்டு வேலைகள் முதலியவற்றை செய்ய முடியாமல் தான் மிகவும் சிரமப்படுவதாகவும், நமது பிரார்த்தனை கிளப்பில் தனது பிரச்சனை பற்றி கோரிக்கை வெளியிட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவருக்கு விரைவில் அன்னை மகிஷாசுர மர்த்தனி அருளால் மூட்டு வலி நீங்கி தனது அன்றாடப் பணிகளை எந்த வித இடர்ப்பாடும் இல்லாமல் தொடர்ந்து செய்து வர வேண்டுவோம்.

– சுந்தர்,
ரைட்மந்த்ரா.காம்

===============================================================

பொது பிரார்த்தனை

பண்டிகை காலம் – எகிறும் விலைவாசி, முழி பிதுங்கும் மக்கள்!

thuvaram paruppuநம் நாட்டின் மிக்ப பெரும் சாபக்கேடு விலை வாசி உயர்வு தான். தீபவாளி நெருங்குவதையடுத்து பருப்பு, மற்றும் எண்ணைகளின் தேவை அதிகரித்துள்ளது. நுகர்வு அதிகமாக இருக்கும் காரணத்தால், முக்கிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இயற்கை. எனவே எப்போதும் இல்லாத வகையில், துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சமையலில் அத்தியாவசிய தேவையாக விளங்கி வருவது துவரம் பருப்பு. தற்போது துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.195 ரூபாய்; (பாக்கெட் பருப்பு கிலோ, 210 ரூபாயாக உள்ளது.வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் குறைவால், தமிழகத்திற்கான வரத்து குறைந்துள்ளது. தேவைக்கேற்ப பருப்பு கிடைக்காததால், இரண்டு மாதங்களாக, பருப்பு விலை உயர்ந்து வருகிறது.

இனி வரும் நாட்களில் மேலும் பல மளிகை பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை, புளி, பூண்டு, தனியா, மிளகாய் வற்றல் என, மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், ஓட்டல்களில் சாப்பாடு விலை, 5 ரூபாய் உயர்ந்துள்ளது. மற்ற உணவுப் பொருட்களின் விலையும், 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

நிலைமையை சமாளிக்க, மத்திய அரசு, பருப்பு வகைகளில், தலா, 5,000 டன் இறக்குமதி செய்துள்ளது. கூடுதலாக, துவரம் பருப்பு, 3,000 டன் இறக்குமதி செய்தும், விலை குறையவில்லை. இதற்கு, ‘ஆன்லைன்’ வர்த்தகமும், பதுக்கலுமே காரணம் என கூறப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருளான பருப்பு விலையை, கட்டுக்குள் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம்.

Image_21

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தமிழக பருப்பு வியாபாரிகளிடம், இரண்டு மாத இருப்பு உள்ளதாகவும், தீபாவளியை முன்னிட்டு, செயற்கையாக விலை உயர்த்தப்படுவதாகவும், தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ இதனால் பாதிக்கப்படுவது என்னவோ எழைமக்களும் நடுத்தர மக்களும்தான்.

விலைவாசி கட்டுக்கு வரவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவேண்டும். தீபாவளியை அனைவரும் சந்தோஷமாக கொண்டாடவேண்டும். அதற்க்கு அம்பிகையின் திருவருள் வேண்டும்.

இதுவே நாம் இறைவனிடம் சமர்பிக்க கூடிய பொது பிரார்த்தனை.

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நண்பர் த.முத்துக்குமார் அவர்களின் சித்தி திருமதி.மீனா ஜெயக்குமாரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மார்பக புற்றுநோய் முற்றிலும் நீங்கி அவர் நலம் பெறவும், நண்பர் அருள் அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து, அவரது வியாபாரம் செழிக்கவும், வருவாய் அதிகரிக்கவும், வாசகி அமுதா கிரி அவர்களின் மூட்டு வலி நீங்கவும், அவர் அன்றாட பணிகளை செவ்வனே செய்யவும், இறைவழிபாட்டில் தன்னை முழுமையாக எந்தவித இடரும் இன்றி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும், அம்பிகையை வேண்டுவோம். மேலும் அத்தியாசிய பொருட்களின் விலை உயராமல் கட்டுக்கள் இருக்கவும், மளிகை பொருட்கள் தட்டுப்பாடின்றி தாராளமாக கிடைக்கவும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கவும், பண்டிகளைகளை அனைவரும் சிறப்பாக கொண்டாடவும் அன்னையை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவிருக்கும் திரு.மணிகண்ட குருக்கள் அவர்கள் சகல சம்பத்துக்களையும் சௌபாக்கியங்களையும் பெற்று அம்பிகைக்கு தனது தொண்டை குறைவற செய்து வரவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 18, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================

Support Rightmantra’s smooth functioning!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர், திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.சுப்ரமணிய குருக்கள்

2 thoughts on “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club

  1. நெஞ்சை தொட்ட பதிவு. அம்பாளின் அருளை உணர்த்திய உண்மை சம்பவம்.மெய் சிலிர்க்க வைத்தது.
    அதிலும் தாங்கள் மேற்கோள் காட்டிய வரிகள்..வைர வரிகளே.

    //ஆனால், ஒரு விஷயத்தை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். தெய்வத்தை நாம் ஏற்றுகொள்கிறோமா இல்லையா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. தெய்வம் நம்மை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோமா என்பது தான் முக்கியம்.//

    Arumaiyaana Varigal.

    இப்போது யோசித்து பார்த்தால் காரணமின்றி காரியமில்லை என்பது தெளிவாக புரியும்.அம்பாளின் தரிசனம் வைக்க பெற்றோம். டவுன்லோட் செய்ய லிங்க் கொடுத்ததற்கும் நன்றிகள்.

    இந்த வார பொது பிரார்த்தனை – அவசியமான ஒன்று.வரும் பொது பிரார்த்தனை வெற்றி பெற நாம் அனைவரும் செயல்படுவோமாக.

  2. சார், நாங்க இருந்த இடத்திலே இருந்தபடியே அம்பாளின் துர்கையின் தரிசனம் கிடைக்க வழி செய்த தங்களுக்கும் அம்பாளின் அருள் கண்கூட கிடைக்க பெற்ற அந்த அம்பாளின் அடியார்க்கும் மிகவும் நன்றி.

    தங்களின் வைர வரிகள் தெய்வம் நம்மை ஏற்றும் கொள்ளும் நிலையில் நாம் இருக்க வேண்டும் — மறக்க முடியாத வரிகள்.

    உழவார பணிகள் , வாரா வாரம் நடைபெறும் பொது பிரார்தனை நல்லபடியாக நடக்கவும் குணமாகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்

    எல்லோரும் எல்லாமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் .

    தங்களின்
    சோ. ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *