Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > நல்லருள் பொழியும் நம்பிக்கை கோயில் – Rightmantra Prayer Club

நல்லருள் பொழியும் நம்பிக்கை கோயில் – Rightmantra Prayer Club

print
திருவொற்றியூருக்கு சுந்தரர் வந்தபோது சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. கண்டதும் காதல் கொண்டார். சங்கிலி நாச்சியார் அழகில் மட்டுமல்ல பக்தியிலும் சிறந்தவர். சிவனடியார் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வைராக்கியமாக இருந்தவள். கோவிலில் தியாகராஜருக்கும் வடிவுடையம்மனுக்கு பூ தொடுத்துக் கொடுத்து சிவத்தொண்டு புரிந்து வந்தார்.

பூர்வ ஜென்ம கணக்குப்படி சுந்தரர் – சங்கிலி இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் நோக்கி அது நகர்ந்தது.

Thiruvenbakkam 1

“ஏற்கனவே உங்களுக்கு மனைவி இருக்கிறாள். என்னைக் கைவிடமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே நம் திருமணம் நடந்த பிறகு திருவொற்றியூர் எல்லையைத் தாண்ட மாட்டேன் என்று தெய்வத்தின் சன்னதியில் சத்தியம் செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு கழுத்தை நீட்டுகிறேன்” என்றாள் சங்கலி.

என்ன செய்வார் சுந்தரர்… மனைவியைப் பார்க்காமலும் இருக்க முடியாது, புதுக்காதலியின் மீதும் அபார மோகம். காதலியை மறக்க முடியாத சுந்தரர் வேறுவழி தெரியாமல் திருவெற்றியூரில் உறைந்துள்ள தெய்வமான தியாகராஜரை துணைக்கு அழைத்தார்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
குபேரனுக்கு நிதி வழங்கிய அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வர்

“இறைவா! உன் சன்னதியில் நான் சத்தியம் செய்யும் போது தயவு செய்து நீ அங்கிருக்காதே. அருகேயுள்ள மகிழ மரத்தடிக்கு சென்றுவிடு. தெய்வமில்லாத சன்னதியில் நான் சத்தியம் செய்கிறேன். பின்னர் என்றாவது ஒருநாள் என் முதல் மனைவியைப் பார்க்க நான் போக வேண்டியிருக்கும்… அப்போது நான் செய்த சத்தியம் எனக்கு நெருடலாக இருக்காது” என்றார்.

பக்தன் கேட்கிறான்… ஈசன் மறுப்பானா? சம்மதிக்கிறான் சர்வேஸ்வரன். (பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறதுல எக்ஸ்பர்ட்டுங்க நம்மாளு!)

ஆனாலும் தன் பக்தையான சங்கிலி நாச்சியாரின் கனவில் அன்றிரவே தோன்றி சுந்தரரின் திட்டத்தை சொல்லி எப்படி உஷாராக இதை கையாள வேண்டும் என்று திட்டமும் தீட்டித் தருகிறான் இறைவன்.

விடிந்தால் கல்யாணம்… பொழுது விடிகிறது.

சுந்தரரும் சங்கிலியும் மாலையும் கழுத்துமாக கோவிலுக்குள் நுழைகின்றனர்.

இறைவனின் சன்னதி முன் நிற்கின்றனர். இறைவன் தான் அப்போது அங்கு இல்லையே! சுந்தரர் பேச்சுக்கு கட்டுப்பட்டு மகிழ மரத்தடிக்கு அல்லவா சென்றிருக்கிறார்.

“நீ சொன்னப்படி இறைவன் சந்நிதி முன் நிற்கிறோம். சத்தியம் செய்யட்டுமா?” என்கிறார் சுந்தரர்.

Thiruvenbakkam 3

அந்தப்பெண் உள்ளூரத் சிரித்தபடி சொல்கிறாள். “நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவது மகிழ்ச்சி தருகிறது. என்ன தான் இருந்தாலும் மானிட சத்தியங்களை இறைவன் முன் செய்வது நியாயமல்ல. ஆகவே இங்கு வேண்டாம்…. அதோ அந்த மகிழ மரத்தடிக்கு வந்து சத்தியம் செய்து தாருங்கள் போதும்” என்று தடாலடியாக இடத்தை மாற்றினாள் சங்கிலி.

தான் விரித்த வலையில் தானே விழுந்தார் சுந்தரர். அந்த ஜோடிக்குத் திருமணம் இனிதே நடந்தது.

பின்னர் செய்த சத்தியத்தை சுந்தரர் மீறி ஒற்றியூர் எல்லையைத் தாண்டிய மறுகணம் இறைவன் அவரைத் தண்டித்து கண் பார்வையைப் பறித்தார்.சுந்தரர் இரண்டு கண்களிலும் பார்வை இழந்தார்.

கொடுத்த வாக்கை சத்தியத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைகுரியவர்களே என்பதை சுந்தரரை தண்டித்ததன் மூலம் உலகிற்கு உணர்த்தினான் இறைவன்.

Thiruvenbakkam 2

இரு கண்களிலும் பார்வை இழந்த சுந்தரர் ஒருவாறாக தட்டுத் தடுமாறி திருவெண்பாக்கத்தை வந்தடைந்தார்.

இன்றைய பூண்டி தான் திருவெண்பாக்கம் என்றழைக்கப்படுகிறது.

அங்கு ஊன்றீஸ்வரரை தரிசித்தவர், “என்னை மகிழ மரத்தடியில் சத்தியம் செய்யச் சொன்ன நீர் உள்ளே இருக்கிறீரா?” என்றார் இறைவனைப் பார்த்து.

“உள்ளோம். நீர் போகலாம்!” என்றான் இறைவன்.

“கண்களை இழந்து வாடும் அடியவனை இப்படி அனுப்புதல் முறையா சுவாமி?” என்று இறைவனை பார்த்து அன்னை பரிவுடன் கேட்க, உடனே இறைவன் ஊன்றுகோலை கொடுத்து உதவினார். (அன்னைக்கு இங்கு மின்னொளி அம்மை என்று பெயர்!)

பார்வையில்லாத நிலையிலும் சிவத்தலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த இறைவன் காஞ்சியில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். அடுத்து திருவாரூரை அவர் அடைந்த போது வலது கண்ணிலும் பார்வையை கொடுத்தார்.

Thiruvenbakkam 4

எனவே வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் தவிப்பவர்கள் பூண்டி ஊன்றீஸ்வரர் சென்று அங்கு இறைவனையும் இறைவியையும் தரிசித்து அர்ச்சனை செய்து, சுந்தரர் இங்கு அருளிய திருவெண்பாக்க பதிகத்தை படித்து வந்தால் சுந்தரர்க்கு ஊன்றுகோல் கொடுத்து உதவிய இறைவன் உங்கள் மீதும் இரக்கம் கொண்டு உங்களுக்கு தேவையான் பலத்தையும் உதவிகளையும் அருள்வான் என்பதில் ஐயமில்லை.

மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாடும் தம்பதியர்க்கு அருமருந்து இந்த தலம். மேலும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.

நம்பிக்கையே வாழ்க்கை. இந்த நம்பிக்கை கோவிலுக்கு செல்லுங்கள் நல்லருள் பெறுங்கள்.

===============================================================

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருவெண்பாக்கம் திருப்பதிகம்

பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.

இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணம்என்பேன்
அடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல்
உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே.

செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா யோஎன்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே.

கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி
நம்பி இங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணைஎனக்கு உளோம்போகீர் என்றானே.

பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும்
உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே.

கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோயென்ன
ஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே.

பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன
ஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே.

வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன் கருதும்இடந் திருஒற்றி
ஊரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே.

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.

மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோல்அருளி உளோம்போகீர் என்றானே.

ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடும்
சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே.

To download as pdf :
http://rightmantra.com/wp-content/uploads/2015/08/Thiruvenbakkam.pdf

===============================================================

Also check :

சிவனோடு சில மணி நேரம் – ஊன்றீஸ்வரரோடு கழிந்த நம் சிவராத்திரி!

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்!

தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

===============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர், திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.சுப்ரமணிய குருக்கள்

56 ஆம் அகவையில் அடியெடுத்து வைத்துள்ள திரு.சுப்பிரமணிய குருக்களின் சொந்த ஊர் திருவெண்பாக்கத்தை அடுத்துள்ள நம்பாக்கம். (இந்த ஊருக்கு வேறொரு சிறப்பு உள்ளது. அது வேறொரு தனிப்பதிவில்!).

இவரது தந்தை திரு.இரத்தின சபாபதி குருக்கள், மற்றும் இவரது சித்தப்பா தண்டபாணி குருக்கள் உள்ளிட்ட அனைவரும் பன்னெடுங்காலம் ஊன்றீஸ்வரருக்கு தொண்டு செய்தவர்களே.

திரு.சுப்ரமணிய குருக்கள் கடந்த 25 ஆண்டுகளாக ஊன்றீஸ்வரருக்கு பூஜை செய்து வருகிறார். கோவில் பூஜைகள் தவிர ஹோமங்களுக்கும் கும்பாபிஷேகங்களுக்கும் கூட சென்று வருகிறார்.

இவருக்கு நான்கு மகன்கள். அதில் ஒரு மகன், செல்வன்.சனத்குமாரனை நம் அனைவருக்கும் தெரியும். முடிச்சூரில் உள்ள பாடசாலை ஒன்றில் வேதம் படித்து வருகிறார். நமது பிரார்த்தனைக்கும் இதற்கு முன்பு தலைமை ஏற்றிருக்கிறார். தனயனை அடுத்து தற்போது தந்தையின் முறை.

“தொடர்ந்து 5 வாரங்கள் வெள்ளியோ அல்லது திங்களோ ஊன்றீஸ்வரரையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு நெய்விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் எண்ணியது யாவும் நிறைவேறும்!” என்கிறார் திரு.சுப்ரமணிய குருக்கள்.

கடந்த சிவராத்திரியின் போது திரு.சுப்ரமணிய குருக்களை நம் தளம் சார்பாக கௌரவித்தபோது.. (உடன் நமது மூத்த வாசகி, உழவாரப்பணி குழு உறுப்பினர் திருமதி.சுபாஷினி அவர்கள்!)
கடந்த சிவராத்திரியின் போது திரு.சுப்ரமணிய குருக்களை நம் தளம் சார்பாக கௌரவித்தபோது.. (உடன் நமது மூத்த வாசகி, உழவாரப்பணி குழு உறுப்பினர் திருமதி.சுபாஷினி அவர்கள்!)

கண் பார்வை பறிபோன சுந்தரருக்கு ஊன்றுகோல் கிடைத்த தலமாதலால் கண்பார்வை தொடர்பான குறைபாடுடையவர்களுக்கு இந்த தலம் ஒரு அருமருந்து. மேலும், வாழ்க்கையில் நம்பிக்கை குறைந்து பிடிப்பில்லாமல் இருப்பவர்களுக்கு ஒளி காட்டும் அம்பாள் இங்குள்ள மின்னொளி அம்மை. பிரிந்தவர் மீண்டும் சேர தரிசிக்க வேண்டிய தலம் என்றும் கூறுகிறார் திரு.சுப்ரமணிய குருக்கள்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி ஏற்கனவே இவருக்கு தெரியும். “எங்களுக்காக வரும் ஞாயிறு மாலை 5.30 – 5.45 ஊன்றீஸ்வரரிடமும் மின்னொளி அம்பாளிடமும் பிரார்த்திக்கவேண்டும்…” என்று சொன்னபோது, “கால் மணிநேரம் என்ன… அரைமணிநேரமே பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அவருக்கு நன்றி !

பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள், முடிந்தால் ஊன்றீஸ்வரரையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு வாருங்கள்.  பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில் அபிஷேகம் செய்யுங்கள். ஆனந்தப்படுவான் அபிஷேகப்பிரியன்.

நல்லதே நடக்கட்டும்! சுபமஸ்து!!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள முதல் வாசகர் திருமதி.உமா குமார் அவர்கள் நம் தளத்திற்கு  புதியவர். நமது தளத்தில் உறுப்பினராக வேண்டும் என்கிற தனது ஆர்வத்தை  வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

கணவரை பிரிந்து அதுவும் கையில் ஒரு குழந்தையுடன் வாடுவது மிகவும் கொடுமை. இருப்பினும் ஈசனின் கருணை மழைக்கு முன்னாள் எந்த கொடுமையும் நிற்க முடியாது. ஊன்றீஸ்வரரை அவர் கெட்டியாக பற்றிக்கொள்ளவேண்டும். திருவெண்பாக்கம் பதிகம் நிச்சயம் உதவும்.

அடுத்து மகளின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சோகம் குறித்து கோரிக்கை அனுப்பியுள்ள வாசகி. (சென்ற வாரமும் இதே போன்றதொரு கோரிக்கையை ஒரு வாசகர் அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம். இந்த சமூகம் எங்கே செல்கிறது? எங்கே தவறு நடக்கிறது? ஏன் இப்படி நல்லவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்? ஒன்றுமே புரியவில்லை.) எந்த பெற்றோரின் மகிழ்ச்சியும் அவர்களது பிள்ளைகளின் நிம்மதியான வாழ்க்கையில் தான் அடங்கியுள்ளது.

மகளின் திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ள இத்தனை பிரச்சனைக்கிடையிலும் அவர்கள் நமது அறப்பணிகளுக்கும், விருப்ப சந்தாவிற்கும் பணம் அனுப்பியிருந்தனர். நாம் நெகிழ்ந்தே போய்விட்டோம். துன்பத்திலும் தொடரும் இவர்களின் பக்திக்கும் தொண்டுள்ளத்திற்கும் நிச்சயம் இறைவன் இரங்குவான் என்பது உறுதி.

அடுத்து மனைவிக்கு டெங்கு காய்ச்சல் குறித்து கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர் நமது நண்பர்களில் ஒருவர். தளத்தின் தீவிர வாசகர். பக்தியும் பண்பும் மிக்கவர். விரைவில் அவரது மனைவ்க்கு பரிபூரண ஆரோக்கியம் கிடைக்க இறைவன் அருள்புரிவானாக.

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!

===============================================================

நம் வாசகர்களுக்காக தில்லையில் நடைபெற்ற பிரார்த்தனை!

சென்ற பிரார்த்தனை கிளப்புக்கு தலைமையேற்ற சபாபதி குருக்கள் அவர்கள் நமக்காக தில்லையில் நடராஜர் சன்னதியில் பிரார்த்தித்தார் என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

===============================================================

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Want to unite back with husband!

Dear Rightmantra family members and Editor sir,

I came to your wonderful site while I am searching for vel maral mantram. Thiruthani Murugan is our kuladeiyvam.  Right now, I am going through a worst phase of my life. I got seperated from my husband due to family issues we both are suffering along with our daughter. Please pray for me and my family through your prarthanai club. I am sure prayer through good souls like you will change my husband’s  mind and unite my family. Also I would like to know the procedure to become a member in your website.

Thank you.

with regards
Uma Kumar

===============================================================

Our daughter’s life should prosper!

I have one daughter whom i got married to an Engineer 5 yrs back but he’s very different kind of person. He doesn’t socialise with anyone and keeps vengeance and grudges in his heart.

3 yrs back, due to small family problems, he left my daughter and 3 month old baby and didn’t even talk have any contact with us.In between, he created lot of trouble for us in the name of revenge. finally last year, when my grandson was 2 yrs old, he returned back saying he wants to live with my daughter and his child. It’s been a year now, he’s not willing to let his grudges and reunite with our  family.

We are willing to also apologise if anything is wrong from our side but he’s simply treating us like enemies.

My daughter only visits us and we feel very bad that in society for functions and all, she has to attend alone with the child and everyone asks her about him.

She’s also confused if she wants to divorce or continue with him.

Please pray for her and that her husband should change his mind and understand value of relations.

– Don’t want to disclose the name

===============================================================

My spouse should get cure from Dengue

Dear Sundar and Friends,

I am a regular visitor of Rightmantra and also praying for rightmantra prayer club.

My wife has been diagnosed with Dengue unexpectedly and treated in Malar Hospital, Adyar. She is under medication now. She’s everything to me. We have a baby girl of 4 years old and my wife is loving and caring mom and housewife.

Though she has been discharged from hospital, she need to take medicines regularly and ensure the right count of platelets.

I request all our members to pray for her quick recovery and perform her day to day activities as usual.

– Don’t want to disclose name

===============================================================

பொது பிரார்த்தனை

உலகை உலுக்கிய ஹஜ் விபத்து – பலியானவர்களுக்காக பிரார்த்திப்போம்!

இஸ்லாமியர்களின் புனித தலமான  சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் செல்வது வழக்கம். மெக்காவில் சில வாரங்களுக்கு முன்னர் நேர்ந்த கிரேன் விபத்து பற்றிய துயரமான செய்தி அடங்குவதற்குள் அதே மெக்காவில் மினாவில் சாத்தானின் மீது கல்லெறியும் இடத்தில ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கிட்டதட்ட 750 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரீகர்கள் பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பலியானவர்களில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் அடங்குவர்.

இறந்தவர்கள் அனைவரும் இறைவனின் நல்லருளை பெறுவார்களாக. அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் இறைவன் ஆறுதலையும் அமைதியையும் தந்தருள பிரார்த்திப்போம்.

ஒடிசா  மருத்துவமனையில் பலியான 61 பச்சிளம் குழந்தைகள் !

ம் நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மோசமான நிர்வாகம், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம், மற்றும் வசதிகள் பற்றாருக்குறை காரணமாக பச்சிளம் குழந்தைகள் இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்திலும், மேற்கு வங்கத்திலும் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெற்று அனைவரையும் உலுக்கியது நினைவிருக்கலாம்.

தற்போது ஒடிசாவிலும் இதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கட்டாக் நகரில் உள்ள சிஷூ பவன் என்ற குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 61 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

odisha infant

இந்த சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அலட்சியமான நடத்தையினால் பச்சிளங்குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த 3 ஊழியர்கள் மீது கிரிமினல் விசாரணையும் நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒடிசா அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குறை கூறி வரும் நிலையில், அந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி நிரஞ்சன் மொகந்தி, “இங்கு, ஒரு நாளைக்கு 50 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். வெளி நோயாளிகளாக மட்டுமே ஒரு நாளைக்கு 500 குழந்தைகளுக்கும் மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் போது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வியெழுப்புகிறார்.

இப்படியே அரசும் ஊழியர்களும் மாறி மாறி ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் இறந்த குழந்தைகளின் உயிர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடைய உயிர்களின் உத்தரவாதத்திற்கும் யார் பொறுப்பு? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

மருத்துவத் துறையின் அலட்சியத்தால் பிஞ்சுக் குழந்தைகள் பலியாவது இத்துடன் முடிவுக்கு வரவேண்டும். குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் ஆறுதல் பெறவேண்டும். மீண்டும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவேண்டும்.

இதுவே நாம் இறைவனிடம் சமர்பிக்க கூடிய பொது பிரார்த்தனை.

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

கணவரை பிரிந்து வாடும் நம் வாசகி திருமதி.உமா குமார் அவர்கள் மீண்டும் தன் கணவரோடு இணையவேண்டும். அவரும் அவர் மகளும் கணவரும் மூவரும் இனி இணைபிரியாமல் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவேண்டும்.

கணவரிடன் துர்குணத்தாலும், பழி வாங்கும் உணர்ச்சியாலும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நம் வாசகியின் மகளின் துன்பம் முடிவுக்கு வரவேண்டும். அவரது கணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு அவரும் அவர் மகனும் மீண்டும் அவருடன் ஒன்று சேர்ந்து பழைய கசப்புக்களை மறந்து மன்னித்து ஒரு இனிய புதிய அத்தியாயத்தை துவக்கவேண்டும். ஒற்றுமையின்றி தவிக்கும் அக்குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படவேண்டும்.

டெங்கு காய்ச்சலால் அவதியுறும் நம் நண்பரின் வாழ்க்கைத் துணை விரைந்து நலம் பெற்று அவர் தம் கடமைகளை வழக்கம்போல  தொடரவும் பிரார்த்திப்போம்.

இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரை நல்லபடியாக நடந்து முடிந்து இஸ்லாமிய சகோதர்கள் அனைவரும் தங்கள் மார்க்க கடமையை அமைதியாக நல்லபடியாக  முடிக்கவும், பலியானவர்களின் ஆன்மா நற்கதியை அடையவும் இறைவனை வேண்டுவோம்.

ஒடிசாவில் நடந்ததைப் போல இனி எங்கும் நடக்கக்கூடாது. குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் பெற்றவர்களுக்கு ஆறுதல் கிடைப்பதுடன் மீண்டும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைத்து அவர்கள் அகமகிழவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சுப்ரமணிய குருக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று மேலும் மேன்மேலும் இறைவனுக்கு தொண்டு செய்யவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 4, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================

Join our Voluntary Subscrition Scheme

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீகிஷிதராக தொண்டாற்றும் திரு.சபாபதி குருக்கள்

8 thoughts on “நல்லருள் பொழியும் நம்பிக்கை கோயில் – Rightmantra Prayer Club

  1. இவ்வார பிரார்த்தனை சமர்பித்திருக்கும் அனைவருக்கும், மகாபெரியவா அவர்களின் பெருங்கருணையினால், அவர்களின் இன்னல்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலக வேண்டுமெனவும், ஹஜ் யாத்திரையில் இறைவனின் திருவடியை அடைந்த ஆத்மாக்கள் நற்கதியடையவும், மருத்துவ உலகினர் இன்னமும் சிறிது மனிதாபிமானத்துடன் நடக்க முயற்சி செய்ய வேண்டுமெனவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  2. அருமையான பதிவு. ப்ரார்த்தனை க்ளப் பதிவும் படித்தேன். நான் கண்டிப்பாக ப்ரார்த்திக்கிறேன். எங்கள் சத்குருநாதாள் அனுக்ரஹத்தில் எல்லோர்க்கும் நன்மை உண்டாகும்.

  3. Dear loved ones,

    My sincere prayers to one and All.

    My Guru says,Everyone in this world should go through difficult period in their life.God calls this as testing period.
    If you hold these troubles to your heart, then the trouble seems to appear BIG.
    Instead close your eyes and think about the problem that concerns you, take a deep breath, imagine your favorite deity standing in front of you and release your breath to HIS lotus feet.By doing this, you are giving your problem to HIM.He will take care of all your problems from that moment. Once then, you should not think about it. This is called Self surrender.

    Note: Initially it might appear very difficult to follow as your mind plays a trick.Don’t fall prey to your mind.Keep doing it with 108% confidence in HIM.You will find all your worries taken away from you in no time.

    Love and Light to the beloved self,

    Sai Ram.

  4. Dear Friends,

    I thought that I am going through a tough phase in my life right now. But when I read the requests received for prayers every week, it reminds me that I am not alone while suffering and that there are more difficult problems people are going through. Our prayer requests are always a reminder to us that sufferings are very much part of life and that good hearted people are there to pray for us in times of distress. Praying for my problems to be resolved is very easy and natural. But praying for others problems to be resolved requires selfless attitude and good heart. Such good people are there in our Rightmantra Family. Thanks to all those noble souls and our Sundar who is instrumental in bringing all of us together.

    My pranams to Shirdi Saibaba and Kanchi Maha Swamigal!

  5. இந்த பிரார்த்தனை கிளப் பதிவின் ஊன்றீச்வரர கோயில் பற்றி படிக்கும் பொழுது எனக்கு போன வருடம் பிப்ரவரி மாதம் இந்தக் கோவிலில் உழவாரப் பணி செய்த ஞாபகம் வருகிறது.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு சுப்ரமணிய குருக்களுக்கு என் பணிவான வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் அனைவரின் கோரிக்கையும் நம் ஈசன் நிறைவேற்றி வைப்பார். நாமும் பிரார்த்தனை நேரத்தில் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  6. மிக்க நன்றி கூட்டு பிரார்த்தனையில் பங்கு கொண்டவர்களுக்கு .

    மகா பெரியவருக்கு பிடித்தது . அவ்வழியே நாமும் செல்வோம் .

    நலமோடு வாழ வாழ்த்துக்கள் .

    தங்களின்

    சோ. ரவிச்சந்திரன்

    கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *